பொது மாநாடு
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்
அக்டோபர் 2020 பொது மாநாடு


10:9

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

நாம் விரும்புகிற எந்த நேரத்திலும் அவருடன் தொடர்புகொள்ள வாய்ப்பு பரலோக பிதாவின் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய பகுதியாகும்.

நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய வேதப் படிப்பில், அம்மோனிகாவில் ஆல்மாவின் ஊழியத்தைப்பற்றி நான் வாசித்துக்கொண்டிருந்தபோது, என்னைப் பின்பற்றி வாருங்களில்: இந்த ஆலோசனையை நான் கண்டேன் (ஆல்மா 9:19–23 பார்க்கவும்), “நேபியின் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்கு அவர் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப்பற்றி சிந்தியுங்கள்.”1 எனக்கு தேவனின் ஆசீர்வாதங்களை ஒரு பட்டியலிடவும் அதை என்னுடைய கையேட்டின் டிஜிட்டல் பதிவில் பதிவுசெய்யவும் நான் தீர்மானித்தேன். சில நிமிடங்களிலேயே 16 ஆசீர்வாதங்களை நான் பட்டியலிட்டேன்.

அவற்றிற்கு மத்தியில் முதன்மையாக இரட்சகரின் கருணை மற்றும் என் சார்பாக பாவநிவர்த்தியின் பலியும் மிகப்பெரிய ஆசீர்வாதங்களாயிருந்தன. போர்ச்சுக்கல்லில் ஒரு இளம் ஊழியக்காரனாக இரட்சகரை பிரதிபலிக்க வேண்டிய ஆசீர்வாதத்தையும், பின்னர் என்னுடைய அன்பான நித்திய கூட்டாளியான பாட்ரீசியாவுடன், 522 ஆற்றல்மிக்க அற்புதமான ஊழியக்காரர்களுடன் பிரேசில் போர்டோ அலிகெர் தெற்கு ஊழியத்தில் ஊழியம் செய்த ஆசீர்வாதத்தையும் நான் எழுதினேன். பாட்ரீசியாவைப்பற்றி பேசும்போது, எங்களின் அற்புதமான மூன்று பிள்ளைகள், அவர்களுடைய துணைகள் மற்றும் 13 பேரப் பிள்ளைகளுடன் சாவோ பவுலோ பிரேசில் ஆலயத்தில் முத்திரித்தலையும் சேர்த்து, அந்த நாளில் நான் பதிவுசெய்த பல ஆசீர்வாதங்கள் எங்கள் திருமணமான 40 ஆண்டுகளில் நாங்கள் ஒன்றாக அனுபவித்த ஆசீர்வாதங்கள்.

சுவிசேஷத்தின் கொள்கைகளில் என்னை வளர்த்த என்னுடைய நீதியான பெற்றோரைப்பற்றியும் என்னுடைய சிந்தனைகள் திரும்பியது. எனக்கு ஏறக்குறைய 10 வயதாயிருந்தபோது என்னுடைய படுக்கையருகில் அந்த நேரத்தில் என்னுடன் ஜெபிக்க அந்நேரத்தில் முழங்கால்படியிட்ட குறிப்பாக என்னுடைய அன்பான தாயைப்பற்றி எனக்கு நினைவு வந்தது. என்னுடைய ஜெபங்கள் பரலோகத்திலுள்ள என்னுடைய பிதாவை அடைவதாயிருந்தால், அவைகள் மேம்படவேண்டுமென அவள் உணர்ந்திருக்கக்கூடும். ஆகவே அவள் சொன்னாள், நான் முதலில் ஜெபிக்கிறேன், என்னுடைய ஜெபத்திற்குப் பின்னர் நீ ஜெபி.” பரலோக பிதாவிடம் எப்படிப் பேசுவதென்பதை கொள்கையாலும் பயிற்சியாலும் நான் கற்றுக்கொண்டேன் என்பதில் அவளுக்கு நம்பிக்கை வருமட்டும், இந்த மாதிரியை அநேக இரவுகளில் அவள் தொடர்ந்தாள். ஜெபிக்க எனக்குக் கற்றுக்கொடுத்ததற்காக அவளுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன், ஏனெனில் என்னுடைய பரலோக பிதா என்னுடைய ஜெபங்களைக் கேட்கிறார் அவைகளுக்கு பதிளளிக்கிறார் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

உண்மையில், என்னுடைய பட்டியலில், கர்த்தருடைய சித்தத்தை கேட்கவும் அறிந்துகொள்ளவும் முடிகிற வரமான மற்றுமொரு ஆசீர்வாதத்தை நான் சேர்த்துக்கொண்டேன். நாம் விரும்புகிற எந்த நேரத்திலும் அவருடன் தொடர்புகொள்ள வாய்ப்பு பரலோக பிதாவின் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய பகுதியாகும்.

கர்த்தரிடமிருந்த ஒரு அழைப்பு

இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், அவர் அமெரிக்காவிற்குச் சென்றபோது, கலிலேயாவில் அவருடைய சீஷர்களுக்குக் கொடுத்த அதே அழைப்பை திரும்பக் கொடுத்தார். அவர் சொன்னார்:

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

“ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்: தேடுகிறவன் கண்டடைகிறான்: தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” (3 நேபி 14:7–8; மத்தேயு 7:7–8 ஐயும் பார்க்கவும்).

நமது நாட்களில் நமது தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சன் அதைப்போன்ற ஒரு அழைப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் சொன்னார், உங்களின் கவலைகளை, உங்கள் பயங்களை, உங்களுடைய பலவீனங்களைக் குறித்து, ஆம் உங்கள் இருதயங்களின் நீண்டகால ஏக்கங்களைக் குறித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபியுங்கள். பின்னர் செவிகொடுங்கள்! உங்கள் மனதில் வருகிற சிந்தனைகளை எழுதுங்கள். உங்கள் உணர்ச்சிகளை பதிவுசெய்து, நீங்கள் செய்ய உணர்த்தப்படுகிற செயல்களின் வழியை பின்பற்றுங்கள். நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம், ஆண்டுக்கு ஆண்டு, இதை நீங்கள் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நீங்கள் ‘வெளிப்படுத்தலின் கொள்கையில் நீங்கள் வளருவீர்கள்’”2

“வருங்காலத்தில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில்லாமல், வழிகாட்டுதலில்லாமல், ஆறுதலளிப்பில்லாமல், நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியவிதமாக பிழைத்திருப்பது சாத்தியமில்லை”3 என தலைவர் நெல்சன் போதித்தார்.

நமது ஆவிக்குரிய பிழைத்திருப்பதற்கு வெளிப்படுத்தல் ஏன் அத்தியாவசியம்? ஏனெனில், உலகம் குழப்பமுள்ளதும், இரைச்சலானதும், முழு ஏமாற்றமளிப்பதாகவும், திசை திருப்புவதாகவும் இருக்கலாம். எது உண்மை, எது பொய், நமக்கான கர்த்தருடைய திட்டத்தில் எது தொடர்புடையது, எது தொடர்பில்லாதது என்பதை வகைப்படுத்த, பரலோகத்திலுள்ள நம் பிதாவுடனான தொடர்பு நமக்கு சாத்தியமாக்குகிறது. உலகம் கடினமானதாகவும் உள்ளங்களை உடைக்கிறதாகவுமிருக்கலாம். ஆனால் ஜெபத்தில் நமது இருதயங்களை நாம் திறக்கும்போது, பரலோகத்திலுள்ள நமது பிதாவிடமிருந்து வருகிற ஆறுதலையும், அவர் நம்மை நேசிக்கிறார் மற்றும் நம்மை மதிக்கிறார் என்ற உறுதிப்பாட்டையும் நாம் உணருகிறோம்.

கேளுங்கள்

“கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்” என கர்த்தர் சொன்னார். கேட்பது எளிதென தோன்றுகிறது, இருந்தும், அது நமது விருப்பங்களையும் நமது விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதால் அது ஆற்றலுள்ளதாயிருக்கிறது. ஆயினும், கர்த்தருடைய குரலைக் கேட்கவும், புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள அது நேரத்தையும் பொறுமையையும் எடுக்கிறது. நமது மனங்களிலும், இருதயங்களிலும் வருகிற சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நாம் கவனம் செலுத்துகிறோம், செய்யவேண்டுமென நமது தீர்க்கதரிசி ஆலோசனையளித்ததைப்போல, அவைகளை நாம் எழுதுகிறோம் நமது எண்ணங்களை பதிவுசெய்தல் பெற்றுக்கொள்ளுதலின் ஒரு முக்கியமான பங்கு. நமக்கு கர்த்தர் என்ன போதிக்கிறாரென்பதை, நினைத்துப் பார்க்க, பரிசீலனை செய்ய, திரும்ப உணர இது நமக்குதவுகிறது.

தனிப்பட்ட வெளிப்படுத்தல் உண்மையாயிருக்கிறதென நான் நம்புகிறேன் என சமீபத்தில் அன்புக்குரிய ஒருவர் என்னிடம் சொன்னார். நான் செய்யவேண்டிய சகல காரியங்களையும் பரிசுத்த ஆவியானவர் எனக்குக் காண்பிப்பார் என நான் நம்புகிறேன். 4 சந்தேகத்துக்கு இடமில்லாத நம்பிக்கையுடன் எனது மார்பு எரிவதை நான் உணரும்போது, நம்புவதற்கு அது எளிதாயிருக்கும் 5 ஆனால் இந்த மட்டத்தில் பரிசுத்த ஆவி என்னிடம் எப்போதும் எவ்வாறு பேச முடியும்?”

பரிசுத்த ஆவியிடமிருந்து அந்த பலமான எண்ணங்களை நிரந்தரமாக உணரவும் பின்பற்ற வேண்டிய பாதையை தெளிவாகப் பார்க்கவும் எனக்கும் விருப்பமென எனக்கன்பானவர்களுக்கும் உங்கள் யாவருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் நான் சொல்லமாட்டேன். ஆயினும், நமது மனதிற்குள்ளும் இருதயத்திற்குள்ளும் கர்த்தர் கிசுகிசுக்கிற அமர்ந்த மெல்லிய சத்தத்தை மிகப்பெரும்பாலும் நாம் உணரக்கூடும்: “நான் இங்கிருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். தொடர்ந்து செல்லுங்கள், உங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்யுங்கள். நான் உங்களை ஆதரிப்பேன்.” நாம் எப்போதும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவோ அல்லது எல்லாவற்றையும் பார்க்கவோ தேவையில்லை.

அமர்ந்த மெல்லிய சத்தம், உறுதிப்பாடாகவும், ஊக்குவிப்பாகவும், ஆறுதடைவதாகவும் இருக்கிறது, அநேக முறைகள் அது நாளுக்காகத் தேவையாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் உண்மையானவர், பெரியவைகளோ சிறியவைகளோ அவருடைய எண்ணங்கள் உண்மையானவை.

தேடுங்கள்

கர்த்தர் வாக்களித்தார், “தேடுகிறவன் கண்டடைகிறான்.” தேடுதல் என்பது சிந்தித்தல், சோதித்தல், முயற்சித்தல் மற்றும் படித்தல் என்ற மன மற்றும் ஆவிக்குரிய முயற்சியை குறிக்கிறது. கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நாம் நம்புவதால் நாம் தேடுகிறோம். “ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலனளிக்கிறாரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபிரெயர் 11:6). நாம் தேடும்போது, நாம் இன்னமும் அதிகமானவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும், அதிகமானவற்றைப் பெற நம்மை ஆயத்தப்படுத்தி நமது புரிந்துகொள்ளுதலை கர்த்தர் விஸ்தரிப்பார் என்றும் நாம் தாழ்மையுடன் அங்கீகரிக்கிறோம். “இதோ வரிவரியாயும், கற்பனை கற்பனையாயும், இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமாக, மனுபுத்திரருக்கு நான் கொடுப்பேன்; என் அறிவுரைக்குச் செவிகொடுத்து, என் ஆலோசனைக்குக் காது கொடுப்பவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நான் அதிகமாய்க் கொடுப்பேன்” (2 நேபி 28:30).

தட்டுங்கள்

இறுதியாக, “தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்“ என கர்த்தர் சொன்னார். தட்டுங்கள் என்பது விசுவாசத்தில் செயல்படுவதாகும். உற்சாகமாக நாம் அவரைப் பின்பற்றும்போது, நமக்கு முன்பாக கர்த்தர் வழியைத் திறக்கிறார். மேலேயுள்ள நமது வாசஸ்தலங்களை கற்பனை செய்வதைவிட, எழுந்து அதிகமானவற்றைச் செய்ய நமக்குப் போதிக்கிற ஒரு இனிமையான பாடலிருக்கிறது. நன்மை செய்தல் ஒரு சந்தோஷம், அளவிடமுடியாத மகிழ்ச்சி, கடமைக்கும் அன்பிற்கும் ஒரு ஆசீர்வாதம்”6 நன்மை செய்கிற செயலில் நாமிருக்கும்போது வெளிப்படுத்தல் அடிக்கடி வருகிறது என பன்னிருவர் குழுமத்தின் மூப்பர் கெரிட் டபுள்யு. காங் சமீபத்தில் விவரித்தார். அவர் சொன்னார், “நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சேவை செய்ய அவர்களை அணுக நாம் முயற்சிக்கும்போது, அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பின் கூடுதல் அளவை கர்த்தர் நமக்குத் தருகிறார், ஆகவே நமக்காகவும் என நான் நினைக்கிறேன். அவருடைய குரலை நாம் கேட்கிறோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குதவ நாம் ஜெபிக்கும்போது, ஒரு வித்தியாசமான வகையில் நாம் அவரை உணருகிறோம், ஏனெனில், அது பதிலளிக்க அவர் அதிகமாய் விரும்புகிற ஜெபங்களில் ஒன்றாகும் என நான் நினைக்கிறேன்,”7.

ஆல்மாவின் எடுத்துக்காட்டு

என்னுடைய ஆசீர்வாதங்களைப்பற்றி சிந்திக்க என்னைப் பின்பற்றி வாருங்களிலுள்ள எளிய ஆலோசனை ஒரு இனிய ஆவியையும் எதிர்பாராத சில ஆவிக்குரிய உள்ளுணர்வுகளையும் கொண்டு வந்தது. ஆல்மாவைப்பற்றியும் அம்மோனிகாவில் அவனுடைய ஊழியத்தைப்பற்றியும் நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தபோது, கேட்க, தேட மற்றும் தட்ட என்பதற்கு என்ன அர்த்தமென்பதற்கு ஆல்மா ஒரு நல்ல எடுத்துக்காட்டை வழங்கியதை நான் கண்டுபிடித்தேன். “ஆல்மா அதிகமாய் ஆவியினாலே பிரயாசப்பட்டு, ஜனங்களின் மீது தேவன் தாமே தமது ஆவியை ஊற்றும்படியாயும், அவரோடுகூட வல்லமையாக ஜெபித்தான் என நாம் வாசிக்கிறோம்”. ஆயினும், அவன் நம்பியிருந்த வழியில் பதிலளிக்கப்படவில்லை, பட்டணத்திலிருந்து துரத்தப்பட்டான். “துக்கத்தாலே பாரப்பட்டு” ஆல்மா கைவிடவிருந்தபோது ஒரு தூதன் இந்த செய்தியை வழங்கினான்: “ஆல்மாவே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஆதலால், உன் தலையை உயர்த்தி, மகிழ்ச்சிகொள், நீ களிகூர்ந்திருக்க வேண்டிய அவசியமுண்டு.” அம்மோனிகாவுக்குத் திரும்பிப்போகவும் மீண்டும் முயற்சிக்கவும் பின்னர் அவனுக்கு தூதன் சொன்னான், ஆல்மா “துரிதமாய் திரும்பிப் போனான்”8

கேட்குதல், தேடுதல் மற்றும் தட்டுதலைப்பற்றி ஆல்மாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? ஆவிக்குரிய பிரயாசத்திற்கு ஜெபம் தேவையாயிருக்கிறதென்றும், நாம் நம்பியிருக்கிற பலனுக்கு அது எப்போதும் நடத்தாது என நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால், நாம் சோர்வடையும்போது அல்லது துக்கத்தால் பாரப்படும்போது, வித்தியாசமான வழிகளில் கர்த்தர் நமக்கு ஆறுதலையும் பெலனையும் கொடுக்கிறார். நமது கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதிலளிக்காமலிருக்கலாம் அல்லது உடனடியாக நமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்காதிருக்கலாம், மாறாக முயற்சித்துக்கொண்டிருக்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார். பின்னர் அவருடைய திட்டத்துடன் நமது திட்டத்தை விரைவாக நாம் சீரமைத்தால், ஆல்மாவுக்குச் செய்ததைப்போல நமக்காக வழியை அவர் திறப்பார்.

சுவிசேஷத்தின் முழுமையின் ஊழியக்காலம் இது என்பது எனது சாட்சி. நமது வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கமுடியும். வேதங்கள் பரந்த அளவில் நமக்குக் கிடைக்கின்றன. நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கடினமான நேரங்களுக்காக கர்த்தருடைய சித்தத்தை நமக்குப் போதிக்கிற தீர்க்கதரிசிகளால் நாம் நடத்தப்படுகிறோம். கூடுதலாக, தனிப்பட்டவராக கர்த்தர் நம்மை ஆறுதல்படுத்தும்படியாக, வழிநடத்தும்படியாக, நம்முடைய சொந்த வெளிப்படுத்தலுக்கு நமக்கு நேரடி அணுகுதலிருக்கிறது. ஆல்மாவுக்கு தூதன் சொன்னதைப்போல, நமக்கு, “களிகூர்ந்திருக்க வேண்டிய அவசியமுண்டு.”(ஆல்மா 8:15). இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.