“ஆகஸ்ட் 24–30. ஏலமன் 7-12: ‘கர்த்தரை நினைவு கூருங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“ஆகஸ்ட் 24–30. ஏலமன் 7–12,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
ஆகஸ்ட் 24–30
ஏலமன் 7–12
“கர்த்தரை நினைவுகூருங்கள்”
நேபியும் லேகியும் பிறரும் “தினமும் அநேக வெளிப்படுத்தல்களைப்“ பெற்றனர் (ஏலமன் 11:26 ). அடிக்கடி வரும் வெளிப்படுத்தல்கள் தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட கிடைக்கிறது. உங்கள் உள்ளுணர்வுகளை பதிவு செய்தல் அதிக சீரான வெளிப்படுத்தல்களை பெற உங்களுக்கு உதவ முடியும்.
உங்கள் உள்ளுணர்வுகளைப் பதிவுசெய்யவும்
நேபியின் தகப்பனான ஏலமன் தன் குமாரர்களை “நினைவு கூருங்கள், நினைவு கூருங்கள்” என வலியுறுத்தினான்: அவர்கள் தங்கள் முன்னோர்களை நினைவுகூரவும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நினைவுகூரவும், அனைத்தையும் விட, “நமது மீட்பராகிய கிறிஸ்துவை” நினைவுகூரவும் வேண்டும் என அவன் விரும்பினான் (ஏலமன் 5:5–14 பார்க்கவும்). நேபி நினைவுகூர்ந்தான் என்பது தெளிவாகிறது, ஏனெனில் இதே செய்தியைத்தான் பல வருடங்களுக்குப் பிறகு அவன் சோர்ந்து போகாமல் ஜனங்களுக்கு அறிவித்தான். (ஏலமன் 10:4) “தேவனை நீங்கள் மறந்து போகக் கூடுமோ?” (ஏலமன் 7:20), அவன் கேட்டான். பிரசங்கித்தல், ஜெபித்தல், அற்புதங்கள் செய்தல் மற்றும் தேவனிடம் விண்ணப்பித்தல் போன்ற நேபியின் அனைத்து முயற்சிகளும், ஜனங்கள் தேவனிடத்தில் திரும்பி அவரை நினைவுகூர உதவும் முயற்சிகள்தான். அநேக விதங்களில், அவரை அறிவதை விட தேவனை மறப்பது, பெரிய பிரச்சினை, நமது மனங்கள் “உலகத்தின் வீணானவைகளால்” விலக்கப்பட்டு பாவத்தால் மறைக்கப்படும்போது, அவரை மறப்பது எளிதாகிறது (ஏலமன் 7:21; மற்றும் ஏலமன் 12:2 ஐயும் பார்க்கவும்). ஆனால் நேபியின் ஊழியம் காட்டுவது போல, நினைவுகூரவும், “உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புவதற்கும்” ஒருபோதும் தாமதமாகவில்லை (ஏலமன் 7:17).
தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்
தேவனின் சித்தத்தை தீர்க்கதரிசிகள் வெளிப்படுத்துகிறார்கள்.
மார்மன் புஸ்தகம் முழுமையும் விவரிக்கப்பட்டுள்ள அநேக தீர்க்கதரிசிகள் உள்ளனர், ஆனால் தீர்க்கதரிசி என்றால் யார், அவர் என்ன செய்கிறார், அவரது வார்த்தைகளை நாம் எப்படி பெற வேண்டும் என அறிய குறிப்பாக ஏலமன் 7–11 நல்ல இடமாகும். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்பொழுது, கர்த்தருடன் நேபியின் செயல்கள், சிந்தனைகள், மற்றும் உரையாடல்களுக்கு கவனம் செலுத்தவும். நமது நாளில் தீர்க்கதரிசியின் பங்கை நன்கு புரிந்துகொள்ள நேபியின் ஊழியம் உங்களுக்கு எவ்விதம் உதவுகிறது? சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வேறு என்ன காண்கிறீர்கள்?
-
ஏலமன் 7:17–22.தீர்க்கதரிசிகள் மனந்திரும்புதலுக்காக கூக்குரலிட்டு, பாவங்களின் விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்கள்.
-
ஏலமன் 7:29; 9:21–36.தேவனிடமிருந்து வெளிப்படுத்தல் மூலம் ஜனங்கள் எதைக் கேட்க வேண்டும் என தீர்க்கதரிசிகள் அறிகிறார்கள்.
-
ஏலமன் 10:7.தீர்க்கதரிசிகள் பூமியிலும் பரலோகத்திலும் முத்திரிக்க வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்( மத்தேயு 16:19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:46ஐயும் பார்க்கவும்).
நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப்பற்றி நீங்கள் உணர்வதை இந்த வசனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன? அண்மையில் அவர் என்ன போதித்திருக்கிறார்? செவிகொடுக்கவும், அவரது வழிகாட்டுதலை பின்பற்றவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
அடையாளங்களும் அற்புதங்களும் உதவிகரமானவை, ஆனால் நீடித்த விசுவாசத்தைக் கட்ட போதுமானதல்ல.
ஒருவரின் இருதயத்தை மாற்ற அடையாளங்களும் அற்புதங்களும் போதுமானால், ஏலமன் 9ல் நேபி கொடுத்த விசேஷித்த அடையாளங்களால் நேபியர் அனைவரும் மனமாற்றப்பட்டிருப்பார்கள். மாறாக, “ஜனங்களுக்குள்ளே ஒரு பிரிவு” (ஏலமன் 10:1) அவர்களில் அநேகர் “தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தியதால்” (ஏலமன் 10:15) உண்டானது. அடையாளங்களுக்கும் அற்புதங்களுக்கும் துன்மார்க்கர் எப்படி பிரதிக்கிரியை செய்கிறார்கள்?(ஏலமன் 10:12–15 பார்க்கவும்; மற்றும் 3 நேபி 2:1–2 பார்க்கவும்). சாட்சியின் அஸ்திவாரமாக அடையாளத்தை வைப்பதன் அபாயம் என்ன?(“Signs,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org பார்க்கவும்).
சிந்தித்தல் வெளிப்படுத்தலை வரவேற்கிறது.
நீங்கள் விழத்தள்ளப்பட்டும், கவலையுடனும் அல்லது குழம்பியும் எப்போதாவது உணர்ந்திருந்தால், ஏலமன் 10:2–4ல் நேபியின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் ஒரு முக்கிய பாடத்தை கற்கலாம். அவன் “தள்ளப்பட்டதாக” உணர்ந்தபோது, அவன் என்ன செய்தான்? ( வசனம் 3).
தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார், “நாம் சிந்திக்கும்போது, நாம் ஆவியால் வெளிப்படுத்தலை அழைக்கிறோம். எனக்கு சிந்தித்தல் என்பது, கவனமாக வேதங்களை வாசித்து படித்த பிறகு நான் செய்கிற நினைத்தல் மற்றும் ஜெபித்தல் ஆகும்.”(“Serve with the Spirit,” Ensign or Liahona, Nov. 2010, 60). சிந்திக்கும் பழக்கத்தை நீங்கள் எப்படி உருவாக்கலாம்? தேவ வார்த்தையை ஒழுங்காக சிந்திக்கும் ஒரு வழியைப்பற்றி வாசிக்க, சகோதரர் கெவின் ஜி. டுரன்ட்டின் செய்தியை பார்க்கவும்.“My Heart Pondereth Them Continually” (Ensign or Liahona, Nov. 2015, 112–15).
நீதிமொழிகள் 4:26; லூக்கா 2:19; 1 நேபி 11:1; 2 நேபி 4:15–16; 3 நேபி 17:3; மரோனி 10:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:62 ஐயும் பார்க்கவும்.
நான் கர்த்தரை நினைவுகூர வேண்டும் என அவர் விரும்புகிறார்.
ஏலமன் 12ல் பதிவேடுகளை சுருக்கி எழுதிய மார்மன், முந்திய அதிகாரங்களில் நேபியின் விவரங்களிலிருந்து நாம் கற்கக்கூடிய பாடங்களை சுருக்கி எழுதுகிறான். உங்கள் இருதயத்தை சோதிக்க ஒரு சந்தர்ப்பமாக அவனது சுருக்கத்தை பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளவும். ஜனங்கள் கர்த்தரை மறக்க செய்வதாக மார்மன் கூறுகிற காரியங்களின் பட்டியலைக் கூட நீங்கள் உருவாக்கலாம். அவரை நினைவுகூர உங்களுக்கு எது உதவுகிறது? நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் என்ன மாற்றங்கள் செய்ய உணர்த்தப்பட்டிருக்கிறீர்கள்?
குடும்ப வேதபடிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலை நேரத்துக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் கலந்துரையாடவும் வேண்டும் என்று அறிந்துகொள்ளவும் ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
ஏலமன் 7–9
நேபி செய்தது மற்றும் இன்று தீர்க்கதரிசிகள் செய்கிறவற்றுக்கிடையே ஒப்பானவை எதை நீங்கள் பார்க்கிறீர்கள்? இன்று நமது தீர்க்கதரிசி என்ன போதிக்கிறார்? தீர்க்கதரிசி கொடுத்துள்ள சில அண்மை ஆலோசனையை ஒருவேளை நீங்கள் தெரிந்துகொண்டு, அதை நீங்கள் சிறப்பாக பின்பற்றும் வழிகளை குடும்பமாக கலந்துரையாடவும்.
ஏலமன் 10:4–5, 11–12
தன் சொந்த சித்தத்தை விட, கர்த்தரின் சித்தத்தை அவன் நாடுகிறான் என நேபி எப்படி காட்டினான்? அவனது எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்றலாம்? நமது குடும்பம் கர்த்தரின் சித்தத்தை சிறப்பாக நாடக்கூடிய சில வழிகள் யாவை?
ஏலமன் 11:1–16
நேபி எதை வாஞ்சித்தான் மற்றும் அதற்காக என்ன செய்தான்? நேபியின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் ஜெபத்தைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளுகிறோம்?
ஏலமன்11:17–23
ஏலமன் 11:17–23ல் நேபியின் சகோதரனாகிய லேகியைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அதிக பாராட்டுகள் பெறாமல் நீதியான வாழ்க்கை வாழ்கிற யாரை நமக்குத் தெரியும்?
ஏலமன் 12:1–6
“நிலையற்ற” என்றால் என்ன என உங்கள் குடும்பத்தினர் அறிய உதவ என்ன பொருள் சார்ந்த பாடத்தை உங்களால் நினைக்க முடிகிறது? உதாரணமாக, அவன் அல்லது அவளது தலையில் விழாமல் தாங்க முயற்சிக்க நீங்கள் அழைக்கலாம். கர்த்தரைப் பின்பற்றுவதில் ஜனங்கள் நிலையற்றிருக்கும் காரணங்களுக்காக ஏலமன் 12:1–6ல் பார்க்க குடும்ப அங்கத்தினர்களை பின்னர் நீங்கள் அழைக்கலாம். நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதமாக நிலையாக இருக்க முடியும்?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு-ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்