குமாரனாகிய நேர்த்தியான பரிசு
இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நம்முடைய ஒழுக்க தவறுகளுக்கு ஏற்ற வேதனையிலிருந்து தப்பித்து, நம்முடைய பூலோக துரதிர்ஷ்டங்களின் ஏற்றதல்லாத வேதனைகளை வெல்ல முடியும்.
என்னைப் பின்பற்றி வாருங்கள் பாடத்துக்காக கடந்த கோடை காலத்தில் மார்மன் புத்தகம் வாசித்தபோது, அவன் தன் பாவங்களை முற்றிலுமாக உணர்ந்தபோது, “அதைப்போல நேர்த்தியானதும் அதிக கசப்பான எதையும் பார்த்ததில்லை” என்ற ஆல்மாவின் அறிக்கையால் நான் அதிர்ச்சியடைந்தேன். 1 ஏழு மில்லிமீட்டர் சிறுநீரக கல்லுடன் அந்த வாரம் நடந்த எனது போராட்டத்தின் காரணமாக என் கவனத்தை ஈர்த்த மிகுந்த வலியைப்பற்றிய செய்திக்காக நான் வருந்துகிறேன். அத்தகைய “சிறிய மற்றும் எளிமையான” விஷயம் “நிறைவேற்றப்பட்டபோது” ஒரு மனிதன் ஒருபோதும் இதுபோன்ற “பெரிய விஷயங்களை” அனுபவித்ததில்லை. 2
மார்மன் புஸ்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் நேர்த்தியான, என்ற சொல் பொதுவாக விதிவிலக்கான அழகு அல்லது இணையற்ற சிறப்பம்சங்களை விவரிக்கிறது என்பதால் அல்மாவின் பாஷை தனித்து நிற்கிறது. உதாரணமாக, ஜோசப் ஸ்மித், மரோனி தூதன் “பூமியில் [அவன்] இதுவரை கண்டிராத எதையும் தாண்டிய ஒரு வெண்மையான” “நேர்த்தியான வெண்மை” உடையணிந்ததாகக் குறிப்பிட்டார், 3 ஆயினும் நேர்த்தியான என்பது மோசமான விஷயங்களுக்கு அதி தீவிரத்தை தெரிவிக்க முடியும். இவ்வாறாக ஆல்மாவும் சிறந்த அகராதிகளும் நேர்த்தியான வலியை “வேதனை”, “கசக்கப்படுதல்”, “துன்புறுத்தப்படுதல்” ஆகியவற்றுடன் “மிகப் பெரிய அளவிற்கு” இணைக்கின்றன. 4
ஆல்மாவின் கற்பனை ஒரு கட்டத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தின் முழுமையான, துன்பகரமான குற்ற உணர்வை உணர வேண்டும் என்பதன் தாழ்மையான நிஜமாகும். நீதி அதைக் கோருகிறது, தேவனே அதை மாற்ற முடியாது 5 ஆல்மா தனது பாவங்கள் “அனைத்தையும்”, குறிப்பாக மற்றவர்களின் நம்பிக்கையை அழித்ததை நினைவு கூர்ந்தபோது, அவனுடைய வலி கிட்டத்தட்ட தாங்க முடியாததாக இருந்தது, தேவனுக்கு முன்பாக நிற்கும் எண்ணம் அவனை ஒரு “விவரிக்க முடியாத திகிலால்” நிரப்பியது. “ஆத்துமாவும் சரீரமும் அழிந்துபோக” அவன் ஏங்கினான். 6
எவ்வாறாயினும், “ஒரு இயேசு கிறிஸ்துவின் வருகை … உலகின் பாவங்களுக்கு பாவநிவர்த்தி செய்வதற்காக” தீர்க்கதரிசனம் கூறப்பட்ட தருணத்தில் எல்லாவற்றையும் மாற்றத் தொடங்கியதாக ஆல்மா கூறினான், மேலும் அவன் “[அவனது] இயேசுவே, தேவ குமாரனே, எனக்கு இரங்கும் என இதயத்திற்குள் அழுதான்.“ அந்த ஒரு சிந்தனையுடனும், ஒரு வேண்டுகோளுடனும், ஆல்மா “[அவனது] வலியை விட அதிகமாக இருந்த” “நேர்த்தியான” மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டான். 7
மனந்திரும்புதலின் நோக்கம் சில துன்பங்களை எடுத்து அதை தூய்மையான ஆனந்தமாக மாற்றுவதே என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவரில் நமது விசுவாசத்தையும், உண்மையான இருதய மாற்றத்தையும் செயல்படுத்தி, நாம் கிறிஸ்துவண்டை வருகிற தருணம், நம்மை நொறுக்கும் நமது பாவங்களின் பாரம் நமது முதுகிலிருந்து அவருக்கு மாறத் தொடங்குகிறது என்ற அவரது “உடனடி நன்மைக்கு நன்றி.” 8 இது மட்டுமே சாத்தியம், ஏனென்றால் அவர் பாவமில்லாமல் அவருடைய சிருஷ்டிப்புகளின் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பாவத்தின் “எல்லையற்ற மற்றும் சொல்லமுடியாத வேதனையை” அனுபவித்தார், அவருடைய எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் - மிகவும் கடுமையான துன்பம், அவருடைய ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வெளியேறியதாகும். 9 தற்கால வேதத்தில், நேரடி, தனிப்பட்ட அனுபவத்திலிருந்து, இரட்சகர் இவ்வாறு எச்சரிக்கிறார், நாம் மனந்திரும்பாவிட்டால் நம்முடைய “துன்பங்கள்” எவ்வளவு “நேர்த்தியானவை” என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவனது அளவிட முடியாத பெருந்தன்மையால் அவன் தெளிவுபடுத்துவதாவது, “அவர்கள் மனந்திரும்பினால், அவர்கள் பாடனுபவிக்க முடியாதபடி, தேவனாகிய நான் எல்லாருக்காகவும் பாடனுபவித்தேன்” 10 , ஆல்மா அனுபவித்த “மேலான மகிழ்ச்சியை” “ருசிக்க” அனுமதிக்கிற மனந்திரும்புதல். 11 இந்த கோட்பாட்டால் மட்டும், “நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்.” 12 ஆனாலும், ஆச்சரியப்படும் விதமாக, கிறிஸ்து இன்னும் அதிகமாக வழங்குகிறார்.
சில நேரங்களில் நேர்த்தியான வலி பாவத்திலிருந்து வரவில்லை, ஆனால் நேர்மையான தவறுகள், மற்றவர்களின் செயல்கள் அல்லது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகள். இந்த தருணங்களில், நீதியுள்ள சங்கீதக்காரனைப் போல நீங்கள் அழலாம்:
“என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
“… அருக்களிப்பு என்னை மூடிற்று.
“… ஆ, எனக்கு புறாவைப் போல சிறகுகள் இருந்தால் நான் பறந்து போய் இளைப்பாறுவேன்.” 13
மருத்துவ அறிவியல், தொழில்முறை ஆலோசனை அல்லது சட்ட திருத்தம் போன்ற துன்பங்களைத் தணிக்க உதவ முடியும். ஆனால், இவை உட்பட எல்லா நல்ல பரிசுகளும் இரட்சகரிடமிருந்து வந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 14 நம்முடைய மோசமான வலிகள் மற்றும் மன வேதனைகளின் காரணங்களைப் பொருட்படுத்தாமல், நிவாரணத்தின் இறுதி ஆதாரம் ஒன்றே: இயேசு கிறிஸ்து. ஒவ்வொரு தவறையும் சரி செய்ய, ஒவ்வொரு பூரணமில்லாததையும் அனுசரிக்க, ஒவ்வொரு காயத்தையும் சரிசெய்து, தாமதமான ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் வழங்க முழு வல்லமையையும் குணப்படுத்தும் தைலத்தையும் அவர் மட்டுமே வைத்திருக்கிறார். பூர்வகால சாட்சிகள் போல, “நமது காயங்களின் உணர்வால், தொடப்படமுடியாத உயர் ஆசாரியன் நமக்கு இல்லை” என நான் சாட்சியமளிக்கிறேன், 15 ஆனால் அன்பான மீட்பர் தன் சிம்மாசனத்திலிருந்து கீழிரங்கி வந்து, “தன் ஜனத்துக்கு எவ்வாறு உதவுவது என அறியும்படிக்கு அவர் வேதனைகளையும், உபத்திரவங்களையும் பாடனுபவித்து” போனார். 16
மிகவும் தீவிரமான அல்லது தனித்துவமான வலிகளைக் கொண்ட எவருக்கும், வேறு யாராலும் அவற்றை முழுமையாகப் பாராட்ட முடியாது என்று நினைக்கிற, உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஒவ்வொருவரும் எவ்வளவு உணர்திறன் மற்றும் நல்ல உணர்வுபூர்வமானவராக இருந்தாலும், நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை சரியாக அறிந்தவர் அல்லது குணமடைய உதவும் துல்லியமான சொற்களைக் கொண்டவர், குடும்ப அங்கத்தினர், நண்பர் அல்லது ஆசாரியத்துவத் தலைவர் யாரும் இல்லாதிருக்கலாம். ஆனால் இதை அறியுங்கள், நீங்கள் அனுபவிப்பதை சரியாக புரிந்துகொள்பவர் ஒருவர் இருக்கிறார், அவர் “எல்லா பூமியையும் விட வலிமையானவர்,” 17 மேலும் “நீங்கள் கேட்கும் அல்லது நினைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஏராளமாக செய்யக்கூடியவர்.” 18 இந்த செயல்முறை அவருடைய வழியிலும் அவருடைய கால அட்டவணையிலும் வெளிப்படும், ஆனால் உங்கள் வேதனையின் ஒவ்வொரு அவுன்ஸ் மற்றும் அம்சத்தையும் குணப்படுத்த கிறிஸ்து எப்போதும் தயாராக இருக்கிறார்.
அவ்வாறு செய்ய நீங்கள் அவரை அனுமதிக்கும்போது, உங்கள் துன்பம் வீணாகவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். வேதாகமத்தின் மிகப் பெரிய கதாநாயகர்கள் மற்றும் அவர்களின் துயரங்களைப்பற்றிப் பேசிய அப்போஸ்தலனாகிய பவுல், “தேவன்… அவர்களுடைய துன்பங்களின் மூலம் அவர்களுக்கு சில சிறந்த விஷயங்களை வழங்கினார், ஏனென்றால் துன்பங்கள் இல்லாமல் அவர்கள் பரிபூரணமாக முடியாது” என்று அவன் கூறினான். 19 தேவனின் இயல்பு மற்றும் நாம் பூமியில் இருப்பதன் நோக்கம், மகிழ்ச்சி என்பதை நீங்கள் காண்கிறீர்கள் 20 ஆனால் நம்மைச் சோதிக்கும் அனுபவங்கள் இல்லாமல், சில சமயங்களில் நம்முடைய முக்கிய அம்சங்களின் தெய்வீக மகிழ்ச்சியின் பரிபூரண மனிதர்களாக நாம் மாற முடியாது. இரட்சகரே நித்தியமாக “துன்பங்களால் பரிபூரணமாக அல்லது முழுமையாக” ஆக்கப்பட்டார் என பவுல் கூறுகிறான். 21 ஆகவே, நீங்கள் ஒரு சிறந்த மனிதராக இருந்தால், இதுபோன்ற சோதனைகளைத் தவிர்ப்பீர்கள் என்ற சாத்தானின் கிசுகிசுப்பிலிருந்து பாதுகாக்கவும்.
தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வட்டத்திற்கு வெளியே நிற்க உங்கள் துன்பங்கள் பரிந்துரைக்கும் தொடர்புடைய பொய்யையும் நீங்கள் எதிர்க்க வேண்டும், அவர்கள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நிலையிலிருந்து இன்னொரு இடத்திற்குச் சறுக்கிச் செல்வதாகத் தெரிகிறது. அதற்கு பதிலாக, வெளிப்படுத்துபவனாகிய யோவான் நிச்சயமாக பிற்கால நாட்கள் பற்றிய மகத்தான வெளிப்பாட்டில். உங்களைப் பார்த்ததுபோல, உங்களைப் பாருங்கள். ஏனென்றால், யோவான் கண்டான், “எல்லா தேசங்களையும், இனத்தாரையும், ஜனங்களையும், பாஷைக்காரர்களையும், சிம்மாசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியின் முன்பாகவும், வெள்ளை வஸ்திரங்களை அணிந்தவர், உரத்த குரலில் அழுதார் , “எங்கள் தேவனுக்கு இரட்சிப்பு” என்று கூறினார். 22
“வெள்ளை உடை அணிந்திருக்கும் இவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ” என அப்போது கேட்டார். யோவான் பதிலைப் பெறுகிறான்: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து, வெளியேறி, தங்கள் ஆடைகளை கழுவி, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் வெண்மையாக்கினார்கள்.” 23
சகோதர சகோதரிகளே, நீதியில் துன்பப்படுவது, தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்துவதை விட, தகுதி பெற உதவுகிறது. அது அவர்களின் வாக்குறுதிகளை உங்கள் வாக்குறுதிகளாக ஆக்குகிறது. தேவன் அறிவித்தது போல, “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது அவர்கள்மேல் படுவதுமில்லை. “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவதண்ணீருள்ள ஊற்றண்டைக்கு நடத்துவார். தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” 24
“மேலும் மரணமோ, துக்கமோ, அழுகையோ இருக்காது, மேலும் வேதனையும் இருக்காது.” { 25
இயேசு கிறிஸ்துவின் மகத்தான நன்மை மற்றும் அவருடைய எல்லையற்ற பிராயச்சித்தத்தின் மூலம், நம்முடைய ஒழுக்க தவறுகளின் ஏற்ற வேதனையிலிருந்து தப்பித்து, நம்முடைய பூலோக துரதிர்ஷ்டங்களின் ஏற்றதல்லாத வேதனைகளை வெல்ல முடியும் என நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன். அவருடைய வழிநடத்துதலின் கீழ், உங்கள் தெய்வீக இலக்கு, இணையற்ற மகிமை மற்றும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியாக இருக்கும் - இது மிகவும் அதிகமான, உங்களுக்கு மிகவும் தனித்துவமான ஒரு மகிழ்ச்சி, “பூமிக்குரிய எதையும் தாண்டி,” உங்கள் குறிப்பிட்ட “சாம்பல்” அழகியதாக மாறும் 26 இந்த மகிழ்ச்சியை நீங்கள் இப்போது ருசித்து, அதில் என்றென்றும் நிரம்பியிருக்க, ஆல்மா செய்ததைச் செய்ய நான் உங்களை அழைக்கிறேன்: தேவ குமாரனின் சுவிசேஷத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நேர்த்தியான பரிசை உங்கள் மனம் உறுதியாகப் பிடிக்கட்டும். இது, அவருடைய உண்மையான மற்றும் ஜீவனுள்ள சபை. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.