கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
நவம்பர் 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135–136: “அவருடைய ஊழியத்தையும் அவருடைய பணியையும் அவருடைய சொந்த இரத்தத்தால் முத்திரித்தார்”


“நவம்பர் 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135–136: ‘அவருடைய ஊழியத்தையும் அவருடைய பணியையும் அவருடைய சொந்த இரத்தத்தால் முத்திரித்தார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“நவம்பர் 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135–136,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

கார்த்தேஜ் சிறைச்சாலையின் வெளிப்புறம்

கார்த்தேஜ் சிறைச்சாலை

நவம்பர் 22–28

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135–136

“அவருடைய ஊழியத்தையும் அவருடைய பணியையும் அவருடைய சொந்த இரத்தத்தால் முத்திரித்தார்”

நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135–36 வாசிக்கும்போது, நீங்கள் படித்ததைப் பயன்படுத்த உங்களுக்கு உதவ கர்த்தர் உணர்த்தலாம். அது நிகழும்போது, அவர் உங்களுக்குப் போதிப்பதை எழுதுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஜூன் 27, 1844 பிற்பகலில், ஜோசப் மற்றும் ஹைரம் ஸ்மித் ஆகியோரை ஜான் டெய்லர் மற்றும் வில்லார்ட் ரிச்சர்ட்ஸ் ஆகியோருடன் மீண்டும் சிறையில் அடைத்தனர். அவர்கள் எந்தவொரு குற்றத்திலும் நிரபராதிகள் என்று அவர்கள் நம்பினர், ஆனால் அவர்கள் நாவூவில் பரிசுத்தவான்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் நம்பிக்கையில் கைது செய்யப்பட சரணடைந்தனர். சபையின் எதிரிகள் தீர்க்கதரிசி ஜோசப்பை சிறையில் அடைத்தது, இது முதல் முறை அல்ல, ஆனால் இந்த முறை அவர் உயிருடன் திரும்ப மாட்டார் என்று அவருக்குத் தெரிந்ததாகத் தோன்றுகிறது. அவரும் அவரது நண்பர்களும் மார்மன் புஸ்தகத்திலிருந்து வாசித்து, பாடல்களைப் பாடி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூற முயன்றனர். பின்னர் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்பட்டன, சில நிமிடங்களில் ஜோசப் ஸ்மித் மற்றும் அவரது சகோதரர் ஹைரம் ஆகியோரின் உலக வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இருப்பினும் அவர்கள் ஏற்றுக்கொண்ட தெய்வீக நோக்கத்தின் முடிவு அது அல்ல. அது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதன் முடிவு அல்ல. சபையை முன்னோக்கி வழிநடத்த செய்யவேண்டிய அதிக வேலை மற்றும் அதிக வெளிப்படுத்தல் இருந்தது. தீர்க்கதரிசியைக் கொல்வது தேவனின் பணியைக் கொல்ல முடியவில்லை.

Saints, 1:521-52 பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135; 136:37–39

ஜோசப் மற்றும் ஹைரம் ஸ்மித் தங்களின் சாட்சியங்களை தங்கள் இரத்தத்தால் முத்திரித்தனர்.

ஜோசப் மற்றும் ஹைரம் ஸ்மித் கொல்லப்பட்டபோது நீங்கள் நாவூவில் வாழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் (Saints, 1:554–55 பார்க்கவும்). இந்த துயரமான சம்பவத்தை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்ள முயற்சித்திருப்பீர்கள்? முதலில் இரத்த சாட்சி மரணத்துக்குப்பின்பு மூன்று மாதங்களுக்குள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135, முதலாவதாக வெளியிடப்பட்டது, உதவியிருக்கலாம். உங்களுக்கு புரிதலையும் உறுதியையும் அளித்த சொற்களையும் சொற்றொடர்களையும் நீங்கள் குறிக்கலாம். “தேவன் ஏன் தனது தீர்க்கதரிசி கொல்லப்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கேட்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

Doctrine and Covenants 5:21–22; 6:29–30; “Remembering the Martyrdom,” Revelations in Context, 299–306; Teachings of Presidents of the Church: Joseph Smith, 522–23, 529–40; M.Russell Ballard, “Shall We Not Go On in So Great a Cause? ஐயும் பார்க்கவும்” Ensign அல்லது Liahona, May 2020, 8–11.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:3

இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எவரையும் விட ஜோசப் ஸ்மித் நம்முடைய இரட்சிப்புக்காக அதிகம் செய்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் சபையின் உறுப்பினராக உங்களுக்கு வந்த ஆசீர்வாதங்களைப்பற்றி சிந்தியுங்கள். அவற்றில் எத்தனை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் நிறைவேற்றிய பணியின் பலன்கள்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:3 முதல் தரிசனத்தைத் தொடர்ந்து 24 ஆண்டுகளில் ஜோசப் ஸ்மித் சாதித்த சில பெரிய விஷயங்களை குறிப்பிடுகிறது. இவை உங்களையும், பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனுமான உங்கள் உறவையும் எவ்வாறு பாதித்திருக்கின்றன? தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்வதைக் கவனியுங்கள். உங்கள் சாட்சியத்தை யார் கேட்க வேண்டும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136

வாழ்க்கையில் என் “பயணங்களுக்கு” கர்த்தர் எனக்கு அறிவுரை கூறுகிறார்.

நாவூவிலிருந்து விரட்டப்பட்ட பின்னர், பரிசுத்தவான்கள் சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு ஒரு நீண்ட பயணத்தை எதிர்கொண்டனர், முதல் சில நூறு மைல்கள் மெதுவாகவும் பரிதாபமாகவும் இருந்தன. இப்போது பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் தலைவராக சபையை வழிநடத்திய ப்ரிகாம் யங், நடைபயணத்தின் எஞ்சிய பகுதிகளை பரிசுத்தவான்கள் எவ்வாறு தாங்குவார்கள் என்று கவலைப்பட்டார். அவர் வின்டர் குவாட்டர்ஸ் என்று ஒரு தற்காலிக குடியிருப்பை அமைத்து வழிகாட்டுதலுக்காக வேண்டினார். அதற்கு பதிலாக கர்த்தர் அவருக்கு ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார், அது இப்போது பாகம் 136 ஆகும். மற்றவற்றுடன், இந்த வெளிப்பாடு பரிசுத்தவான்களுக்கு “பயணத்தில் அவர்களின் நடத்தை அவர்களின் இலக்கைப் போலவே முக்கியமானது” என்பதையும் “மேற்கு நோக்கி இடம்பெயர்வதை ஒரு துரதிர்ஷ்டவசமான தேவையிலிருந்து ஒரு முக்கியமான பகிரப்பட்ட ஆவிக்குரிய அனுபவமாக மாற்ற உதவியது” என்பதையும் நினைவூட்டியது (“This Shall Be Our Covenant,” Revelations in Context,308).

நீங்கள் பாகம் 136 வாசிக்கும்போது இந்த சூழலை மனதில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான சோதனையை “ஒரு முக்கியமான… ஆவிக்குரிய அனுபவமாக” மாற்ற உதவும் எந்த ஆலோசனையை நீங்கள் காணலாம்? ஆரம்பகால பரிசுத்தவான்கள் மேற்கு நோக்கி கடினமான நடைபயணத்திற்கு உதவியது போல, உங்கள் சொந்த வாழ்க்கையில் கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்ற ஆலோசனை எவ்வாறு உதவும் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம்.

This Shall Be Our Covenant,” Revelations in Context, 307–14; Church History Topics, “Succession of Church Leadership,” ChurchofJesusChrist.org/study/history/topics ஐயும் பார்க்கவும்.

வின்டர் குவாட்டர்ஸ்

வின்டர் குவாட்டர்ஸ்–க்ரெக் கே. ஆல்சன்

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:1,3.ஜோசப் ஸ்மித், “அவருடைய ஊழியத்தையும் அவருடைய பணியையும் அவருடைய சொந்த இரத்தத்தால் முத்திரித்தார்,” என்பதை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள உதவ, உங்கள் குடும்பத்தினர் “Testimony of the Book of Mormon” (ChurchofJesusChrist.org காணொளியைப் பார்க்கலாம்; Jeffrey R. Holland, “Safety for the Soul,” Ensign or Liahona, Nov. 2009, 88–90)ஐயும் பார்க்கவும். இந்த வசனங்களில் உள்ள எது நம்மைக் கவர்கிறது? அவர்களுக்காக நம் உயிரைக் கொடுக்கும்படி கேட்கப்படாவிட்டாலும், நம்முடைய சாட்சியங்களுக்கு நாம் எவ்வாறு அதிக விசுவாசமாக இருக்க முடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:3.ஜோசப் ஸ்மித், இயேசு கிறிஸ்துவைத் தவிர, இந்த உலகத்தில் வாழ்ந்த எந்த மனுஷனையும் விட, அதில் உள்ள மனுஷர்களின் இரட்சிப்புக்காக, செய்தார், எனும் வாசகத்தின் அர்த்தம் என்ன என கலந்துரையாட, இவ்வாண்டில் ஜோசப் ஸ்மித்தைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் கற்றதை பரிசீலிப்பதைக் கருத்தில் கொள்ளவும். அவர்கள் கற்றுக்கொண்டவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும், பிடித்த கதைகள் அல்லது போதனைகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களை அழைக்கவும் இந்த ஆதாரத்திலிருந்து படங்களை நீங்கள் பயன்படுத்தலாம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்காகவும், அவர் மூலமாக கர்த்தர் நிறைவேற்றிய காரியங்களுக்காகவும் நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? “Joseph Smith: The Prophet of the Restoration” (ChurchofJesusChrist.org) காணொளியையும் நீங்கள் பார்க்கலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136.பாகம்136ஐ, கர்த்தர் வெளிப்படுத்தியபோது, பிரிகாம் யங் வழிகாட்டுதலின் கீழ் பரிசுத்தவான்கள் பயணம் செய்ய கடினமான நீண்ட பயணம் அவர்களுக்கு இருந்தது. (அத்தியாயம் 58,60, மற்றும்62,கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகளில், 206–8, 211–16, 222–24) பார்க்கவும். பாகம் 136 ஐ ஒன்றாக வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டிய கடினமான விஷயங்களைப்பற்றி சிந்தியுங்கள். கர்த்தருடைய உதவியையும் வல்லமையையும் அணுக உதவும் இந்த வெளிப்பாட்டில் நாம் என்ன ஆலோசனையைக் காண்கிறோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136:4.“கர்த்தரின் எல்லா நியமங்களின்படியும் நாம் நடப்போம்” என்பதற்கு அர்த்தம் என்ன? நாம் பெற்ற நியமங்கள் நம் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Praise to the Man,” Hymns, no.27.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

தேவனுடைய அன்பைக் கண்டடையுங்கள். தலைவர் எம்.ரசல் பாலர்ட் போதித்தார்,“சுவிசேஷம் தேவனிடத்தில் அன்பு மற்றும் ஒருவருக்கொருவரில் அன்பு என்ற அன்பின் சுவிசேஷமாயிருக்கிறது (“God’s Love for His Children,” Ensign, May 1988,59, 59). வேதங்களை நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் அன்பின் ஆதாரங்களைக் காட்டுகிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் குறித்துக்கொள்ள அல்லது அடையாளப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.

கார்த்தேஜ் சிறைச்சாலையில் திரள் கூட்டத்தினர் ஜோசப் ஸ்மித்தையும் பிறரையும் தாக்குதல்

எவனும் இதைவிட அதிக அன்பு கொண்டிருக்கவில்லை–காஸே சைல்ட்ஸ்