சீயோனின் சகோதரிகள்
இஸ்ரவேல் கூடிச்சேர்தலிலும் சீயோன் ஜனங்களை உருவாக்குவதிலும் நீங்கள் ஒரு அத்தியாவசியமான சக்தியாயிருப்பீர்கள்.
எனக்கன்பான சகோதரிகளே, உலக சரித்திரத்தில் இந்த அற்புதமான நேரத்தில் உங்களுடன் பேச நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இரட்சகர் இயேசு கிறிஸ்து பூமிக்கு மீண்டும் வரும்போது, ஒவ்வொரு நாளும் அந்த மகிமையான நேரத்திற்கு நாம் நெருக்கமாக சென்றுகொண்டிருக்கிறோம். அவருடைய வருகைக்கு முன்பு நடக்கப்போகிற சில பயங்கரமான நிகழ்வுகளைப்பற்றி நாம் அறிந்திருக்கிறோம், இருந்தும், நமது இருதயங்கள் சந்தோஷத்திலும், தன்னம்பிக்கையிலும், அவர் திரும்பி வருவதற்கு முன்பு மகிமையான வாக்களிப்புகள் நிறைவேறும் என்பதை அறிந்ததிலிருந்தும் விரிவடைகிறது.
பரலோக பிதாவின் நேசமுள்ள குமாரத்திகளாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அவருடைய குமாரத்திகளாக, முன்னாலிருக்கிற மகத்துவமான நேரங்களில் நீங்கள் ஒரு முக்கியமான பங்கை வகுப்பீர்கள். 1 ஏனோக்கின் பட்டணத்தின் ஜனங்களைப்போல, கூடிச்சேர்ந்து, வாழ ஆயத்தப்பட்ட ஜனங்களிடத்தில் இரட்சகர் வருவார் என்பதை நாம் அறிவோம். அங்கிருந்த ஜனங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தில் ஒன்றுசேர்ந்து, அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்படியாக மிக முற்றிலுமாக தூய்மையானார்கள்.
ஏனோக்கின் ஜனங்களுக்கு என்ன நடக்கக்கூடுமென்றும் காலங்கள் நிறைவேறுதலின் இந்த கடைசி ஊழியக்காலத்தில் என்ன நடக்குமென்றும் இங்கே கர்த்தருடைய வெளிப்படுத்தலின் விவரிப்பு:
“பூமி இளைப்பாறும் நாள் வரும், ஆனால் அந்த நாளுக்கு முன்பாக வானங்கள் இருண்டுபோகும், அந்தகாரத்தின் திரை பூமியை மூடும்; வானங்களும் பூமியும்கூட அசைக்கப்படும்; மனுபுத்திரருக்கு மத்தியிலே மகா உபத்திரவங்களிருக்கும், ஆனால் என்னுடைய ஜனங்களை நான் பாதுகாப்பேன்;
“பரலோகத்திலிருந்து கீழே நீதியை நான் அனுப்புவேன்; என்னுடைய ஒரேபேறானவரைப்பற்றியும், மரணத்திலிருந்து அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றியும், ஆம், சகல மனுஷர்களின் உயிர்த்தெழுதலைப்பற்றியும் சாட்சி கொடுக்க பூமியிலிருந்து, சத்தியத்தை நான் அனுப்புவேன்; என்னுடைய ஜனங்கள் தங்களுடைய அரைக்கச்சையைக் கட்டிக் கொள்ளவும் என்னுடைய வருகைக்காக எதிர்பார்த்திருக்கவும் நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற ஒரு பரிசுத்த பட்டணமான ஒரு இடத்தில் பூமியின் நான்கு பாகங்களிலிருந்தும் நான் தெரிந்து கொண்டவர்களை கூட்டிச் சேர்க்க ஒரு வெள்ளத்தைப்போல நீதியினாலும் சத்தியத்தினாலும் நான் பூமியை பரப்பமாட்டேனோ; ஏனெனில் அங்கே என்னுடைய ஆசரிப்புக்கூடாரமிருக்கும், ஒரு புதிய எருசலேமான அது சீயோன் என்றழைக்கப்படும்.
“ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: நீயும் உன்னுடைய சகல பட்டணங்களும் அவர்களை அங்கே சந்திப்பீர்கள், நாம் அவர்களை நமது மடியிலே ஏற்றுக்கொள்வோம், அவர்கள் நம்மைக் காண்பார்கள், நாம் அவர்களின் கழுத்தைச் சுற்றி, அவர்கள் நமது கழுத்தைச் சுற்றிப் பிடித்து ஒருவருக்கொருவர் முத்தமிடுவோம்.
“ அங்கே நான் வாழும் இடமிருக்கும், நான் உண்டாக்கின சிருஷ்டிகளிலிருந்தும் புறப்பட்டு வருகிற அது சீயோனாயிருக்கும்; ஒரு ஆயிரம் வருஷ காலத்திற்கு பூமி இளைப்பாறும்.” 2
சகோதரிகளே நீங்களும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் பேத்திகளும், நீங்கள் போஷித்த பெண்களும், இரட்சகருடன் மகிமையான உறவில் இணையப்போகிற, அந்த சமுதாயத்தின் ஜனங்களை உருவாக்குவதில் முக்கியமானவர்களாயிருப்பீர்கள். இஸ்ரவேல் கூடிச்சேர்தலில், புதிய எருசலேமில் சமாதானத்துடன் வாழப்போகிற சீயோன் ஜனங்களை சிருஷ்டிப்பதில், நீங்கள் ஒரு அத்தியாவசியமான சக்தியாயிருப்பீர்கள்.
அவருடைய தீர்க்கதரிசிகள் மூலமாக, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை உங்களுக்குச் செய்தார். ஒத்தாசைச் சங்கத்தின் ஆரம்ப நாட்களில், சகோதரிகளுக்கு தீர்க்கதரிசி சொன்னார், நீங்கள் உங்கள் சலுகைகளுக்கு ஏற்ப வாழ்ந்தால், உங்கள் உடனாளிகளாக இருப்பதை தூதர்களால் தடுக்கமுடியாது“ 3 .
அந்த அற்புதமான திறன் உங்களுக்குள்ளிருக்கிறது, அதற்கு நீங்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறீர்கள்.
தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி சொன்னார்:
நித்திய சந்தோஷத்திற்காகவும், அவருடைய பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவும் நமது பிதாவின் திட்டத்தில், சகோதரிகளாகிய நீங்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கவில்லை. அந்த திட்டத்திற்கு நீங்கள் முற்றிலுமாக அத்தியாவசியமான பங்கை வகிக்கிறீர்கள்.
“நீங்களில்லாமல் திட்டம் செயல்படாது. நீங்களில்லாமல் முழு நிகழ்ச்சியும் விரக்தியாகும்.
“நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய குமாரத்தி, ஒரு தெய்வீக பிறப்புரிமையுடன் தரிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்” 4
இரட்சகருடைய வருகைக்காக ஆயத்தப்படுதலில் நீங்கள் வகிக்கிற பங்கைப்பற்றி, நமது தற்போதைய தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்:
“மனைவிகளாக, தாய்களாக, பாட்டிகளாக, சகோதரிகளாக, அத்தைகளாக, ஆசிரியைகளாகவும், தலைவிகளாக,விசேஷமாக உதாரணர்களாக, விசுவாசத்தின் அர்ப்பணிப்புமிக்க காப்பாளர்களாக, குடும்பங்களில் மட்டுமல்ல, சபையிலும்கூட பெண்களுக்கிருக்கிற செல்வாக்கை அளவிட முடிவது சாத்தியமற்றது.
ஆதாம் ஏவாள் நாட்களிலிருந்து, சுவிசேஷ ஊழியக்காலம் ஒவ்வொன்றிலும் இது உண்மையாயிருந்திருக்கிறது. இருந்தும் இந்த ஊழியக்காலத்தில் பெண்கள் எந்த பிறரிடமிருந்தும் வித்தியாசமானவர்களாயிருந்தனர், ஏனெனில், இந்த ஊழியக்காலம் மற்ற எதைக்காட்டிலும் வித்தியாசமானது. இந்த வித்தியாசம் சிலாக்கியங்களையும் பொறுப்புகளையும் கொண்டுவருகிறது” 5 .
இந்த ஊழியக்காலம் வித்தியாசமானது, இதில், ஏனோக்கின் பட்டணத்தைப்போல ஆயத்தப்பட்டவர்களாக மாற கர்த்தர் நம்மை வழிநடத்துவார். சீயோன் ஜனங்களுக்கு அந்த மாற்றம் என்னவாயிருக்கும் என்பதை அவருடைய அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலமாக அவர் விவரித்தார்.
மூப்பர் ப்ரூஸ் ஆர். மக்கான்கி போதித்தார்:
“[ஏனோக்கின்] நாள், துன்மார்க்கத்தின், தீமையின் நாளாக, இருளின், கலகத்தின் நாளாக, போரின், பாழ்க்கடிப்பின் நாளாக, பூமி தண்ணீரால் கழுவப்படுவதற்கு நடத்துகிற நாளாக இருந்தது.
“ஆயினும் ஏனோக்கு விசுவாசமுள்ளவனாயிருந்தான். அவன் ‘கர்த்தரைக் கண்டான்,’ ஒரு மனிதன் மற்றொருவனிடம் பேசுகிறதைப்போல அவருடன் முகமுகமாய்ப் பேசினான். (மோசே 7:4.) உலகத்திற்கு மனந்திரும்புதலைக் கூக்குரலிட கர்த்தர் அவனை அனுப்பி, கிருபை மற்றும் சத்தியத்தில் நிறைக்கப்பட்ட பிதா மற்றும் குமாரனின், பதிவை தாங்கியிருக்கிற பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற அவனுக்கு ஆணையிட்டார்.’ (மோசே 7:11.) ஏனோக்கு உடன்படிக்கைகளைச் செய்து, உண்மையான விசுவாசிகளின் ஒரு சபையைக் கூட்டி, அவர்கள் மிக உண்மையுள்ளவர்களாக மாறி, கர்த்தர் வந்து அவனுடைய ஜனங்களுடன் வாசம் செய்து, அவர்கள் நீதியில் வாசம் செய்து அவர்கள் உன்னதத்திலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ‘அவர்கள் ஏக சிந்தனையிலும் ஏக உள்ளத்திலுமிருந்ததாலும், நீதியில் வாசம் செய்ததாலும் கர்த்தர் அவனுடைய ஜனங்களை சீயோன் என்றழைத்தார்; அவர்களுக்குள்ளே எளியவன் இல்லாதிருந்தான்.’ (மோசே 7:18.) …
சீயோன் என அவனுடைய ஜனங்களை கர்த்தர் அழைத்த பின்பு, பரிசுத்தத்தின் பட்டணம், சீயோன் என்றும் என்றழைக்கப்பட்ட ஒரு பட்டணத்தை ஏனோக்கு கட்டினான், அந்த சீயோன் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு தேவன் அதை தன்னுடைய மடியினுள் ஏற்றுக்கொண்டார்; அப்போதிலிருந்து சீயோன் மறைந்தது என்ற சொல் உண்டானது என வேதம் சொல்லுகிறது. மோசே 7:19, 21, 69.) …
“கர்த்தர் சீயோனை மீண்டும் கொண்டுவருகிறபோது, பின்னர் அமைக்கப்படவிருக்கிற புதிய எருசலேமுடன் அதன் குடிகள் சேர்ந்துகொள்ளும்போது, பரலோகத்திற்குள் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த அதே சீயோன் திரும்பும்.” 6
கடந்த காலம் முன்னுரையாயிருந்தால், இரட்சகர் வருகிற நேரத்தில், தேவனுடன் தங்களுடைய உடன்படிக்கைகளுக்கு ஆழமாக ஒப்புக்கொடுத்த குமாரத்திகள், அவர் வருகிறபோது அவரை வரவேற்க ஆயத்தமாயிருக்கிறவர்கள் பாதிக்கும் மேலிருப்பார்கள். ஆனால், எண்ணிக்கை எதுவாயிருந்தாலும், அந்த சீயோனுக்காக ஆயத்தமாயிருக்கும் ஜனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவதில் உங்களுடைய பங்களிப்பு பாதிக்கு மேலிருக்கும்.
அது அப்படித்தானிருக்கும் என நான் ஏன் நம்புகிறேன் என்பதை நான் உங்களுக்குக் கூறுவேன் மார்மன் புஸ்தகம் சீயோன் ஜனங்களின் விவரத்தைக் கொடுக்கிறது. உயிர்த்தெழுந்த இரட்சகரால் அவர்கள் போதிக்கப்பட்டு, அன்பு செலுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பின்புதான் என்பதை நீங்கள் நினைவுகூருகிறீர்கள்: “ஜனங்களுடைய இருதயங்களில் வாசமாயிருந்த தேவ அன்பினிமித்தம் தேசத்தில் எந்த பிணக்கும் இல்லாமலிருந்தது.” 7
சச்சரவுகளைத் தணிப்பதற்கும், தேவனிடம் அவர்களுக்குள்ள அன்புடன், நீதியை வளர்ப்பதற்கும் தேவனுடைய அன்புடன் அவர்கள் சேவை செய்கிறவர்களிடம் உருவாக்கவும் பரலோக பிதாவின் குமாரத்திகளுக்கு ஒரு வரமிருக்கிறது என என்னுடைய அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
எங்களுடைய சிறிய கிளை என்னுடைய பிள்ளைப்பருவ வீட்டில் சந்தித்தபோது அதை என்னுடைய வாலிபத்தில் நான் பார்த்தேன். என்னுடைய சகோதரரும் நானும் மட்டுமே ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருந்தவர்களாயிருந்தோம், என் தகப்பன் மட்டுமே மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருந்தவர். கிளையின் ஒத்தாசைச் சங்கத் தலைவி மனமாற்றமடைந்தவர், சபை சேவையைப்பற்றி அவளுடைய கணவர் சந்தோஷமில்லாமலிருந்தார். தங்களுடைய வீட்டில் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர் யாருமில்லாத அங்கத்தினர்கள் அனைவரும் மூத்த சகோதரிகள். என் தாயும் அந்த சகோதரிகளும் தவறாமல் ஒருவரையொருவர் நேசிப்பதையும், உயர்த்துவதையும், கவனிப்பதையும் நான் பார்த்தேன். சீயோனின் ஒரு ஆரம்ப பார்வை நான் கொடுக்கப்பட்டேன் என இப்போது நான் உணருகிறேன்.
அல்புக்கர்க், நியு மெக்சிகோவிலுள்ள சபையின் சிறிய கிளையில் உண்மையுள்ள பெண்களின் செல்வாக்கில் என் பயிற்சி தொடர்ந்தது. புதிதாக வருகிற, மனமாற்றமடைந்த ஒவ்வொருவரின் இருதயத்தை வெப்பமாக்கும் என்னுடைய கிளைத் தலைவரின் மனைவியை, சேகரத் தலைவரின் மனைவியை, ஒத்தாசைச் சங்கத் தலைவியை நான் கவனித்தேன். ஞாயிற்றுக்கிழமை நான் அல்புக்கர்க்கை விட்டுச் சென்றேன், அங்கே சகோதரிகளின் செல்வாக்கை கவனித்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் முதல் பிணையம் உருவாக்கப்பட்டது. இப்போது அங்கே கர்த்தர் ஒரு ஆலயத்தை அமைத்திருக்கிறார்.
அடுத்து, நான் போஸ்டனுக்கு நகர்ந்தேன், இரண்டு மாநிலம் முழுவதிலும் பரந்திருந்த சிறிய கிளைகளுக்கு தலைமை தாங்கின சேகர தலைமையில் நான் ஊழியம் செய்தேன். ஒருமுறைக்கு மேலே அங்கே சச்சரவுகளிருந்து, இருதயங்களை மிருதுவாக்க உதவிய அன்பான மன்னிக்கிறவர்களான பெண்களால் அவை தீர்க்கப்பட்டன. மசாசூசஸ்டில் முதல் பிணையத்தை பிரதான தலைமையின் அங்கத்தினர் ஸ்தாபித்து ஞாயிற்றுக்கிழமை நான் போஸ்டனை விட்டு சென்றேன். ஒருசமயம் சேகரத் தலைவர் வாழ்ந்துகொண்டிருந்ததற்கு அருகில் இப்போது அங்கே ஒரு ஆலயமிருக்கிறது. அவர் சபை நிகழ்ச்சிகளுக்குள் கொண்டுவரப்பட்டு, ஒரு உண்மையுள்ள அன்பான மனைவியின் செல்வாக்கால், பிணையத் தலைவராக சேவை செய்ய அழைக்கப்பட்டு, பின்னர் ஊழியத்தலைவரானார்.
சகோதரிகளே, நீங்கள் தேவனுடைய குமாரத்திகளாயிருப்பதின் ஆசீர்வாதம் விசேஷித்த வரங்களுடன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களை போஷிக்கவும், சீயோன் சமுதாயத்தில் ஒன்றுசேர்ந்து வாழ அவர்களை தகுதியாக்குகிற அன்பிற்கும் தூய்மைக்கும் நேராக அவர்களை மேலே தூக்கவும் ஒரு ஆவிக்குரிய திறமையை அநித்திய வாழ்க்கைக்குள் நீங்கள் கொண்டுவந்தீர்கள். குறிப்பாக பரலோக பிதாவின் குமாரத்திகளுக்காக முதல் சபை ஸ்தாபனமான ஒத்தாசைச் சங்கத்தின் குறிக்கோளாக “அன்பு ஒருக்காலம் ஒழியாது” என்பது ஒரு விபத்தல்ல.
தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய்மையான அன்பு. அவர்மீதுள்ள விசுவாசத்தையும், அவருடைய எல்லையற்ற பாவநிவர்த்தியின் முழு விளைவுகளும், உங்களுக்கும், நீங்கள் நேசிக்கும் மற்றும் சேவை செய்பவர்களுக்கும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட சீயோனின் அந்த சமூகத்தில் வாழ்வதற்கான அமானுஷ்ய பரிசு. கர்த்தராலும், நீங்கள் ஆசீர்வதித்தவர்களாலும் தனிப்பட்டவர்களாக நேசிக்கப்பட்ட அங்கே நீங்கள் சீயோனின் சகோதரிகள்.
பூமியில் கர்த்தருடைய ராஜ்யத்தில் நீங்கள் குடிமக்களென நான் சாட்சியளிக்கிறேன். மற்றவர்களை ஆசீர்வதிக்க பயன்படுத்த நீங்கள் வாக்களிக்கப்பட்டிருக்கிற தனித்துவமான வரங்களுடன் உலகத்திற்குள் வர உங்களை அனுப்பிய ஒரு அன்பான பரலோக பிதாவுக்கு நீங்கள் குமாரத்திகளாயிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக கைகளைப் பிடித்துக்கொண்டு கர்த்தர் உங்களை நடத்துவாரென நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். அவருடைய வாக்களிக்கப்பட்ட சீயோனாக மாற அவருடைய மக்களை ஆயத்தப்படுத்த நீங்கள் அவருக்கு உதவும்போது அவர் உங்கள் முகத்துக்கு முன்பாகச் செல்வார். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.