பொது மாநாடு
சில்லறையை வைத்துக்கொள்ளுங்கள்
அக்டோபர் 2020 பொது மாநாடு


9:37

சில்லறையை வைத்துக்கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்து மூலமாக, நீடித்த மாற்றங்களைச் செய்ய நமக்கு பெலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்மையுடன் அவரிடத்தில் நாம் திரும்பும்போது மாற்றத்திற்கான நமது திறமையை அவர் அதிகரிப்பார்.

சகோதரிகளே, உங்களுடனிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது.

சந்தையில் பணம் கொடுத்தல்

ஒரு பொருளை வாங்க ஒருவர் சந்தைக்குப் போவதைக் கற்பனை செய்யுங்கள். அந்த பொருளின் மதிப்பைவிட அதிகமாய் காசாளரிடம் அவள் செலுத்தினால் காசாளர் அவளுக்கு மீதி சில்லறையைக் கொடுப்பார்.

சில்லறையைப் பெறுதல்

நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் பெறுகிற மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப்பற்றி பூர்வகால அமெரிக்காவில் தனது ஜனங்களுக்கு பென்யமீன் ராஜா போதித்தான். வானங்களையும் பூமியையும் நாம் அனுபவிக்கிற சகல அழகானவற்றையும் அவர் சிருஷ்டித்தார். 1 பாவம் மற்றும் மரணத்தின் பாவத்திலிருந்து மீட்கப்பட, அவருடைய அன்பான பாவநிவர்த்தியின் மூலமாக நமக்கு ஒரு வழியை அவர் வழங்குகிறார். 2 அவருடைய கட்டளைகளின்படி சிரத்தையுடன் வாழுவதில் நமது நன்றியுணர்வை அவருக்குக் காட்டுவதில், எப்போதும் நம்மைக் கடனாளியாக வைத்து உடனடியாக அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

அதிகமானவற்றை, நாம் அவருக்குத் திரும்பக் கொடுக்கிற மதிப்பைவிட மிக அதிகமானவற்றை அவர் நமக்குக் கொடுக்கிறார். ஆகவே, நமது பாவங்களுக்காக விலைமதிப்பற்ற கிரயத்தைச் செலுத்திய அவருக்கு நாம் என்ன கொடுக்கமுடியும்? மாற்றத்தை நாம் அவருக்குக் கொடுக்கமுடியும். நமது மாற்றத்தை நாம் அவருக்குக் கொடுக்கமுடியும். இது, சிந்தனையின் ஒரு மாற்றமாக, பழக்கத்தின் ஒரு மாற்றமாக, அல்லது நாம் செல்லும் திசையில் ஒரு மாற்றமாக இருக்கக்கூடும். நம் ஒவ்வொருவருக்காகவும் அவருடைய விலைமதிப்பற்ற கிரயத்திற்குப் பதிலாக இருதய மாற்றத்தை கர்த்தர் நம்மிடம் கேட்கிறார். நம்மிடமிருந்து அவர் வேண்டுகிற மாற்றம், அவருடைய நன்மைக்காக அல்ல, நம்முடைய நன்மைக்காகவே. எனவே, நாம் கொடுக்கிற பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிற கடையிலுள்ள காசாளரைப் போலல்லாமல், மீதிப்பணத்தை வைத்துக்கொள்ளுமாறு நமது மகிமையான இரட்சகர் நம்மை அழைக்கிறார்.

பென்யமீன் ராஜாவால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட பின்பு, “பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு, எங்களுக்குள்ளே, பலத்த மாற்றத்தைச் செய்வித்த சர்வவல்ல கர்த்தருடைய ஆவியானவரினிமித்தம்”, அவர்களுடைய இருதயங்களிலே மாற்றம் உண்டானதென சொல்லி, அவனுடைய ஜனங்கள் உரக்கச் சத்தமிட்டார்கள் 3 அவர்கள் உடனடியாக பரிபூரணமுள்ளவர்களானார்கள் என்று வேதங்கள் சொல்லவில்லை, மாறாக, மாறுவதற்கான அவர்களுடைய விருப்பம் செயல்பட அவர்களை வலியுறுத்தியது, அவர்களுடைய இருதய மாற்றம் சுபாவ மனிதனை அல்லது மனுஷியை தள்ளிவைத்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் போலாக மாற முயற்சி செய்தபோது ஆவிக்கு அடிபணிய வைத்தது.

தலைவர் ஹென்றி பி.ஐரிங் போதிக்கிறார், “மிகுந்த முயற்சியுடனும், சில வேதனையுடனும் விசுவாசத்தில், சுதந்தரமாக தேடுதல்மீது உண்மையான மனமாற்றம் சார்ந்திருக்கிறது. பின்னர், கழுவுதல் மற்றும் மாற்றத்தின் அற்புதத்தை வழங்குகிறவர் கர்த்தர்”. 4 நம்மை மாற்ற இரட்சகரின் திறமையுடன் நமது முயற்சியை இணைப்பதில் நாம் புதிய சிருஷ்டிகளாக மாறுவோம்.

நான் இளமையாயிருந்தபோது, என்னுடைய இலக்கான நித்திய ஜீவனை நோக்கி, மேல் நோக்கி செங்குத்தான பாதையில் நடந்துகொண்டிருப்பதை நான் காட்சியாய் பார்த்தேன். தவறான ஒன்றை நான் செய்த அல்லது சொல்லிய ஒவ்வொரு முறையும், என் பயணத்தை மீண்டும் தொடங்கவே, பாதையின் கீழே சறுக்குவதை நான் உணர்ந்தேன். போர்டின் மேலிருந்து ஆட்டத்தின் ஆரம்பத்திற்கு கீழே உங்களை சறுங்க வைக்கிற, பிள்ளைகளின் பாம்பு ஏணி விளையாட்டில் ஒரு சதுரத்தில் இறங்குவதைப் போலிருந்தது! அது ஏமாற்றமளிப்பதாயிருந்தது! ஆனால், கிறிஸ்துவின் கோட்பாட்டையும், 5 என்னுடைய வாழ்க்கையில் அதை எவ்வாறு தினமும் பயன்படுத்துவதெனவும் புரிந்துகொள்ள நான் ஆரம்பித்தபோது, நான் நம்பிக்கையைக் கண்டேன்.

மாற்றத்தின் நடைமுறையில் நிலைத்திருத்தல் அடங்கியிருக்கிறது

மாற்றத்திற்கு ஒரு தொடர்ச்சியான மாதிரியை இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்திருக்கிறார். அவரில் விசுவாசம் வைக்க அவர் நம்மை அழைக்கிறார், மனந்திரும்ப அது நம்மை உணர்த்துகிறது, “அந்த விசுவாசமும் மனந்திரும்புதலும் இருதய மாற்றத்தைக் கொண்டுவருகிறது”. 6 நாம் மனந்திரும்பி, நம்முடைய இருதயங்களை அவரிடத்தில் திருப்பும்போது, பரிசுத்த உடன்படிக்கைகளை செய்யவும் அதன்படி வாழவும் மிகுந்த விருப்பத்தை நாம் அடைவோம். நமது வாழ்க்கை முழுவதும் இந்தக் கொள்கைகளை கடைபிடிக்க தொடர்வதினாலும், நம்மை மாற்ற கர்த்தரை அழைப்பதினாலும் முடிவுபரியந்தம் நாம் நிலைத்திருப்போம், முடிவுபரியந்தம் நிலைத்திருத்தல் என்றால் முடிவுபரியந்தம் மாறிக்கொண்டிருக்கிறோம் என அர்த்தமாகிறது. ஒவ்வொரு தவறிய முயற்சியை திரும்ப நான் ஆரம்பித்துக்கொண்டிருக்கிறேன் என நான் இப்போது புரிந்துகொள்கிறேன், ஆனால் அந்த ஒவ்வொரு முயற்சியுடன் மாற்றத்தின் எனது செயல்முறையை நான் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

“நான் மனந்திரும்புதலின் வரத்தை மதிக்கிறேன், ஒவ்வொரு நாளும் மேம்படுத்த நாடுகிறேன்.” என்ற இளம் பெண்கள் தலைப்பில் ஒரு உணர்த்தப்பட்ட சொற்றொடர் உள்ளது 7 . இந்த அழகான வரத்தை நாம் மதிக்கவும், மாற்றத்தை வேண்டுமென்றே நாடுவதற்கும் நான் ஜெபிக்கிறேன். சிலசமயங்களில் நாம் செய்யவேண்டிய மாற்றங்கள் மோசமான பாவத்திற்கு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், மிகப்பெரும்பாலும், இயேசு கிறிஸ்துவின் பண்புகளுடன் நம்மை இணைத்துக் கொள்ள நம் குணத்தை செம்மைப்படுத்த முயற்சிக்கிறோம். நமது அன்றாட தேர்ந்தெடுப்புகள் நமது முன்னேற்றத்திற்கு உதவுகிறது அல்லது இடையூறு செய்கிறது. சிறிய, ஆனால், உறுதியான, வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றங்கள் முன்னேற நமக்குதவும். ஊக்கமிழந்து போகாதிருங்கள். மாற்றமென்பது வாழ்நாள் செயல்முறை. மாற்றத்திற்கான நமது போராட்டங்களில் நம்முடன் கர்த்தர் பொறுமையாயிருக்கிறார் என்பதற்காக நான் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்து மூலமாக, நீடித்த மாற்றங்களைச் செய்ய நமக்கு பெலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்மையுடன் அவரிடத்தில் நாம் திரும்பும்போது மாற்றத்திற்கான நமது திறமையை அவர் அதிகரிப்பார்.

கூடுதலாக, இரட்சகரின் பாவநிவர்த்தியின் மாற்றக்கூடிய வல்லமைக்கு, நமது முயற்சியை நாம் முன்வைக்கும்போது பரிசுத்த ஆவியானவர் ஆதரித்து நம்மை வழிநடத்துவார். நாம் என்ன மாற்றங்களைச் செய்யவேண்டுமென்பதை அறிந்துகொள்ள நமக்கு அவர் உதவவும் முடியும். ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள், ஜெபம், உபவாசமிருத்தல் மற்றும் ஆலயங்களுக்குப் போதல் மூலமாக நாம் உதவியையும் ஊக்குவித்தலையும்கூட காணமுடியும்.

அதைப்போன்றே, மாறுவதற்கான நமது முயற்சிகளில் நம்பிக்கையான குடும்ப அங்கத்தினர்கள், தலைவர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருக்கமுடியும். எனக்கு எட்டு வயதாயிருந்தபோது, என்னுடைய மூத்த சகோதரன் லீயும் நானும் பக்கத்துவீட்டு மரக்கிளைகளில் எங்கள் நண்பர்களுடன் நாங்கள் நேரத்தை செலவுசெய்தோம். அந்த மர நிழலில் எங்கள் நண்பர்களோடு ஒன்றாயிருப்பதை நாங்கள் விரும்பினோம். ஒரு நாள் லீ மரத்திலிருந்து விழுந்து தன் கையை உடைத்துக்கொண்டான். உடைந்த கையுடன் அவனாக மரத்தில் ஏற அவனுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் அங்கே அவனில்லாமல் மரத்தில் வாழ்க்கை அதே போன்றில்லை. ஆகவே, எங்களில் சிலர் பின்னாலிருந்து அவனை நிலைப்படுத்தி, அவனுடைய நல்ல கையை மற்றவர்கள் இழுத்து, அதிக சிரமமில்லாமல் லீ மறுபடியும் மரத்தில் ஏறினான். இப்போதும் அவன் கை உடைந்தே இருந்தது, ஆனால், அவன் குணமாகிக்கொண்டிருந்தபோது, எங்களுடைய நட்பை ரசித்துக்கொண்டு மீண்டும் அவன் எங்களோடிருந்தான்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நமது நடவடிக்கைகளில் ஒரு விதமாக இருப்பதைப்போல மரத்தில் விளையாடுகிற என்னுடைய அனுபவத்தைப்பற்றி நான் அடிக்கடி சிந்திப்பேன். சுவிசேஷ கிளைகளின் நிழலில், நமது உடன்படிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிற அநேக ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கிறோம். சிலர் தங்களின் உடன்படிக்கைகளின் பாதுகாப்பிலிருந்து விழுந்து, சுவிசேஷத்தின் பாதுகாப்பிற்குள் திரும்ப ஏறிவர நமது உதவி தேவையாயிருக்கக்கூடும். அவர்களாகவே திரும்பிவர அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். நமது நட்புறவை அவர்கள் அனுபவிக்கும்போது அவர்களுக்குதவ, இங்கே கொஞ்சம் மெதுவாக இழுத்து, அங்கே கொஞ்சம் மேலே செல்ல முடியுமா?

விழுவதிலிருந்து ஒரு காயத்தால் நீங்கள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தால், உங்களுடைய உடன்படிக்கைளுக்கும் அவைகள் வழங்குகிற ஆசீர்வாதங்களுக்கும் திரும்ப உங்களுக்குதவ தயவுசெய்து மற்றவர்களை அனுமதியுங்கள். உங்களை நேசிப்பவர்களால் நீங்கள் சூழப்பட்டிருக்கும்போது, நீங்கள் குணமாகவும், மாறவும் இரட்சகர் உங்களுக்குதவ முடியும்.

அநேக ஆண்டுகளாக, நான் பார்க்காத நண்பர்களைப் பார்க்க நான் எப்போதாவது ஓடுகிறேன். சிலநேரங்களில் அவர்கள் சொல்கிறார்கள், “நீ கொஞ்சமும் மாறவில்லை!” சில ஆண்டுகளில் நான் மாறியிருப்பதாக நான் நம்பினதால் அதைக் கேட்கிற ஒவ்வொரு முறையும் நான் சிறிது சங்கடப்படுவேன். நேற்றிலிருந்து நான் மாறியதாக நான் நம்பினேன்! நான் சிறிது கனிவானவள், சிறிதாக நியாயந்தீர்ப்பவள், அதிக இரக்கமுள்ளவள் என நான் நம்புகிறேன். மற்றவர்களின் தேவைகளுக்கு நான் விரைவிலேயே பதிலளிப்பவள் என நான் நம்புகிறேன், நான் சிறிதே அதிக பொறுமையுள்ளவள் என நம்புகிறேன்.

என்னுடைய வீட்டருகிலுள்ள மலைகளில் ஏற நான் விருப்பமுள்ளவள். பாதையில் நான் நடக்கும்போது, பெரும்பாலும் என்னுடைய காலணிகளுக்குள் சிறிய கற்கள் மாட்டிக்கொள்ளும். முடிவாக, நான் நின்று என்னுடைய காலணிகளை உதறுவேன். ஆனால், நான் நின்று, எரிச்சலிலிருந்து என்னை விடுவிப்பதற்கு முன்பு, நான் எவ்வளவு நேரம் வலியில் ஏறுவதற்கு என்னை நான் அனுமதிக்கிறேன் என்பது என்னை வியக்க வைக்கிறது.

உடன்படிக்கை பாதையில் நாம் பயணிக்கும்போது, மோசமான பழக்கங்கள், பாவங்கள், அல்லது மோசமான பண்புகளின் வடிவத்தில் சிலசமயங்களில் நம்முடைய காலணிகளில் கற்கள் வந்துவிடுகின்றன. நமது வாழ்க்கையிலிருந்து விரைவாக நாம் அவைகளை உதறித் தள்ளும்போது, நமது அநித்திய பயணம் மிக மகிழ்வுள்ளதாக இருக்கும்.

மாற்றத்தை பராமரிக்க முயற்சிகள் தேவையாயிருக்கிறது. நான் இப்போது அகற்றிய எரிச்சலூட்டுகிற வேதனை தருகிற கற்களை மீண்டும் என் காலணிகளில் வைக்க மட்டுமே பாதையினூடே நிறுத்துவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு அழகான பட்டாம்பூச்சி தனது கூட்டிற்குத் திரும்புவதைவிட, வேறு எதையும் இனியும் செய்ய நான் விரும்பமாட்டேன்.

இயேசு கிறிஸ்துவினிமித்தமே நாம் மாறமுடியுமென நான் சாட்சியளிக்கிறேன். நாம் நம் பழக்கங்களை சரிசெய்து கொள்ளலாம், நம் எண்ணங்களை மாற்றலாம், மேலும் அவரைப் போலவே ஆக நம் குணத்தை செம்மைப்படுத்தலாம். அவருடைய உதவியுடன் மாற்றத்தை காத்துக்கொள்ள நம்மால் முடியும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.