“உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்”,என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்” , என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்
சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள உங்கள் குடும்பத்தினருக்குதவ, வழக்கமான குடும்ப வேதப் படிப்பு ஒரு ஆற்றலுள்ள வழி, . ஒரு குடும்பமாக நீங்கள் எவ்வளவு படித்தீர்கள் எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பது, உங்கள் முயற்சிகளில் சீராக இருப்பதைப்போல முக்கியமானதல்ல. உங்கள் குடும்ப வாழ்க்கையில் வேதப் படிப்பை ஒரு முக்கியமான பகுதியாக நீங்கள் ஆக்கும்போது, ஒருவருக்கொருவரிடத்திலும், இயேசு கிறிஸ்துவண்டையும் நெருக்கமாக வரவும் அவருடைய வார்த்தையின் அஸ்திபாரத்தின்மேல் அவர்களுடைய சாட்சிகளைக் கட்டவும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள்.
பின்வரும் கேள்விகளைக் கருத்தில்கொள்ளவும்:
-
அவர்களாகவே வேதங்களைப் படிக்க உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு உங்களால் எவ்வாறு உதவமுடியும்?
-
அவர்கள் கற்றுக்கொண்டிருப்பவற்றை பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களை ஊக்குவிக்க உங்களால் என்ன செய்யமுடியும்?
-
அன்றாட கற்பிக்கும் தருணங்களில் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற கொள்கைகளை நீங்கள் எவ்வாறு வலியுறுத்தமுடியும்?
சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலுக்கு வீடுதான் சிறந்த இடமென்பதை நினைவு வைத்திருங்கள். சபை வகுப்பில் சாத்தியமில்லாத வழிகளில் வீட்டில் சுவிசேஷத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவும் போதிக்கவும் முடியும். வேதங்களிலிருந்து உங்கள் குடும்பம் கற்றுக்கொள்ள உதவ வழிகளைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது ஆக்கபூர்வமாயிருங்கள்.
நிகழ்ச்சி ஆலோசனைகள்
உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.
இசையைப் பயன்படுத்தவும்
வேதங்களில் போதிக்கப்பட்ட கொள்கைகளை வலுப்படுத்த பாடல்களைப் பாடவும். ஆலோசனையளிக்கப்பட்ட பாடல் அல்லது ஒவ்வொரு வார திட்டவரைவிலும் பட்டியலிடப்பட்டுள்ள பிள்ளைகளின் பாடல். பாடல் வரிகளிலுள்ள வார்த்தைகள் அல்லது வாக்கியங்களைப்பற்றி நீங்கள் கேள்வி கேட்கலாம். பாடுவதுடன், அந்தப் பாடல்களுக்கேற்ற செயல்களை உங்கள் குடும்பத்தினர் நடத்தலாம் அல்லது அவர்கள் பிற செயல்கள் செய்யும்போது பின்னணி இசையாக பாடல்களைக் கேட்கலாம்.
அர்த்தமுள்ள வசனங்களைப் பகிர்ந்துகொள்ளவும்
அவர்களுடைய தனிப்பட்ட படிப்பின்போது அர்த்தமுள்ளதாக அவர்கள் கண்டுபிடித்த வேத பாகங்களைப் பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு நேரம் ஒதுக்கவும்.
உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும்
நீங்கள் படிக்கிற வசனங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றை அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் தொகுக்கும்படி குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.
உங்கள் வாழ்க்கையில் வசனங்களைப் பிரயோகிக்கவும்
ஒரு வேத பாகத்தைப் படித்த பின்னர், அவர்களுடைய வாழ்க்கைக்குப் பொருந்துகிற வழிகளைப் பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களைக் கேட்கவும்.
ஒரு கேள்வியைக் கேட்கவும்
சுவிசேஷ கேள்வி ஒன்றைக் கேட்க குடும்ப அங்கத்தினர்களை அழைத்து, பின்னர் அந்த கேள்விக்கு பதிலளிக்க உதவுகிற வார்த்தைகளுக்காக தேடுவதில் நேரத்தை செலவழிக்கவும்.
ஒரு வேத வசனத்தை காட்சிப்படுத்தவும்.
அர்த்தமுள்ளதாக நீங்கள் காண்கிற ஒரு வசனத்தை தேர்ந்தெடுத்து, குடும்ப அங்கத்தினர்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் அதைக் காட்சியாக வைக்கவும். காட்சியாக வைக்க ஒரு வேத வசனத்தை தேர்ந்தெடுப்பதில் முறை எடுக்க பிற குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.
ஒரு வேதப் பட்டியலை உருவாக்கவும்
வரப்போகிற வாரத்தின்போது கலந்துரையாட நீங்கள் விரும்புகிற பல்வேறு வசனங்களை ஒரு குடும்பமாக தேர்ந்தெடுக்கவும்.
வேத வசனங்களை மனப்பாடம் செய்யவும்
உங்கள் குடும்பத்துக்கு அர்த்தமுள்ளதாயிருக்கிற ஒரு வேத பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதை தினமும் திருப்பி திருப்பி சொல்வதால், அல்லது மனப்பாட விளையாட்டை விளையாடுவதால் அதை மனப்பாடம் செய்ய குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.
பொருள்சார் பாடங்களைப் பகிர்ந்துகொள்ளவும்
ஒரு குடும்பமாக நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற அதிகாரங்களுக்கும் வசனங்களுக்கும் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிக்கவும். வேதங்களிலுள்ள போதனைகளுக்கு ஒவ்வொரு பொருளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிப் பேச குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.
ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்
குடும்பம் ஒன்றுசேர்ந்து படிக்கப்போகிற ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்பதில் குடும்ப அங்கத்தினர்கள் முறை எடுத்துக்கொள்ளட்டும். தலைப்பைப்பற்றி வேத பத்திகளைக் கண்டுபிடிக்க Topical Guide, the Bible Dictionary, or the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org)ஐ பயன்படுத்தவும்.
ஒரு படம் வரையவும்
ஒரு குடும்பமாக ஒரு சில வசனங்களை வாசித்து, பின்னர், நீங்கள் படித்ததற்கு சம்பந்தப்படுகிற ஒன்றை வரைய குடும்ப அங்கத்தினர்களுக்கு நேரத்தை அனுமதிக்கவும். ஒருவருக்கொருவரின் ஓவியங்களைப்பற்றி கலந்துரையாட நேரம் செலவழிக்கவும்.
ஒரு கதையை நடிக்கவும்
ஒரு கதையை வாசித்த பின்னர், அதை நடித்துக்காட்ட குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். அதன்பின்னர், தனிப்பட்டவர்களாகவும், குடும்பமாகவும் நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற பொருட்களுக்கு கதை எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி பேசவும்.
பிள்ளைகளுக்குப் போதித்தல்
உங்கள் குடும்பத்தில் இளம்பிள்ளைகள் இருந்தால், அவர்கள் கற்றுக்கொள்ள உதவ சில பயிற்சிகள் இங்கே இருக்கின்றன:
பாடவும்
துதிப்பாடல்கள் மற்றும் Children’s Songbookலிருந்து பாடல்கள் கோட்பாட்டை வல்லமையாக போதிக்கிறது. இந்த வளத்தின் ஒவ்வொரு திட்ட வரைவும் ஆலோசனையளிக்கப்பட்ட பாடலை உள்ளடக்கியிருக்கிறது. நீங்கள் போதிக்கிற சுவிசேஷக் கொள்கைகளுக்கு சம்பந்தப்பட்டிருக்கிற பாடல்களைக் கண்டுபிடிக்க பிள்ளைகள் பாடல் புத்தகத்தின் பின்னாலுள்ள தலைப்புகள் அட்டவணையையும் நீங்கள் பயன்படுத்தலாம். பாடல்களின் செய்திகளை தங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
ஒரு கதையை கேட்கவும் அல்லது நடிக்கவும்
வேதங்களிலிருந்தும், உங்கள் வாழ்க்கையிலிருந்தும், சபை வரலாற்றிலிருந்தும் அல்லது சபை பத்திரிக்கைகளிலிருந்தும் கதைகளை இளம் பிள்ளைகள் விரும்புவர். கதை சொல்வதில் அவர்களை ஈடுபடுத்த வழிகளைத் தேடவும். அவர்கள் படங்கள் அல்லது பொருட்களை தூக்கிப்பிடிக்கலாம், அவர்கள் கேட்பதை படமாக வரையலாம், கதையை நடிக்கலாம் அல்லது கதை சொல்லவும் உதவலாம். நீங்கள் பகிர்கிற கதைகளிலுள்ள சுவிசேஷ சத்தியங்களை அடையாளம் காண உங்கள் பிள்ளைகளுக்கு உதவவும்.
ஒரு வசனத்தை வாசிக்கவும்.
இளம் பிள்ளைகள் அதிகம் வாசிக்க முடியாமலிருக்கலாம், ஆனால் வேதங்களிலிருந்து கற்றுக்கொள்ள இப்போதும் நீங்கள் அவர்களை ஈடுபடுத்தலாம். ஒரு வசனம், முக்கிய சொற்றொடர் அல்லது வார்த்தையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதிருக்கலாம்.
படத்தைப் பார்க்கவும் அல்லது காணொலியைக் காணவும்.
நீங்கள் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் சுவிசேஷக் கொள்கைக்கு சம்பந்தப்பட்ட ஒரு படத்தைப்பற்றி அல்லது ஒரு காணொலியைப்பற்றி கேள்விகள் கேட்கவும். உதாரணமாக, “இப்படத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என நீங்கள் கேட்கலாம். இது உங்களை எவ்வாறு உணரச் செய்கிறது? சுவிசேஷ நூலகச் செயலி, Gospel Media Library at ChurchofJesusChrist.org, and children.ChurchofJesusChrist.org ஆகியவை படங்களையும் காணொலிகளையும் தேட சிறந்த இடங்கள்.
உருவாக்கவும்.
அவர்கள் கற்றுக்கொள்கிற கதை அல்லது கொள்கைகளுக்கு தொடர்புடைய ஏதாவதொன்றை பிள்ளைகள் கட்டலாம், வரையலாம் அல்லது வண்ணமிடலாம்.
பொருள்சார் பாடங்களில் பங்கேற்கவும்
புரிந்துகொள்ள கஷ்டமான ஒரு சுவிசேஷ கொள்கையை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவ ஒரு எளிய பொருள்சார் பாடம் உதவக்கூடும். பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் பிள்ளைகள் பங்கேற்க வழிகளைக் கண்டு பிடிக்கவும். ஒரு காட்சியைப் பார்ப்பதை விட ஒரு உரையாடல் அனுபவத்திலிருந்து அவர்கள் அதிகம் கற்றுக்கொள்வார்கள்.
நாடகம்
அவர்கள் நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்கிற சூழ்நிலையை பிள்ளைகள் நடித்துக் காட்டும்போது, ஒரு சுவிசேஷ கொள்கை அவர்களது வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகிறது என அவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
பயிற்சிகளை திரும்ப செய்யவும்
இளம் பிள்ளைகள் அவற்றைப் புரிந்துகொள்ள கருத்துக்களைப் பலமுறை கேட்க வேண்டியதிருக்கும். உதாரணமாக ஒரு வேதக் கதையை வெவ்வேறு வழிகளில் நீங்கள் பலமுறை பகிர்ந்து கொள்ளலாம், வேதங்களிலிருந்து வாசித்தல், உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லுதல், கதை சொல்வதில் உங்கள் பிள்ளைகள் உங்களுக்குதவ அனுமதித்தல், கதையை நடித்துக்காட்ட அவர்களை அழைத்தல் மற்றும் பல.
அவர்களுடைய தனிப்பட்ட முன்னேற்ற இலக்குகளுக்கு தொடர்புகளை ஏற்படுத்தவும்
தங்களுடைய ஆவிக்குரியவற்றிற்கு, சரீரத்திற்குரியவற்றுக்கு, அறிவுத்திறனுக்கு மற்றும் சமூக வளர்ச்சிக்கு இலக்குகளை ஏற்படுத்த, வாலிபர்களுக்கும் பிள்ளைகளுக்கும் குடும்ப வேதப் படிப்பு உணர்த்துதலை வழங்கலாம் (லூக்கா 2:52 பார்க்கவும்).
வாலிபருக்குப் போதித்தல்
உங்கள் குடும்பத்தில் இளைஞர்கள் இருந்தால், அவர்கள் கற்றுக்கொள்ள உதவ சில பயிற்சிகள் இங்கே இருக்கின்றன:
கற்பிக்க அவர்களை அழைக்கவும்
ஒன்றைப்பற்றி நாம் கேட்கும்போதைவிட, அதைக் கற்பிக்கும்போது நாம் அதிகமாய்க் கற்றுக்கொள்கிறோம். வேதங்களைப்பற்றி குடும்ப கலந்துரையாடலை நடத்த உங்கள் வாலிபருக்கு வாய்ப்புகளைக் கொடுக்கவும்.
இளம் வேதபாட வகுப்புக்கு தொடர்புகளை ஏற்படுத்தவும்
இந்த ஆண்டின் இளம் வேதபாட வகுப்பு மாணவர்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளுமைப் படித்துக்கொண்டிருக்கின்றனர். உங்கள் வாலிபர்கள் இளம் வேத பாட வகுப்பில் பங்கேற்றுக்கொண்டிருந்தால், அங்கே அவர்கள் கற்றுக்கொண்டிருப்பவற்றைப் பகிர்ந்துகொள்ள அவர்களை அழைக்கவும்.
வசனங்களுக்கு ஒப்பிடவும்
வேதங்களிலுள்ள கோட்பாடும் கொள்கைகளும் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு இணைக்கிறதெனப் பார்ப்பதில் சிலசமயங்களில் வாலிபர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம். வீட்டில், பள்ளிக்கூடத்தில், அல்லது அவர்களுடைய நண்பர்களுடன் அவர்கள் எதிர்கொள்கிற சூழ்நிலைகளுக்கு வேதங்களிலுள்ள கதைகளும் போதனைகளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறதென பார்க்க அவர்களுக்கு உதவவும்.
சிந்தித்தலை ஊக்குவிக்க கேள்விகள் கேட்கவும்
வேதங்கள் சொல்வதை வெறுமனே திருப்பிச் சொல்வதைவிட வேதங்களைப்பற்றி அவர்களுடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அவர்களை அனுமதிக்கிற கேள்விகளுக்கு அநேக வாலிபர்கள் நன்றாக பதிலளிக்கிறார்கள். உதாரணமாக, “இந்த வசனங்களில் உங்களுக்கு கர்த்தர் என்ன போதிக்கக்கூடுமென” நீங்கள் கேட்கலாம் அல்லது “1830ன் பரிசுத்தவான்களுக்கு இந்த வெளிப்படுத்தல் அர்த்தமுள்ளதாயிருந்திருக்குமென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்”?
அவர்களுடைய தனிப்பட்ட முன்னேற்ற இலக்குகளுக்கு தொடர்புகளை ஏற்படுத்தவும்
தங்களுடைய ஆவிக்குரிய, சரீர பிரகார, அறிவுத்திறனுக்கு, மற்றும் சமூக வளர்ச்சிக்கு இலக்குகளை ஏற்படுத்த, வாலிபர்களுக்கும் பிள்ளைகளுக்கும் குடும்ப வேதப் படிப்பு உணர்த்துதலை வழங்கலாம் (லூக்கா 2:52 பார்க்கவும்).
அவர்களுடைய கேள்விகளுக்கு திறந்த மனதோடிருங்கள்
அவன் அல்லது அவள் உண்மையாக ஆர்வமாயிருக்கிற ஒரு தலைப்பில் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளுதலை நாடவும் ஒரு வாலிபரிடமிருந்து வருகிற கேள்வி ஒரு அருமையான வாய்ப்பாயிருக்கிறது. கலந்துரையாடலின் தலைப்பிற்கு அவைகள் சம்பந்தப்படாமலிருந்தாலும் கேள்விகளுக்கு பயப்படாதிருங்கள் அல்லது அவைகளை தவிர்க்காதிருங்கள். எல்லா பதில்களும் உங்களிடம் இல்லாதிருந்தால் பரவாயில்லை. ஒன்றுசேர்ந்து பதில்களைத் தேடுவதற்கு வீடு ஒரு சரியான இடம்.
அவர்களுடைய உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கவும்
குடும்ப வேதப் படிப்பிற்கு பங்களிக்க வாலிபர்களுக்கு தனித்துவமான எண்ணங்களும் உள்ளுணர்வுகளும் உள்ளன. வேதங்களைப்பற்றி ஆவியானவர் போதிப்பதில் நீங்கள் ஆர்வமாயிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். தங்களுடைய தனிப்பட்ட படிப்பிலிருந்து உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் அவர்களைக் கேட்கலாம்.
வளைந்து கொடுக்கவும்
குடும்ப வேதப் படிப்பில் பங்கேற்க விருப்பமில்லாத ஒரு வாலிபர் உங்களிடமிருந்தால் அவன் அல்லது அவளுடன் தொடர்புகொள்ள பிற வழிகளைத் தேடவும். உதாரணமாக, உங்களுடைய உரையாடல்களில் சுவிசேஷத்தை இயல்பாக உங்களால் கொண்டுவரமுடியுமா அல்லது பிரசங்கமாகவோ அல்லது பாரமாகவோ தோன்றாத வகையில் அர்த்தமுள்ள ஒரு வேத வசனத்தைப் பகிர்ந்து கொள்ளவும். வேதப் படிப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. நேருக்கு நேர் வேதங்களைப் படிக்க சில பிள்ளைகள் சிறப்பாக பதிலளிக்கலாம். ஜெபத்திலிருந்து, ஆவியானவரின் உணர்த்துதல்களைப் பின்பற்றவும்.