செப்டம்பர் 22–28: “தேவ குமாரனின் முறைமை”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106–108 “ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106–108,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
செப்டம்பர் 22–28: “தேவ குமாரனின் முறைமை”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106–108
முதல் பார்வையில், கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107 ஆசாரியத்துவ அலுவல்களை கர்த்தரின் சபைக்கான தலைமை கட்டமைப்பாக ஒழுங்கமைப்பதைப்பற்றியது மட்டுமே எனத் தோன்றலாம். இந்த வெளிப்பாடு வெளியிடப்பட்ட நேரத்தில், சபை உறுப்பினர் எண்ணிக்கை ஏற்கனவே இருந்த சில தலைவர்களின் திறனை விட அதிகமானது. எனவே பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமம், எழுபதின்மர், ஆயர்கள் மற்றும் குழும தலைமைகளின் பங்கு மற்றும் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுவது நிச்சயமாக அவசியமாகவும் உதவியாகவும் இருந்தது. ஆனால் சபைத் தலைமை எப்படி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதை விட. பாகம் 107 தெய்வீக அறிவுறுத்தல் இன்னும் நிறைய இருக்கிறது. இங்கே, கர்த்தர் அவருடைய வல்லமை மற்றும் அதிகாரத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார், “தேவ குமாரனின் முறைமையின்படி அது பரிசுத்த ஆசாரியத்துவம்” (வசனம் 3 ). ஆசாரியத்துவத்தின் நோக்கம்,“ சபையின் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும்” திறப்பதே ஆகும், இதனால் தேவனின் குழந்தைகள் அனைவருக்கும் “வானங்கள் அவர்களுக்குத் திறக்கப்படுவதும்” பிதாவாகிய தேவன் மற்றும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுவின் ஐக்கியத்திலும் பிரசன்னத்திலும் ஆனந்தமடைவதுமாகும். (வசனங்கள் 18–19). அவருடைய ஆசாரியத்துவத்தைப் பற்றி நமக்குக் கற்பிப்பதில், இரட்சகர் தம்மைப் பற்றியும், நாம் எப்படி அவரிடம் வரலாம் என்றும் கற்பிக்கிறார்.
“Restoring the Ancient Order,” Revelations in Context, 208–12 பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106; 108
கர்த்தர் என்னை சேவை செய்ய அழைக்கும் போது என்னை ஆதரிக்கிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106 மற்றும் 108 ஆகியவற்றில், சபையில் பணியாற்ற அழைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களுக்கு கர்த்தர் ஆலோசனையும் வாக்குறுதிகளும் அளித்தார். நீங்கள் அவருடைய ஆலோசனையைப் படிக்கும்போது, கர்த்தருக்குச் சேவை செய்வதற்கான உங்கள் சொந்த வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம்—ஒருவேளை ஒரு ஊழிய பணித்தல், ஒரு சபை அழைப்பு, உங்கள் குடும்பத்தில் உள்ள பொறுப்புகள் அல்லது நன்மை செய்ய ஆவிக்குரிய தூண்டுதல்கள்.
இந்த வெளிப்படுத்தல்களில் உங்களுக்கான கர்த்தருடைய செய்தி என்னவாக இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எந்த சொற்றொடர்கள் உங்களுக்கு குறிப்பாக அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது? கருத்தில் கொள்ள வேண்டிய சில இதோ:
-
கர்த்தர் எப்போது உங்களுக்கு “கிருபை [அல்லது தெய்வீக உதவி] மற்றும் நிச்சயத்தையும்” அவருக்குச் சேவை செய்யத் தந்தார்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106:8).
-
“உங்கள் எல்லா செயல்களிலும்” மற்றவர்களைப் பலப்படுத்துவது என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 108:7).
மூப்பர் கார்ல் பி. குக் ஒரு கடினமான சபை நியமிப்பைப் பெற்றபோது, அவர் ஒரு மூதாதையரின் அனுபவத்திலிருந்து வலிமையைப் பெற்றார். “Serve” (Liahona, Nov. 2016, 110–12) இல் அவரது செய்தியில் அதுபற்றி வாசியுங்கள். உங்கள் சந்ததியினர் அல்லது உங்கள் எதிர்காலத்தில் உங்களையே ஊக்குவிப்பதற்காக ஒரு கடிதம் எழுதுவதை கருத்தில் கொண்டு கர்த்தருக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். மூப்பர் குக்கின் செய்தி, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106 மற்றும் 108 மற்றும் உங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களை உங்கள் கடிதத்தில் சேர்க்கவும்.
See also Henry B. Eyring, “Walk with Me,” Liahona, May 2017, 82–85; Topics and Questions, “Serving in Church Callings,” Gospel Library; “Warren Cowdery” and “‘Wrought Upon’ to Seek a Revelation,” in Revelations in Context, 219–23, 224–28.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:1–4, 18–20
ஆசாரியத்துவம் என்பது “தேவ குமாரனின் முறைமையின்படியானது”
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அசல் பெயரை நமக்குக் கற்பிப்பதன் மூலம் கர்த்தர் தம் “ஆசாரியத்துவம் பற்றிய வெளிப்பாட்டைத்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107, பாகத் தலைப்பு) தொடங்குகிறார் (வசனங்கள் 1–4 ஐப் பார்க்கவும்). அதை அறிவது ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? ஆசாரியத்துவம்பற்றி நீங்கள் நினைக்கும் விதத்தை இந்த அறிவு எப்படி பாதிக்கிறது?
ஆசாரியத்துவத்தைப் பற்றி, குறிப்பாக வசனங்கள் 18–20ல் வாசிக்கும்போது, இந்த எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். “வானம் திறக்கப்பட்டது” என்பதன் அர்த்தம் என்ன? “பிதாவாகிய தேவன் மற்றும், இயேசுவின் ஐக்கியத்திலும் பிரசன்னத்திலும் ஆனந்தமடைதல்”என்பதன் அர்த்தம் என்ன? இரட்சகரின் ஆசாரியத்துவம் மற்றும் அதிகாரம் இவை அனைத்தையும் உங்களுக்கு எவ்வாறு கிடைக்கச் செய்கிறது?
ஆல்மா 13:2, 16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–27 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:22
கர்த்தருடைய ஊழியர்கள் “சபையின் நம்பிக்கை, விசுவாசம், மற்றும் ஜெபத்தால் ஆதரிக்கப்படுகிறவர்கள்.”
உங்கள் நம்பிக்கையால் கர்த்தருடைய ஊழியர்களை தாங்குவதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் விசுவாசத்தால்? உங்கள் ஜெபத்தால்?
See also “God Bless Our Prophet Dear,” Hymns, no. 24.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:23–24, 33–35; 38, 91–92
தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிக்கிறார்கள்.
ஜோசப் ஸ்மித் 1835 இல் பாகம் 107 புதிதாக அழைக்கப்பட்ட பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் குழுமத்துடன் பகிர்ந்து கொண்டார் (பாகத் தலைப்பைப் பார்க்கவும்). 23–24, 33–35, 38 வசனங்களில் அவர்களின் அழைப்பைப் பற்றி கர்த்தர் அவர்களுக்கு என்ன கற்பித்தார்? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் சாட்சி அவருடைய ஜீவிக்கும் அப்போஸ்தலர்களின் போதனை மற்றும் ஊழியத்தால் எவ்வாறு பலப்படுத்தப்பட்டுள்ளது?
91–92 வசனங்களில், சபையின் தலைவரான அவருடைய மூத்த அப்போஸ்தலரைப் பற்றி கர்த்தர் கற்பிக்கிறார். அவர் எப்படி “மோசேயைப் போல” இருக்கிறார்? (see Guide to the Scriptures, “Moses,” Gospel Library).
See also David A. Bednar, “Chosen to Bear Testimony of My Name,” Liahona, Nov. 2015, 128–31.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:27–31, 85–89
கர்த்தர் தனது பணியை ஆலோசனைக்குழுக்கள் மூலம் நிறைவேற்றுகிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107: 27– 31, 85–89லுள்ள ஆலோசனைக்குழுக்கள் பற்றி கர்த்தர் போதித்ததைக் கவனியுங்கள் ஒரு ஆலோசனைக்குழுவை பயனுள்ளதாக்குவது எது? உங்கள் சபை அழைப்பு, உங்கள் வீடு அல்லது உங்கள் பிற பொறுப்புகளில் இந்தக் கொள்கைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
See also M. Russell Ballard, “Family Councils,” Liahona, May 2016, 63–65; General Handbook, 4.3–4.4, Gospel Library.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:18–20
இயேசு கிறிஸ்து அவருடைய ஆசாரியத்துவத்தின் மூலம் என்னை ஆசீர்வதிக்கிறார்.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107: 18– 19ஐ ஒன்றாகப் படிக்கும்போது, “எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும்” என்ற சொற்றொடரை வலியுறுத்துங்கள். ஒருவேளை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆசாரியத்துவத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களைப் பட்டியலிடலாம். நீங்கள் ஒரு விளையாட்டை உருவாக்கலாம்—நீண்ட பட்டியலை யார் உருவாக்க முடியும் என்பதைப் பார்க்கவும். இந்த ஆசீர்வாதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உங்கள் பிள்ளைகளும் படங்களை வரையலாம் அல்லது கண்டுபிடிக்கலாம் (இந்த வார நிகழ்ச்சி பக்கத்தைப் பார்க்கவும்). தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற ஆசாரியத்துவ நியமங்கள் (ஞானஸ்நானம் அல்லது திருவிருந்து போன்றவை) எவ்வாறு நமக்கு உதவுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:21–26, 33–35; 91–92
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் அவருடைய சபையை வழிநடத்துகிறார்கள்.
-
லியாஹோனாவின் ஒவ்வொரு மாநாட்டு இதழிலும் பொது அதிகாரிகளின் படங்களின் பக்கம் உள்ளது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107: 21–26, 33–35, 91–92 நீங்கள் அவர்களுடைய பொறுப்புகளைப் பற்றி படிக்கும்போது, உங்கள் குழந்தைகளுடன் இந்தப் படங்களைப் பார்க்கவும். கர்த்தர் அவர்களுக்கு இந்தப் பொறுப்புகளை வழங்கியதற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்களும் உங்கள் குழந்தைகளும் பேசலாம்.
-
“General Church Leadership” on ChurchofJesusChrist.org உங்கள் பிள்ளைகள் கர்த்தரின் ஊழியர்களைப் பற்றி மேலும் அறியலாம். உங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரும் இந்தத் தலைவர்களில் ஒருவரைப் பற்றி அறிந்துகொண்டு அவரைப் பற்றி ஒருவருக்கொருவர் கற்பிக்கலாம். இந்தத் தலைவர்கள் இயேசு கிறிஸ்துவின் உண்மையான ஊழியர்கள் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:22, ஐ ஒன்றாகப் படித்த பிறகு, நீங்களும் உங்கள் குழந்தைகளும் மாறி மாறி பிரதான தலைமையின் படத்தைப் பிடித்து, அவர்களை கர்த்தரின் ஊழியர்களாக நீங்கள் ஆதரிப்பதற்கான வழிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 108:3
எனது உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் கவனமாக இருக்க முடியும்.
-
இந்த வசனத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்க, உங்கள் பிள்ளைகளை கவனமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றைச் செய்ய நீங்கள் அழைக்கலாம், சிந்தாமல் ஒரு கோப்பையை நிறைப்பது போன்ற ஒன்றை. நாம் கவனமாக இல்லாதபோது என்ன நடக்கும்? நாம் கவனமாக என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிய, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 108:3 ஐ நீங்கள் வாசிக்கலாம். தேவனுடன் நாம் என்ன “சபதங்கள்” (வாக்குறுதிகள் அல்லது உடன்படிக்கைகள்) செய்கிறோம்? அவற்றை காத்துக்கொள்வதில் நாம் எப்படி கவனமாக இருக்க முடியும்? உங்கள் குழந்தைகளின் உடன்படிக்கைகளை கடைபிடிக்க ஊக்குவிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிற “Careful versus Casual” (Liahona, May 2019, 9–11) சகோதரி பெக்கி க்ரேவனின் செய்சியின் பகுதிகளை நீங்கள் பகிரலாம். “I Will Be Valiant” (Children’s Songbook, 162) போன்ற உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது பற்றி நீங்கள் ஒரு பாடலைப் பாடலாம்.