“ஜனுவரி 4–10 ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–26: ‘“ஒரு ஒளிக்கற்றையை நான் கண்டேன்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021(2020)
“ஜனுவரி 4–10 ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–26,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
ஜனுவரி 4–10
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–26
“ஒரு ஒளிக்கற்றையை நான் கண்டேன்”
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–26, நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்காக என்ன செய்திகளை நீங்கள் காண்கிறீர்கள்? உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எவை பெரு மதிப்பு வாய்ந்தவை?
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் உங்கள் ஜெபங்களுக்கு பதில்கள் புத்தகமாக இருக்கிறது: இந்தப் புத்தகத்தில், கேள்விகளுக்கு பதிலாக அநேக பரிசுத்த வெளிப்படுத்தல்கள் வந்தன. ஆகவே, 1820ல் ஒரு தோப்பில் ஜோசப் ஸ்மித் கேட்ட ஒன்றிற்கு பிற்காலங்களில் வெளிவந்துகொண்டிருந்த வெளிப்படுத்தலை ஆரம்பித்த கேள்வியைக் கருத்தில்கொண்டு கோட்பாடும் உடன்படிக்கைகளுமை படிக்க ஆரம்பித்தல் பொருத்தமாயிருக்கும். ஒருவேளை நீங்கள் சம்பந்தப்படுத்த முடிகிற “வார்த்தைகளின் யுத்தமும் அபிப்பிராயங்களின் குழப்பமும்” (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:10) மதத்தைப்பற்றியும், அவருடைய ஆத்துமாவின் நிலைப்பாட்டையும் குறித்தும் ஜோசப்பைக் குழப்பத்தில் ஆழ்த்தியது, ஒருவேளை நீங்கள் அதற்கு ஒப்பிடலாம். நமது நாளில் முரண்பட்ட கருத்துக்கள் மற்றும் வற்புறுத்தும் குரல்கள் அநேகமிருக்கின்றன, இந்த செய்திகளை வகைப்படுத்தி உண்மையை கண்டுபிடிக்க விரும்பினால், ஜோசப் செய்ததை நாம் செய்யலாம். நாம் கேள்விகள் கேட்கலாம், வேதங்களை படிக்கலாம், சிந்திக்கலாம், இறுதியாக தேவனைக் கேட்கலாம். ஜோசப்பின் ஜெபத்திற்குப் பதிலாக, வானத்திலிருந்து ஒரு ஒளிக்கற்றை இறங்கிவந்தது. பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் தோன்றி அவருடைய கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அந்த அற்புதமான அனுபவத்தைப்பற்றிய ஜோசப் ஸ்மித்தின் சாட்சி, “ஞானத்தில் குறைவுள்ள மனுஷன் எவனும் தேவனிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்” (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:26) என துணிவுடன் பிரகடனப்படுத்துகிறது. ஒரு பரலோக தரிசனத்தைப் பெறமுடியாவிட்டாலும், குறைந்தது, பரலோக ஒளியால் ஒளியூட்டப்பட்ட ஒரு தெளிவான தரிசனத்தை நாம் அனைவராலும் பெறமுடியும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசி.
ஜோசப்பைப்பற்றிய உண்மை பெரும்பாலும் திரிக்கப்பட்டிருந்ததால், ஜோசப் ஸ்மித்தின் வரலாற்றின் நோக்கம் நம் வசத்திலுள்ள உண்மைகளை வைத்திருக்க செய்வதுதான். (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1). ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–26, நீங்கள் வாசிக்கும்போது, அவருடைய தெய்வீக அழைப்பிற்கான உங்கள் சாட்சியை எது பெலப்படுத்துகிறது? அவருடைய தீர்க்கதரிசன ஊழியத்திற்காக ஜோசப்பை கர்த்தர் ஆயத்தப்படுத்தினாரென நீங்கள் கண்டுபிடித்த நிருபணங்களைக் குறித்து வைக்கவும். நீங்கள் படிக்கும்போது, ஜோசப் ஸ்மித்தைப்பற்றியும் அவருடைய சாட்சியையும்பற்றிய உங்களுடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும்கூட நீங்கள் பதிவு செய்யக்கூடும்.
பரிசுத்தவான்கள் 1:3–19ஐயும் பார்க்கவும்.
விசுவாசத்துடன் நான் கேட்டால் தேவன் பதிலளிப்பார்.
நீங்கள் எடுக்கவேண்டிய ஒரு தீர்மானத்தைப்பற்றி நீங்கள் எப்போதாவது “ஞானத்தில் குறைவுள்ளவர்களாய் இருந்திருக்கிறீர்களா” அல்லது குழப்பமடைந்ததாய் உணர்ந்திருக்கிறீர்களா? ஜோசப் ஸ்மித்—வரலாறு1:13). வசனங்கள் 5–20ல் ஜோசப் ஸ்மித்தின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்? ஞானத்திற்கும் அதிகப் புரிந்துகொள்ளுதலுக்கும் உங்களுடைய சொந்த தேவையைப்பற்றி சிந்தித்து சத்தியத்தை எவ்வாறு நீங்கள் தேடுவீர்களென்பதைக் கருத்தில்கொள்ளவும்.
1 நேபி 10:17–19; 15:6–11; Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign அல்லது Liahona, மே 2018, 93–96 ஐயும் பார்க்கவும்
முதல் தரிசனத்தைப் பற்றி ஏன் ஏராளமான விவரங்களிருக்கின்றன?
பரிசுத்த தோப்பில் அவருடைய அனுபவத்தை, பெரும்பாலும் ஒரு எழுத்தரைப் பயன்படுத்தி, அவருடைய வாழ்நாளில் குறைந்தது நான்கு முறைகள் ஜோசப் ஸ்மித் பதிவுசெய்தார். கூடுதலாக, அவர் கண்ட தரிசனத்தைப்பற்றி ஜோசப் சொல்லக்கேட்ட ஜனங்களால் ஏராளமான இரண்டாம் நபர் பதிவுகள் எழுதப்பட்டன. பார்வையாளர்களையும் பின்னணியையும் பொறுத்து, சில விவரங்களில் இந்த பதிவுகள் வேறுபட்டாலும், மற்றபடி அவைகள் ஒத்ததாயிருந்தன. இரட்சகரின் ஊழியத்தைக் குறித்து நன்கு புரிந்துகொள்ள நான்கு சுவிசேஷங்கள் ஒவ்வொன்றும் நமக்குதவுகிறதைப்போல, ஜோசப் ஸ்மித்தின் அனுபவத்தை நன்கு புரிந்துகொள்ள நமக்குதவுகிற ஒவ்வொரு விவரமும் விவரங்களைச் சேர்க்கிறது.
ஜோசப்பின் பிற விவரங்களை வாசிக்க, “First Vision Accounts” (Gospel Topics, topics.ChurchofJesusChrist.org) பார்க்கவும். இந்த விவரங்கள் அனைத்தையும் வாசிப்பதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தை முதல் தரிசனம் ஆரம்பித்தது.
அவருடைய ஜெபங்களுக்கு தேவன் பதிலளிப்பாரென ஜோசப் ஸ்மித் நம்பினார் ஆனால், அவருடைய வாழ்க்கையையும் உலகத்தையும் அந்த பதில் மாற்றும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். ஜோசப்பின் அனுபவத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, முதல் தரிசனம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியதென சிந்திக்கவும். உதாரணமாக, வெவ்வேறு வழிகளில் இந்த வாக்கியத்தை நீங்கள் நிறைவுசெய்யக்கூடும்: “முதல் தரிசனம் நடந்ததால், … என நான் அறிவேன், முதல் தரிசனத்தால் நீங்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்?
“Ask of God: Joseph Smith’s First Vision,” காணொலி, ChurchofJesusChrist.org; Saints, 1:14–19; Russell M. Nelson, “Hear Him,” Ensign or Liahona, May 2020, 88–92 ஐயும் பார்க்கவும்
மற்றவர்கள் என்னைப் புறக்கணித்தாலும் நான் அறிந்தவற்றுக்கு நான் உண்மையாக இருக்கமுடியும்.
இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் சவால்களை எதிர்கொண்ட வீரமுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் உணர்த்துதலான எடுத்துக்காட்டுகள் அவைகளில் அடங்கியிருக்கின்றன என்பது வேதங்களின் ஆசீர்வாதங்களில் ஒன்று. அவருடைய தரிசனத்தால் எதிர்ப்பை ஜோசப் ஸ்மித் எதிர்கொண்டபோது, அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான் என சொன்னபோது துன்புறுத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலுடன் அவர் அடையாளங்காணப்பட்டார். ஜோசப்பின் விவரத்தை நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் சாட்சியில் உண்மையாய் நிலைத்திருக்க உங்களை எது உணர்த்துகிறது? நீங்கள் பெற்ற ஆவிக்குரிய அனுபவங்களில் உண்மையாய் நிலைத்திருக்க உங்களுக்கு தைரியம் கொடுக்கிற உங்களுக்குத் தெரிந்த வசனங்கள் அல்லது ஜனங்களிடமிருந்து என்ன பிற எடுத்துக்காட்டுகளிருக்கின்றன?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:6.இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஜனங்களைப்போல பிணக்கு செய்பவர்களாக மாறாமல் கருத்து வேற்றுமைகளை எவ்வாறு நம்மால் கையாளமுடியும்?
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:11–13.ஒரு வேத பாகம் அவர்களுடைய இருதயங்களைத் தொட்டு, செயல்பட அவர்களை உணர்த்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த வசனங்களை வாசிக்க குடும்ப அங்கத்தினர்களை உணர்த்தக்கூடும்
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:16–20.உங்கள் குடும்பத்தினர் இந்த வசனங்களை வாசிக்கும்போது இந்த குறிப்போடு இணைந்திருக்கிற ஓவியத்தை அல்லது முதல் தரிசனத்தைப்பற்றிய மற்றொரு படத்தைக் காட்டுவதை கருத்தில் கொள்ளவும் (ஒருவேளை, அவர்களுடைய சொந்த சித்தரிப்பை வரைய உங்கள் குடும்பத்தினர் ரசிக்கலாம்). “Ask of God: Joseph Smith’s First Vision” (ChurchofJesusChrist.org) காணொலியையும் நீங்கள் பார்க்கலாம். இந்த தரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிற சத்தியங்களை நீங்கள் ஒவ்வொருவரும் பட்டியலிட்டு, பின்னர் ஒருவருக்கொருவர் பட்டியல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனத்தைப்பற்றிய தங்களுடைய சாட்சியங்களை அவர்கள் எவ்வாறு பெற்றார்களென்று பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாயிருக்கும்.
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17.ஜோசப் ஸ்மித்துக்கு தேவன் தரிசனமானபோது, ஜோசப்பை அவர் பெயர் சொல்லி அழைத்தார். அவர்களை பரலோக பிதாவிற்கு தனிப்பட்ட விதமாகத் தெரியுமென எப்போது உங்கள் குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் உணர்ந்தார்கள்?
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:21–26.நம்முடைய சாட்சியங்களைப்பற்றி ஜனங்கள் கேள்விகள் எழுப்பும்போது நாம் எவ்வாறு பதிலளிக்க முடியும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Joseph Smith’s First Prayer,” Hymns, no. 26.
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்
நமது குடும்ப வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம், ஜோசப் ஸ்மித் அதில் வேறுபட்டவரல்ல. மறுஸ்தாபிதத்தை சாத்தியமாக்கிய. அவருடைய பெற்றோரின் மத நம்பிக்கைகளும் நடைமுறைகளும் விசுவாசத்தின் விதைகளை விதைத்தன. இந்த புகழாரத்தை ஜோசப்பின் குறிப்பிதழ் பதிவுசெய்திருக்கிறது: “எனக்கு மிகவும் மரியாதைக்குரிய பெற்றோரை வழங்கியதற்காக தேவனுக்கு நான் செலுத்த வேண்டிய நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளும் மொழியும் போதுமானதாக இல்லை.”1
அவருடைய தாய் லூசி மாக் ஸ்மித், அவருடைய சகோதரர் வில்லியம் ஸ்மித், பின்வரும் மேற்கோள்கள், மற்றும் ஸ்மித் வீட்டிலிருந்த மத செல்வாக்கைப்பற்றி தீர்க்கதரிசியே நமக்கு ஒரு பார்வையைக் கொடுக்கிறார்.
லூசி மாக் ஸ்மித்
“[ஏறக்குறைய 1802],ல் நான் நோய்வாய்ப்பட்டேன். … கிறிஸ்துவின் வழிகளை நான் அறியாதிருப்பதால் மரிப்பதற்கு நான் ஆயத்தமாயில்லை என நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், எனக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் ஒரு இருண்ட மற்றும் தனிமையான இடைவெளி இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது, அதைக் கடப்பதற்கு முயற்சிக்க எனக்கு துணிவில்லை. …
“நான் கர்த்தரை நோக்கிப் பார்த்து, என் பிள்ளைகளை வளர்க்கும்படியாகவும், என் கணவரின் இருதயத்தை ஆறுதல்படுத்தும்படியாகவும் என் ஜீவனை அவர் காப்பாற்றும்படியாக கர்த்தரிடம் நான் கெஞ்சினேன் மன்றாடினேன்; அப்படியாக இரவு முழுவதும் நான் படுத்திருந்தேன். … நான் வாழ அவர் அனுமதித்தால், அது வேதாகமத்திலிருந்தாலும், அல்லது வேறெங்கும் காணப்பட்டாலும், ஜெபத்தினாலும் விசுவாசத்தினாலும் பரலோகத்திலிருந்து அது காணப்பட்டாலும், சரியான முறையில் அவருக்குச் சேவை செய்ய என்னை இயக்குகிற அந்த மதத்தில் சேர நான் முயற்சிப்பேன் [என] நான் தேவனிடம் உடன்படிக்கை செய்தேன். இறுதியாக ஒரு குரல் என்னிடம் பேசி, ‘தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும் எனச் சொல்லிற்று. உங்கள் இருதயம் ஆறுதலடைவதாக. தேவனில் நீங்கள் விசுவாசமாயிருக்கிறீர்கள், என்னிலும் விசுவாசமாயிருங்கள்.’ …
“இந்த நேரத்திலிருந்து நான் தொடர்ந்து பெலன் பெற்றேன். ஆனால் மதம் என்ற விஷயம் என் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தாலும், அதைப்பற்றி நான் சிறிதே சொன்னேன், மற்றும் பரலோக விஷயங்களில் எனக்கு அறிவுறுத்துவதற்கு தேவனின் வழிகளை அறிந்த சில பக்தியுள்ள நபரைத் தேட முடிந்தவுடன் நான் எல்லா விடாமுயற்சியையும் செய்வேன் என்று நினைத்தேன்”2
வில்லியம் ஸ்மித்
“மிகவும் பயபக்தியான பெண்ணான, இப்போதும் இப்போதிலிருந்தும் அவளுடைய பிள்ளைகளின் நல்வாழ்வில் மிக ஆர்வமுள்ள என்னுடைய தாய் நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்பைத் தேடுவதில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள, அல்லது (அப்போதிருந்த அந்த பதத்தைப் போலவே) ‘மதத்தைப் பெறுவதில்’ அவளுடைய பெற்றோரின் அன்பு பரிந்துரைக்கும் ஒவ்வொரு வழியையும் பயன்படுத்தினார். எங்களைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வைப்பதில் அவர் ஜெயித்தார், ஏறக்குறைய இந்த விஷயத்தில் முழு குடும்பமும் ஆர்வமாயிருந்து, சத்தியத்தைத் தேடுபவர்களாயினர்.”3
“என் நினைவுபடுத்த முடிந்ததிலிருந்து நாங்கள் எப்போதும் குடும்ப ஜெபம் செய்தோம். வழக்கமாக, தந்தை தனது கண்ணாடியை தனது சட்டைப் பையில் வைத்திருந்து, அவர் கண்ணாடியை தொடுவதை சிறுவர்களாகிய நாங்கள் பார்க்கும்போது, ஜெபத்திற்கு ஆயத்தப்படுவதற்கான அது ஒரு சமிக்ஞை என எங்களுக்குத் தெரியும், அதை நாங்கள் கவனியாதிருந்தால், ‘வில்லியம்’ அல்லது யார் கவனக்குறைவாயிருந்தாலும் ‘ஜெபத்திற்கு தயாராகுங்கள்’ என தாயார் சொல்வார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஜெபத்திற்குப் பின்னர் நாங்கள் பாடவேண்டிய ஒரு பாடல் எங்களுக்குண்டு”4.
ஜோசப் ஸ்மித்
“உயர் பண்பில்லாதது என சொல்லக்கூடிய ஒரு இழிவான செயலை எனக்கு அறிவு தெரிந்தவரை அவருடைய வாழ்க்கையில் என்னுடைய தகப்பன் ஒருபோதும் செய்ததில்லை என இப்போது நான் சொல்வேன். என்னுடைய தகப்பனையும் அவருடைய நினைவுகளையும், நான் நேசித்தேன், அவரது உன்னத செயல்களின் நினைவு எனது மனதின்மேல் அற்புதமான எடையுடன் தங்குகிறது, அவரது அநேக அன்பான, எனக்குக் கொடுக்கப்பட்ட பெற்றோரின் வார்த்தைகள் என் இதயப் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றன. நான் போற்றுகிற அவருடைய வாழ்க்கை வரலாற்றின் சிந்தனைகள் எனக்குப் புனிதமானது, அவை என் மனதில் உருண்டு, நான் பிறந்ததிலிருந்து எனது சொந்த கணிப்பால் பொருத்தப்பட்டுள்ளன. … எனது தாயும் உத்தமமானவர்களில் ஒருவர், எல்லா பெண்களிலும் சிறந்தவர்.”5