“செப்டம்பர் 15–21: ‘அநேக உபத்திரவங்களுக்குப் பின் … ஆசீர்வாதம் வருகிறது’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–105” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–105,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
செப்டம்பர் 15–21: “அநேக உபத்திரவங்களுக்குப் பின் … ஆசீர்வாதம் வருகிறது.”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–105
மிசௌரியின் ஜாக்சன் கவுண்டியில் உள்ள அவர்களது சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்படுவதைக் கேட்டு கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்கள் மனம் உடைந்தனர். ஆகவே, “சீயோனின் மீட்பு” “வல்லமையால் வரும்” என்று கர்த்தர் அறிவித்தபோது அது ஊக்கமளித்திருக்க வேண்டும் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103: 15). அவர்களின் இருதயத்தில் அந்த வாக்குறுதியுடன், 200க்கும் மேற்பட்ட ஆண்கள், மேலும் 25 பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் இஸ்ரவேல் முகாம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சீயோன் முகாம் என்று அறியப்பட்டதில் பெயர் சேர்க்கப்பட்டனர். அதன் நோக்கம் மிசௌரிக்கு அணிவகுத்து சென்று சீயோனை மீட்பதாகும்.
முகாமின் உறுப்பினர்களுக்கு, சீயோனை மீட்பது என்பது பரிசுத்தவான்களை தங்கள் நிலத்தில் மறுகுடியமர்த்துவதாகும். ஆனால் ஜாக்சன் கவுண்டிக்கு வருவதற்கு சற்று முன்பு, ஜோசப் ஸ்மித்திடம் சீயோனின் முகாமை கலைக்கும்படி கர்த்தர் கூறினார். இந்த புதிய அறிவுறுத்தலால் முகாமின் சில உறுப்பினர்கள் குழப்பமடைந்து வருத்தப்பட்டனர்; இந்த பயணம் தோல்வியுற்றது மற்றும் கர்த்தரின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதாகும். இருப்பினும், மற்றவர்கள் அதை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நாடு கடத்தப்பட்ட பரிசுத்தவான்கள் தங்கள் நிலங்களையும் வீடுகளையும் திரும்பப் பெறவில்லை என்றாலும், அந்த அனுபவம் சீயோனுக்கு ஒரு அளவு “மீட்பை” கொண்டு வந்தது, அது “வல்லமையால் வந்தது.” சீயோனின் முகாமின் விசுவாசமான உறுப்பினர்களில் பலர் பின்னர் சபையின் தலைவர்களாக ஆனார்கள், இந்த அனுபவம் தேவ வல்லமை, ஜோசப் ஸ்மித்தின் தெய்வீக அழைப்பு மற்றும் சீயோன் எனும் இடம் மட்டுமல்ல, சீயோன் தேவனின் ஜனம் என தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியது என்று அவர்கள் சாட்சியமளித்தார்கள். தோல்வியுற்ற இந்த பணியின் மதிப்பைக் கேள்விக்குட்படுத்துவதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, இரட்சகரைப் பின்பற்றுவதே உண்மையான பணி என்பதை அவர்கள் அறிந்தார்கள். முடிவில் சீயோன் இப்படித்தான் மீட்கப்படும்.
Saints, 1:194–206; “The Acceptable Offering of Zion’s Camp,” Revelations in Context, 213–18 பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102:12–23
உறுப்பினர் ஆலோசனைக் குழுக்களின் நோக்கம் என்ன?
பாகம் 102, ஒஹாயோவின் கர்த்லாந்தில் கூட்டத்தின் தீர்மானங்களைக் கொண்டுள்ளது, அங்கு சபையின் முதல் பிரதான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. வசனங்கள் 12–23 கடுமையான மீறல்களைச் செய்தவர்களுக்கு உறுப்பினர் ஆலோசனைக்குழு நடத்தும்போது பிரதான ஆலோசனைக்குழு பின்பற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது.
தலைவர் எம். ரசல் பல்லார்ட் கற்பித்தார், “சபை [உறுப்பினர் ] ஆலோசனைக்குழுக்கள் ஏன் நடத்தப்படுகின்றன என்று உறுப்பினர்கள் சில நேரங்களில் கேட்கிறார்கள். நோக்கம் மூன்று மட்டத்திலானது: மீறுபவரின் ஆத்துமாவைக் காப்பாற்றுவது, அப்பாவிகளைப் பாதுகாப்பது, சபையின் தூய்மை, உத்தமம் மற்றும் நல்ல பெயரைப் பாதுகாத்தல்” (“A Chance to Start Over: Church Disciplinary Councils and the Restoration of Blessings,” Ensign, Sept. 1990, 15).
See also Topics and Questions, “Membership Councils,” Gospel Library.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:1–12, 36; 105:1–19
சீயோனை நீதியின் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும்.
பரிசுத்தவான்கள் மிசௌரியில் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தை ஏன் இழந்தார்கள்? பல காரணங்கள் இருந்திருக்கலாம்—குறைந்த பட்சம் ஒன்று, “என் மக்களின் மீறல்கள்” என்று கர்த்தர் சொன்னார். அது இல்லாவிட்டால், சீயோன் “மீட்கப்பட்டிருக்கலாம் “( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:2 ). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103: 1–12, 36 ; 105: 1–19, நீங்கள் வாசிக்கும்போது மிசௌரியில் சீயோன் நிறுவப்படுவதற்குத் தடையாக இருந்த சில விஷயங்களையும், உதவக்கூடிய மற்றவைகளையும் நீங்கள் கவனிக்கலாம். உங்கள் இருதயத்திலும், வீட்டிலும், சமூகத்திலும் சீயோனை நிறுவ உங்களுக்கு உதவும் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:12–13, 36; 105:1–6, 9–19
விசுவாசத்தின் உபத்திரவங்களுக்குப் பிறகு ஆசீர்வாதம் வருகிறது.
பல வழிகளில், சீயோன் முகாமில் பங்கேற்பது விசுவாசத்தின் உபத்திரவங்கள். பயணம் நீண்டது, வானிலை வெப்பமாக இருந்தது, உணவு மற்றும் தண்ணீர் சில நேரங்களில் பற்றாக்குறையாக இருந்தது. அவர்கள் அனைத்தையும் சகித்த பிறகும், பரிசுத்தவான்களை இன்னும் தங்கள் தேசத்திற்கு திரும்ப அனுப்புவதில் சீயோன் முகாம் இன்னும் வெற்றியடையவில்லை. சீயோன் முகாமின் ஒரு உறுப்பினருக்குக் கடிதம் எழுதும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது அவருடைய அனுபவத்தால் கர்த்தர் மீதுள்ள நம்பிக்கை அசைந்தது என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த நபரை ஊக்குவிக்க நீங்கள் என்ன சொல்லலாம்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:5–7, 12–13, 36 105:1–6, 9–19இல் உதவக்கூடிய என்ன சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்;
சீயோன் முகாம் போன்ற ஒரு உபத்திரவங்களின் நவீன உதாரணத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம், அதாவது கடினமாக உழைக்கும் ஒரு ஊழியக்காரர், ஆனால் அவரது முயற்சியின் காரணமாக யாரும் சபையில் சேர மாட்டார்கள். நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில், அந்த ஊழியக்காரரின் பணி இன்னும் வெற்றிகரமாக இருப்பதைக் காண நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்?
“அதிக உபத்திரவங்களுக்குப் பிறகு” கர்த்தர் உங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:12).
மேலும்1 நேபி 11:16–17; ஆல்மா 7:11–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:33–36; 84:88; 101:35–36; David A. Bednar, “On the Lord’s Side: Lessons from Zion’s Camp,” Ensign, July 2017, 26–35, or Liahona, July 2017, 14–23; Topics and Questions, “Endure to the End,” Gospel Library; “How Firm a Foundation,” Hymns, no. 85 பார்க்கவும்.
உபத்திரவங்களின் நோக்கம் என்ன?
உபத்திரவங்களின் நோக்கம் பற்றி மூப்பர் ஆர்சன் எப். விட்னியின் ஆலோசனையைக் கருத்தில் கொள்ளுங்கள்: “நாம் அனுபவிக்கும் எந்த வலியும், நாம் அனுபவிக்கும் எந்த சோதனையும் வீணாகாது. இது நமது கல்விக்கும், பொறுமை, விசுவாசம், துணிவு மற்றும் பணிவு போன்ற பண்புகளை வளர்க்கவும் உதவுகிறது. நாம் படும் துன்பங்கள் மற்றும் நாம் தாங்கும் அனைத்தும், குறிப்பாக பொறுமையாக சகித்து, நம் குணங்களை வளர்த்து, நம் இருதயங்களைத் தூய்மைப்படுத்தி, ஆத்துமாவை விரிவுபடுத்தி, நம்மை மிகவும் மென்மையாகவும், தொண்டு செய்யவும், தேவனின் குழந்தைகள் என்று அழைக்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவர்களாகவும் ஆக்குகிறது … துக்கம் மற்றும் துன்பம், உழைப்பு மற்றும் இன்னல்கள் ஆகியவற்றின் மூலம் நாம் இங்கு வந்து கல்வியைப் பெறுகிறோம், மேலும் இது நம்மை பரலோகத்தில் இருக்கும் பிதா மற்றும் தாயைப் போல் மாற்றும் (in Spencer W. Kimball, Faith Precedes the Miracle [1972], 98).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:11–18, 78–83
கர்த்தர் என்னை “பூமிக்குரிய ஆசீர்வாதங்களின் உக்கிராணக்காரனாக” ஆக்கியுள்ளார்.
மிசௌரியில் நடந்த உபத்திரவங்களுடன், 1834 ம் ஆண்டில் சபை பெரும் கடன்கள் மற்றும் செலவுகள் உள்ளிட்ட நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. பாகம் 104ல், சபையின் நிதி நிலைமை குறித்து கர்த்தர் ஆலோசனை வழங்கினார். உங்கள் சொந்த நிதி சம்மந்தமான தீர்மானங்களுக்கு வசனங்கள் 11–18மற்றும் 78–83ஆகியவற்றில் உள்ள கொள்கைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
See also “Treasure in Heaven: The John Tanner Story” and “The Labor of His Hands” (videos), Gospel Library.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:9
இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம் நான் “உலகிற்கு ஒளியாக” இருக்க முடியும்.
-
நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:9 ஐப் படிக்கும் போது, உங்கள் குழந்தைகளை ஒரு பல்பை, மெழுகுவர்த்தி அல்லது ஒளியின் பிற ஆதாரங்களின் படங்களை வைத்திருக்க அழைக்கலாம். நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது நாம் எவ்விதம் பிறருக்கு ஒளியாக இருக்க முடியும்? See also “Jesus Wants Me for a Sunbeam” (Children’s Songbook, 60–61).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:13–18
என்னிடம் உள்ளதை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
-
உங்கள் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்துள்ள ஆசீர்வாதங்களின் பட்டியலை (உணவு, உடை, திறமைகள், விசுவாசம் மற்றும் வீடு போன்றவை) செய்ய நீங்கள் சில நிமிடங்கள் கொடுக்க விரும்பலாம். அவர்களால் முடிந்தவரை பட்டியலிட அவர்களை ஊக்குவிக்கவும். பிறகு நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104: 13–18,ஐ ஒன்றாக வாசிக்கலாம், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடலாம்: எல்லாவற்றுக்கும் உண்மையான உரிமையாளர் யார்? இந்த காரியங்களைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறார்? நீங்களும் உங்கள் குழந்தைகளும் உங்களுக்குத் தேவையானதை யாரோ ஒருவர் உங்களுக்கு வழங்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் (see also “The Coat” [video], Gospel Library).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:42
நான் கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்.
-
பாகம் 104 பலமுறை கர்த்தர் தம் கட்டளைகளுக்கு உண்மையாகக் கீழ்ப்படிகிற மக்களுக்கு “பல ஆசீர்வாதங்களை” வாக்களிக்கிறார். “பன்மை” என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவ, நீங்கள் ஒரு வட்டத்தை வரைந்து, இரண்டு, நான்கு, பின்னர் எட்டு, பதினாறு மற்றும் பல வட்டங்களின் எண்ணிக்கையைப் பெருக்க உங்களுக்கு உதவுமாறு உங்கள் குழந்தைகளிடம் கேட்கலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் வட்டங்களைச் சேர்க்கும்போது, பரலோக பிதா அவர்களுக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகள் சிந்திக்க உதவுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:38–40
நான் சமாதானம் செய்பவராக இருக்க முடியும்.
-
உங்கள் பிள்ளைகள் சீயோனின் முகாமின் கதையைக் கற்றுக்கொள்வதற்கு உதவ, “அத்தியாயம் 36: சீயோனின் முகாம்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள், 135–39 அல்லது சுவிசேஷ நூலகத்தில் தொடர்புடைய வீடியோ) பகிர்ந்து கொள்ளலாம். சீயோனின் முகாமில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களைப் பற்றி பேசுவதற்கு அவ்வப்போது இடைநிறுத்தவும்—உதாரணமாக, நாம் வாதிடுவதற்கும் சண்டையிடுவதற்கும் பதிலாக சமாதானமாகவும் ஒன்றாகவும் செயல்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (see also Russell M. Nelson, “Peacemakers Needed,” Liahona, May 2023, 98–101).
-
நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:38–40 ஐப் படித்து, “சமாதானம்” என்ற வார்த்தையைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைகளை எழுந்து நிற்கச் சொல்லலாம். தயவற்ற மக்களுடன் பரிசுத்தவான்கள் சமாதானம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார் என்பதை விளக்குங்கள். சமாதானம் செய்பவர்களாக இருக்க உங்கள் பிள்ளைகள் செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி சிந்திக்க உதவுங்கள், மேலும் சில சூழ்நிலைகளில் பங்கு வகிக்க அவர்களை அழைக்கவும்.