கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
டிசம்பர் 28–ஜனுவரி 3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1: “ஜனங்களே கேளுங்கள்”


“டிசம்பர் 28–ஜனுவரி 3. கோட்பாடும் உடன்படிக்கைகளும்1: ‘ஜனங்களே கேளுங்கள்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“டிசம்பர் 28–ஜனுவரி 3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

குடும்பத்தினர் வேதங்களை வாசித்துக்கொண்டிருத்தல்

டிசம்பர் 28–ஜனுவரி 3

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1

“ஜனங்களே கேளுங்கள்”

அவருடைய பிற்கால வெளிப்படுத்தல் அடங்கிய இந்த புஸ்தகத்திற்கான கர்த்தருடைய தனிப்பட்ட முன்னுரையாக கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1 ஐ நினைக்கவும். கோட்பாடும் உடன்படிக்கைகளுமைப்பற்றி எதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென அவர் விரும்புகிறார்? இந்த கேள்வியை சிந்தித்து, பாகம் 1ஐ நீங்கள் வாசிக்கும்போது வருகிற எதாவது எண்ணங்களை எழுதவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நவம்பர் 1831ல், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஒன்றரை வயதே ஆகியிருந்தது. அது வளர்ந்துகொண்டிருந்தாலும், இருபது வயதின் நடுப்பகுதியிலிருந்த ஒரு தீர்க்கதரிசியால் வழிநடத்தப்பட்ட, அரிதாகவே குடியேறிய எல்லையில் வாழும் விசுவாசிகளின் ஒரு தெளிவற்ற குழு அது. ஆனால் இந்த விசுவாசிகளை அவருடைய ஊழியக்காரர்களாகவும் தூதுவர்களாகவும் இருப்பதாகக் கருதி, அவர்களுக்கு அவர் கொடுத்த வெளிப்படுத்தல்கள் உலகிற்கு வெளியிடப்பட அவர் விரும்பினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 1 இந்த வெளிப்படுத்தல்களின் தொகுப்பிற்கு கர்த்தருடைய முன்னுரையாயிருந்தது, மற்றும் சபையின் அங்கத்தினரத்துவம் குறைவாயிருந்தாலும், அவருடைய பரிசுத்தவான்களுக்கு பகிர்ந்துகொள்ள தேவன் விரும்பிய செய்தி சிறியதில்லை. மனம்திரும்பவும் தேவனின் “நித்திய உடன்படிக்கையை” நிலைப்படுத்தவும் அவர்களுக்கு போதித்த இது “பூமியின் சகல குடிகளுக்கும்” ஒரு “எச்சரிக்கையின் குரலாயிருந்தது” (வசனங்கள் 4, 8, 22). இந்த செய்தியை எடுத்துச் சென்ற ஊழியக்காரர்கள் “பெலவீனராயும் பேதையருமாயிருந்தனர்,” ஆனால் அவருடைய சபையை தெளிவற்ற தன்மையிலிருந்தும் அந்தகாரத்திலிருந்தும், வெளியே கொண்டுவர, தேவனுடைய தேவைகளுக்கு ஏற்ப அப்போதும் இப்போதும் தாழ்மையான ஊழியக்காரர்களாயிருந்தனர்” (வசனங்கள் 23, 30).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1க்குப் பின்னாலுள்ள வரலாற்றைப்பற்றி அதிகத் தகவலுக்கு Saints, 1:140–43 பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1

“இந்தக் கட்டளைகளை ஆராய” கர்த்தர் என்னை அழைக்கிறார்.

ஒரு முன்னுரை ஒரு புஸ்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. புஸ்தகத்தின் கருத்துக்களையும் நோக்கங்களையும் இது அடையாளங்கண்டு வாசிக்க வாசகர்கள் ஆயத்தப்பட உதவுகிறது. பாகம் 1— கோட்பாடும் உடன்படிக்கைகளின் கர்த்தருடைய முன்னுரையை நீங்கள் (வசனம் 6) வாசிக்கும்போது அவருடைய வெளிப்படுத்தல்களுக்காக கர்த்தர் கொடுத்த தலைப்புக்களையும் நோக்கங்களையும் தேடவும். கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் உங்கள் படிப்பிலிருந்து மிக அதிக பயனைப்பெற உங்களுக்குதவக்கூடிய பாகம் 1லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உதாரணமாக, இந்த வெளிப்படுத்தல்களில் “கர்த்தருடைய சத்தத்தை கேட்க” என்றால் அர்த்தமென்ன என சிந்திக்க (வசனம் 37) அல்லது “இந்த கட்டளைகளைத் தேட” நீங்கள் சிந்திக்கக்கூடும் .

கோட்பாடும் உடன்படிக்கைகளுக்கான முன்னுரையையும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:1–6, 23–24, 37–39

தம்முடைய ஊழியக்காரர்கள் மூலமாக தேவன் பேசுகிறார், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படும்.

அவர் தெரிந்துகொண்ட ஊழியக்காரர்கள் மூலமாக அவர் பேசுகிறார் என்ற தேவனுடைய பிரகடனத்துடன் பாகம் 1 ஆரம்பமாகி முடிவடைகிறது (வசனங்கள் 4–6, 23–24, 38 பார்க்கவும்). கர்த்தர் மற்றும் அவருடைய சத்தத்தைப்பற்றி இந்த வெளிப்படுத்தலிலிருந்து நீங்கள் கற்றவற்றை எழுதவும். கர்த்தருடைய ஊழியக்காரர்களைக் குறித்து நீங்கள் என்ன அறிந்துகொள்ளுகிறீர்கள்? அவருடைய ஊழியக்காரர்களின் சத்தத்தில் கர்த்தருடைய சத்தத்தை நீங்கள் எப்போது கேட்டீர்கள்? (வசனம் 38 பார்க்கவும்).

பொது மாநாடு கூட்டம்

தேவனுடைய கட்டளைகளை தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் நமக்குப் போதிக்கிறார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:3, 24–28, 31–33

நான் தாழ்மையானவனாக இருந்தால், கர்த்தருடைய கண்டித்தல் என்னை மனந்திரும்ப வழிநடத்த முடியும்.

ஜனங்களின் பாவங்களும் தவறுகளும் தெரியப்படுத்தப்படும் என வசனம் 3 மற்றும் வசனங்கள் 24–28ல், கர்த்தர் சொன்னார் என்பதைக் கவனிக்கவும். ஒரு சந்தர்ப்பத்தில் இது ஒரு வேதனையான, துக்ககரமான அனுபவமாயிருக்கிறது மற்றொன்றில் இது அறிவுறுத்தலாயிருக்கிறது. இந்த சூழ்நிலைகள் ஏன் மிக வேறுபாடாயிருக்கின்றன? உங்களுடைய பாவங்களையும் பெலவீனங்களையும் நீங்கள் அறிந்துகொள்ளும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும். சரியான வழியில் பதிலளிக்க உங்களுக்கு உதவக்கூடிய வசனங்கள் 24–28ல் என்ன தன்மைகளை நீங்கள் காண்கிறீர்கள்? உங்களுடைய பெலவீனங்களையும் பாவங்களையும் கர்த்தர் எவ்வாறு பார்க்கிறாரென்பதைப்பற்றி வசனங்கள் 31–33வுடன் இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன?

நீதிமொழிகள் 3:11–12; ஏத்தேர் 12:27; மரோனி 6:8ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:12–30, 35–36

பிற்காலங்களின் சவால்களை எதிர்கொள்ள எனக்குதவ கர்த்தர் அவருடைய சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்தார்.

வரப்போகிற துன்பகரமான நாட்களைக் குறித்து பாகம் 1 எச்சரித்தாலும், உறுதியளிக்கும் ஒரு செய்தியும் அதில் அடங்கியிருக்கிறது: “பூமியின் குடிகள் மேல் வரப்போகிற அழிவை அறிந்திருந்து, கர்த்தராகிய நான் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனை அழைத்து, பரலோகத்திலிருந்து அவனோடு பேசினேன்.

கர்த்தர் எச்சரித்த அழிவுகளைப்பற்றி கவனிக்கவும் (உதாரணமாக, வசனங்கள் 13–16, 35 பார்க்கவும்). இன்றைய உலகத்தில் அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையில் என்ன பிற அழிவுகளை நீங்கள் கவனிக்கிறீர்கள்? வசனங்கள் 17–30 இந்த அழிவுகளை எதிர்பார்த்து உங்களுக்காக கர்த்தர் என்ன செய்தாரென்பதை விவரிக்கின்றன. நீங்கள் காண்பனவற்றை பட்டியலிடுவதைக் கருத்தில் கொள்ளவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:1–6, 37–39.கர்த்தரிடமிருந்து வருகிற எச்சரிக்கைகளைப்பற்றி ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்க, வழுக்குகிற தரை, கொடிய புயல் அல்லது நெருங்கி வருகிற ஒரு கார் போன்ற நாம் பார்க்கமுடியாத அபாயங்களைப்பற்றி மற்றவர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கிற எச்சரிக்கைகளைப்பற்றி நீங்கள் பேசலாம். கர்த்தருடைய எச்சரிக்கைகளைப்பற்றி இந்த எடுத்துக்காட்டுகள் நமக்கு என்ன போதிக்கின்றன? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:1–6, 37–39ன்படி, கர்த்தர் நம்மை எவ்வாறு எச்சரிக்கிறார்? சமீபத்தில் அவர் எதைக் குறித்து நம்மை எச்சரித்தார்? ஒருவேளை சமீபத்திய பொது மாநாட்டின் செய்திகளின் பகுதிகளை நீங்கள் பார்த்திருந்து அல்லது வாசித்திருந்தால், தேவனுடைய “எச்சரிக்கைக் குரலின்” எடுத்துக்காட்டுகளைத் தேடவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:16.“[கர்த்தருடைய] நீதியை நிலைநிறுத்துதல்” என்றால் அர்த்தமென்ன? “நம்முடைய சொந்த வழியில்” நடப்பதைவிட, அதை நாம் செய்கிறோமென்பதை நம்மால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:30.சபை “உண்மையாகவும் ஜீவிக்கிறதாயுமிருக்கிறது” என சொல்வதன் அர்த்தமென்ன? இந்தக் கேள்வியைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் சிந்திக்க வைக்க, ஒருவேளை உயிருள்ள பொருட்களையும் உயிரற்ற பொருட்களையும் நீங்கள் அவர்களுக்குக் காட்டலாம். “இருளிலிருந்தும் அந்தகாரத்திலிருந்தும் [சபையை] வெளியே கொண்டுவர” உதவ ஒரு குடும்பமாக நீங்கள் என்ன செய்யமுடியுமென்பதையும் நீங்கள் கலந்துரையாடலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:37.இந்த ஆண்டில் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் இந்தக் கட்டளைகளை நீங்கள் எவ்வாறு தேடுவீர்களென்று ஒரு குடும்பமாக திட்டமிடுதலைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் வேதப் படிப்பை நீங்கள் எவ்வாறு ஒரு வழக்கமான குடும்ப வாழ்க்கைப் பாகமாக்குவீர்கள்? வேதங்களிலிருந்து கற்றுக்கொள்ள என்ன படிப்பு ஆலோசனைகள் உங்களுக்குதவமுடியும்? (இந்தப் பாட ஆதாரத்தின் தொடக்கத்தில் “உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்” பார்க்கவும்.)

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Follow the Prophet,” Children’s Songbook, 110–11, குறிப்பாக கடைசி வசனம்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

இயேசு கிறிஸ்துவை தேடுங்கள். இரட்சகரையும் அவருடைய சுவிசேஷத்தையும் குறித்து சாட்சியளிப்பது வேதங்களின் நோக்கம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1 நீங்கள் வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஏதாவது உங்களுக்குப் போதிக்கும் வசனங்களை அடையாளப்படுத்த அல்லது குறித்து வைப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

கட்டளைகளின் புஸ்தகம்

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு முதல் வெளிப்படுத்தல்கள், கட்டளைகள் புஸ்தகமாக தொகுக்கப்பட்டன.