“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: சீயோனின் முகாம்,”: “ என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“சீயோனின் முகாம்,“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
சீயோனின் முகாம்
சீயோனின் முகாம் ஒருபோதும் பரிசுத்தவான்களை ஜாக்சன் கவுண்டியில் உள்ள தங்கள் நிலங்களில் மறுகுடியமர்த்தவில்லை என்பதால், பலர் தங்கள் முயற்சி தோல்வி என்று உணர்ந்தனர். இருப்பினும், சீயோன் முகாமில் பங்கேற்ற பலர் தங்கள் அனுபவத்தைத் திரும்பிப் பார்த்தார்கள், கர்த்தர் தங்கள் வாழ்க்கையிலும் அவருடைய ராஜ்யத்திலும் ஒரு உயர்ந்த நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைக் கண்டார்கள். அவர்களுடைய சாட்சியங்களில் சில இங்கே.
ஜோசப் ஸ்மித்
சீயோனின் முகாமுக்கு 40 ஆண்டுகளுக்கு பின்பு, முகாமில் உறுப்பினராக இருந்த ஜோசப் யங், ஜோசப் ஸ்மித் பின்வருமாறு கூறினார் என அறிவித்தார்:
“சகோதரரே, மிசௌரியில் நீங்கள் சண்டையிடாததால், உங்களில் சிலர் என்மீது கோபப்படுகிறீர்கள்; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் போராடுவதை தேவன் விரும்பவில்லை. பூமியின் தேசங்களுக்கு சுவிசேஷ கதவைத் திறக்க, அவர்களுடைய பாதையில் செல்லும்படி, பன்னிரண்டு மனிதர்களுடனும், எழுபது மனிதர்களுடனும், ஆபிரகாமைப் போல பெரிய தியாகத்தை செய்த, தங்களுடைய உயிரைக் கொடுத்த மனிதர் கூட்டத்திலிருந்து அவர்களை எடுக்காததால், அவரால் தனது ராஜ்யத்தை ஒழுங்கமைக்க முடியவில்லை.
“இப்போது, கர்த்தர் தனது பன்னிருவரையும், எழுபதின்மரையும் பெற்றுள்ளார், மேலும் எழுபதின்மரின் பிற குழுமங்கள் என அழைக்கப்படும், அவர்கள் தியாகம் செய்வார்கள், இப்போது தியாகங்களையும், காணிக்கைகளையும் செலுத்தாதவர்கள், இனிமேல் அவற்றை செலுத்துவார்கள்.”
பிரிகாம் யங்
“நாங்கள் மிசௌரிக்கு வந்தபோது, கர்த்தர் தம்முடைய ஊழியரான ஜோசப்பிடம் பேசினார், ‘நான் உன் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டேன்’ என்று சொன்னார், மீண்டும் திரும்புவதற்கான பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. நான் திரும்பி வந்தபோது, பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள், தங்கள் உழைப்பை விட்டுவர ஆண்களை மிசௌரி வரை செல்ல அழைத்து, வெளிப்படையாக எதையும் சாதிக்காமல், பின்னர் திரும்பி வந்ததால் என்ன பயன் என்று. ‘அது யாருக்கு பயனளித்தது?’ என்று அவர்கள் கேட்டார்கள். ‘அதைச் செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்டிருந்தால், அவ்வாறு செய்வதில் அவருடைய நோக்கம் என்ன?’… நான் அந்த சகோதரர்களிடம் சொன்னேன், எனக்கு நல்ல லாபம் கிடைத்தது, அதிக வட்டியுடன் சம்பளம் வழங்கப்பட்டது, ஆம், தீர்க்கதரிசி அவர்களுடன் பயணிப்பதன் மூலம் எனக்குக் கிடைத்த அறிவால் என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
வில்போர்ட் உட்ரப்
“நான் தேவனின் தீர்க்கதரிசியுடன் சீயோனின் முகாமில் இருந்தேன். அவருடன் தேவனின் நடவடிக்கைகளை நான் கண்டேன். தேவனின் வல்லமையை அவரிடம் பார்த்தேன். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று கண்டேன். அந்த பணியின்போது தேவ வல்லமை அவருக்கு வெளிப்பட்டது, எனக்கும் அவருடைய அறிவுறுத்தல்களைப் பெற்ற அனைவருக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. ”
“சீயோனின் முகாமின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டபோது, எங்களில் பலர் ஒருவருக்கொருவரின் முகங்களைப் பார்த்ததில்லை; நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருந்தோம், பலர் தீர்க்கதரிசியைப் பார்த்ததில்லை. தேசம் முழுவதும் சிதறிக்கிடந்தவர்களை ஒரு சல்லடையால் சலித்ததைப் போல, நாங்கள் முழுவதும் பரவியிருந்தோம். நாங்கள் இளைஞர்களாக இருந்தோம், அந்த ஆரம்ப நாளில் சீயோனை மீட்கும்படி அழைக்கப்பட்டோம், நாங்கள் செய்ய வேண்டியது, விசுவாசத்தினால் செய்யப்பட வேண்டியதாயிருந்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து கர்த்லாந்தில் நாங்கள் ஒன்றுகூடி, தேவன் எங்களுக்குக் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுவதற்காக, சீயோனை மீட்பதற்குச் சென்றோம். ஆபிரகாமின் பணிகளை ஏற்றுக்கொண்டதுபோல தேவன் எங்களுடைய கிரியைகளை ஏற்றுக்கொண்டார். மதமாறுபாட்டுக்காரர்களும் அவிசுவாசிகளும் பல முறை ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்ற கேள்வியைக் கேட்டாலும் நாங்கள் ஒரு பெரிய காரியத்தைச் செய்தோம். வேறு எந்த வகையிலும் நாம் ஒருபோதும் பெறமுடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றோம். தீர்க்கதரிசியின் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது, அவருடன் ஆயிரம் மைல்கள் பயணம் செய்வதற்கும், அவருடன் தேவனுடைய ஆவியின் செயல்பாடுகளையும், அவருக்குக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுகளையும், அவை நிறைவேறுவதையும் பார்க்க எங்களுக்கு பாக்கியம் கிடைத்தது. அந்த ஆரம்ப நாளில் அவர் நாடு முழுவதிலுமிருந்து சுமார் இருநூறு மூப்பர்களைக் கூட்டி, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கித்து உலகிற்கு பரப்ப எங்களை அனுப்பினார். நான் சீயோனின் முகாமுடன் செல்லவில்லை என்றால், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன் [சால்ட் லேக் சிட்டியில், பன்னிருவர் குழுமத்தில் பணியாற்றிக் கொண்டு]. … அங்கு சென்றதால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க திராட்சைத் தோட்டத்திற்குள் தள்ளப்பட்டோம், கர்த்தர் எங்கள் பிரயாசங்களை ஏற்றுக்கொண்டார். நம்முடைய எல்லா பிரயாசங்களிலும் துன்புறுத்தல்களிலும், நம் வாழ்க்கையை அடிக்கடி ஆபத்தில் ஆழ்த்தி, விசுவாசத்தினால் வேலை செய்து வாழ வேண்டியிருந்தது.
“சீயோன் முகாமில் பயணம் செய்வதில் [நாங்கள்] பெற்ற அனுபவம் தங்கத்தை விட மதிப்பு வாய்ந்தது.”