மே 11–17 மோசியா 18–24: ‘அவருடன் ஒரு உடன்படிக்கைக்குள் நாம் பிரவேசித்தோம்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“மே 11–17. மோசியா 18–24,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
மே 11–17
மோசியா 18–24
அவருடன் ஒரு உடன்படிக்கைக்குள் நாம் பிரவேசித்தோம்
தலைவர் தாமஸ் எஸ்.மான்சன் போதித்தார், “வேதங்களை நாம் வாசித்து சிந்திக்கும்போது, நமது ஆத்துமாவுக்குள் பரிசுத்த ஆவியின் இனிமையான கிசுகிசுப்பை நாம் அனுபவிப்போம்” (“We Never Walk Alone,” Ensign or Liahona, Nov. 2013, 122).
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
மோசியா 18, 23–24 லிலுள்ள ஆல்மா மற்றும் அவனுடைய ஜனங்களின் விவரம் “தேவனுடைய மந்தையினுள் வருவது” (மோசியா 18:8) என அர்த்தமாகிறதைக் காட்டுகிறது” அவர்கள் ஞானஸ்நானம் பெற்றபோது, “அவருக்கு சேவை செய்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோம்” (மோசியா 18:10) என தேவனோடு ஒரு உடன்படிக்கையை அவர்கள் செய்தார்கள். இது ஒரு தனிப்பட்ட ஆழ்ந்த அர்ப்பணிப்பாயிருக்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கும் சம்பந்தப்பட்டது. ஆம், பரலோக பிதாவிடம் திரும்பும் பயணம் தனிநபருக்கான தனிப்பட்டதாக இருக்கிறது மற்றும் நமக்காக வேறு யாருமே உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள முடியாது, ஆனால் நாம் தனியாயிருக்கிறோமென்று அதற்கு அர்த்தமாகாது. ஒருவருக்கொருவர் நமக்கு தேவை. கிறிஸ்துவின் சபையாராக பாதையிலே “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து” (மோசியா 18:8–10) ஒருவருக்கொருவர் உதவிசெய்து சேவை செய்வதால் தேவனுக்கு சேவை செய்ய நாம் உடன்படிக்கை செய்கிறோம். நாம் அனைவரும் செய்வதைப்போல, நிச்சயமாக ஆல்மாவின் ஜனங்களுக்கு சுமக்க பாரங்களிருந்தன. “சுமத்தப்பட்ட பாரங்கள் லகுவாக்கப்படுகிற” (மோசியா 24:15) ஒரு வழியில் கர்த்தர் நமக்குதவுகிறாரென்பது, அவர்களுக்காக செய்ய நாம் வாக்களித்ததைப்போல நம்மோடு துக்கிக்கவும், நமக்கு ஆறுதலளிக்கவும் வாக்களித்த ஒரு பரிசுத்தவான்களின் சமுதாயத்தை நமக்குக் கொடுப்பது.
தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்
தேவனுக்கு சேவை செய்யவும் அவருடைய ஒரு சாட்சியாக நிற்கவும் ஒரு உடன்படிக்கையை ஞானஸ்நானம் அடக்கியிருக்கிறது.
ஞானஸ்நான உடன்படிக்கையைப்பற்றி அல்லது ஞானஸ்நானத்தின்போது தேவனுக்கு நாம் செய்த வாக்களிப்பைப்பற்றி ஆல்மாவின் போதனைகள் மோசியா 18:8–10ல் அடங்கியிருக்கிறது. இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, பின்வரும் கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள்.
-
ஞானஸ்நானத்தின்போது நீங்கள் செய்த வாக்களிப்புகளைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? தேவன் உங்களுக்கு என்ன வாக்களித்தார்?
-
தேவனுக்கு சேவை செய்ய உடன்படிக்கை எவ்வாறு(வசனம் 10 பார்க்கவும்) ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய நமது முயற்சிகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது? (வசனங்கள் 8–9பார்க்கவும்).
-
உங்களுடைய வாக்களிப்புகளைக் கைக்கொள்ள நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
-
உங்களுடைய ஞானஸ்நான உடன்படிக்கையைக் கைக்கொள்ளுவது “பரிசுத்த ஆவியில் நிறைந்திருக்க” உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது? மோசியா 18:14 உங்களுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு உங்களுக்குதவுகிறார்?
இந்த விவரம், ஞானஸ்நானத்தின் சரியான முறையையும் வெளிப்படுத்துகிறது. ஞானஸ்நானம் எப்படி நடத்தப்படவேண்டுமென்பதைப்பற்றி வசனங்கள் 14–17ல் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? மத்தேயு 3:16; ரோமர் 6:3–5; 3 நேபி 11:21–28; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:72–74லிருந்து ஞானஸ்நானத்தைப்பற்றி நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 77, 79ஐயும் பார்க்கவும்.
தேவனுடைய ஜனங்கள் ஒற்றுமையாயிருக்கவேண்டும்.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுதல், புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றிற்காக வாழ்க்கையின் பழக்கமான வழியை விட்டுவிடுவதாக சிலநேரங்களில் அர்த்தமாகிறதென ஆல்மாவும் அவனுடைய ஜனங்களும் கண்டுபிடித்தார்கள். ஆனால் “கிறிஸ்து சபையின்” (மோசியா 18:17) பகுதியாக ஆல்மாவின் ஜனங்கள் ஒருவருக்கொருவரிடமிருந்து வலிமை பெற்றார்கள். மோசியா 18:17–30லிலுள்ள போதனைகள் சபையின் ஒரு சிறந்த அங்கத்தினராயிருக்க எவ்வாறு உங்களை ஊக்குவிக்கிறது? “ஒன்றாய் இணைக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க” உங்கள் தொகுதி அல்லது கிளை அங்கத்தினர்களுக்குதவ நீங்கள் என்ன செய்யமுடியும்.? (மோசியா 18:21).
ஹென்றி பி.ஐரிங் “Our Hearts Knit as One,” Ensign or Liahona, Nov. 2008, 68–71ஐயும் பார்க்கவும்.
தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நிறைவேற்றப்படும்.
அவர்கள் மனந்திரும்ப மறுத்தால், நோவா இராஜாவுக்கும் அவனுடைய ஜனங்களுக்கும் என்ன நடக்குமென்பதைப்பற்றி சில குறிப்பிட்ட தீர்க்கதரிசனங்களை அபிநாதி கொடுத்தான். விசேஷமாக, ஏறக்குறைய 50 ஆண்டுகளாக லாமானியர்களுக்கு எதிராக நேபியர்கள் வெற்றிகரமாக தங்களைப் பாதுகாத்துக்கொண்டதால்,(மோசியா 9:16–18; 11:19 பார்க்கவும்). இந்த தீர்க்கதரிசனங்கள் நம்பமுடியாததாகத் தோன்றியது (மோசியா12:1–8, 14–15 பார்க்கவும்) ஆனால், அபிநாதி நாட்களின் அளவுக்கு நமது நாட்களில், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
அபிநாதியின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டன என அறிவிக்க கிதியோனை நடத்திய மோசியா 19–20ல் நீங்கள் எதைக் கண்டுபிடித்தீர்கள்? (மோசியா 20:21 பார்க்கவும்). தேவனுடைய தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கைகளிலும் ஆலோசனையிலும் உங்களுடைய விசுவாசத்தையும் அவர்களுடைய வார்த்தைகளை பின்பற்ற உங்களுடைய அர்ப்பணிப்பையும் இந்த விவரம் எவ்வாறு பெலப்படுத்துகிறது? நமது நாளில் ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நிறைவேறியதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்?
என்னுடைய பாரங்களை தேவனால் இலகுவாக்கமுடியும்.
லிம்கியின் ஜனங்கள், ஆல்மாவின் ஜனங்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காகவும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காகவுமிருந்தாலும், அடிமைத்தனத்திற்குள் வீழ்ந்தார்கள். மோசியா19–22 லிலுள்ள லிம்கியின் ஜனங்கள் மற்றும் மோசியா18; 23–24 லிலுள்ள ஆல்மாவின் ஜனங்களை ஒப்பிடுவதில் உங்களால் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு அடிமைத்தனத்தை சமாளித்தார்கள் அல்லது ஒவ்வொருவரும் இறுதியாக எவ்வாறு விடுதலையடைந்தனர் என உங்களால் கவனிக்கமுடியும். நீங்கள் அப்படிச் செய்யும்போது, உங்கள் வாழ்க்கைக்கு பொருந்துகிற செய்திகளை தேடுங்கள். உதாரணமாக, உங்கள் பாரங்களைச் சுமக்க உங்களுக்கு உதவக்கூடிய இந்த விவரங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
கர்த்தரை நான் நம்பமுடியும்.
தங்களுடைய பாவங்களுக்காக அவர்கள் மனந்திரும்பினாலும், ஆல்மாவும் அவனுடைய ஜனங்களும் இன்னமும் தங்களை அடிமைத்தனத்தில் கண்டார்கள். கர்த்தரை நம்புவதும், நமது உடன்படிக்கைகளின்படி வாழுதலும் எப்போதும் சிரமங்களைத் தடுப்பதில்லை, ஆனால் அவைகளை மேற்கொள்ள அது உதவுகிறது என்பதை அவர்களுடைய அனுபவங்கள் காட்டுகிறது. மோசியா 23:21–24 மற்றும் 24:8–17ஐ நீங்கள் படிக்கும்போது, உங்கள் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தேவனில் நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ள உங்களுக்குதவக்கூடிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கவனியுங்கள்.
தாமஸ் எஸ்.மான்சன், “I Will Not Fail Thee, nor Forsake Thee,” Ensign or Liahona, Nov. 2013, 85–87ம் பார்க்கவும்.
குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
மோசியா 18:1–4
ஒரு ஆப்பிள் பழத்தில் விதைகளை உங்களால் எண்ணமுடியும், ஆனால் ஒரு விதையிலிருந்து வருகிற ஆப்பிள் பழங்களை உங்களால் எண்ணமுடியாது என்று ஒரு பழமொழி உண்டு. அபிநாதியின் சாட்சியை ஒரேஒரு நபர் ஏற்றுக்கொண்டான், ஆனால், ஆல்மா என்ற ஒரு நபர் நேபியர்களின் தலைமுறைகளை செல்வாக்கடையச் செய்தான். ஒருவேளை இந்த கொள்கையை செய்துகாட்ட விதைகளுடனுள்ள ஒரு பழத்தை நீங்கள் பயன்படுத்தலாம். நமது குடும்பத்திற்கு இந்த செய்தி எவ்வாறு பொருந்தும்? மற்றவர்களுடன் நமது சாட்சிகளைப் பகிர்ந்துகொள்ள நாம் என்ன செய்யமுடியும்?
மோசியா 18:8–10
இந்த வசனங்களிலிருந்து நமது ஞானஸ்நான உடன்படிக்கையைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:73, 77–79 ஐயும் பார்க்கவும்) . நமது ஞானஸ்நான உடன்படிக்கைக்கு ஆயத்தப்பட அல்லது கைக்கொள்ள நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
மோசியா 18:30
அங்கே நமக்கு ஆவிக்குரிய அனுபவங்கள் இருந்ததால் எந்த இடங்கள் நமக்கு விசேஷித்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது?
மோசியா 21:11–16, 24:10–15
ஆல்மாவின் ஜனங்கள் மற்றும் லிம்கியின் ஜனங்களின் சிறையிருப்பை ஒப்பிட்டு நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
மோசியா21:15; 24:11–15
ஜெபங்களுக்குக் கர்த்தர் பதிலளிக்கிற சில வழிகளைப்பற்றி இந்த வசனங்கள் நமக்கு என்ன போதிக்கிறது?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்,—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.