கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
டிசம்பர் 20–26. கிறிஸ்துமஸ்: தேவனின் தெய்வீக குமாரனாகிய இணையற்ற பரிசு


“டிசம்பர் 20–26. கிறிஸ்துமஸ்: தேவனின் தெய்வீக குமாரனாகிய இணையற்ற பரிசு,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021 2020

“டிசம்பர் 20–26. கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

மரியாள் மற்றும் குழந்தை இயேசுவின் கலைப்படைப்பு

தாமிரம் மற்றும் அம்பரில் கிறிஸ்து பிறப்பு காட்சி –ஜே கிர்க் ரிச்சர்ட்ஸ்

டிசம்பர் 20–26

கிறிஸ்துமஸ்

தேவனின் தெய்வீக குமாரனாகிய இணையற்ற பரிசு

இந்த கிறிஸ்துமஸில் இரட்சகரைப்பற்றி உங்கள் எண்ணங்களை மையப்படுத்த ஒரு வழி “ ஜீவிக்கும் கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சியம் ” படிப்பதாகும். இந்த தீர்க்கதரிசன சாட்சியத்தை உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப சுவிசேஷ படிப்பின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான வழிகளை இந்த குறிப்பு அறிவுறுத்துகிறது.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

1838 ஆம் ஆண்டில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார், “நமது மதத்தின் அடிப்படைக் கொள்கைகள், இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார், பரலோகத்திற்கு ஏறினார் என்பதற்கான அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியம்; நமது மதத்தைப்பற்றிய மற்ற எல்லா விஷயங்களும் அதனுடன் இணைப்புகள் மட்டுமே”(Teachings of Presidents of the Church: Joseph Smith,49). பல வருடங்களுக்குப் பிறகு, தலைவர் ரசல் எம். நெல்சன் குறிப்பிட்டார், “தீர்க்கதரிசியின் இந்த அறிக்கையே 15 தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களுக்கு கர்த்தரின் பிறப்பின் 2,000 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் தங்கள் சாட்சியங்களை வெளியிடுவதற்கும் கையொப்பமிடுவதற்கும் ஊக்கத்தை அளித்தது. அந்த வரலாற்று சிறப்புடைய சாட்சியத்தின் தலைப்பு ‘ ஜீவிக்கும் கிறிஸ்து ’. பல உறுப்பினர்கள் அதன் சத்தியங்களை மனப்பாடம் செய்துள்ளனர். மற்றவர்கள் அது இருப்பதைக் கூட அறிந்திருக்கவில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி மேலும் அறிய முற்படுகையில், நான் இதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், ‘The Living Christ’” (“Drawing the Power of Jesus Christ into Our Lives,” Ensign or Liahona, May 2017,40).

பிற்காலப் பரிசுத்தவான்களாகிய நாம் தற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் தொடர்ந்து வெளிப்பாட்டின் ஆசீர்வாதத்தில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுடைய உணர்த்துகிற ஆலோசனை, எச்சரிக்கை மற்றும் ஊக்கம் ஆகியவற்றிற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துமஸ் காலத்திலும் ஆண்டு முழுவதும் இயேசு கிறிஸ்துபற்றிய வல்லமை வாய்ந்த சாட்சியங்களால் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இவை திறமையான எழுத்தாளர்கள் அல்லது செய்தியாளர்கள் அல்லது வேத நிபுணர்களின் உள்ளுணர்வைக் காட்டிலும் அதிகம். அவை தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட, அழைக்கப்பட்ட மற்றும் “உலகெங்கிலும் கிறிஸ்துவின் நாமத்தின் விசேஷமாக” அங்கீகரிக்கப்பட்ட சாட்சிகளின் வார்த்தைகள்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:23).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

“வேறு யாருக்கும் இவ்வளவு ஆழமான செல்வாக்கு இருந்ததில்லை.”

ஜீவிக்கும் கிறிஸ்து ” முதல் பத்தியுடன் லூக்கா 2: 10–11 வாசிக்கும்போது உங்களுக்கு என்ன எண்ணங்கள் வருகின்றன? “பூமியில் வாழ்ந்த மற்றும் இன்னும் வாழும் அனைவர் மீதும் [இயேசு கிறிஸ்துவைப் போல] வேறு யாரும் செல்வாக்கை ஏற்படுத்தவில்லை” என்ற கூற்றுக்கு ஆதரவாக நீங்கள் என்ன கூறுவீர்கள்? இரட்சகரின் ஆழ்ந்த செல்வாக்கை விவரிக்கும் “ ஜீவிக்கும் கிறிஸ்துவில்” உள்ள சத்தியங்களைத் தேடுங்கள். அவர் உங்களில் எவ்வாறு செல்வாக்கு பெற்று உங்களுக்கு “மிகுந்த மகிழ்ச்சியை” அளித்தார்? (லூக்கா 2:10).

“அவர் கல்லறையிலிருந்து எழுந்தார்.”

ஜீவிக்கும் கிறிஸ்துவில் ”, அப்போஸ்தலர்கள் இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியமளிக்கிறார்கள், உயிர்த்தெழுந்த கர்த்தரின் மூன்று தரிசனங்களைக் குறிப்பிடுகிறார்கள் (பத்தி ஐந்து பார்க்கவும்). யோவான் 20–21; 3 நேபி 11–26; மற்றும் ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:14–20ல் இந்த சந்திப்புகளைப்பற்றி வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த தரிசனங்களின் போது இரட்சகரின் வார்த்தைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

“அவருடைய ஆசாரியத்துவமும் அவருடைய சபையும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன.”

இந்த ஆண்டு கோட்பாடும் உடன்படிக்கைகளும்பற்றிய உங்கள் படிப்பின் போது, இரட்சகரின் “ஆசாரியத்துவமும் அவருடைய சபையும் எவ்வாறு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன” என்பதுபற்றி மேலும் அறிய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட எந்த சத்தியங்கள் அல்லது கொள்கைகள் உங்களுக்கு குறிப்பாக அர்த்தமுள்ளவை? மறுஸ்தாபிதம்பற்றி கற்பிக்கும் பின்வரும் சில வசனங்களை கருத்தில் கொள்ளுங்கள்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17–23; 13; 20:1–12; 65; 110; 112:30–32; 124:39–42; 128:19–21. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷ சத்தியங்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து ஆராதிப்பதற்கு உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:19 பார்க்கவும்).

“அவர் ஒருநாள் பூமிக்குத் திரும்புவார்.”

கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்து பிறந்த நாளையே திரும்பிப் பார்க்கவும், அவர் மீண்டும் வருவார் என்று எதிர்நோக்கவும் ஒரு நேரம். “ ஜீவிக்கும் கிறிஸ்து ” கடைசிக்கு முந்தய பத்தியிலிருந்து அவர் திரும்ப வருவதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இரண்டாவது வருகையைப்பற்றி கற்பிக்கும் கிறிஸ்துமஸ் பாடல்களைப் படிப்பது, பாடுவது அல்லது கேட்பது சுவாரஸ்யமாக இருக்கலாம்“Joy to the World” அல்லது “It Came upon the Midnight Clear” (Hymns, எண்கள் 201,207).

“அவரே ஒளி, ஜீவன், உலகத்தின் நம்பிக்கை.”

ஜீவிக்கும் கிறிஸ்து ” இறுதி பத்தியில், இரடசகருக்கு கொடுக்கப்பட்ட பண்புகளையும் தலைப்புகளையும் கவனியுங்கள். இயேசு கிறிஸ்து “ஒளி, ஜீவன், உலகின் நம்பிக்கையாக” எப்படி இருக்கிறார் என்பதை சிந்திக்க பின்வரும் வசனங்கள் உங்களுக்கு உதவக்கூடும்: லூக்கா 2:25–32; 1 கொரிந்தியர் 15:19–23; மரோனி 7:41; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:24; 84:44–46; 93:7–10. அவர் உங்கள் ஒளி, ஜீவன் மற்றும் நம்பிக்கையாக எப்படி இருக்கிறார்? இரட்சகரின் வேறு எந்த பண்புக்கூறுகள் அல்லது தலைப்புகள் உங்களுக்கு மிகவும் பொருள்படுவதாக இருக்கின்றன?

ஜீவிக்கும் கிறிஸ்து ” படிப்பது உங்கள் விசுவாசத்தையும் இரட்சகர் மீதான அன்பையும் எவ்வாறு பாதித்தது?

இயேசு கிறிஸ்து

உலகத்தின் ஒளி–ஹோவர்ட் லையோன்

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஜீவிக்கும் கிறிஸ்து.” ஜீவிக்கும் கிறிஸ்து ”ல் மீட்பரைப்பற்றி கற்பிக்கப்பட்ட உண்மைகளைப் புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்திற்கு உதவ, நீங்கள் சில முக்கிய சொற்றொடர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த சொற்றொடர்களை விளக்கும் படங்களைக் கண்டுபிடிக்க அல்லது வரைய ஒன்றாக வேலை செய்யலாம். நீங்கள் அந்த படங்களையும் சொற்றொடர்களையும் ஒரு புத்தகமாக தொகுக்கலாம்.

“நாங்கள் எங்கள் சாட்சியத்தை வழங்குகிறோம்.”சாட்சியம் அளிப்பது என்றால் என்ன என “ ஜீவிக்கும் கிறிஸ்துவிலிருந்து ” நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இரட்சகரின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கிறிஸ்து குறித்த சாட்சியங்களை நீங்கள் பதிவு செய்ய விரும்பலாம்.

“அவர் நன்மை செய்பவராக சுற்றித் திரிந்தார்.”இந்த கிறிஸ்துமஸில் உங்கள் குடும்பம் இரட்சகரின் சேவையின் எடுத்துக்காட்டை எவ்வாறு பின்பற்றலாம்? உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் “அமைதியையும் நல்லெண்ணத்தையும்” எவ்வாறு பரப்புவீர்கள்? “நோயுற்றவர்களை குணப்படுத்துவதற்கு” நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? Christmas videos on the Gospel Media app or Gospel Media library (medialibrary.ChurchofJesusChrist.org) காணொளிகளில் நீங்கள் சில ஆலோசனைகள் காணலாம்.

“தேவன் தனது தெய்வீக குமாரனின் ஒப்பற்ற பரிசுக்கு நன்றி செலுத்தப்படுவாராக.”இயேசு கிறிஸ்துவின் காரணமாக நமக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன? ஒருவேளை குடும்ப உறுப்பினர்கள் “ஜீவிக்கும் கிறிஸ்துவில் ” பதில்களைக் காணலாம், பின்னர் இரட்சகரிடமிருந்து அந்த பரிசுகளை குறிக்கும் பரிசு பொருட்களை பொதியலாம். உங்கள் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தினத்திலோ அல்லது வாரம் முழுவதும் பரிசுகளைத் திறந்து ஒவ்வொன்றிற்கும் தொடர்புடைய வசனங்களைப் படிக்கலாம். உங்கள் குடும்பம் இன்னும் பலவற்றைக் கண்டறிந்தாலும், சாத்தியமான சில வசனங்கள் இங்கே உள்ளன: லூக்கா 2:10–14; 1 பேதுரு 2:21; மோசியா 3:8; ஆல்மா 11:42–43; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–12. அவரிடத்திலிருந்து வருகிற பிற பரிசுகளைக் கண்டுபிடிக்க, “He Sent His Son” (Children’s Songbook, 34–35), போன்ற பாடல்களை நீங்கள் பாடலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Hark! The Herald Angels Sing,” Hymns, no.209.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

இரட்சகர் மீது கவனம் செலுத்துங்கள். ஜெபத்துடன் ‘ ஜீவிக்கும் கிறிஸ்து’ மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் மற்றும் மார்மன் புஸ்தகத்தின் தீர்க்கதரிசிகள் ஆகியோரின் சாட்சிகளைப் படிப்பது போன்றது. இது மீட்பர் மீதான உங்கள் விசுவாசத்தை அதிகரிக்கும், மேலும் அவர்மீது கவனம் செலுத்த உதவும்” (M.Russell Ballard, “Return and Receive,” Ensign or Liahona, May 2017,65).