கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
ஏப்ரல் 26–மே 2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45: “வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படும்”


“ஏப்ரல் 26–மே 2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45: ‘வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படும்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“ஏப்ரல் 26–மே 2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

ஆலயத்துக்கு வெளியே இளைஞர்

ஏப்ரல் 26–மே 2

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45

“வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படும்”

தலைவர் ரசல். எம். நெல்சன் போதித்தார்: “உங்கள் மனதில் வரும் எண்ணங்களை எழுதுங்கள். உங்கள் உணர்வுகளைப் பதிவுசெய்து, நீங்கள் செய்யத் தூண்டப்படும் செயல்களைப் பின்பற்றுங்கள்” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or Liahona, May 2018, 95).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நாம் ஆபத்தான காலங்களில் வாழ்கிறோம், அது தொந்தரவாக இருக்கக் கூடும். இயேசுவின் சீஷர்கள் கூட, நம் நாளில் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து அவர் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கேட்டபோது, “கலக்கமடைந்தார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:34). ஒஹாயோவின் கர்த்லாந்தில் உள்ள ஆரம்பகால பரிசுத்தவான்களும் அவர்கள் வாழ்ந்த அபாயகரமான காலங்களால் கலக்கமடைந்தனர். மற்றவற்றுடன், சுவிசேஷ செய்தியைக் குறைவாக மதிப்பிடும் “அநேக பொய்யான அறிக்கைகளும், அறிவீனமான கதைகளும் ” இருந்தன (கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 45, பாகத்தலைப்பு). ஆனால் கர்த்தருடைய பதில், அப்போதும் இப்போதும், “கலங்காதே” என்பதே (வசனம் 35). ஆம், துன்மார்க்கம் இருக்கிறது, ஆனால் தேவன் தம்முடைய வேலையை விரைவுபடுத்துகிறார் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. ஆம், இரண்டாவது வருகைக்கு முன்னதாகவே ஆபத்துகள் முன்னறிவிக்கப்பட்டுள்ளன, அவற்றைப்பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் இவை ஆபத்தைப்பற்றிய எச்சரிக்கைகள் மட்டுமல்ல; அவை தேவனின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன என்பதற்கான அறிகுறிகளுமாகும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45 இந்த அறிகுறிகளில் பலவற்றை விரிவாக விவரிக்கும் ஒரு வெளிப்பாடு, “பரிசுத்தவான்களின் சந்தோஷத்திற்காக”(பாகத்தலைப்பு) பெறப்பட்டது.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:1–5

இயேசு கிறிஸ்து பிதாவுடன் நமது பரிந்து பேசுபவராக இருக்கிறார்.

தேவனுக்கு முன்பாக நீங்கள் எப்போதாவது போதாதவர் அல்லது தகுதியற்றவர் என்று உணர்ந்திருக்கிறீர்களா? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:1–5ல் நீங்கள் உறுதியளிக்கப்படுவதைக் காணலாம். “பரிந்து பேசுதல்” மற்றும் “மன்றாடுதல்” போன்ற வார்த்தைகள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கின்றன? இரட்சகர் உங்களுக்காக எப்படி பரிந்து பேசுகிறார், அல்லது உங்களுக்காக மன்றாடுகிறார்? கிறிஸ்து உங்கள் பரிந்து பேசுபவர் என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு என்ன அர்த்தமுள்ளதாக இருக்கிறது?

தலைவர் ஜோசப் ஃபீல்டிங் ஸ்மித்தின் பின்வரும் வார்த்தைகள் இந்த வசனங்களை சிந்திக்க உங்களுக்கு உதவக்கூடும்: “இயேசு நமது பரிந்து பேசுபவர், அவருடைய ஊழியத்தின் மூலமாகவும், நம்மை ஒப்புரவாக்கும் பிரயாசங்களுக்கும், தேவனோடு உடன்பாட்டில் கொண்டுவருவதற்கும் உழைப்பதன் மூலம் நமது மத்தியஸ்தராக நமக்காக வேண்டிக்கொள்கிறார்”(in Conference Report, Oct. 1953, 58).

2 நேபி 2:8–9; மோசியா 15:7–9; மரோனி 7:27–28; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:5; 62:1 பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:9–10

சுவிசேஷம் தேசங்களுக்கு ஒரு தரமாகும்.

பழங்காலத்தில், ஒரு தரநிலை என்பது போருக்கு கொண்டு செல்லப்பட்ட, ஒரு பேனர் அல்லது கொடியாகும். இது வீரர்களை அணிவகுத்து ஒன்று திரட்டியது மற்றும் எங்கு கூட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய அவர்களுக்கு உதவியது. ஒரு தரநிலை என்பது மற்ற விஷயங்களோடு அளவிடக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு அல்லது விதி. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:9–10 நீங்கள் வாசிக்கும்போது, சுவிசேஷ உடன்படிக்கைகள் உங்களுக்கு எவ்வாறு ஒரு தரமாக இருந்தன என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்த சத்தியங்களைப்பற்றி நீங்கள் பெறாதிருந்தால் உங்கள் வாழ்க்கை என்ன விதத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும்?

ஏசாயா 5:26; 11:10–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:5–6ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:11–75

கர்த்தருடைய வாக்குறுதிகள் நிறைவேறும்.

இரட்சகரின் இரண்டாவது வருகைக்கு முன்னதாக போர், அக்கிரமம் மற்றும் பாழ்க்கடிப்பு வரும். கர்த்தர் சொன்னார், “நீங்கள் கலங்காதிருப்பீர்களாக, ஏனெனில் இந்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்போது உங்களோடு செய்யப்பட்ட வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படுமென்பதை நீங்கள் அறிவீர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:35).

நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:11–75 படிக்கும்போது, தீர்க்கதரிசனமாகக் கூறப்படும் கஷ்டமான நிகழ்வுகளில் மட்டுமல்லாமல், கர்த்தர் வாக்குறுதியளிக்கும் ஆசீர்வாதங்களிலும் கவனம் செலுத்துங்கள் (எடுத்துக்காட்டாக, வசனங்கள் 54– 59 இரட்சகரின் ஆயிரவருஷ அரசாட்சி பற்றி). பட்டியல்களை உருவாக்குவதன் மூலமோ அல்லது வசனங்களை அடையாளமிடுதல் அல்லது குறிப்பதன் மூலமோ நீங்கள் இதைச் செய்யலாம். கடைசி நாட்களைப்பற்றி “கலங்காதிருப்பீர்களாக” என்று உங்களுக்கு உதவுகிற எதைக் காண்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:31–32, 56–57.

“பரிசுத்த ஸ்தலங்களில் நில்லுங்கள்”, அசையாதீர்கள்.

இரட்சகரும் அவருடைய தீர்க்கதரிசிகளும் இரண்டாவது வருகையின் அறிகுறிகளைப்பற்றி நமக்குக் கற்பிப்பதற்கான ஒரு காரணம், நாம் ஆயத்தப்படுவதற்கு உதவுவதாகும். கர்த்தருடைய இரண்டாவது வருகைக்கு ஆயத்தமாவதைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45: 31–32, 56–57ல் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? மத்தேயு 25: 1-13 ல் காணப்படும் பத்து கன்னிகைகளின் உவமையை மறுபரிசீலனை செய்வது உதவியாக இருக்கும். இரட்சகர் இந்த உவமையில் உள்ள எண்ணெய்யை சத்தியத்துடனும் பரிசுத்த ஆவியுடனும் ஒப்பிட்டார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:57பார்க்கவும்). உவமையை இந்த விதமாக படிக்கும்போது என்ன உள்ளுணர்வைப் பெறுகிறீர்கள்?

பத்து கன்னிகைகள்

பத்து கன்னிகைகளின் உவமைகள்–டான் பர்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:11–15, 66–71

சீயோன் என்பது தேவனின் பரிசுத்தவான்களுக்கு பாதுகாப்பான இடமாகும்.

மார்மன் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, புதிய எருசலேம், சீயோனைக் கட்ட ஜோசப் ஸ்மித்தின் காலத்தில் இருந்த பரிசுத்தவான்கள் ஆர்வமாக இருந்தனர் (ஏத்தேர் 13:2–9) மற்றும் ஜோசப் ஸ்மித்தின் வேதாகமத்தின் உணர்த்தப்பட்ட திருத்தம் பார்க்கவும் (மோசே 7:62–64 பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:11–15, 66–71 லிருந்து ஏனோக்கின் நாளின் பண்டைய பட்டணம் மற்றும் பிற்காலப் பட்டணமான சீயோனைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

இன்று சீயோனை ஸ்தாபிப்பதற்கான கட்டளை, நாம் எங்கு வாழ்ந்தாலும் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதைக் குறிக்கிறது, தேவனின் பிள்ளைகள் அவருடைய “நித்திய உடன்படிக்கையின்” (வசனம் 9) பாதுகாப்பிற்காக எங்கு கூடிவந்தாலும். நீங்கள் இருக்கும் இடத்தில் சீயோனை கட்ட நீங்கள் என்ன செய்ய முடியும்?

Gospel Topics, “Zion,” topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:3–5.ஒரு வழக்கறிஞர் நமக்கு என்ன செய்வார்? “The Mediator” (ChurchofJesusChrist.org) காணொலியை நீங்கள் காணலாம், இரட்சகர் ஏன் நமது வழக்கறிஞராக அழைக்கப்படுகிறார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:9–10.சுவிசேஷத்துக்கான உங்கள் ஒப்புக்கொடுத்தலைக் குறிக்க உங்கள் குடும்பத்திற்கு “தரநிலை” அல்லது கொடி இருந்தால், அது எப்படி இருக்கும்? ஒரு குடும்பக் கொடியை செய்து, சுவிசேஷத் தரங்களைப் பின்பற்ற மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதைப்பற்றி கலந்துரையாடுவது வேடிக்கையாக இருக்கலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:32.நமது “பரிசுத்த ஸ்தலங்கள்” யாவை? “அசைக்கப்படமாட்டார்கள்” என்றால் என்ன அர்த்தம்? நமது வீட்டை ஒரு பரிசுத்த ஸ்தலமாக மாற்றுவது எப்படி?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:39–44.இரட்சகரின் இரண்டாவது வருகைக்காக காத்திருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வைப்பற்றி நீங்கள் நினைத்து, அந்த நிகழ்விற்காக நீங்கள் “காத்துக்கொண்டிருக்கும்” வழிகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நீங்கள் எதையாவது ஒன்றாக சுடலாம் மற்றும் அது சாப்பிட தயாராக இருப்பதற்கான அறிகுறிகளுக்காகக் காத்திருக்கலாம். இரட்சகரின் இரண்டாவது வருகைக்காக காத்திருக்க நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:55. 1 நேபி 22:26 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 20:1–3 ஆகியவற்றை வாசித்தல், ஆயிரம் வருஷத்தின்போது சாத்தான் எவ்வாறு கட்டப்படுவான் என்பதை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள உதவும். நம் வாழ்வில் சாத்தானை எவ்வாறு கட்டிப்போட முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “When He Comes Again,” Children’s Songbook, 82; “ உங்கள் வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள் ஐயும் பார்க்கவும்.”

தனிப்பட்ட தியானத்தை மேம்படுத்தல்

படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும். வசனங்களுக்குள் உள்ளுணர்வு பெற அடிக்குறிப்புகள், Topical Guide, Bible Dictionary, மேலும் Guide to the Scriptures பயன்படுத்தவும்.

கிறிஸ்து இறங்கி வருதல்

கிறிஸ்துவின் வருகை–ஜூபல் அவில்ஸ் சானஸ்