கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
நவம்பர் 29–டிசம்பர் 5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138: “மரித்தோரின் மீட்புக்கான தரிசனம்”


“நவம்பர் 29–டிசம்பர் 5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138: ‘மரித்தோரின் மீட்புக்கான தரிசனம்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“நவம்பர் 29–டிசம்பர் 5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
ஆவி உலகத்தில் ஜனங்கள்

ஜோசப் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரனை சிலஸ்டியல் ராஜ்யத்தில் பார்த்தல். சிலஸ்டியல் ராஜ்யத்தைப்பற்றிய ஜோசப் ஸ்மித்தின் தரிசனம்–ராபர்ட் டி. பாரட்.

நவம்பர் 29–டிசம்பர் 5.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137–138

“மரித்தோரின் மீட்புக்கான தரிசனம்”

தலைவர் எம். ரசல் பல்லார்ட் போதித்தார்: [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138] முழுவதும் சிந்தித்து, வாசிக்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, தேவனின் அன்பையும் அவருடைய பிள்ளைகளுக்கான இரட்சிப்பு மற்றும் மகிழ்ச்சியின் திட்டத்தையும் முழுமையாக புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” (“The Vision of the Redemption of the Dead,” Ensign or Liahona, Nov. 2018,73).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137 மற்றும் 138 ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட வெளிப்பாடுகள் 80 க்கும் மேற்பட்ட வருடங்கள் மற்றும் 1,500 மைல்களால் பிரிக்கப்பட்டுள்ளன. பாகம் 137 கட்டி முடிக்கப்படாத கர்த்லாந்து ஆலயத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் 1836ல் பெறப்பட்டது, பாகம் 138 ஜோசப் எஃப். ஸ்மித், சபையின் ஆறாவது தலைவரால் 1918ல் பெறப்பட்டது. ஆனால் கோட்பாட்டு ரீதியாக, இந்த இரண்டு தரிசனங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. அவை இரண்டும் அடுத்த வாழ்க்கையில் தேவனின் பிள்ளைகளின் இலக்கைப்பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன. அவற்றைப் பெற்ற தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை அனுபவங்களை நாம் கருத்தில் கொள்ளும்போது இரண்டும் கூடுதல் ஆழமான அர்த்தம் பெறுகின்றன.

ஞானஸ்நானம் கொடுப்பதற்கான அதிகாரம் மறுஸ்தாபிதம் செய்யப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மரித்த அவரது அன்பு சகோதரர் ஆல்வினின் நித்திய இலக்கைப் புரிந்துகொள்ள ஜோசப் ஸ்மித்தின் தரிசனம் அவருக்கு உதவியது. ஆல்வினின் நித்திய இரட்சிப்பைப்பற்றிய கேள்விகள் ஜோசப்பிடம் அப்போதிலிருந்து இருந்துகொண்டே இருந்தன. ஜோசப் எப். ஸ்மித்தின் தரிசனம் ஆவி உலகத்தைப்பற்றிய மகிமையான சத்தியங்களை வெளிப்படுத்தியது, பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் மரணங்களால் வருத்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக ஒரு ஆறுதலான வெளிப்பாடு. ஜோசப் எப். ஸ்மித் தனது தந்தை ஹைரம் ஸ்மித்தை 5 வயதில் மற்றும் அவரது தாயார் மேரி பீல்டிங் ஸ்மித்தை 13 வயதில் இழந்தார். 1918 ல் அவரது தரிசன நேரத்தில், 13 குழந்தைகள் மரித்த சோகத்திலிருந்தார்.

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப்பற்றி ஜனங்களிடம் இருந்த பல கேள்விகள் இந்த வெளிப்பாடுகளில் பதிலளிக்கப்படுகின்றன. பாகம் 137 இதுபோன்ற கேள்விகளுக்கு சில ஆரம்ப தெளிவை அளிக்கிறது, மேலும் பாகம் 138 திரைகளை இன்னும் விரிவாக திறக்கிறது. ஒன்றாக, அவை “பிதாவும் குமாரனும் வெளிப்படுத்திய பெரிய மற்றும் அற்புதமான அன்பு” குறித்து சாட்சியமளிக்கின்றன.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:3)

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137

ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் சிலஸ்டியல் மகிமையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

1836 ம் ஆண்டில் கிறிஸ்தவர்களிடையே இருந்த பொதுவான புரிதல் என்னவென்றால், ஜோசப் ஸ்மித்தின் சகோதரர் ஆல்வின் போல ஒரு நபர் ஞானஸ்நானம் பெறாமல் மரித்துவிட்டால், அந்த நபர் பரலோகத்திற்கு செல்ல முடியாது. ஆயினும், சிலஸ்டியல் ராஜ்யத்தின் தரிசனத்தில் ஆல்வினை ஜோசப் பார்த்தார். நீங்கள் பாகம் 137வாசிக்கும்போது, பரலோக பிதா, அவருடைய இரட்சிப்பின் திட்டம் மற்றும் சிலஸ்டியல் ராஜ்யத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

Saints, 1:232–35 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:1–11, 25–30

வேதங்களைப் படிப்பதும் சிந்தித்துப் பார்ப்பதும் வெளிப்பாட்டைப் பெற என்னை ஆயத்தப்படுத்துகிறது.

சில சமயங்களில் நாம் அதை நாடாவிட்டாலும் வெளிப்படுத்தல் வரும். ஆனால் பெரும்பாலும், நாம் கருத்தாய் தேடி, அதற்காக ஆயத்தமாகும்போது அது வருகிறது. நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138: 1–11, 25–30 வாசிக்கும்போது, தலைவர் ஜோசப் எஃப். ஸ்மித், மீட்பரின் மீட்பின் ஊழியத்தை நன்கு புரிந்துகொள்ள “[அவரது] புரிதலின் கண்கள் திறக்கப்பட்டபோது” என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கவனியுங்கள். தலைவர் ஸ்மித்தின் உதாரணத்தை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, “வேதவசனங்களைப்பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும்” மேலும் “[இரட்சகரின்] மாபெரும் பாவநிவாரண பலியைப்பற்றி சிந்திப்பதற்கும்” அனுமதிக்க உங்கள் வேதப் படிப்பில் நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்யலாம்?( வசனங்கள் 1–2).

The Vision of the Redemption of the Dead” (Ensign or Liahona, Nov. 2018, 71–74), பற்றி அவரது செய்தியில், தலைவர் எம். ரசல் பல்லார்ட் இந்த வெளிப்பாட்டைப் பெற தலைவர் ஸ்மித் ஆயத்தப்படுத்தப்பட்ட பிற வழிகளை சொன்னார். எதிர்காலத்தில் நீங்கள் அனுபவிக்கும் அல்லது அனுபவிக்கப்போகும் அனுபவங்களுக்கு நீங்கள் எவ்வாறு ஆயத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

படம்
ஜோசப் எப். ஸ்மித்தின் ஓவியம்

ஜோசப் எப். ஸ்மித்–ஆல்பர்ட் ஈ. சால்ஸ்ப்ரன்னர்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:25–60

இரட்சிப்பின் பணி திரையின் இருபுறமும் நடந்து கொண்டிருக்கிறது.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “உலகத்திற்கான நமது செய்தி எளிமையானது மற்றும் நேர்மையானது: திரையின் இருபுறமும் உள்ள தேவனின் பிள்ளைகள் அனைவரையும் தங்கள் இரட்சகரிடம் வரும்படி அழைக்கிறோம், பரிசுத்த ஆலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், நீடித்த மகிழ்ச்சியைப் பெறுங்கள், நித்திய ஜீவனுக்கு தகுதி பெறுங்கள்” (“Let Us All Press On,” Ensign or Liahona, May 2018, 118–19). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:25–60 வாசிக்கும்போது இந்த வாசகத்தை சிந்தித்துப் பாருங்கள். இந்த கேள்விகளையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

  • ஆவி உலகில் இரட்சிப்பின் பணி எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இந்த பணி நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வது ஏன் முக்கியம்? இரட்சகரின் பாவநிவர்த்தியில், உங்களுடைய விசுவாசத்தை எவ்வாறு இந்த வசனங்கள் பெலப்படுத்துகின்றன?

  • ஆவி உலகில் இரட்சிப்பின் பணியில் பங்கேற்பவர்களைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன? இரட்சிப்பின் பணி திரையின் இருபுறமும் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

Dallin H. Oaks, “Trust in the Lord,” Ensign or Liahona, Nov. 2019, 26–29; “Susa Young Gates and the Vision of the Redemption of the Dead,” Revelations in Context, 315–22ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:1–5.இந்த வசனங்களின் அடிப்படையில் சிலஸ்டியல் ராஜ்யம் எப்படி இருக்கும் என்று அவர்கள் நினைப்பதை வரைய உங்கள் குடும்பத்தினரை அழைக்கவும். அங்கு வாழ்வதை எதிர்பார்க்க உங்களுக்குதவும் எதை இந்த வசனங்களில் நீங்கள் காண்கிறீர்கள்? பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் சிலஸ்டியல் ராஜ்யத்தில் வாழ ஆயத்தப்பட இப்போது நாம் என்ன செய்கிறோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:5–10.ஜோசப் ஸ்மித் தனது குடும்ப உறுப்பினர்களில் பலரை சிலஸ்டியல் ராஜ்யத்தில் ஒன்றாகக் காண்பதன் அர்த்தம் என்ன என்பதை அறிய, உங்கள் குடும்பத்தினர் இந்த காணொளி பார்க்கலாம் “Ministry of Joseph Smith: Temples” (ChurchofJesusChrist.org). ஞானஸ்நானம் பெற வாய்ப்பில்லாமல் மரித்த உங்களுக்குத் தெரிந்த ஒருவரைப்பற்றியும் நீங்கள் பேசலாம். அந்த நபரைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:5 நமக்கு என்ன போதிக்கிறது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:12–24.ஆவி உலகில் இரட்சகர் சந்தித்த ஜனங்களைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138: 12–24 என்ன போதிக்கிறது? அவர்கள் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்? அவர்களுடைய எடுத்துக்காட்டிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:38–55.இந்த வசனங்கள் தலைவர் ஜோசப் எஃப். ஸ்மித், ஆவி உலகில் பார்த்த மற்றும் அவர்களைப்பற்றிய சுருக்கமான விவரங்களை விவரிக்கின்றன. ஆவி உலகில் இருக்கும் உங்கள் முன்னோர்களின் பட்டியலையும், அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய விவரங்களையும் உங்கள் குடும்பத்தினர் உருவாக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Search, Ponder, and Pray,” Children’s Songbook,109.

நமது கற்றுக்கொள்ளுதலை மேம்படுத்துதல்

வசனங்களைப்பற்றி சிந்தித்தல். தலைவர் டேவிட் ஓ. மெக்கே தியானத்தை “கர்த்தரின் பிரசன்னத்தில் நாம் கடந்து செல்லும் மிகவும் பரிசுத்தமான கதவுகளில் ஒன்று” என்று அழைத்தார் (Teachings of Presidents of the Church: David O. McKay [2003],32).

படம்
ஆவி உலகில் இயேசு கிறிஸ்து

ஆவி உலகில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க இயேசு கிறிஸ்து நீதியுள்ள ஆவிகளுக்கு ஆணையிட்டார். ஆணையிடப்பட்டோர்–ஹரோல்ட் ஐ. ஹாப்கின்சன்

அச்சிடவும்