ஒற்றுமை உணர்வால் நாம் தேவனிடம் வல்லமை பெறுகிறோம்
நாம் உணர்வின் ஒற்றுமையைத் தேடும்போது, நம்முடைய முயற்சிகளை இன்னும் முழுமையாக்குவதற்கு தேவ வல்லமையை அழைப்போம்.
கார்டனின் அம்மா அவனிடம் சொன்னார், அவன் தனது வேலைகளை முடித்தால், அவர் அவனுக்காக ஒரு பழ கேக் செய்வார். அவனுக்கு விருப்பமான வகை. அவனுக்கு மட்டுமே. கார்டன் அந்த வேலைகளைச் செய்வதற்காக சென்றான், அவனுடைய அம்மா பழ கேக்கை செய்தார். அவனது அக்கா கேத்தி ஒரு சிநேகிதியுடன் வீட்டிற்குள் வந்தாள். அவள் கேக்குகளைப் பார்த்தாள், அவளுக்கும் அவளுடைய சிநேகிதிக்கும் ஒரு துண்டு கிடைக்குமா என்று கேட்டாள்.
“இல்லை,” கார்டன் சொன்னான், “இது என் கேக். அம்மா அதை எனக்காக சுட்டார், நான் அதை சம்பாதிக்க வேண்டியிருந்தது. ”
கேத்தி தனது தம்பியை முறைத்துப் பார்த்தாள். அவன் மிகவும் சுயநலவாதி மற்றும் கருமியாயிருந்தான். இதையெல்லாம் அவன் எப்படி தனக்குத்தானே வைத்துக் கொள்ள முடியும்?
சில மணிநேரங்களுக்குப் பிறகு, கேத்தி தனது சிநேகிதியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கார் கதவைத் திறந்தபோது, இருக்கையில் இரண்டு நாப்கின்கள் நன்றாக மடிக்கப்பட்டு இருந்தன, மேலே இரண்டு முட்கரண்டிகள் வைக்கப்பட்டிருந்தன, மற்றும் இரண்டு அகலமான கேக் துண்டுகள் தட்டுகளில் இருந்தன. கார்டனின் இறுதிச் சடங்கில் கேத்தி இந்த கதையைச் சொன்னாள், அவன் எப்போதுமே மாறத் தயாராக இருப்பதைக் காட்டவும், எப்போதும் தகுதியற்றவர்களுக்கு கருணை காட்டவும் விருப்பமாயிருந்தான்.
1842 ஆம் ஆண்டில், நாவூ ஆலயம் கட்ட பரிசுத்தவான்கள் கடுமையாக உழைத்து வந்தனர். மார்ச் மாதத்தில் ஒத்தாசைச் சங்கம் நிறுவப்பட்ட பின்னர், தீர்க்கதரிசி ஜோசப் அவர்கள் கூட்டங்களுக்கு அடிக்கடி வந்து, அவர்கள் விரைவில் ஆலயத்தில் செய்யவிருக்கும் பரிசுத்த, ஒன்றுபடுத்தும் உடன்படிக்கைகளுக்கு அவர்களை தயார்படுத்தினர்.
ஜூன் 9 அன்று, தீர்க்கதரிசி “இரக்கத்தைப்பற்றி பிரசங்கிக்கப் போவதாகக் கூறினார் [.] இயேசு கிறிஸ்துவும் தூதர்களும் அற்பமான விஷயங்களை எதிர்க்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால், நமக்கு என்ன நேரிடும்? நாம் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும், சிறிய விஷயங்களை கவனிக்க வேண்டும். ” தலைவர் ஸ்மித் தொடர்ந்தார், “ஒரு முழுமையான ஐக்கியம் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது, ஒரு அங்கத்தினர் கஷ்டப்பட்டால் அனைவருமே அதை உணர்ந்தால், நாம் ஒற்றுமை உணர்வால் தேவனோடு வல்லமை பெறுகிறோம்.” 1
அந்த சிறிய வாக்கியம் என்னை மின்னல் போல் தாக்கியது. நாம் ஒற்றுமை உணர்வால் தேவனிடமிருந்து வல்லமை பெறுகிறோம். நான் விரும்புகிற உலகம் இதுவல்ல. நான் செல்வாக்கு செலுத்துவதற்கும் சிறப்பாக்குவதற்கும் விரும்புகிற பல விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாக, நான் நம்புகிறவற்றுக்கு நிறைய எதிர்ப்பு உள்ளது, சில சமயங்களில் நான் வல்லமையற்றவனாக உணர்கிறேன். சமீபத்தில், நான் கேள்விகளைத் தேடி என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்: என்னைச் சுற்றியுள்ளவர்களை நான் எவ்வாறு நன்கு புரிந்துகொள்வது? அனைவரும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்போது, அந்த “ஒற்றுமை உணர்வை” நான் எவ்வாறு உருவாக்குவேன்? நான் மற்றவர்களுடன் இன்னும் கொஞ்சம் ஒன்றுபட்டிருந்தால் தேவனிடமிருந்து என்ன வல்லமையை நான் பெற முடியும்? என் ஆத்தும தேடலிலுருந்து, என்னிடம் மூன்று ஆலோசனைகள் உள்ளன. ஒருவேளை அவை உங்களுக்கும் உதவும்.
இரக்கம் பெறுங்கள்
யாக்கோபு 2:17கூறுகிறது, “தங்களைப்போன்றே தங்கள் [சகோதர சகோதரிகளையும்]நினைவுகூர்ந்து, அனைவரோடும் ஒப்புரவாகி, உங்கள் பொருட்களை கொடுத்து, உங்களைப் போலவே அவர்களும் ஐஸ்வர்யவான்களாகும்படிக்கு, தயாள புருஷர்களாய் இருங்கள். பொருள் என்ற வார்த்தையை இரக்கம் என்பதால் மாற்றவும், தங்களைப் போலவே அவர்களும் ஐஸ்வர்யவான்களாகும்படிக்கு, உங்கள் இரக்கத்தைக் கொடுங்கள்.
உணவு அல்லது பணத்தின் அடிப்படையில் நாம் பெரும்பாலும் பொருளைப்பற்றி சிந்திக்கிறோம், ஆனால் நம்முடைய ஊழியத்தில் நம் அனைவருக்கும் அதிகம் தேவைப்படுவது இரக்கம்தான்.
என்னுடைய ஒத்தாசைச் சங்கத்தின் தலைவர் சமீபத்தில் கூறினார்: “நான்… உங்களுக்கு சத்தியம் செய்கிற காரியம்… உங்கள் பெயரை நான் பாதுகாப்பாக வைத்திருப்பேன். … சிறப்பானவர்களாக, நீங்கள் யார் என்பதை நான் பார்ப்பேன். … உங்களைப்பற்றி நான் ஒருபோதும் தயவற்ற எதையும் சொல்லமாட்டேன், அது உங்களை உயர்த்தப் போவதில்லை. எனக்காக இதைச் செய்யும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நான் பயந்து, வெளிப்படையாக, உங்களைத் தள்ளிவிட்டேன்.”
ஜோசப் ஸ்மித் 1842 ஆம் ஆண்டு ஜூன் நாளில் சகோதரிகளிடம் கூறினார்:
“சிலர் என்னிடம் மிகக் குறைந்த தயவையும் அன்பையும் வெளிப்படுத்தும்போது, அது என் மனதில் என்ன வல்லமையைப் பெற்றிருக்கிறது? …
“… நம்முடைய பரலோக பிதாவிடம் நாம் நெருங்கி வர வர, அழிந்துபோகும் ஆத்துமாக்களைப்பற்றி நாம் அதிக இரக்கத்துடன் பார்க்க வேண்டும், [நாம் விரும்புகிறோம் என உணர்கிறோம்] அவற்றை நம் தோள்களில் சுமந்துகொண்டு, அவர்களின் பாவங்களை நம் முதுகுக்குப் பின்னால் போட வேண்டுமென. [என் செய்தி இந்த சமுதாயத்திற்கானது], தேவன் உங்களிடம் இரக்கம் காட்ட வேண்டுமென்றால், ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுங்கள்.” 2
இந்த ஆலோசனை, குறிப்பாக ஒத்தாசைச் சங்கத்திற்கானது. நாம் ஒருவருக்கொருவர் தீர்க்கக்கூடாது அல்லது நமது வார்த்தைகளை கடிக்க விடக் கூடாது. ஒருவருக்கொருவர் பெயர்களை பாதுகாப்பாக வைத்து இரக்கத்தின் பரிசை வழங்குவோமாக. 3
உங்கள் படகை அசையுங்கள்
1936 ஆம் ஆண்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு தெளிவற்ற படகோட்டும் குழு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஜெர்மனிக்குச் சென்றது. அது பெரும் மந்தநிலையின் ஆழங்களாய் இருந்தது. இவர்கள் தொழிலாளி வர்க்க சிறுவர்களாக இருந்தனர், அவர்களின் சிறிய சுரங்கம் மற்றும் மரம் வெட்டும் நகரங்கள் அவர்கள் பெர்லினுக்கு பயணிக்கும்படியாக சிறிது பணத்தை நன்கொடையாக அளித்தன. போட்டியின் ஒவ்வொரு அம்சமும் அவர்களுக்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டதாகத் தோன்றியது, ஆனால் பந்தயத்தில் ஏதோ நடந்தது. படகோட்டும் உலகில், அவர்கள் அதை “ஊஞ்சல்” என்று அழைக்கிறார்கள். The Boys in the Boat: புத்தகத்தின் அடிப்படையில் இந்த விவரத்தைக் கேளுங்கள்.
சில நேரங்களில் நடக்கும் ஒரு விஷயம் உள்ளது, அதை அடைய கடினமாக உள்ளது மற்றும் வரையறுக்க கடினமாக உள்ளது. அது “ஊஞ்சல்” என அழைக்கப்படுகிறது ஒரு செயலும்கூட ஒத்திருக்காமல் போகாமல் அனைவருமே சரியான ஒற்றுமையுடன் படகோட்டும்போது மட்டுமே இது நிகழ்கிறது.
துடுப்பு வலிப்பவர்கள் அவர்களின் கடுமையான சுதந்திரமாய் செயலாற்ற வேண்டும், அதே நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட திறன்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். பந்தயங்கள் போலிகளால் வெல்லப்படுவதில்லை. நல்ல குழுக்கள் நல்ல கலவையாகும், யாரோ ஒருவர் பொறுப்பேற்று தலைமை தாங்குவார், யாரோ ஒருவர் இருப்பு வைத்திருக்க வேண்டும், சண்டையிட யாராவது, சமாதானம் செய்ய யாராவது. எந்தவொரு படகோட்டியும் மற்றொருவரை விட மதிப்புமிக்கவர் அல்ல, அனைத்தும் படகின் சொத்துக்கள், ஆனால் அவை ஒன்றாக துடுப்பு போட வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் மற்றவர்களின் தேவைகளுக்கும் திறன்களுக்கும் ஏற்றாற்போல் அனுசரிக்க வேண்டும், குறுகிய கையுடையவர் சிறிது அதிகமாக, நீண்ட கையுடையவர் சிறிது கொஞ்சமாக இழுக்க வேண்டும்.
குறைபாடுகளுக்கு பதிலாக வேறுபாடுகளை சாதகமாக மாற்றலாம். அப்போதுதான் படகு தானாகவே நகர்வது போல் உணரப்படும். அப்போதுதான் வலி முற்றிலும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நல்ல “ஊஞ்சல்” கவிதை போல உணரப்படுகிறது. 4
உயர்ந்த தடைகளுக்கு எதிராக, இந்த அணி சரியான அசைவைப் பெற்று வென்றது. ஒலிம்பிக் தங்கம் களிப்பூட்டியது, ஆனால் அந்த நாளில் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் தங்கியிருக்கும் ஒவ்வொரு துடுப்பு போட்டவர் அனுபவித்த ஒற்றுமை ஒரு புனித தருணம்.
நல்லதை வளர்க்கும்படியாக வேகமாக கெட்டதை அழிக்கவும்
யாக்கோபு 5ல் உள்ள அழகிய உருவகத்தில், திராட்சைத் தோட்டத்தின் எஜமான் நல்ல நிலத்தில் ஒரு நல்ல மரத்தை நட்டான், ஆனால் அது காலப்போக்கில் சிதைந்து காட்டுப் பழங்களை கொண்டு வந்தது. திராட்சைத் தோட்டத்தின் எஜமான் எட்டு முறை கூறுகிறான்: “இந்த மரத்தை இழப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.”
வேலைக்காரன் திராட்சைத் தோட்டத்தின் எஜமானிடம்: “[மரத்தை] இன்னும் சிறிது நேரம் விட்டுவிடுங்கள். கர்த்தர் சொன்னார்: ஆம், நான் இதை இன்னும் சிறிது காலம் தப்பவிடப்பண்ணுவேன்.” 5
நமது சொந்த சிறிய திராட்சைத் தோட்டங்களில் தோண்டி நல்ல பலனைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் பயன்படக்கூடிய அறிவுறுத்தல் வருகிறது: “நல்லவை வளர வளரவே கெட்ட விருட்சங்களை நீக்கிப்போடு.” 6
ஒற்றுமை மாயமாக நடக்காது; அதற்கு வேலை செய்ய வேண்டும். இது குழப்பமான, சில நேரங்களில் அசௌகரியமாக இருக்கிறது, மேலும் நல்லதை வளர வளர கெட்டதை நாம் படிப்படியாக அகற்றுவோம்.
ஒற்றுமையை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளில் நாம் ஒருபோதும் தனியாக இல்லை. யாக்கோபு 5 தொடர்கிறது, “ஊழியக்காரர்கள் சென்று தங்கள் ஊக்கத்தோடு பணிபுரிந்தார்கள், திராட்சைத் தோட்டத்தின் எஜமானும் அவனோடு சேர்ந்து பணி புரிந்தான்.” 7
நாம் ஒவ்வொருவரும் ஒருபோதும் நடக்கக்கூடாத, ஆழ்ந்த காயங்கள் ஏற்படுவதை அனுபவிக்கப் போகிறோம், நாம் ஒவ்வொருவரும், பல சமயங்களில், பெருமையையும் மேட்டிமையையும் நாம் தாங்கும் பழத்தை சிதைக்க அனுமதிப்போம். ஆனால் இயேசு கிறிஸ்து எல்லாவற்றிலும் நம்முடைய இரட்சகராக இருக்கிறார். அவருடைய வல்லமை மிகத் தாழ்ந்து வந்து, நாம் அவரை அழைக்கும்போது, நம்பத்தகுந்த வகையில் நமக்கு இருக்கிறது. நாம் அனைவரும் நம்முடைய பாவங்களுக்கும் தோல்விகளுக்கும் இரக்கத்துக்காக கெஞ்சுகிறோம். அவர் அதை இலவசமாக தருகிறார். மேலும் அதே இரக்கத்தையும் புரிதலையும் ஒருவருக்கொருவர் கொடுக்க முடியுமா என்று அவர் கேட்கிறார்.
இயேசு அதை அப்பட்டமாகக் கூறினார்: “ஒன்றாக இருங்கள்; நீங்கள் ஒன்றாக இல்லையானால் நீங்கள் என்னுடையவர்கள் அல்ல.” 8 ஆனால் நாம் ஒன்றாக இருந்தால், நம்முடைய கேக்கின் ஒரு பகுதியைக் கொடுக்கவோ அல்லது நம்முடைய தனிப்பட்ட திறமைகளுக்குப் பொருத்தமாகவோ இருந்தால், படகு சரியான ஒற்றுமையுடன் அசைய முடியும் என்றால், நாம் அவருடையவர்கள்தான். நல்லது வளரும் அளவுக்கு கெட்டதை விரைவாக அகற்ற அவர் உதவுவார்.
தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள்
நாம் இருக்க விரும்பும் இடத்தில் நாம் இருக்காமலிருப்போம், இப்போது நாம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. நம்மிலும், நாம் சேர்ந்த குழுக்களிலும் நாம் தேடும் மாற்றம் செயல்பாட்டின் மூலம் குறைவாகவும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் தீவிரமாக முயற்சிக்கும் செயலின் மூலமாகவும் வரும் என்று நான் நம்புகிறேன். ஏன்? ஏனென்றால், நாம் சீயோனைக் கட்டியெழுப்புகிறோம், “ஒரே இருதயமும் ஒரே மனமும் கொண்ட” ஜனம். 9
உடன்படிக்கையின் பெண்களாக, நமக்கு பரந்த செல்வாக்கு உள்ளது. நாம் ஒரு நண்பருடன் படிக்கும்போது, குழந்தைகளை படுக்கையில் படுக்க வைக்கும் போது, பேருந்தில் ஒரு சகபயணியுடன் பேசும்போது, சக ஊழியருடன் விளக்கக்காட்சியைத் தயாரிக்கும் போது அந்த செல்வாக்கு அன்றாட தருணங்களில் பொருந்துகிறது. பாரபட்சத்தை நீக்கி ஒற்றுமையை வளர்க்க நமக்கு வல்லமை உள்ளது.
ஒத்தாசைச் சங்கம் மற்றும் இளம் பெண்கள் வெறுமனே வகுப்புகள் அல்ல. நாம் நமது ஊஞ்சலைக் கண்டுபிடிக்கும் வரை மிகவும் வித்தியாசமான பெண்கள் அனைவரும் ஒரே படகிலும் துடுப்பு போடுவதிலும் மறக்க முடியாத அனுபவங்களாக அவை இருக்கலாம். நான் இந்த அழைப்பை கொடுக்கிறேன்: உலகை நன்மைக்காக மாற்றும் ஒரு கூட்டு சக்தியின் ஒரு பகுதியாக இருங்கள். நமது உடன்படிக்கை பணி ஊழியம் செய்வது, கீழே தொங்கும் கைகளை உயர்த்துவது, போராடும் ஜனங்களை நமது முதுகில் அல்லது கைகளில் சுமந்து செல்வது. என்ன செய்வது என்று தெரிந்து கொள்வது சிக்கலானது அல்ல, ஆனால் இது பெரும்பாலும் நம் சுயநலங்களுக்கு எதிராக இருக்கிறது, நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த சபையின் பெண்கள் சமுதாயத்தை மாற்ற வரம்பற்ற ஆற்றலைக் கொண்டுள்ளனர். எனக்கு முழு ஆவிக்குரிய நம்பிக்கை உள்ளது, நாம் உணர்வின் ஒற்றுமையைத் தேடும்போது, நம்முடைய முயற்சிகளை இன்னும் முழுமையாக்குவதற்கு தேவ வல்லமையை நாம் அழைப்போம்.
சபை 1978 ஆம் ஆண்டு ஆசாரியத்துவத்தின் வெளிப்பாட்டை நினைவுகூர்ந்தபோது, தலைவர் ரசல். எம். நெல்சன் ஒரு வல்லமையான தீர்க்கதரிசன ஆசீர்வாதத்தை வழங்கினார்: “இது என் ஜெபம் மற்றும் ஆசீர்வாதம் என்று கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் கொடுக்கிறேன், எந்தவொரு பாரபட்சத்தையும் மேற்கொண்டு, தேவனோடு ஒருவருக்கொருவர் சமாதானத்துடனும் நல்லிணக்கத்தோடும் நடக்கலாம்.“ 10
இந்த தீர்க்கதரிசன ஆசீர்வாதத்தை நாம் பெறுவோம், உலகில் ஒற்றுமையை அதிகரிக்க நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சிகளைப் பயன்படுத்துவோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தாழ்மையான, காலவரம்பற்ற ஜெபத்தின் வார்த்தைகளில் நான் என் சாட்சியத்தை கொடுக்கிறேன்: “அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்; பிதாவே, நீர் என்னிலும், நான் உம்மிலும் இருப்பதுபோல, அவர்களும் நம்மில் ஒருவராக இருக்க வேண்டும். “ 11 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.