என்னைப் பின்பற்றி வாருங்கள்
செப்டம்பர் 14– 20. 3 நேபி 8–11: ”எழுந்து என்னிடத்தில் வாருங்கள்”


“செப்டம்பர் 14–20. 3 நேபி 8–11: ‘எழுந்து என்னிடத்தில் வாருங்கள்,’“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“செப்டம்பர் 14–20. 3 நேபி 8-11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

இயேசு நேபியருக்கு தரிசனமாகுதல்

நானே உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்– ஜேம்ஸ் புல்மர்

செப்டம்பர் 14–20

3 நேபி 8–11

“எழுந்து என்னிடத்தில் வாருங்கள்”

3 நேபி 8–11ல், தேவனின் குரல் தங்களிடம் பேசியதை ஜனங்கள் கேட்டார்கள். நீங்கள் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, அவரது குரல் உங்களிடம் சொல்வதில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

“இதோ, உலகினுள் வருவதாக தீர்க்கதரிசிகள் சாட்சி பகர்ந்த இயேசு கிறிஸ்து நானே” 3 நேபி 11:10. இந்த வார்த்தைகளுடன், 600 வருடங்களுக்கு மேலான மார்மன் புஸ்தக தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி, உயிர்த்தெழுந்த இரட்சகர் தம்மையே அறிமுகம் செய்தார். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் எழுதினார், “அந்த தரிசனமும், பிரகடனமும், மார்மன் புஸ்தக சரித்திரம் முழுமையும் மகோன்னத தருணமான முக்கிய நேரத்தை அடக்கியது.” அந்த தெரிவிப்பும் அறிவிப்பும் ஒவ்வொரு நேபிய தீர்க்கதரிசிக்கும் அறிவித்து உணர்த்தியது. … ஒவ்வொருவரும் அவரைப்பற்றி பேசினார்கள், அவரது தரிசனத்துக்காக ஜெபித்தார்கள், ஆனால் அவர் உண்மையாகவே அங்கிருந்தார். நாட்களின் முக்கிய நாள்! ஒவ்வொரு இருண்ட இரவையும் காலை வெளிச்சமாக்குகிற தேவன் வந்து விட்டார் (Christ and the New Covenant [1997], 250–51).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்

3 நேபி 8–11

இயேசு கிறிஸ்துவே உலகத்தின் ஒளி.

இருளுக்கும் ஒளிக்கும் தொடர்புடைய, சரீர மற்றும் ஆவி பிரகாரமான தலைப்புக்கள் எல்லா இடங்களிலும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம் 3 நேபி 8–11. ஆவிக்குரிய இருள் மற்றும் ஒளியைப்பற்றி இந்த அதிகாரங்களில் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் இருளை எது கொண்டு வருகிறது? ஒளியை எது கொண்டு வருகிறது? “நானே உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன்,” என இரட்சகர் தன்னை அறிமுகம் செய்தது ஏன் என நினைக்கிறீர்கள்?(3 நேபி 9:18; 11:11). இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையின் ஒளியாக எப்படி இருக்கிறார்?

3 நேபி 8–10

நான் மனந்திரும்பினால் இரட்சகர் என்னைக் கூட்டிச் சேர்த்து, பாதுகாத்து, குணமாக்குவார்.

3 நேபி 8ல் விவரிக்கப்பட்டுள்ள அழிவையும் இருளையும் அனுபவித்த பிறகு ஜனங்கள் உணர்ந்ததை எப்படி கற்பனை செய்கிறீர்கள்? அதிகாரங்கள் 9 மற்றும் 10ல் ஒளி, இரக்கம், மற்றும் மீட்பைப்பற்றி இரட்சகரின் குரல் பேசியதைக் கேட்டபோது அவர்கள் என்ன உணர்ந்திருக்கலாம் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?

பயங்கர அழிவு ஜனங்களின் பாவங்களின் விளைவு என இரட்சகர் அறிவித்தாலும், அவரிடத்தில் திரும்ப வந்து மனந்திரும்புபவர்களை அவர் குணமாக்குவதாக வாக்குத்தத்தம் செய்தார்.( 3 நேபி 9:2, 13 பார்க்கவும்). மூப்பர் நீல் எல். ஆண்டர்சென் குறிப்பிட்டார்: “விட்டுவிடப்பட்ட பாவம் எவ்வளவு சுயநலமானதாக இருந்தாலும் மனந்திரும்பியவரிடம் இரட்சகரின் இரக்கம் மற்றும் அன்பின் அணைக்கும் கரங்களைப் பார்த்து நான் வியக்கிறேன். இரட்சகரால் நமது பாவங்களை மன்னிக்க இயலும் மற்றும் அதற்கு ஆர்வமாயிருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன்”(“Repent … That I May Heal You,” Ensign or Liahona, Nov. 2009, 40).

கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் ஆர்வத்தைப்பற்றிய ஆதாரத்துக்காக 3 நேபி 9–10ஐ ஆராயுங்கள். எடுத்துக்காட்டாக, இரட்சகரின் அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் உணர உதவுகிற 3 நேபி 9:13–22 மற்றும் 10:1–6ல் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? அவர் உங்களைக் “கூட்டிச் சேர்த்து” “போஷிப்பதை” உணர்ந்த போது ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி சிந்தியுங்கள்(3 நேபி 10:4பார்க்கவும்). ஒரு குறிப்பிதழில் இந்த அனுபவங்களை பதிவு செய்ய அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்வதை கருத்தில் கொள்ளவும்.

3 நேபி 11:1–8.

தேவனின் குரலைக் கேட்கவும் புரிந்து கொள்ளவும் நான் கற்றுக்கொள்ள முடியும்.

தேவன் உங்களுடன் தொடர்புகொள்ளும் செய்தியைப் புரிந்துகொள்ள நீங்கள் போராடுவதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை 3 நேபி 11:1–8லுள்ள ஜனங்களின் அனுபவம் தேவனின் குரலைக் கேட்பது மற்றும் புரிந்துகொள்வதன் சில கொள்கைகளை புரிய உங்களுக்கு உதவும். ஜனங்கள் கேட்ட தேவனின் குரலின் தன்மைகளையும் அதை சிறப்பாக புரிந்துகொள்ள அவர்கள் செய்தவற்றையும் நீங்கள் கவனிக்கலாம். தனிப்பட்ட வெளிப்படுத்தல் மூலம் உங்கள் வாழ்க்கையில் தேவனின் குரலை கேட்டு அடையாளம் காணும் உங்கள் முயற்சிகளுக்கு இந்த விவரம் எப்படி பொருந்தும்?

3 நேபி 11:8–17

அவரைப்பற்றிய தனிப்பட்ட சாட்சியைப் பெற இயேசு கிறிஸ்து என்னை அழைக்கிறார்.

இயேசு கிறிஸ்து பிரசன்னமானபோது, உதாரத்துவ ஸ்தலத்தில் ஏறத்தாழ 2,500 பேர் கூடியிருந்தார்கள்.(3 நேபி 17:25). இந்தப் பெரிய எண்ணிக்கையிருந்தும், அவரது கரங்களிலும் பாதங்களிலும் இருந்த ஆணித்தழும்புகளை உணர இரட்சகர் அவர்களை ஒவ்வொருவராக அழைத்தார் (3 நேபி 11:14–15). இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கட்ட தனிப்பட்ட அனுபவங்கள் பெறுவதன் முக்கியத்துவத்தைப்பற்றி இது உங்களுக்கு என்ன போதிக்கிறது? அவரிடத்தில் “எழுந்து வர” உங்களை என்ன விதங்களில் இரட்சகர் அழைக்கிறார்?( 3 நேபி 11:14). அவர் உங்கள் இரட்சகர் என சாட்சி பெற எந்த அனுபவங்கள் உங்களுக்கு உதவியிருக்கின்றன? பிறருக்கு ஊழியம் செய்ய, இந்த வசனங்களிலுள்ள இரட்சகரின் எடுத்துக்காட்டு உங்கள் முயற்சிகளை எப்படி உணர்த்த முடியும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

தன் காயங்களிலுள்ள தழும்புகளை நேபியருக்கு இயேசு காட்டுதல்

ஒவ்வொருவராக–வால்டர் ரானே

குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

3 நேபி 8–9

3 நேபி 8–9ல் விவரிக்கப்பட்ட அனுபவங்களை உங்கள் குடும்பத்தினர் அறிய உதவ, ஒரு இருட்டறையில் இந்த அதிகாரங்கள் உள்ள பகுதிகளை நீங்கள் சொல்லலாம் அல்லது ஒலிப்பதிவை கேட்கலாம். மூன்று நாட்கள் இருட்டில் இருந்தது எப்படி இருந்திருக்கும் என கலந்துரையாடவும். பின்னர், எப்படி இயேசு கிறிஸ்து “உலகத்தின் … ஒளியாக” இருக்கிறார் என்பதைப்பற்றி நீங்கள் பேசலாம்(3 நேபி 9:18).

3 நேபி 10:1–6.

இரட்சகரின் நடத்தையையும் ஊழியத்தையும் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ கோழி தன் குஞ்சுகளை கூட்டிச் சேர்ப்பதன் படம் ஆற்றல்மிக்க போதித்தலாக இருக்க முடியும். கோழியும் குஞ்சுகளும் படத்தை உங்கள் குடும்பம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இந்த வசனங்களை வாசிக்கலாம். ஒரு கோழி தன் குஞ்சுகளை ஏன் கூட்டிச் சேர்க்க வேண்டும்? அவருக்கு நெருக்கமாக நம்மைக் கூட்டிச் சேர்க்க இரட்சகர் ஏன் விரும்புகிறார்? அழைக்கப்பட்டபோது, கூடிவர குஞ்சு தேர்ந்தெடுக்காவிட்டால் என்ன நடக்கும்?

3 நேபி 11:1–7.

ஒருவேளை நீங்கள் இந்த சில வசனங்களை மெல்லிய “அமர்ந்த” சத்தத்தில் வாசிக்கலாம் (3 நேபி 11:3). பரலோகத்திலிருந்து வரும் குரலைப் புரிந்துகொள்ள ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

3 நேபி 11:21–38

உங்கள் குடும்பத்தில் யாராவது ஞானஸ்நானம் பெற ஆயத்தப்படுகிறார்களா? 3 நேபி 11:21–38 வாசித்தல், ஆயத்தப்பட அவர்களுக்கு உதவலாம். இந்த வசனங்களிலுள்ள இரட்சகரின் போதனைகளை சிந்தித்தல் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

3 நேபி 11:29–30

பிணக்கைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? நமது வீடுகளில் பிணக்கை நாம் எப்படி “தவிர்க்கலாம்”?(3 நேபி 11:30).

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்புக்காக ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உணர்வுகளைப் பதிவு செய்யவும். மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் சொன்னார், “கவனமாக பதிவுசெய்யப்பட்ட அறிவு தேவையான நேரத்தில் கிடைக்கும் அறிவு. … [ஆவிக்குரிய உணர்வுகளைப் பதிவு செய்தல்] நீங்கள் மேலும் ஒளி பெறும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது” (“Acquiring Spiritual Knowledge,” Ensign, Nov. 1993, 88).

நேபியருக்கு இயேசு தரிசனமாகுதல்

ஒரே மேய்ப்பன்–ஹோவர்ட் லயான்