பொது மாநாடு
அவருடைய நுகம் மெதுவாயும் அவருடைய சுமை இலகுவாயும் இருக்கிறது
அக்டோபர் 2022 பொது மாநாடு


10:39

அவருடைய நுகம் மெதுவாயும் அவருடைய சுமை இலகுவாயும் இருக்கிறது

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தேவனின் பிள்ளை என்பதை நினைவில் கொள்வோம், மேலும் அவர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்.

ஜாக் என்ற மனிதனுக்குப் பிடித்தமான பறவை வேட்டையாடும் நாய் கேசியை வைத்திருந்த கதை கூறப்பட்டது கேசியைப்பற்றி ஜாக் மிகவும் பெருமிதம் கொண்டார், மேலும் அவள் என்ன ஒரு திறமையான நாய் என்று அடிக்கடி தற்பெருமை அடித்தார். இதை நிரூபிக்க, கேசியின் நிகழ்ச்சியைப் பார்க்க ஜாக் சில நண்பர்களை அழைத்தார். வேட்டையாடும் கிளப்புக்கு வந்துசேர்ந்த பிறகு,உள்ளே சென்ற ஜாக், கேசியை வெளியே ஓட அனுமதித்தார்.

தொடங்குவதற்கான நேரம் வந்தபோது, ​​கேசியின் அற்புதமான திறன்களைக் காட்ட ஜாக் ஆர்வமாக இருந்தார். இருப்பினும், கேசி விசித்திரமாக நடந்துகொண்டது. மிக விருப்பத்துடன் அவள் வழக்கமாக செய்வதைப் போல ஜாக்கின் எந்த கட்டளைக்கும் கீழ்ப்படியவில்லை. அவள் செய்ய விரும்பியதெல்லாம் அவன் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே.

ஜாக் விரக்தியடைந்து வெட்கப்பட்டு, கேசி மீது கோபமடைந்தார்; விரைவில் அவர்கள் வெளியேற ஆலோசனை சொன்னார். கேசி டிரக்கின் பின்புறத்தில் கூட குதிக்கவில்லை, அதனால் ஜாக் பொறுமையின்றி அவளை பிடித்து வந்து கொட்டிலுக்குள் தள்ளினார். வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் நாயின் நடத்தையை அவருடன் இருந்தவர்கள் கேலி செய்ததால் அவர் கோபமடைந்தார். கேசி ஏன் தவறாக நடந்து கொள்கிறது என்பதை ஜாக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தாள், கடந்த காலத்தில் அவளுடைய முழு விருப்பமும் அவனைப் பிரியப்படுத்தவும் சேவை செய்வதுமாக இருந்தது.

வீட்டிற்கு வந்த பிறகு, கேசிக்கு காயங்கள், புண்கள் அல்லது உண்ணிகளை அவர் வழக்கமாகச் செய்ததைப் போலவே ஜாக் பரிசோதிக்கத் தொடங்கினார். அவளின் மார்பில் கையை வைத்தபோது, ஏதோ ஈரமாக இருப்பதை அவர் உணர்ந்தார், அவரது கை இரத்தத்தில் தோய்ந்திருந்தது. அவர்து வெட்கமும் திகிலும் அடைய, கேசின் மார்பு எலும்புக்கு வலதுபுறம் நீண்ட, அகலமான காயம் இருப்பதை அவர் கண்டார். அவளது வலது முன் காலிலும் எலும்பிலும்கூட மற்றொரு காயத்தையும் கண்டார்.

ஜாக் கேசியை தன் கைகளால் தூக்கி எடுத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். அவர் அவளை எப்படித் தவறாகக் கணித்து அவளை நடத்தினார் என்பதில் அவருடைய அவமானம் அதிகமாக இருந்தது. கேசி காயம் அடைந்ததால், முந்தைய நாளில் இயல்புக்கு மாறான முறையில் நடந்து கொண்டாள். அவளுடைய நடத்தை அவளது வலி, அவளுடைய துன்பம் மற்றும் அவளுடைய காயங்களால் பாதிக்கப்பட்டது. ஜாக்கிற்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பமின்மைக்கும் அல்லது அவர்மீது அன்பு இல்லாததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.1

இந்த கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்டேன், அதை ஒருபோதும் நான் மறக்கவில்லை. நம்மிடையே எத்தனை காயப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள்? மற்றவர்களின் வெளித்தோற்றம் மற்றும் செயல்கள் அல்லது செயலின்மை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் எவ்வளவு தடவை அவர்களை மதிப்பிடுகிறோம், நாம் முழுமையாகப் புரிந்து கொண்டால், அதற்குப் பதிலாக இரக்கத்துடனும், நமது தீர்ப்பின் மூலம் அவர்களின் சுமைகளைச் சேர்ப்பதற்குப் பதிலாக உதவ விருப்பத்துடனும் செயல்படுவோம்?

என் வாழ்க்கையில் நான் பலமுறை குற்ற உணர்வோடு இருந்தேன், ஆனால் தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாக கர்த்தர் எனக்கு பொறுமையாக கற்றுக் கொடுத்திருக்கிறார், பலருடைய வாழ்க்கை அனுபவங்களையும் நான் கேட்டிருக்கிறேன். நம்முடைய அன்பான இரட்சகரின் முன்மாதிரியை நான் இன்னும் முழுமையாகப் பாராட்டினேன், ஏனென்றால் அவர் அன்புடன் மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் அவருடைய அதிக நேரத்தைச் செலவிட்டார்.

எனது இளைய மகளின் வாழ்க்கை அனுபவத்தில், அவள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே மனநலம் சார்ந்த சவால்கள் இருந்தன. அவளது வாழ்நாள் முழுவதும் அவளால் இப்படியே தொடர முடியாது என்று அவள் உணர்ந்த பல முறைகள் உள்ளன. அந்த சமயங்களில் அங்கு இருந்த பூமிக்குரிய தூதர்களுக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்: அவளுடன் உட்கார்ந்து; அவள் சொல்வதைக் கேட்டு; அவளுடன் அழுவது; மற்றும் தனித்துவமான பரிசுகள், ஆவிக்குரிய புரிதல்கள் மற்றும் அன்பின் பரஸ்பர உறவை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுதல். இத்தகைய அன்பான சூழ்நிலைகளில், இரு தரப்பிலும் சுமைகள் அடிக்கடி நீக்கப்பட்டன.

மூப்பர் ஜோசப் பி. விர்த்லின், 1 கொரிந்தியரை மேற்கோள் காட்டி, சொன்னார், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கில்லாவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவுமிருப்பேன்” 2.

அவர் தொடர்ந்தார்:

“இந்த புதிய பரிசுத்தவான்களுக்கு பவுலின் செய்தி எளிமையானது மற்றும் நேரடியானது: உங்களுக்கு தயாளம் இல்லையென்றால் நீங்கள் செய்யும் எதுவும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. நீங்கள் அந்நியபாஷைகளில் பேசலாம், தீர்க்கதரிசன வரத்தைப் பெறலாம், அனைத்து மர்மங்களையும் புரிந்து கொள்ளலாம், … எல்லா அறிவையும் பெற்றிருக்கலாம்; மலைகளை நகர்த்துவதற்கான விசுவாசம் உங்களுக்கு இருந்தாலும், தயாளம் இல்லாமல் அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது.

தயாளத்துவம் “கிறிஸ்துவின் தூய அன்பாயிருக்கிறது” (மரோனி 7:47). அந்த அன்பை இரட்சகர் எடுத்துக்காட்டினார்.”3

யோவானில், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று நாம் வாசிக்கிறோம்.”4

தயாளம், ஒற்றுமை, அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பு, தயவு போன்றவற்றில் நமது சபைத் தலைவர்கள் பல உரைகளை வழங்கியுள்ளனர். இரட்சகர் நம்மை ஒரு உயர்ந்த, பரிசுத்தமான வழியில் வாழ அழைக்கிறார் என்று நான் நம்புகிறேன்5—, அவருடைய அன்பின் வழி, அவர்கள் உண்மையிலேயே சொந்தம் என்றும் தேவை என்றும் அனைவரும் உணர முடியும்.

மற்றவர்களை நேசிக்கவும், 6 அவர்களை நியாயந்தீர்க்காதிருக்கவும்,7 நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். அந்த கனமான சுமையை கீழே போடுவோம்; சுமப்பதற்கு அது நம்முடையதல்ல.8 மாறாக, இரட்சகரின் அன்பின் இரக்கத்தின் நுகத்தை நாம் எடுக்கலாம்.

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; …

என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”9

இரட்சகர் பாவத்தை மன்னிக்கவில்லை, ஆனால் நாம் மனந்திரும்பும்போது அவருடைய அன்பை நமக்கு வழங்குகிறார் மற்றும் மன்னிப்பை நீட்டிக்கிறார். விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் அவர் சொன்னார் “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனி பாவஞ்செய்யாதே.”10 அவர் தொட்டவர்கள், அவருடைய அன்பை உணர்ந்தார்கள், அந்த அன்பு அவர்களை குணப்படுத்தியது, மாற்றியது. அவருடைய அன்பு அவர்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளத் தூண்டியது. அவருடைய வழியில் வாழ்வது மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது, மேலும் மென்மை, கருணை மற்றும் அன்புடன் வாழும் அந்த வழிக்கு அவர் மற்றவர்களை அழைத்தார்.

மூப்பர் கேரி இ. ஸ்டீவன்சன் கூறினார், “வாழ்க்கையின் காற்று மற்றும் மழைப் புயல்கள், நோய் மற்றும் காயங்களை நாம் எதிர்கொள்ளும் போது, கர்த்தர், நம் மேய்ப்பர், நம் பராமரிப்பாளர், நம்மை அன்புடனும் கருணையுடனும் போஷிப்பார். அவர் நம் இருதயங்களைக் குணமாக்கி நமது ஆத்துமாக்களை மீட்டெடுப்பார்.”11 இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாமும் அவ்வாறே செய்ய வேண்டாமா?

இரட்சகர் அவரைப்பற்றி அறிந்துகொள்ளும்படியும்,12 நாம் அவர் செய்கிறதாக பார்த்த காரியங்களைச் செய்யும்படியும் கேட்கிறார்.13 அவர் தூய அன்பின் தயாளத்தின் உருவகம். அவர் நம்மிடம் கேட்பதைச் செய்ய நாம் படிப்படியாகக் கற்றுக் கொள்ளும்போது, கடமைக்காகவோ அல்லது நாம் பெறக்கூடிய ஆசீர்வாதங்களுக்காகவோ அல்ல, மாறாக அவர் மீதும் நம்முடைய பரலோக பிதாவின் மீதும் உள்ள அன்பினால் 14 அவருடைய அன்பு நம்மில் பாய்ந்து அவர் கேட்பதையெல்லாம் சாத்தியமானதாக மாத்திரமல்ல, ஆனால் இறுதியில் மிகவும் எளிதாகவும் இலகுவாகவும் ஆக்குவார் 15 அது நாம் என்றும் கற்பனை செய்கிறதைவிட அதிக ஆனந்தமாயிருக்கும். அதற்கு பயிற்சி தேவைப்படும்; என்னைப் பொறுத்தவரை இதற்கு பல வருடங்கள் ஆகலாம், ஆனால் அன்பு நம் ஊக்க சக்தியாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவதால், அவர் அந்த ஆசையை, 16 அந்த விதையை எடுத்து, இறுதியில் சுவையான பழங்கள் நிறைந்த அதை ஒரு அழகான மரமாக மாற்ற முடியும்.17

நமது அன்பான பாடல்களில் ஒன்றில் நாம் பாடுகிறோம், “நான் அபூரணமாக நடக்கும்போது இன்னொருவரை நியாயந்தீர்க்க நான் யார்? அமைதியான இருதயத்தில் கண்ணால் பார்க்க முடியாத துயரம் மறைந்துள்ளது.”18 நம்மில் யார் மறைக்கப்பட்ட துக்கங்களை வைத்திருக்க முடியும்? வெளித்தோற்றத்தில் கலகக்கார இளைஞன், விவாகரத்து பெற்ற பிள்ளைகள், ஒற்றைத் தாய் அல்லது தந்தை, உடல் அல்லது மனநலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், தங்கள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள், முதியவர்கள், இன சிறுபான்மையினர், தனிமையில் இருப்பவர்கள், திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், தேவையற்ற அடிமைத்தனம் உள்ளவர்கள், மற்றும் பலர் பலவிதமான சவாலான வாழ்க்கை அனுபவங்களைக் கையாளுகின்றனர், பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை மேற்பரப்பில் சரியானதாகத் தோன்றும்.

நம்மில் எவருக்கும் சரியான வாழ்க்கை அல்லது சரியான குடும்பங்கள் இல்லை; எனக்கு நிச்சயமாக இல்லை. சவால்கள் மற்றும் குறைபாடுகளை அனுபவிக்கும் மற்றவர்களுடன் நாம் பச்சாதாபம் கொள்ள முற்படும்போது, அவர்களின் போராட்டங்களில் அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர அது அவர்களுக்கு உதவும். கிறிஸ்துவின் சரீரத்திற்கு தாங்கள் உண்மையிலேயே சொந்தம் என்றும் தேவை என்றும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.19 தேவனின் பிள்ளைகளைப் பிரிப்பதே சாத்தானின் பெரும் ஆசை, அவன் மிகவும் வெற்றியடைந்துள்ளான், ஆனால் ஒற்றுமையில் பெரும் வல்லமை உள்ளது.20 இந்த சவாலான அநித்தியப் பயணத்தில் நாம் எப்படி ஒருவருக்கொருவர் கைகோர்த்து நடக்க வேண்டும்!

நமது தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், “தேசியம், இனம், பாலியல் நோக்குநிலை, பாலினம், கல்விப் பட்டங்கள், கலாச்சாரம் அல்லது பிற குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஆகியவற்றின் காரணமாக மற்றவருக்கு எதிரான எந்தவொரு துஷ்பிரயோகம் அல்லது தப்பெண்ணம் நமது சிருஷ்டிகரை புண்படுத்தும்! இத்தகைய தவறான நடத்தை, அவருடைய உடன்படிக்கையின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் நம் கண்ணியத்துக்கும் குறைவாக வாழ வைக்கிறது! ”21

தலைவர் நெல்சன் அனைவரையும் நம் இரட்சகரிடத்திலும் பரலோகத்திலுள்ள நமது பிதாவிடத்திலும் திரும்பச் செல்லும் உடன்படிக்கைப் பாதையில் தொடர்ந்து செல்லுமாறு அனைவரையும் அழைத்த அதேவேளையில், அவர் பின்வரும் அறிவுரையையும் வழங்கினார்: “நண்பர்களும் குடும்பத்தினரும் … சபையை விட்டு விலகிச் சென்றால், அவர்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்துங்கள். உண்மையுள்ளவர்களாக இருப்பதற்காக நீங்கள் விமர்சிக்கப்படுவதற்கு தகுதியானதை விட, மற்றொருவரின் விருப்பத்தை நீங்கள் நியாயந்தீர்க்க முடியாது.”22

நண்பர்களே, இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தேவனின் பிள்ளை23 என்பதை நினைவில் கொள்வோம், மேலும் அவர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்.24 உங்கள் பாதையில் நீங்கள் தீர்ப்பளிக்க விரும்பும் நபர்கள் இருக்கிறார்களா? அப்படியானால், இரட்சகர் நேசிப்பதைப் போல நாம் அன்பை கொடுக்க இவை அற்புதமான வாய்ப்புகள் என்பதை நினைவில் வையுங்கள்.25 நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்போது, நாம் அவருடன் இணைக்கப்பட்டு, நம் பிதாவின் பிள்ளைகள் அனைவரின் இருதயங்களிலும் அன்பு மற்றும் சொந்தம் என்ற உணர்வை வளர்க்க உதவலாம்.

“அவர் முதலில் நம்மை நேசித்ததால் நாம் அவரை நேசிக்கிறோம்.”26 நாம் இரட்சகரின் அன்பினால் நிரப்பப்படும்போது, அவருடைய நுகம் உண்மையிலேயே மெதுவாக இருக்கும், மேலும் அவருடைய சுமையை இலகுவாக உணர முடியும்.27 இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Jack R. Christianson, Healing the Wounded Soul, 27 பார்க்கவும்.

  2. 1 கொரிந்தியர் 13:1; மரோனி 7:44–48 பார்க்கவும்.

  3. Joseph B. Wirthlin, “The Great Commandment,” Liahona, Nov. 2007, 28.

  4. யோவான் 13:35, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டிருக்கிறது; வசனம் 34 ஐயும் பார்க்கவும்.

  5. Russell M. Nelson, “Opening Remarks,” Liahona, Nov. 2018, 6–8 பார்க்கவும்.

  6. மத்தேயு 22:36–40; யோவான் 13:34–35.

  7. மத்தேயு 7:1–4; Dieter F. Uchtdorf, “The Merciful Obtain Mercy பார்க்கவும்,” Liahona, May 2012, 70–77; Robert C. Gay, “Taking upon Ourselves the Name of Jesus Christ,” Liahona, Nov. 2018, 97–100 ஐயும் பார்க்கவும்.

  8. இதற்கு விதிவிலக்காக ஆயர்கள் மற்றும் பிணையத் தலைவர்கள் உள்ளனர். “ஒவ்வொருஆயரும் பிணையத் தலைவரும் ‘இஸ்ரவேலில் ஒரு நீதிபதி’ (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:72). இந்த அதிகாரத்தின் மூலம் அங்கத்தினர்கள் பாவத்தை மனந்திரும்பி, பாவத்தை மன்னிக்கும் கிறிஸ்துவிடம் வர அவர்கள் உதவுகிறார்கள் (32.1 and 32.3)” (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 31.1.7, ChurchofJesusChrist.org பார்க்கவும்).

  9. மத்தேயு 11:28–30; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது.

  10. யோவான் 8:11; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது; வசனங்கள் 3-10 ஐயும் பார்க்கவும்.

  11. Gary E. Stevenson, “Hearts Knit Together,” Liahona, May 2021, 23.

  12. மத்தேயு 11:29 பார்க்கவும்.

  13. 3 நேபி 27:21-22 பார்க்கவும்.

  14. மத்தேயு 22:37-39 பார்க்கவும்.

  15. மோசியா 24:15 பார்க்கவும்.

  16. ஆல்மா 32:27 பார்க்கவும்.

  17. ஆல்மா 32:41 பார்க்கவும்.

  18. “Lord, I Would Follow Thee,” Hymns, no. 220.

  19. 1 கொரிந்தியர் 12:12–27; Jeffrey R. Holland, “Songs Sung and Unsung,” Liahona, May 2017, 49–51. பார்க்கவும்.

  20. Sharon Eubank, “By Union of Feeling We Obtain Power with God,” Liahona, Nov. 2020, 55–57 பார்க்கவும்; Dale G. Renlund, “The Peace of Christ Abolishes Enmity,” Liahona, Nov. 2021, 83–86 ஐயும் பார்க்கவும்; Sharon Eubank, “Turning Enemies into Friends” (Brigham Young University devotional, Jan. 23, 2018), speeches.byu.edu பார்க்கவும்.

  21. Russell M. Nelson, “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 15, 2022), broadcasts.ChurchofJesusChrist.org.

  22. Russell M. Nelson, “Choices for Eternity,” broadcasts.ChurchofJesusChrist.org.

  23. ரோமர் 08:16 பார்க்கவும்.

  24. ஏசாயா 49:16; ரோமர் 8:35, 38–39 பார்க்கவும்.

  25. லூக்கா 06:31–38 பார்க்கவும்.

  26. 1 யோவான் 04:19. உண்மையில், எந்த தயக்கமும் அல்லது சமரசமும் இல்லாமல் நமது முழுஇருதயத்தோடும், வலிமையோடும், மனதோடும் பெலத்தோடும் தேவன்மீது அன்பாயிருக்கவும், மனுக்குல குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்ட முதல் பிரதான கட்டளையைப்பற்றி நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த தேவனின் அன்பு பிரபஞ்சத்தின் முதல் பெரிய கட்டளை. ஆனால் பிரபஞ்சத்தின் முதல் பெரிய சத்தியம் என்னவென்றால், தேவன் நம்மை நேசிக்கிறார், அதே வழியில் முழு மனதுடன், தயக்கம் அல்லது சமரசம் இல்லாமல், அவரது முழு இருதயம், வலிமை, மனம் மற்றும் வலிமையுடன்.” (Jeffrey R. Holland, “The Greatest Possession,” Liahona, Nov. 2021, 9).

  27. மத்தேயு 11:28–30 பார்க்கவும்.