திடன்கொள்ளுங்கள்
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதத்தின் கோட்பாட்டில் நமது அசைக்கமுடியாத விசுவாசம், நமது அடிகளை வழிநடத்தி நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் அநித்திய வாழ்க்கையின் அவருடைய இறுதி நாட்களில் அவர்கள் பாடுபடப்போகும் துன்புறுத்தலையும் கஷ்டங்களையும்பற்றி அவருடைய அப்போஸ்தலர்களுக்கு அவர் கூறினார். 1 “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33) என்ற இந்த மிகப்பெரிய உறுதிப்பாடுடன் அவர் நிறைவுசெய்தார். நமது பரலோக பிதாவின் அனைத்து பிள்ளைகளுக்கும் அது இரட்சகரின் செய்தியாயிருக்கிறது. நமது அநித்திய வாழ்க்கையில் அது நம் ஒவ்வொருவருக்கும் இறுதியான நற்செய்தியாயிருக்கிறது.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவருடைய அப்போஸ்தலர்களை அனுப்பிய உலகத்திற்கும், ஒரு அவசியமான உறுதிப்பாடாய் “திடன்கொள்ளுங்கள்” இருந்தது. பின்னர் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களுக்குக் கூறினான், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை, கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை, துன்பப்படுத்தப்பட்டும், கைவிடப்படுகிறதில்லை, கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரிந்தியர் 4:8–9).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், நாமும்கூட “எப்பக்கத்திலும் நெருக்கப்படுகிறோம்” , மனமுறிவடையாமல் திடன்கொண்டிருக்க இதே செய்தி நமக்கும்கூட தேவையாயிருக்கிறது. அவருடைய விலையேறப்பெற்ற குமாரத்திகளிடம் கர்த்தருக்கு விசேஷித்த அன்பும் அக்கறையுமுண்டு. உங்கள் தேவைகளை உங்கள் அவசியங்களை உங்கள் பயங்களை அவர் அறிந்திருக்கிறார். கர்த்தர் சகல வல்லமையுமுள்ளவர். அவரை நம்புங்கள்.
“தேவனின் கிரியைகளும், திட்டங்களும், நோக்கங்களும் தடைபடுவதில்லை, அவைகள் நின்றுபோவதுமில்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:1) என தீர்க்கதரிசி போதிக்கப்பட்டார். அவருடைய போராடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு, இந்த மிகப்பெரிய உறுதிப்பாடுகளை கர்த்தர் கொடுத்தார்.
“இதோ, என்னுடைய ஊழியக்காரர்களே, இது உங்களுக்கு கர்த்தரின் வாக்குத்தத்தமாகும்.
“ஆகவே, திடன் கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள், ஏனெனில் கர்த்தராகிய நான் உங்களுடனேயே கூட இருக்கிறேன், உங்களுக்கு பக்கத்திலே நிற்பேன், இருந்தவரும், இருப்பவரும், வரப்போகிறவருமான இயேசு கிறிஸ்துவாகிய நானே ஜீவிக்கிற தேவனின் குமாரன் என நீங்கள் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பீர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:5–6).
கர்த்தர் நமக்கருகில் நின்றுகொண்டிருக்கிறார், அவர் சொன்னார்,
“நான் ஒருவருக்குச் சொல்லுகிறது சகலருக்கும் சொல்லுவதாகும், சிறு பிள்ளைகளே, உற்சாகமாயிருங்கள்; ஏனெனில் நான் உங்களுக்கு மத்தியிலேயிருக்கிறேன், நான் உங்களை கைவிடவில்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 61:36).
“ஏனெனில், அதிக உபத்திரவத்திற்குப் பின்னர் ஆசீர்வாதங்கள் வருகிறது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:4).
சகோதரிகளே, இன்றைய உங்களுடைய தொந்தரவு கொடுக்கும் சூழ்நிலைகளில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிற, துன்புறுத்தல்களுக்கும் தனிப்பட்ட சோகங்களுக்கும் மத்தியில் இந்த வாக்களிப்புகள் கொடுக்கப்பட்டன என நான் சாட்சியளிக்கிறேன். அநித்தியத்தின் சவால்களின் மூலமாக நாம் முன்னேறிச் செல்லும்போது, திடன் கொண்டிருக்கவும் சுவிசேஷத்தின் பரிபூரணத்தில் சந்தோஷமாயிருக்கவும் அவை விலைமதிப்பற்றவை, மற்றும் நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகிறது.
துன்பங்களும் சவால்களும் அநித்தியத்தின் பொது அனுபவங்கள். வளர நமக்குதவுவதற்காக தெய்வீகத் திட்டத்திற்கு எதிர்ப்பு, ஒரு அத்தியாவசியமான பங்கு, 2 அந்த செயல்முறையின் மத்தியில், நித்திய நீண்ட பார்வையில் எதிர்ப்பு நம்மை மேற்கொள்ள அனுமதிக்கப்படவிடாது என்ற தேவனின் உறுதிப்பாடு நமக்கிருக்கிறது. அவருடைய உதவியுடனும், நம்முடைய உண்மை மற்றும் நிலைத்திருத்தலாலும் நாம் மேம்படுவோம். அவைகள் ஒரு பகுதியாயிருக்கிற அநித்திய வாழ்க்கையைப்போல அனைத்து துயரங்களும் தற்காலிகமானவை. ஒரு பேரழிவுகரமான போருக்கு முந்தைய சர்ச்சைகளில், அமெரிக்காவின் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், “இதுவும் கடந்துபோகும்” என்று பண்டைய ஞானத்தை தனது பார்வையாளர்களுக்கு புத்திசாலித்தனமாக நினைவுபடுத்தினார். 3
உங்களுக்குத் தெரிந்ததைப்போல, திடன்கொண்டிருக்க கடினமாக்குகிற நான் பேசிக்கொண்டிருக்கிற அநித்திய துயரங்கள், கோவிட்-19 தொற்றுநோயின் அநேக அழிவுக்கேதுவான பாதிப்புகளின்மூலமாக, இப்போது மில்லியன் கணக்கானோர் போராடிக்கொண்டிருக்கும் பொதுவாக அநேகரைப்போல சிலசமயங்களில் நமக்கு வருகிறது. அதைப்போன்றே, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பகையின், பிணக்கின் ஒரு காலத்தின் வழியே மில்லியன் கணக்கானோர் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், அது எப்போதுமே ஜனாதிபதி தேர்தலோடு இணைந்திருப்பதாகத் தோன்றுகிறது ஆனால், எங்களைப் போன்ற வயதானவர்கள் அநேகரால் நினைவுபடுத்த முடியாதளவுக்கு இம்முறை மிக மோசமாக இருக்கிறது.
வறுமை, இனவாதம், உடல்நலக்குறைவு, வேலை இழப்புக்கள் அல்லது ஏமாற்றங்கள், வழிதவறிப்போன பிள்ளைகள், மோசமான திருமணங்கள் அல்லது திருமணங்கள் இல்லாமை, மற்றும் பாவத்தின் விளைவுகள் போன்றவை நம்முடைய சொந்த அல்லது பிறரின் பாவத்தின் பாதிப்புகள் போன்ற அநித்தியத்தின் அநேக துயரங்களில் சிலவற்றோடு நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அடிப்படையில் போராடுகிறோம்.
இருந்தும் இவைகள் எல்லாவற்றின் நடுவிலும், திடன்கொண்டிருக்கவும், சுவிசேஷத்தின் கொள்கைகளிலும் வாக்களிப்புகளிலும் சந்தோஷத்தையும், நமது பிரயாசங்களின் பலன்களையும் காண, நமக்கு அந்த பரலோக ஆலோசனை இருக்கிறது. 4 தீர்க்கதரிசிகளுக்கும் நம் அனைவருக்கும் அந்த ஆலோசனை எப்போதும் இருக்கிறது. நமது முன்னோடிகளின் அனுபவங்களிலிருந்தும், அவர்களுக்குக் கர்த்தர் சொன்னவைகளிலிருந்தும் இதை நாம் அறிவோம்.
“தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சூழ்நிலைகளை நினைவுகூருங்கள். துயரங்களின் பூதக்கண்ணாடி வழியே பார்க்கும்போது, அவருடைய வாழ்க்கை, வறுமை, துன்புறுத்துதல், ஏமாற்றங்கள், குடும்ப துக்கங்கள் மற்றும் இறுதியில் இரத்த சாட்சியின் ஒன்றாயிருக்கிறது. அவர் சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய மனைவியும், பிள்ளைகளும், பிற பரிசுத்தவான்களும் மிசௌரிக்கு வெளியே விரட்டப்பட்டதால், மிகமோசமான கஷ்டங்களை அனுபவித்தார்கள்.
நிவாரணத்திற்காக ஜோசப் வேண்டியபோது கர்த்தர் பதிலளித்தார்.
“என்னுடைய மகனே, உன்னுடைய ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக; உன்னுடைய இக்கட்டுகளும் உன்னுடைய உபத்திரவங்களும் ஒரு சிறிய சமயத்திற்கு மட்டுமே;
“பின்னர் நீ அதில் நன்றாய் நிலைத்திருந்தால் தேவன் உன்னை உன்னதத்திற்கு உயர்த்துவார்; நீ உன்னுடைய சத்துருக்கள் யாவர்மீதும் ஜெயங்கொள்ளுவாய்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8).
அவரது சொந்த மகிழ்ச்சியான மனநிலையையும் அவரது ஜனங்களின் அன்பையும் விசுவாசத்தையும் பராமரிக்க, ஜோசப் ஸ்மித்துக்கு உதவிய அது தனிப்பட்ட நித்திய ஆலோசனையாயிருந்தது. இதே தன்மைகள் பின்பற்றிய, தலைவர்களையும் முன்னோடிகளையும் பலப்படுத்தியது, உங்களையும் பலப்படுத்த முடியும்.
ஆரம்ப கால அங்கத்தினர்களைப்பற்றி சிந்தியுங்கள். மீண்டும் மீண்டும், ஒரு இடத்திலிருந்து மற்றொன்றுக்கு அவர்கள் விரட்டப்பட்டார்கள். இறுதியாக, வனாந்தரத்தில் தங்களுடைய வீடுகளையும் சபையையும் அமைக்க அவர்கள் சவால்களை எதிர்கொண்டனர். 5 இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னோடிகளின் ஆரம்ப குழு கிரேட் சால்ட் லேக் பள்ளத்தாக்கை அடைந்து, அந்த விரோதமான பகுதியில் உயிர்வாழ்வதற்கான முன்னோடிகளின் பிடி இன்னும் ஆபத்தாயிருந்தது. பெரும்பாலான அங்கத்தினர்கள் சமவெளிகளில் இன்னும் பாதையில் இருந்தனர் அல்லது அவ்வாறு செய்வதற்கான ஆதாரங்களைப் பெற போராடினர். இருந்தும் தலைவர்களும் அங்கத்தினர்களும் இன்னமும் நம்பிக்கையுடனும் திடன்கொண்டுமிருந்தனர்.
தங்களுடைய புதிய வீடுகளில் அவர்கள் குடியேறாதிருந்தும்கூட, அக்டோபர் 1849 பொது மாநாட்டில், ஒரு புதிய ஊழியக்காரர்களின் அலை, ஸ்கான்டினேவியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் தென் பசிபிக்கு அனுப்பப்பட்டார்கள். 6 அவர்களின் மிகக் குறைந்த தளமாக எதை நினைத்திருக்க முடிந்தாலும், முன்னோடிகள் புதிய உயரங்களுக்கு உயர்ந்தனர். வெறும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்க ஆரம்பிக்க மற்றொரு 98 பேர் அழைக்கப்பட்டனர். சபைத் தலைவர்களில் ஒருவர் விளக்கினார், இந்த ஊழியங்கள் “பொதுவாக, மிக நீண்டதாக இருக்கக்கூடாது; அநேகமாக, எந்தவொரு மனிதனுக்கும் 3 முதல் 7 ஆண்டுகள், தனது குடும்பத்தில் இல்லாததுபோல் இருக்கும்” 7
சகோதரிகளே, உங்களுடைய சவால்களைப்பற்றி பிரதான தலைமை அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்களுக்காக ஜெபிக்கிறோம். அதே நேரத்தில், பூகம்பங்கள், நெருப்பு, வெள்ளம் மற்றும் சூறாவளிகள் தவிர நமது உடல் ரீதியான சவால்கள் பொதுவாக நம் முன்னோர்கள் எதிர்கொண்டதை விட குறைவாக இருப்பதற்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.
கஷ்டங்களுக்கு மத்தியில் “திடன் கொள்ளுங்கள் ஏனெனில் நான் உங்களை வழிநடத்துவேன். ராஜ்யம் உங்களுடையது, அதிலுள்ள ஆசீர்வாதங்கள் உங்களுடையது, நித்தியத்தின் ஐஸ்வரியம் உங்களுடையது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78:18) என்ற தெய்வீக உறுதிப்பாடு எப்போதுமிருக்கிறது. இது எவ்வாறு நடக்கிறது? முன்னோடிகளுக்கு இது எவ்வாறு நடந்தது? இன்று தேவனுடைய பெண்களுக்கு இது எவ்வாறு நடக்கும்? தீர்க்கதரிசன வழிநடத்துதலை நாம் பின்பற்றுவதால் “பாதாளத்தின் வாசல்கள் [நம்மை] மேற்கொள்ளாது” என ஏப்ரல் 1830ல் வெளிப்படுத்தலால் கர்த்தர் சொன்னார். “ஆம்,” அவர் சொன்னார் “உங்களுக்கு முன்பாக அந்தகாரத்தின் வல்லமைகளை கர்த்தராகிய தேவன் சிதறடிக்கப்பண்ணி, உங்கள் நன்மைக்காகவும், அவரது நாம மகிமைக்காகவும் வானங்களை அசையப்பண்ணுவார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:6). “சிறுமந்தையே பயப்படாதே; நன்மை செய், பூமியும் நரகமும் உனக்கு விரோதமாக திரண்டாலும், நீங்கள் என் கன்மலையின் மேல் கட்டப்பட்டிருந்தால் அவைகளால் மேற்கொள்ளமுடியாது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:34).
கர்த்தருடைய வாக்களிப்புகளுடன் நாம் “[நமது] இருதயங்களை உயர்த்தி களிகூருகிறோம்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:13)மற்றும் “உற்சாகமான இருதயங்களோடும் முகமலர்ச்சியுடனும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:15), உடன்படிக்கையின் பாதையில் நாம் முன்னேறிச் செல்கிறோம். அறியப்படாத நிலத்துக்கு முன்னோடியாக நமது வீடுகளை விட்டு வெளியேறுவது போன்ற மாபெரும் விகிதாச்சாரத்தின் முடிவுகளை நம்மில் அநேகர் எதிர்கொள்வதில்லை. நமது தீர்மானங்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் அன்றாட நடைமுறைகளில் உள்ளன, ஆனால் கர்த்தர் நமக்குக் கூறியதைப்போல, “நன்மை செய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள் சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33).
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தின் கோட்பாட்டில் எல்லையற்ற வல்லமை இருக்கிறது. அந்த கோட்பாட்டில் நமது அசைக்கமுடியாத விசுவாசம் நமது படிகளை வழிநடத்தி நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நமது மனங்களுக்கு இது அறிவூட்டி நமது செயல்களுக்கு பலத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது. இந்த வழிநடத்துதலும், அறிவூட்டுதலும், வல்லமையும், நமது பரலோக பிதாவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட வாக்களிக்கப்பட்ட வரங்கள். மனந்திரும்புதலின் தெய்வீக வரத்தையும் சேர்த்து அந்த கோட்பாட்டிற்கு நமது வாழ்க்கையை புரிந்துகொள்ளுதல் மற்றும் உறுதிப்படுத்துதல் மூலம், நமது நேசமுள்ள பரலோக பெற்றோருடன் திரும்ப சேருதல் மற்றும் மேன்மையடைதல் என்ற நமது நித்திய இலக்கை நோக்கிய பாதையில் நம்மையே நாம் வைக்கும்போது திடன்கொண்டிருக்க நம்மால் முடியும்.
நீங்கள் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் போதித்தார். கட்டுப்படுத்த உங்கள் திறைமைக்கும் அப்பால் அவைகளிருக்கின்றன என நீங்கள் உணரும்படியாக, சிலசமயங்களில் அவைகள் மிகத் திடமாயிருக்கின்றன, மிக அயராதிருக்கின்றன. உலகத்தை தனியாக எதிர்கொள்ளாதிருங்கள். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருங்கள், [நீதிமொழிகள் 3:5]. … வாழ்க்கை ஒரு சவாலாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது, அதனால் நீங்கள் தோல்வியடைவீர்கள் என்றில்லை, ஆனால் மேற்கொள்ளுவதன் மூலமாக நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” 8
இது, பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் திட்டத்தின் அனைத்து பாகமாகும். நாம் அனைவரும் நமது பரலோக இலக்கிற்கு தொடர்ந்து செல்லும்படியாக நான் ஜெபிக்கும்போது, நான் சாட்சியளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.