“ஜனுவரி 25–31. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6–9: ‘இதுவே வெளிப்படுத்துதலின் ஆவி,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“ஜனுவரி 25–31. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6–9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
ஜனுவரி 25–31
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6–9
“இதுவே வெளிப்படுத்துதலின் ஆவி”
நமது மனங்களிலும் இருதயங்களிலும் சத்தியங்களை கர்த்தர் நமக்கு வெளிப்படுத்துகிறார் ((கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3 பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6–9நீங்கள் வாசிக்கும்போது நீங்கள் பெறுகிற ஏதாவது எண்ணங்களைப் பதிவுசெய்யவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
1828ன் இறுதியில், ஆலிவர் கௌட்ரி என்ற பெயருடைய ஒரு இளம் பள்ளி ஆசிரியர் மான்செஸ்டர், நியூயார்க்கில் ஒரு ஆசிரியர் வேலையை ஏற்றுக்கொண்டார், லூசி மற்றும் ஜோசப் ஸ்மித் மூத்தவர் குடும்பத்துடன் அவர் தங்கினார். சத்தியத்தைத் தேடுபவராகவும், அதிகமாக அறிந்துகொள்ள விரும்புகிறராகவும் தன்னைக் கருதிக்கொண்டிருந்த ஆலிவர், தற்போது ஹார்மனி பென்சில்வேனியாவில் வசித்துக்கொண்டிருந்த அவர்களுடைய மகன் ஜோசப்பைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார். தூதர்களின் சந்திப்புகள், ஒரு பழங்கால பதிவேடு மற்றும் தேவனின் வல்லமையால் மொழிபெயர்க்கும் வரத்தைப்பற்றி ஸ்மித் விவரித்தார். ஆலிவர் ஈர்க்கப்பட்டார். அது உண்மையாயிருக்க முடியுமா? லூசியும் ஜோசப் மூத்தவரும் அவருக்கு புத்திமதிகளைக் கூறினர், சத்தியத்தைத் தேடுகிற எவருக்கும் அது பொருந்தும்: ஜெபித்து, கர்த்தரைக் கேளுங்கள்.
ஆலிவர் அப்படியே செய்து, சமாதானத்தையும் உறுதிப்பாடையும் ஆலிவர் மனதிற்குப் பேசி கர்த்தர் பதிலளித்தார். ஆலிவர் கண்டுபிடித்த வெளிப்படுத்தல் தனிப்பட்டதாயிருக்கலாம், வருகிற மாதங்களில் இன்னும் மிக ஆழ்ந்து அவர் கற்பார். வெளிப்படுத்தல் தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமல்ல, அதை வாஞ்சிக்கிறவர்களுக்கும், அதை நாடுகிற எவருக்குமே. இன்னும் எல்லாவற்றையும் ஆலிவர் அறிந்துகொள்ளவில்லை, ஆனால் அடுத்த அடியை எடுக்க போதுமானவற்றை அவர் அறிந்திருந்தார். ஜோசப் ஸ்மித் மூலமாக முக்கியமான ஒன்றை கர்த்தர் செய்துகொண்டிருந்தார், ஆலிவர் அதன் ஒரு பகுதியாயிருக்க விரும்பினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6–9க்குப், பின்னாலுள்ள வரலாற்றைப்பற்றிய அதிக தகவலுக்கு Saints, 1:58–64; “Days of Harmony” (காணொலி, ChurchofJesusChrist.org) பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6; 8–9
“சத்தியத்தின் ஆவியின்” மூலமாக பரலோக பிதா என்னிடம் பேசுகிறார்.
1829ன் வசந்தத்தில் ஆலிவர் கௌட்ரி ஹார்மனிக்கு பயணம் செய்து மார்மன் புஸ்தகத்தை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு எழுத்தராயிருக்க முன்வந்தார். இப்போது, மொழிபெயர்ப்பின் வெளிப்படுத்தும் முறையின் ஒரு நெருக்கமான காட்சி ஆலிவருக்கு ஏற்பட்டது. அந்த அனுபவம் அவருக்கு ஆச்சரியமூட்டி, மொழிபெயர்க்கும் வரத்தால் அவரும் ஆசீர்வதிக்கப்படக்கூடுமோ என வியப்புற்றார். மொழிபெயர்க்க முயற்சிக்க அவரை கர்த்தர் அனுமதித்தார், ஆனால் வெளிப்படுத்தலை பெறுதல் ஆலிவருக்கு புதிதாயிருந்தது, மற்றும் அவருடைய முயற்சி சரியாக இருக்கவில்லை. அவர் இன்னமும் மிக அதிகமாய்க் கற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6, 8, மற்றும் 9 கர்த்தர் அவருக்குக் கற்றுக்கொடுக்க விருப்பமாயிருந்தாரெனக் காட்டுகிறது.
இந்தப் பாகங்களை நீங்கள் வாசிக்கும்போது தனிப்பட்ட வெளிப்படுத்தலைப்பற்றி கர்த்தர் என்ன போதித்தாரென கவனிக்கவும். உங்களுக்கிருந்த அனுபவங்களுக்கு எவ்வாறு அவருடைய வார்த்தைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது, அல்லது உங்களுக்கு அந்த அனுபவம் வேண்டுமா?
உதாரணமாக, அவருடைய சித்தத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பு கர்த்தர் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:5–7; 8:1; 9:7–8 என்ன அறிவுறுத்துகிறது?
வெளிப்படுத்தல் வரக்கூடிய வெவ்வேறு வழிகளைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:14–17, 22–24; 8:2–3; 9:7–9லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
இந்த பாகங்களிலிருந்து வெளிப்படுத்தலைப்பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள வேறு ஏதாவதிருக்கிறதா?
வெளிப்படுத்தலைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள, ரசல் எம்.நெல்சன், “Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or Liahona, மே 2018, 93–96; ஜூலி பி.பெக், “And upon the Handmaids in Those Days Will I Pour Out My Spirit,” Ensign or Liahona, May 2010, 10–12 பார்க்கவும். பாகம் 8ல் விவரிக்கப்பட்டுள்ள, “ஆரோனின் வரத்தைப்பற்றி” அதிகத் தகவலுக்கு, “Oliver Cowdery’s Gift,” Revelations in Context, 15–19 பார்க்கவும்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:18–21, 29–37
ஒவ்வொரு சிந்தனையிலும் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கவும்.
கர்த்தருடைய பணியைச் செய்துகொண்டிருந்தபோது, ஏற்கனவே “கடினமான சூழ்நிலைகளை” ஜோசப் அனுபவித்திருந்தாலும்( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:18), அடுத்த பல ஆண்டுகளில் அந்த சூழ்நிலைகள் எவ்வளவு கடினமானதாகுமென அவருக்கும் ஆலிவருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் கர்த்தர் அறிவார் மற்றும் உங்களுடைய வருங்காலத்தில் என்ன துன்பங்கள் வருகிறதென்றும் அவர் அறிகிறார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:18–21, 29–37ல் ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் அவருடைய ஆலோசனை உங்களுக்கும் உதவமுடியும். இந்த வார்த்தைகளை கேட்ட பின்பு ஜோசப்பும் ஆலிவரும் எவ்வாறு உணர்ந்திருக்கக்கூடும்? கர்த்தரை நம்புவதற்கு உங்களுக்குதவும் எதை இந்த வசனங்களில் நீங்கள் காண்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு அதிகமாய் கிறிஸ்துவை நோக்கி நீங்கள் பார்க்க முடியும்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6-7; 9, 3, 7-14
“நீங்கள் என்னிடத்தில் வாஞ்சிக்கிறதைப்போலவே அது ஆகக்கடவது.”
பாகங்கள் 6 மற்றும் 7ல் வாஞ்சை அல்லது வாஞ்சைகள் போன்ற வார்த்தைகள் எத்தனை முறைகள் தோன்றுகின்றன என கவனிக்கவும். உங்கள் விருப்பங்களின்மேல் தேவன் வைக்கிற முக்கியத்துவத்தைப்பற்றி இந்த பாகங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 7:1ல் கர்த்தருடைய கேள்விகளை உங்களையே நீங்கள் கேளுங்கள்: “நீ வாஞ்சிப்பது என்ன?”
ஆலிவர் கௌட்ரியின் நீதியான விருப்பங்களில் ஒன்றான ஜோசப் ஸ்மித் செய்ததைப்போல மொழிபெயர்க்க விரும்பியது நிறைவேறவில்லை. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:3, 7–14 நீங்கள் வாசிக்கும்போது, உங்களுடைய நீதியான வாஞ்சைகள் நிறைவேறாமல் போகும்போது உங்களுக்குதவக்கூடிய என்ன எண்ணங்களை நீங்கள் பெறுகிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:8; டாலின் ஹெச். ஓக்ஸ், “Desire,” Ensign or Liahona, மே 2011, 42–45 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:7, 13.உண்மையான “செல்வங்கள்” நித்திய ஜீவனில் காணப்படுகின்றன என்பதை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள நீங்கள் எவ்வாறு உதவமுடியும்? (வசனம்7). போலி பணம் சம்பாதிக்க உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களை அழைத்து, மறுஸ்தாபிதத்தால் உங்கள் குடும்பம் பெற்ற அநேக ஆசீர்வாதங்களில் சிலவற்றை அதன்மேல் எழுத அல்லது வரைய வைக்கலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:15, 22–23; 8:2–3; 9:7–9.அவருடைய பிள்ளைகளிடத்தில் தேவன் எவ்வாறு பேசுகிறார் என்பதைப்பற்றி இந்த வசனங்களில் வாசித்தல், அவர் உங்களிடத்தில் எவ்வாறு பேசினாரென உங்கள் குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாயிருக்கலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:33–37.அவர்கள் பயமுள்ளவர்களாக உணரும்போதும் அவர்களால் “நன்மை செய்ய” முடிகிற வழிகளை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ள முடியும். மூப்பர் ரொனால்ட் எ. ராஸ்பான்டின் செய்திகள் எல்லாவற்றையும் அல்லது சிலவற்றைக் காண இதுவும் உதவலாம் “Be Not Troubled” (Ensign அல்லது Liahona, Nov. 2018, 18–21). “ஒவ்வொரு எண்ணத்திலும் [கிறிஸ்துவை] நோக்கிப்பார்” என்றால் அர்த்தமென்ன? (வசனம் 36). சந்தேகத்தையும் பயத்தையும் மேற்கொள்ள கர்த்தரிடம் திரும்பிய ஜனங்களின் பிற சில எடுத்துக்காட்டுகள் எவை? (உதாரணமாக, எஸ்தர் 4; ஆல்மா 26:23–31 பார்க்கவும்).
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:10.இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பெலப்படுத்தியதென்பதைப் பகிர்ந்துகொள்ள இது ஒரு அற்புதமான வாய்ப்பாயிருக்கலாம். நாம் “விசுவாசத்தில் கேட்பது” ஏன் முக்கியமாயிருக்கிறது? பதில்களை நாடுவதிலும் அல்லது விசுவாசத்தில் உதவுவதிலுமிருந்து என்ன ஆசீர்வாதங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குற்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Dare to Do Right,” Children’s Songbook, 158.
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு
ஏப்ரல் 1829ல் கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகங்கள் 6–9 பெறப்பட்ட மாதத்தில், மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்ப்பது ஜோசப்பின் முக்கிய வேலையாயிருந்தது. இந்த பதிவேடு எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டதென பின்னர் கேட்கப்பட்டபோது ஜோசப் சொன்னார் “விவரங்கள் அனைத்தையும் உலகிற்குக் கூரும் நோக்கம் அதற்கில்லை”1 “தேவனின் வரத்தாலும் வல்லமையாலும்” இது மொழிபெயர்க்கப்பட்டதென அவர் வழக்கமாக எளிமையாக சொன்னார் 2
அந்த அற்புதமான மொழிபெயர்ப்பு முறையைப்பற்றி நமக்குப் பல விவரங்கள் தெரியவில்லை, ஆனால் ஜோசப் ஸ்மித் ஒரு ஞானதிருஷ்டிக்காரர், தேவன் ஆயத்தம் செய்த கருவிகளால் உதவி செய்யப்பட்டார்: கண்ணாடி போன்ற கற்களான ஊரிம் மற்றும் தும்மீம் மற்றும் ஞானதிருஷ்டிக் கல் என்று அழைக்கப்பட்ட மற்றொரு கல் என நமக்குத் தெரியும்.3.
மொழிபெயர்ப்பு முறையை கண்கண்ட சாட்சிகளிடமிருந்து பின்வரும் அறிக்கைகள் ஜோசப் ஸ்மித்தின் சாட்சியத்தை ஆதரிக்கின்றன.
எம்மா ஸ்மித்
என்னுடைய கணவர் மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது, வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொரு வாக்கியங்களையும் அவர் சொல்லக்கேட்டு அதன் ஒரு பகுதியை நான் எழுதினேன், அவரால் உச்சரிக்கமுடியாத பெயர்களுக்கு அல்லது நீண்ட வார்த்தைகளுக்கு அவர் வந்தபோது அவைகளை அவர் உச்சரித்தார், அவைகளை நான் எழுதிக்கொண்டிருந்தபோது, நான் ஏதாவது எழுத்துப் பிழைகள் செய்திருந்தால், அந்த நேரத்தில் நான் அவற்றை எவ்வாறு எழுதுகிறேன் என்பதைப் பார்ப்பது அவருக்கு சாத்தியமில்லை என்றாலும் அவர் என்னை நிறுத்தி என்னுடைய எழுத்துப்பிழைகளை திருத்துவார். சாரா என்ற வார்த்தையைக்கூட முதலில் அவரால் உச்சரிக்கமுடியவில்லை, ஆனால் எழுத்துக்கூட்டி உச்சரிக்கவேண்டும், அவருக்காக நான் உச்சரிப்பேன்.”4
“மடித்து வைப்பதற்கு நான் அவருக்குக் கொடுத்த ஒரு சிறிய கைத்தறி மேஜை துணியால், பெரும்பாலும் மறைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் தட்டுகள், மேசையில் கிடந்தன, அவைகள் இவ்விதமாக மேசையில் கிடந்ததால், அவைகளின் வெளிப்புறத்தையும் வடிவத்தையும் உணர ஒருமுறை தட்டுகளை நான் தொட்டுப் பார்த்தேன், அவை தடிமனான காகிதத்தைப் போல வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகத் தோன்றியது, மேலும் விளிம்புகளை சில நேரங்களில் கட்டைவிரலால் செய்வது போல விளிம்புகள் கட்டைவிரலால் ஒருவர் நகர்த்தும்போது ஒரு உலோக ஒலியுடன் சலசலக்கும். …
“மார்மன் புஸ்தகம் தெய்வீக நம்பகத்தன்மையுடையது என்பது என் நம்பிக்கை, எனக்கு அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. கையெழுத்துப் பிரதிகளின் எழுத்துக்களை உணர்த்துதலில்லாமல் எந்த மனிதனாலும் சொல்லியிருக்க முடியாதென்பதில் நான் திருப்தியடைகிறேன், ஏனெனில், அவருக்கு நான் எழுத்தராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது ஜோசப் மணிக்கணக்காக எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பார், பின்னர் உணவுக்குப் திரும்பியபோது அல்லது, சில தடங்கல்களுக்குப் பின்னர், கையெழுத்துப் பிரதியைப் பார்க்காமல் அல்லது அதன் எந்தப் பகுதியும் அவருக்குப் படிக்கப்படாமல் அவர் விட்ட இடத்திலிருந்து உடனேயே ஆரம்பிப்பார். இது அவருக்கு ஒரு வழக்கமான செயலாயிருந்தது. ஒரு கற்றறிந்த மனிதனால் இதைச் செய்ய முடியும் என்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும்; மேலும், அவரைப்போல அறியாத மற்றும் கற்றறியாத ஒருவருக்கு, அது சாத்தியமற்றது”5.
ஆலிவர் கௌட்ரி
தீர்க்கதரிசியின் நாவுகளிருந்து அது வந்ததைப்போல, தேவனின் வரத்தாலும் வல்லமையாலும் அவர் மொழிபெயர்த்ததைப்போல, ஊரிம் தும்மீமின் உதவிகளால், அல்லது பரிசுத்த மொழிபெயர்ப்பாளர்கள் என புத்தகத்தில் அழைக்கப்படுகிறதைப்போல அவற்றின் உதவியால் (ஒரு சில பக்கங்களைத் தவிர) மார்மன் புஸ்தகம் முழுவதையும் என்னுடைய சொந்த எழுதுகோலால் நான் எழுதினேன். அது மொழிபெயர்க்கப்பட்ட தங்கத் தகடுகளை, நான் என் கண்களால் கண்டேன், என்னுடைய கரங்களால் கையாண்டேன். மொழிபெயர்ப்பாளர்களையும் நான் கண்டேன்.”6