“ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6. ஏலமன் 13–16: ‘மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6
ஏலமன் 13–16
“மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி”
இந்த வாரம் உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யும்போது, ஏலமன் 13–16லுள்ள கொள்கைகள் எப்படி வேதங்களில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற பிற காரியங்களின் மீது கட்டி பெலப்படுத்துகிறது என்பதைப்பற்றி சிந்திக்கவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
சாரகெம்லாவில் “மகிழ்ச்சியான செய்தியை” முதல் முறை லாமானியனான சாமுவேல் பகிர முயன்றபோது (ஏலமன் 13:7), அவன் புறக்கணிக்கப்பட்டு, கடின இருதயமுள்ள நேபியர்களால் வெளியே தள்ளப்பட்டான். சாமுவேலின் செய்தியைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுத்த ஊடுருவ முடியாத சுவற்றை அவர்களது இருதயங்களைச் சுற்றிலும் அவர்கள் கட்டியுள்ளது போலவுள்ளதாக நீங்கள் சொல்லலாம். தான் அளித்த செய்தியின் முக்கியத்துவத்தை சாமுவேல் புரிந்துகொண்டான் மற்றும் “அவன் திரும்பி தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்ற தேவனின் கட்டளையைப் பின்பற்றியதால் விசுவாசத்தைக் காட்டினான் (ஏலமன் 13:3). “கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்தும்போதும்” (ஏலமன் 14:9) அவரது தீர்க்கதரிசிகளை பின்பற்ற முயற்சிக்கும்போதும் சாமுவேல் செய்ததைப் போல, நாம் சுவர்களை எதிர்கொள்கிறோம். சாமுவேலைப் போல, “நிச்சயமாக வரப்போகிற,” இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாமும் சாட்சியளித்து, “அவரது நாமத்தை நம்ப” அனைவரையும் அழைக்கிறோம் (ஏலமன் 13:6; 14:13). எல்லோரும் கேட்க மாட்டார்கள், சிலர் நம்மை வேகமாக எதிர்க்கலாம். ஆனால் கிறிஸ்துவில் விசுவாசத்துடன் இச்செய்தியை நம்புகிறவர்கள், இது உண்மையாகவே “மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிற நற்செய்தி” என காண்கிறார்கள் (ஏலமன் 16:14).
தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்
கர்த்தர் தன் தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரிக்கைகளைக் கொடுக்கிறார்.
வேதங்களில், சுவற்றின் மீது அல்லது கோபுரத்தில் நின்று அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிற, காவல்காரர்களுக்கு தீர்க்கதரிசிகள் சில சமயங்களில் ஒப்பிடப்படுகின்றனர்.(ஏசாயா 62:6; எசேக்கியேல் 33:1–7 பார்க்கவும்).
தீர்க்கதரிசி எம். ரசல் பல்லார்ட் போதித்தார்: “நூற்றாண்டுகளாக அவர்களுக்கு முன்பாக இருக்கும் அபாயங்களைக் குறித்து தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு எச்சரித்தபோது, தங்கள் கடமைகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். வாழ்க்கையின் கேள்விகளுக்கு பதில்களைத் தேடுகிறவர்களுக்கு உதவ கர்த்தரின் தீர்க்கதரிசிகள் கண்காணிக்கும், எச்சரிக்கும் மற்றும் அணுகும் கடமையுள்ளவர்கள்.”(“God Is at the Helm,” Ensign or Liahona, Nov. 2015, 25).
நீங்கள் ஏலமன் படித்து சிந்திக்கும்போது, சாமுவேல் கொடுத்த அநேக எச்சரிக்கைகளை நீங்கள் அடையாளமிடலாம். உதாரணமாக, மனந்திரும்புதலைப்பற்றி, தாழ்மை மற்றும் செல்வத்தைப்பற்றி அவன் என்ன போதித்தான்? இந்த எச்சரிக்கைகள் உங்களுக்கு எப்படி பொருந்தக்கூடும்? தற்கால தீர்க்கதரிசிகள் அண்மையில் என்ன எச்சரிக்கைகள் கொடுத்திருக்கிறார்கள், இந்த எச்சரிக்கைகள் குறித்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என உணர்கிறீர்கள்?
மனந்திரும்புபவர்கள் மீது கர்த்தர் இரக்கமாயிருக்கிறார்.
முதலாவதாக, இரட்சகர் வருகையைப்பற்றிய மகிழ்ச்சியை உண்டாக்குகிற செய்தியை பகிர நேபியர்களிடம் சாமுவேல் அனுப்பப்பட்டான்( ஏலமன் 13:7 பார்க்கவும்). அவர்கள் அவனை புறக்கணித்ததால், தேவனின் நியாயத்தீர்ப்பைப்பற்றிய கடினமான எச்சரிக்கைகளுடன் அவன் திரும்பினான். ஆனால் அந்த எச்சரிக்கைகளில், மனந்திரும்ப இரக்கமான அழைப்பு சீராக அடங்கியிருந்தது, ஏலமன் 13–15 (ஏலமன் 13:6, 11; 14:15–19; 15:7–8ல் குறிப்பாக பார்க்கவும்) முழுவதிலும் அந்த அழைப்புக்களைத் தேடவும். இந்த அழைப்புக்கள் உங்களுக்கு எப்படி பொருந்தும்? இந்த வசனங்களிலிருந்து மனந்திரும்புதலைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்? மனந்திரும்புதலிலிருந்து வருகிற தேவனின் இரக்கத்தை நீங்கள் எப்போது அனுபவித்திருக்கிறீர்கள்?
தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதவர்களின் விசுவாசத்தை, அடையாளங்களும் அதிசயங்களும் பெலப்படுத்த முடியும்.
ஏலமன் 14ல், இரட்சகரின் பிறப்பு மற்றும் இறப்பைப்பற்றி கர்த்தர் கொடுத்த காரணத்தை சாமுவேல் விளக்கினான்: “அவருடைய நாமத்தை நீங்கள் விசுவாசிக்கக்கூடும் என்ற எண்ணத்திற்கு” (ஏலமன் 14:12). நீங்கள் ஏலமன் 14 படிக்கும்போது, வசனங்கள் 1–8லுள்ள, இரட்சகரின் பிறப்பின் அடையாளங்கள் மற்றும் வசனங்கள் 20–28லுள்ள அவரது மரணத்தைப்பற்றிய அடையாளங்களையும் கவனிக்கவும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் இறப்பைக் குறிக்க, இந்த அடையாளங்கள் சிறந்த வழிகளாயிருக்கும் என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
அவரை நம்ப உங்களுக்கு உதவ கர்த்தர் கொடுத்திருக்கிற எந்த அடையாளங்களையாவது நீங்கள் நினைக்க முடியுமா? உதாரணமாக, இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு முன்பு தோன்றவிருக்கிற அடையாளங்களை தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருக்கின்றனர் (“Signs of the Times,” Guide to the Scriptures, scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்). நமது நாளில் இந்த எந்த அடையாளங்களும் நிறைவேறியிருக்கின்றனவா? இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துக்கு வழிநடத்துகிற பிற அடையாளங்கள் அதிகம் தனிப்பட்டவையாகவும் குறைவான தத்ரூபமாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் அவரது கரத்தை நீங்கள் பார்த்த விதங்களை சிந்திக்க ஒரு கணம் எடுத்துக் கொள்ளவும்.
ஏலமன் 16:13–23ல் அடையாளங்களைப்பற்றி என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது? இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஜனங்களின் மனோபாவத்தை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?
ஆல்மா 30:43–52; Ronald A. Rasband, “By Divine Design,” Ensign or Liahona, Nov. 2017, 55–57 ஐயும் பார்க்கவும்.
தீர்க்கதரிசியின் ஆலோசனையைப் பின்பற்றுதல் என்னைக் கர்த்தருக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது.
மூப்பர் நீல் எல். ஆண்டர்சென் போதித்தார்: “தேவனின் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நான் ஜெபத்துடன் படிக்கும்போது, அவரது உணர்த்தப்பட்ட போதனைகளுடன் கவனமாகவும் பொறுமையாகவும் ஆவிக்குரிய விதமாக என் வாஞ்சையை சீரமைக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் என் விசுவாசம் எப்போதும் அதிகரிப்பதை நான் கண்டிருக்கிறேன். நாம் அவரது ஆலோசனையை ஒதுக்கிவிட தேர்ந்தெடுத்தால், நாம் சிறப்பாக அறிந்திருப்பதாக தீர்மானித்தால், நமது விசுவாசம் பாடுபடுகிறது, நமது நித்திய முன்னோக்கு மேகமூட்டமாகிறது.” (“The Prophet of God,” Ensign or Liahona, May 2018, 26–27). ஏலமன் 16லிலுள்ள நேபியரின் வார்த்தைகளும் செயல்களும் மூப்பர் ஆண்டர்சென் போதித்ததை எவ்வாறு உறுதி செய்கின்றன? கர்த்தரின் தீர்க்கதரிசிகள் மற்றும் அவர்களது செய்திகள் குறித்து நீங்கள் என்ன தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தல்கள் செய்ய வேண்டும் என நீங்கள் உணர்கிறீர்கள்?
குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
ஏலமன் 13:3–4
ஏலமன் 13:3–4ல், கர்த்தரின் கட்டளைக்கு சாமுவேலின் பதிலைப்பற்றி உங்கள் குடும்பத்தினருக்கு என்ன உணர்த்துகிறது? இந்த வாரத்தில் உங்கள் குடும்ப படிப்பின்போது, “[அவர்களது] இருதயத்துக்குள் வருகிற” உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஊக்குவிக்கலாம்.
ஏலமன் 13:38
“அக்கிரமம் செய்வதால்” மகிழ்ச்சி அடையப்படலாம் என்ற கருத்து, நமது நாளில் பொதுவாக இருக்கிறது. சுவிசேஷத்தின்படி வாழுதல் எந்த வழிகளில் நமக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது?
ஏலமன் 15:3
தேவனின் திருத்தம் அவரது அன்பை நமக்கு எப்படி காட்டுகிறது? மேம்பட அவர்கள் என்ன செய்ய முடியும் என தாழ்மையுடன் கர்த்தரிடம் கேட்க குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.
ஏலமன் 15:5–8
இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள லாமானியர்களிடமிருந்து நாம் மனமாற்றத்தைப்பற்றி என்ன கற்கிறோம்? நாம் எவ்வாறு அவர்களது எடுத்துக்காட்டைப் பின்பற்றலாம்?
ஏலமன் 16:1–3
லாமானியனான சாமுவேலின் கதையை நடித்துக் காட்டுவதில் உங்கள் குடும்பம் மகிழுமா? விவரத்தை வாசித்த பிறகு, குடும்ப அங்கத்தினர்கள் ஒரு நாற்காலியில் நின்று சாமுவேலின் சில தீர்க்கதரிசனங்களை வாசிக்க முறை எடுக்கலாம், அப்போது குடும்ப அங்கத்தினர்களின் பிறர், அம்புகளை எய்வது அல்லது கற்களை வீசுவதுபோல பாவிக்கலாம். சாமுவேலும் நேபியர்களும் என்ன உணர்ந்திருக்கலாம் என குடும்பத்தினர் புரிந்துகொள்ள இது உதவலாம். கதையின் படங்களை வரைந்து இளம் பிள்ளைகள் மகிழலாம். நாம் எப்படி சாமுவேலைப் போலிருக்கலாம் மற்றும் நமக்கு பயங்கள் இருப்பினும் எவ்வாறு பிறருடன் சுவிசேஷத்தைப் பகிரலாம்?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.