பொது மாநாடு
கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுதல்
அக்டோபர் 2020 பொது மாநாடு


9:56

கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுதல்

மற்றவர்களுக்கு உதவுவதில் கிறிஸ்துவுடன் சேருதல், இந்த வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காண நிச்சயமான வழி.

எல்லாவற்றையும் செய்ய ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற நமது வாலிபர்களை கர்த்தர் கேட்பதில்லை, ஆனால் அவர் கேட்பது பிரமிக்கவைக்கிறது.

இந்த வீழ்ச்சியடைந்த உலகில் அநேக குடும்பங்கள் எதிர்கொள்ளுகிற காரியங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் சிறிய குடும்பம் கடந்து சென்றது. எங்களுடைய கடைசி மகன் டானர் கிறிஸ்டியன் லண்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். ஒன்பது வயதினர் இருப்பதைப்போல அவன் ஒரு வியக்கத்தக்கவனாயிருந்தான். அவன் பெருங்களிப்புடைய குறும்புக்காரன், அதே நேரத்தில், ஆவிக்குரிய ரீதியில் வியக்கத்தக்கவன். சிறு பிசாசு மற்றும் தூதன், குறும்பு மற்றும் நேர்த்தியானவன். அவன் சிறுவனாக இருந்தபோது, அவனுடைய படைப்பாற்றலால் ஒவ்வொரு நாளும் எங்களை திகைக்க வைத்து, அவன் தீர்க்கதரிசியாகவோ அல்லது ஒரு வங்கிக்கொள்ளைக்காரனாகவோ வளரக்கூடுமென நாங்கள் வியப்புற்றோம். எந்த வகையிலும் உலகத்தில் ஒரு அடையாளத்தை அவன் ஏற்படுத்தப்போகிறான் என தோன்றியது.

பின்னர் அவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டான். மூன்று ஆண்டுகளில், இரண்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையையும் சேர்த்து, நவீன மருத்துவம் தீவிர சிகிச்சையைக் கொடுத்தது. அவன் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு, செயற்கை மூச்சு இயந்தரத்தால் 10 வாரங்கள் அவன் சுயநினைவில்லாமலிருந்தான். அற்புதமாக ஒரு குறுகிய காலம் அவன் குணமடைந்தான், ஆனால், பின்னர் அவனுடைய புற்று நோய் திரும்பவந்தது.

அவன் மரிப்பதற்கு சிறிது முன்பு, டானரின் நோய் அவனுடைய எலும்புகளைத் தாக்கி, கடுமையான வலி மருந்துகளுடன் அவன் இன்னமும் வேதனைப்பட்டான். படுக்கையிலிருந்து அவனால் எழமுடியவில்லை. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில், குடும்பத்தினர் சபைக்குப் போவதற்கு முன்னர், அவனுடைய தாய் கலீன் அவனைப் பார்க்க அவனுடைய அறைக்குள் சென்றாள். எப்படியோ அவனே எழுந்து, ஆடையணிந்து படுக்கையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு சட்டையின் ஒரு பொத்தானை மாட்ட வேதனையுடன் அவன் போராடிக்கொண்டிருந்ததைப் பார்க்க அவள் ஆச்சரியப்பட்டாள். கலீன் அவனருகில் அமர்ந்தாள். “டானர், சபைக்குப் போகிற அளவுக்கு நீ நிச்சயமாக நன்றாக இருக்கிறாயா”? என அவள் கேட்டாள். ஒருவேளை நீ இன்று வீட்டில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும்.”

அவன் தரையை உற்றுப் பார்த்தான். அவன் ஒரு உதவிக்காரன். அவன் குழுமத்திலிருந்தான். அவனுக்கு ஒரு பணியிருந்தது.

“இன்று நான் திருவிருந்தை பரிமாற வேண்டும்.”

“உனக்காக வேறு ஒருவர் அதைச் செய்யமுடியுமென நான் நம்புகிறேன்.”

அவன் சொன்னான், ஆம், ஆனால், திருவிருந்தை நான் பரிமாறும்போது மக்கள் எவ்வாறு என்னைப் பார்க்கிறார்களென நான் பார்க்கிறேன். இது அவர்களுக்கு உதவுகிறதென நான் நினைக்கிறேன்.”

ஆகவே, அவனுடைய பொத்தானைப் போடவும் டையைக் கட்டவும் கலீன் அவனுக்குதவி அவர்கள் சபைக்குப் போனார்கள். தெளிவாக, முக்கியமான ஒன்று நடந்துகொண்டிருந்தது.

ஒரு முந்தய கூட்டத்திலிருந்து சபைக்கு வந்த நான், உதவிக்காரர் வரிசையில் டானர் அமர்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவன் ஏன் அங்கிருக்கிறான் என்றும் அவன் என்ன சொன்னானென்றும் கலீன் அமைதியாக என்னிடம் கூறினாள்: “இது மக்களுக்கு உதவுகிறது.”

திருவிருந்து மேஜைக்கு உதவிக்காரர்கள் அடி எடுத்து வைப்பதை நான் கவனித்தேன். அப்பத் தட்டுகளை அவர்களிடம் ஆசாரியர்கள் கடத்தியபோது, அவன் மற்றொரு உதவிக்காரனிடம் லேசாக சாய்ந்தான். பின்னர், டானர் தனக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு மாறிப்போய், திருவிருந்தை வழங்கியபோது, தன்னை நிலை நிறுத்திக்கொள்ள சாய்வுநாற்காலியின் முனையைப் பிடித்துக்கொண்டான்.

அவன் தன்னுடைய எளிய பங்கை செய்தபோது, அவனுடைய போராட்டத்தில் நகர்ந்ததை ஜெபக்கூடத்திலிருந்த அனைவரின் கண்களும் அவன்மீது இருந்ததாகத் தோன்றியது. எப்படியோ, பயபக்தியோடு, வரிசை வரிசையாக டானர் நிறுத்தி நகர்ந்தபோது, அவன் ஒரு அமைதியான பிரசங்கம் செய்தான், உதவிக்காரர்கள் செய்கிற வழியில், இரட்சகரின் பிரதிநிதியாக, அவனுடைய வழுக்கைத் தலை வேர்வையால் நனைந்தது. அவனது ஒருமுறை அழியாத உதவிக்காரனின் உடல் தானே கொஞ்சம் நொறுக்கப்பட்ட, உடைந்த, கிழிந்த, இரட்சகரின் பாவநிவர்த்தியின் அடையாளங்களை நம் வாழ்வில் தாங்கி சேவை செய்ய விருப்பத்துடன் துன்பப்பட்டது.

அவன் ஒருஉதவிக்காரனாக இருப்பதைப்பற்றி எப்படி சிந்தித்தான் என்பதைப் பார்த்தால், திருவிருந்தைப்பற்றி, இரட்சகரைப்பற்றி, மற்றும் உதவிக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசாரியர்களைப்பற்றி நம்மை வித்தியாசமாக சிந்திக்க வைக்கிறது.

சேவை செய்வதற்கான அந்த மெல்லிய, சிறிய அழைப்புக்கு மிகவும் துணிவாக பதிலளிக்க அந்த காலையில் அவனைத் தூண்டியதைப்பற்றியும், தேவனின் பட்டாளங்களில் சேரவும் இரட்சிப்பின் மேன்மையடைதலின் வேலையில் சேரவும் தீர்க்கதரிசியின் அழைப்புக்கு பதிலளிக்க தங்களை முன்னுக்குத் தள்ளும் ஆற்றல்மிக்க இளைஞர்களின் பெலத்தையும் திறமையையும்பற்றியும் பேசப்படாத அற்புதம் பற்றி நான் வியந்தேன்.

ஒரு உதவிக்காரன் திருவிருந்து தட்டை எடுத்துக்கொள்கிற ஒவ்வொரு முறையும், கல்வாரியின் கெத்சமனேயின் கடைசி இராப்போஜனத்தின் மற்றும் கல்லறைத் தோட்டத்தின் பரிசுத்த கதை நமக்கு நினைவூட்டப்படுகிறது. “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” 1 என இரட்சகர் அவருடைய அப்போஸ்தலர்களுக்குச் சொல்லியபோது, நம்மனைவருக்கும் யுகாயுகங்களாகவும் அவர் பேசிக்கொண்டிருந்தார். வருங்கால உதவிக்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசாரியர்கள் அவருடைய அடையாளங்களை வழங்கி, அவருடைய பாவநிவர்த்தியின் வரத்தை ஏற்றுக்கொள்ள அவருடைய பிள்ளைகளை அழைக்கும்போது அவர் கொடுக்கிற முடிவில்லா அற்புதத்தைப்பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.

திருவிருந்து நியமங்களின் அடையாளங்கள் அனைத்தும் அந்த வரத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அவர் ஒரு சமயம் பிட்ட அப்பத்தை நாம் நினைக்கிறோம், பதிலாக நமக்கு முன்பாக இப்போது ஆசாரியர்கள் அப்பத்தை பிட்கிறார்கள். பரிசுத்தப்படுத்தப்பட்ட திரவத்தின் பொருளைப்பற்றி நாம் நினைக்கிறோம், பின்னரும் இப்பொழுதும், அந்த திருவிருந்து ஜெபங்களின் வார்த்தைகள் இளம் ஆசாரியர்களின் வாயிலிருந்து வந்து நம் இருதயங்களுக்குள்ளும் வானத்திலும் சென்று, கிறிஸ்துவின் இரட்சிப்பின் வல்லமைகளுடன் நம்மை இணைக்கும் உடன்படிக்கைகளை புதுப்பிக்கின்றன. திருவிருந்து நியமத்தின்போது, பரிசுத்த அடையாளங்களை ஒரு உதவிக்காரன் நம்மிடம் கொண்டுவரும்போது, இயேசு அங்கிருந்தால், அவர் எங்கே நிற்பார் என்பதைப்போல நின்று, நம்முடைய தனிப்பட்ட சுமைகளைத் தூக்கி, நம்முடைய வலியைக் குணப்படுத்த முன்வருவதன் அர்த்தம் என்ன என்பதைப்பற்றி நாம் சிந்திக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, இரட்சகருக்கு சேவை செய்வதில் சந்தோஷத்தையும் நோக்கத்தையும் கண்டுபிடிக்க, இளம் ஆண்களும் பெண்களும் நோய்வாய்ப்படவேண்டியதில்லை.

வளரவும், ஊழியக்காரர்களாக மாறவும் ஊழியக்காரர்கள் செய்வதை நாம் செய்யவேண்டும், பின்னர் கட்டளையின்மேல் கட்டளையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமாயும் நாம் மெதுவாக வளர்ந்து, இரட்சகர் எதிர்பார்க்கிற ஊழியக்காரராக மாறுகிறோம்”. 2

அதைப்போன்று, “இயேசுவைப்போலாக” 3 இயேசு செய்கிறதைப்போல நாம் செய்யவேண்டும், அவர் செய்கிறது என்னவென்று வியக்கவைக்கும் வாக்கியத்தில் கர்த்தர் விவரிக்கிறார், அவர் சொன்னார், “இதோ, மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது.” 4

அவருடைய பிள்ளைகளை இரட்சிப்பதால், அவருடைய பிதாவுக்கு ஊழியம் செய்தல் எப்போதும் என்றென்றைக்கும் இரட்சகரின் ஊழியமாயிருக்கிறது.

மற்றவர்களுக்கு உதவுவதில் கிறிஸ்துவுடன் சேருதல் இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண நிச்சயமான வழி.

பிள்ளைகள் மற்றும் வாலிபர் நிகழ்ச்சியை உணர்த்திய இது ஒரு எளிய சத்தியம்.

இரட்சிப்பின் மேன்மையடைதலின் பணியில் அவருடன் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது, பிள்ளைகள் மற்றும் வாலிபர்களின் நிகழ்ச்சிகள், போதனைகள் எல்லாம், இளைஞர் இயேசு கிறிஸ்துவைப் போலாக உதவிசெய்தலைப்பற்றியது.

ஒவ்வொரு ஆரம்ப வகுப்பு பிள்ளை மற்றும் வாலிபர் சீஷத்துவத்தில் வளரவும், சந்தோஷத்தின் வழி எப்படியிருக்கும் என்பதை விசுவாசம் நிறைக்கப்பட்ட காட்சியாகப் பெறவும் உதவ பிள்ளைகள் மற்றும் வாலிபர் ஒரு கருவியாயிருக்கின்றனர். உடன்படிக்கை பாதையில் நிலையங்கள் மற்றும் அடையாள தூண்களை எதிர்பார்க்கவும், ஏங்கவும் அவர்கள் வரலாம், அங்கு அவர்கள் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் வரத்துடன் உறுதிப்படுத்தப்படுவார்கள், விரைவில் குழுமம் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், அங்கு அவர்களுக்கு உதவி செய்து மற்றவர்கள் கிறிஸ்துவைப் போன்ற சேவைச் செயல்களின் மூலம் மகிழ்ச்சியை உணருவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்துகிற, இரட்சகரைப்போலாக அவர்களுக்கு உதவுகிற, பெரியதும் சிறியதுமான இலக்குகளை அவர்கள் அமைப்பார்கள். இளம் வயதினர் பெலத்திற்காக மாநாடுகளும், பத்திரிக்கைகளும், சுவிசேஷத்தின்படி வாழுதல் செயலிகளும், கிறிஸ்துவில் சந்தோஷத்தை உண்மையாகக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவும். வரையறுக்கப்பட்ட பயன் ஆலய பரிந்துரைகளைத் தரித்திருக்கும் ஆசீர்வாதங்களையும், ஆலயம் மற்றும் குடும்ப வரலாறு ஆசீர்வாதங்களை அவர்கள் தேடும்போது பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் மூலமாக எலியாவின் ஆவியை உணரவும் அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களால் அவர்கள் வழிநடத்தப்படுவார்கள். காலப்போக்கில், வல்லமையுடன் தரிப்பிக்கப்பட, என்ன வந்தாலும், தங்களுடைய குடும்பங்களுடன் நித்தியமாய் இணைந்திருக்கும்போது, சந்தோஷத்தைக் காண, ஆலயங்களுக்கு தாங்களாகவே போய்க்கொண்டிருப்பதை அவர்கள் காண்பார்கள்.

தொற்று மற்றும் பேரழிவின் எதிர்காற்றுக்கு எதிராக, புதிய, பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டத்தின் முழு வாக்குறுதியைக் கொண்டுவருவது இன்னும் முன்னேற்றமாக உள்ளது-ஆனால் அவசரம் உள்ளது. இரட்சகரை அவர்கள் அறிந்துகொள்ளுவதற்கு முன்பே உலகம் அதையே சரிப்படுத்திக்கொள்ள, நமது வாலிபர்கள் காத்திருக்க முடியாது. அவர்களுடைய மற்றும் அவருடைய உண்மையான அடையாளங்களை அவர்கள் புரிந்துகொண்டால், அவர்கள் செய்திராத தீர்மானங்களை இப்போதும்கூட சிலர் செய்கிறார்கள்.

ஆகவே, தேவனின் படைகளிடமிருந்து வரும் அவசர அழைப்பு, “எல்லா கைகளும் தளத்தின்மேல்!”

தாய்மார்களே, தகப்பன்மார்களே, உங்கள் மகன்களைப்பற்றி குறைவான காரியங்களே இருந்த கடந்த காலத்தில் நீங்கள் ஆர்வமாயிருந்ததைப்போலவே அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு தேவையாயிருக்கிறது. தாய்மார்களே, தகப்பன்மார்களே, ஆசாரியத்துவ மற்றும் இளம் பெண்கள் தலைவர்களே, உங்கள் வாலிபர்கள் போராடிக்கொண்டிருந்தால், பிள்ளைகளும் வாலிபர்களும் அவர்களை இரட்சகரிடத்தில் கொண்டுவர உதவுவார்கள், இரட்சகர் அவர்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவார். 5

குழுமமும் வகுப்பு தலைமைகளும் முன்வந்து கர்த்தரின் பணியில் சரியான இடத்தில் உங்களை வைக்கிறார்கள்.

ஆயர்களே, குழுமத் தலைவர்களுடன் உங்கள் திறவுகோல்களை இணையுங்கள், உங்கள் குழுமங்களும் உங்கள் தொகுதிகளும் என்றென்றும் மாறும்.

நீங்கள் தேவனுடைய அன்பான குமாரர்கள், குமாரத்திகள், நீங்கள் செய்யவேண்டிய ஒரு பணி அவரிடமுள்ளது என உன்னதமான பிறப்புரிமையைப்பற்றி அறிந்த நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன்

உங்களுடைய முழு இருதயங்களுடனும், ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் உங்கள் அழைப்புகளின் மகத்துவத்திற்கு நீங்கள் உயரும்போது தேவனிடம் அன்புகூறுவீர்கள், உங்கள் சொந்த வீடுகளிலிருந்து ஆரம்பித்து, மற்றவர்களை ஆசீர்வதி்க்க நீங்கள் செயல்பபடும்போது, உங்கள் உடன்படிக்கைகளை கைக்கொள்ளுவீர்கள், அவரில் நம்பிக்கை வைப்பீர்கள்.

சேவை செய்யவும், விசுவாசத்தைப் பயன்படுத்தவும், மனந்திரும்பவும், ஒவ்வொரு நாளும் முன்னேறவும், ஆலய ஆசீர்வாதங்களையும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலமாக மட்டுமே வருகிற நீடித்த சந்தோஷத்தையும் பெற, இந்த நேரத்திற்கு தகுதியான, இரு மடங்கு ஆற்றலுடன் நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையான சீஷராக இருப்பதில் இறுதியில் நீங்கள் மாறுவதற்கு உங்களுக்கு வாக்களிப்பட்டிருக்கிற, அந்த சிரத்தையான ஊழியக்காரராக, நம்பிக்கையான கணவர் அல்லது மனைவியாக, அன்பான தகப்பனாக அல்லது தாயாக மாற நீங்கள் ஆயத்தப்படுவீர்களென நான் ஜெபிக்கிறேன்.

கிறிஸ்துவண்டை வரவும் அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் அனைவரையும் அழைத்து, இரட்சகரின் திரும்புதலுக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த நீங்கள் உதவுவீர்களாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. லூக்கா 22:19.

  2. David A. Bednar, “Becoming a Missionary,” Liahona, Nov. 2005, 46.

  3. “இயேசுவைப் போலிருக்க நான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், அவருடை வழிகளை நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன் நான் செய்யமுடிந்த, சொல்லமுடிந்த அனைத்திலும் அன்புசெலுத்த நான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்” (“I’m Trying to Be like Jesus,” Children’s Songbook, 78).

  4. மோசே 1:39.

  5. நமது வரலாறு முழுவதிலும், வாலிப மக்கள் வளர்ச்சியை அனுபவிக்க, மிக வீரமாக உதவிய அர்ப்பணிப்பான பெற்றோருக்கும், தலைவர்களுக்கும் எனது தனிப்பட்ட பாராட்டுதலை நான் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் முயற்சிகள், அதற்கு முந்தைய ஒவ்வொரு செயல்பாடு மற்றும் சாதனைத் திட்டத்திற்கும் கடன்பட்டுள்ளன என்பதை நான் அங்கீகரிக்கிறேன்.