கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
பெப்ருவரி 1–7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10–11: “நீங்கள் ஜெயம் கொண்டவராக வரும்படியாக”


“பெப்ருவரி 1–7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10–11: ‘நீங்கள் ஜெயம் கொண்டவராக வரும்படியாக,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“பெப்ருவரி 1–7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10-11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
மார்மன் புஸ்தகம் கையெழுத்துப் பிரதி

மார்மன் புஸ்தகத்தின் அசல் கையெழுத்துப் பிரதியின் நகல்

பெப்ருவரி 1–7

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10–11

“நீங்கள் ஜெயம் கொண்டவராக வரும்படியாக”

வேதங்களை வாசிக்கும்போது எண்ணங்களைப் பதிவுசெய்தல், விதைகளை நடுவதைப்போலாகும், சிறிய எண்ணங்களும்கூட அர்த்தமுள்ள தனிப்பட்ட வெளிப்படுத்தலுக்கு நடத்தலாம்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு முன்னேறிக்கொண்டிருந்தபோது, இயற்கையாகவே ஒரு கேள்வி எழுந்தது: காணாமற்போன அந்த பக்கங்களின் மொழிபெயர்ப்பைப்பற்றி ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் என்ன செய்தார்கள்? மறுபடியும் அந்தப் பகுதியை திரும்ப மொழிபெயர்ப்பது தர்க்கரீதியான காரியம், ஆனால், ஜோசப்பின் உணர்த்துதலான பணியைப்பற்றி சந்தேகத்தை உருவாக்க, அந்தப் பக்கங்களிலுள்ள வார்த்தைகளை மாற்றியமைக்க துன்மார்க்க மனிதர்கள் திட்டமிட்டனர் என்ற அவர்கள் பார்க்கமுடியாத ஒன்றை கர்த்தரால் பார்க்கமுடியும். சாத்தானின் முயற்சிகளை திசைமாற்றவும் காணாமற்போனவைகளை ஈடுசெய்யவும் தேவன் திட்டமொன்றை வைத்திருந்தார். அதே காலகட்டத்தை உள்ளடக்கிய இரண்டாவது பதிவை உருவாக்க உணர்த்தப்பட்டதாக தீர்க்கதரிசி நேபி உணர்ந்தபோது, இந்த திட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தப்பட்டது. பின்னர், கர்த்தர் அறிந்திருந்த “ஒரு ஞானமுள்ள நோக்கத்திற்காக” மார்மன் புஸ்தகத்திலுள்ள இந்த பதிவை சேர்க்க மார்மன் உணர்த்தப்பட்டான் (மார்மனின் வார்த்தைகள் 1:3–7 பார்க்கவும்).

கர்த்தர் ஜோசப்புக்குச் சொன்னார், “என் ஞானம் பிசாசின் தந்திரத்தைக் காட்டிலும் பெரிது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:43). விசுவாசத்தைப் பலவீனப்படுத்த எதிரியின் தொடர்ச்சியான முயற்சிகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும்போது, இது நம்முடைய நாட்களைப் போன்ற நாளில் இது ஒரு உறுதியளிக்கும் செய்தி. ஜோசப்பைப்போல நாம் செய்யவேண்டுமென தேவன் நம்மை அழைத்த பணியில் நாம் உண்மையுள்ளவர்களாக தொடர்ந்திருக்கலாம் (வசனம்3). “நமக்கெதிராக பாதாளத்தின் வாசல்கள் நிலைத்திராதிருக்கும்படி“ அவர் ஏற்கனவே ஒரு வழியைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பின்னர் நாம் கண்டுபிடிப்போம் (வசனம் 69).

பரிசுத்தவான்கள், 1:51–61 பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:1–33

தேவனின் பணியை அழிக்க சாத்தான் வகைதேடுகிறான்.

அவன் இருக்கிறான் என்பதை நாம் மறக்க அல்லது குறைந்தது அவர் நம்மை செல்வாக்கடையச் செய்கிற அவனுடைய முயற்சிகளை அடையாளங்காண நாம் தவறுவதை சாத்தான் விரும்புவான் (2 நேபி 28:22–23 பார்க்கவும்). ஆனால் தேவனுடைய பணிக்கு சாத்தான் நிரந்தரமான, தீவிரமான எதிர்ப்பிலிருக்கிறான் என கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10ல் கர்த்தரின் வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. வசனங்கள் 1–33ஐ நீங்கள் வாசிக்கும்போது, ஜோசப் ஸ்மித்தின் காலத்தில் தேவனுடைய பணியை எவ்வாறு சாத்தான் அழிக்க வகை தேடினான் என அடையாளங்காணவும் (வசனங்கள் 62–63ஐயும் பார்க்கவும்). இன்று சாத்தான் செயல்படும் வழிகளில் என்ன ஒற்றுமைகளை நீங்கள் காண்கிறீர்கள்? சாத்தான் எவ்வாறு உங்களை சோதிக்கிறான் என்பதைக் காண உதவிக்கு நீங்கள் கர்த்தரைக் கேட்கலாம். சாத்தானின் முயற்சிகளை தடுக்க உங்களுக்கு உதவக்கூடிய எதை பாகம் 10லிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:34–52

கர்த்தருடைய “ஞானம் பிசாசின் தந்திரத்தைக் காட்டிலும் பெரிது.”

2400 ஆண்டுகளுக்கு முன்பே மார்மன் புஸ்தகத்தின் காணாமற்போன பக்கங்களை ஈடுசெய்ய கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார் (1 நேபி 9 பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:34–52லிருந்து கர்த்தரைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? கர்த்தருடைய ஞானத்தின் மற்றும் முன்அறிவின் என்ன நிருபணத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காண்கிறீர்கள்?

காணாமற்போன கையெழுத்துப் பிரதியை மாற்றிவைக்க கர்த்தர் ஆயத்தப்படுத்திய பதிவு 1 நேபியிலிருந்து ஓம்னி முழுவதிலும் இப்போது காணப்படுகிறது. இந்த பதிவிலுள்ள கதைகளும் போதனைகளும் உங்களுக்கு சுவிசேஷத்தைப்பற்றி “என்ன மிகப்பெரிய பார்வையைக் [கொடுக்கின்றன]”?(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:45).

படம்
தங்கத்தகடுகளை மார்மன் சுருக்கி எழுதுதல்

மார்மன் தகடுகளை சுருக்கி எழுதுதல்–டாம் லோவல்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11

நான் தேவனிடம் கேட்டால் நான் பெறுவேன்.

அவர்களின் சார்பில் கர்த்தருடைய சித்தத்தை நாட ஜோசப் ஸ்மித்தின் ஏராளமான குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் அவரைக் கேட்டனர். அப்படிச் செய்ய ஜோசப் சந்தோஷப்பட்டார் ஆனால், அவர்களுக்கும் தனிப்பட்ட வெளிப்படுத்துதலைக் கொடுக்க கர்த்தர் விருப்பமாயிருந்தார். அவருடைய மூத்த சகோதரர் ஹைரமுக்காக கோட்பாடும் உடன்படிக்கைகளும்ல் ஜோசப் ஸ்மித் ஒரு வெளிப்படுத்தலைப் பெற்றார், அதில் கர்த்தர் சொன்னார், எனது ஆவியை நான் உனக்குக் கொடுப்பேன், … பின்னர், … நீ என்னிடத்தில் வாஞ்சித்த சகல காரியங்களையும் நீ அறிந்துகொள்வாய்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:13–14).

“நல்ல வாஞ்சையுடைய, அறுவடைக்கு தங்கள் அரிவாளை நீட்டுகிற அனைவருக்காகவும்” கர்த்தர் அவருடைய வார்த்தைகளைச் சொன்னார் (வசனம் 27). தனிப்பட்ட வெளிப்படுத்தலைப்பற்றியும் தேவனுடைய பணியில் பங்கேற்பதைப்பற்றியும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11ல் கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார்? உங்களுக்காக என்ன பிற செய்திகள் அவரிடம் உண்டு?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:15–26

“[தேவனுடைய] வார்த்தையைப் பெற நான் நாடும்போது” அவருடைய ஆவியையும் வல்லமையையும் நான் பெறுவேன்.

மார்மன் புஸ்தகம் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பே, சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்க ஹைரம் ஸ்மித் ஆர்வமுடையவராயிருந்தார். அவருடைய விருப்பங்களுக்கு கர்த்தருடைய பதிலை நீங்கள் வாசிக்கும்போது “[தேவனுடைய] வார்த்தையைப் பெற” என்பது உங்களுக்கு என்ன அர்த்தமாகிறதென்பதைக் கருத்தில்கொள்ளவும் (வசனம் 21). தேவனுடைய வார்த்தைப் பெறுதல் சபையில் சேவை செய்ய எவ்வாறு உங்களுக்குதவுகிறது? உங்களுடைய வாழ்க்கையில் அது எவ்வாறு தேவனுடைய வல்லமையைக் கொண்டுவருகிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:5.ஜெபத்தின் வல்லமையைப்பற்றி இந்த வசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் எவ்வாறு “எப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறோம்”? (சில ஆலோசனைகளுக்கு, டேவிட் எ.பெட்னர், “Pray Always,” Ensign or Liahona, Nov. 2008, 41–44 பார்க்கவும்.)

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:38–46.மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்க்கப்பட்ட காணாமற்போன பக்கங்களை கர்த்தர் எவ்வாறு ஈடுசெய்தார் என்பதை உங்களுடைய குடும்பத்தினர் கலந்துரையாட உதவ, ஒருவேளை சமீபத்தில் அவர்கள் இழந்துபோன ஒன்றைப்பற்றி குடும்ப அங்கத்தினர்கள் பேசலாம். அது காணாமற்போனதென்பதை அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? அது கண்டுபிடிக்கப்பட்டபோது அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? மார்மன் புஸ்தகத்தின் பக்கங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாமற் போனாலும், கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:38–46ன்படி அவைகளின் இழப்பை கர்த்தர் எவ்வாறு ஈடுசெய்தார்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:55–70.“நான்” அல்லது “நான் செய்வேன்” என ஆரம்பிக்கும் சொற்றொடர்களைக் கண்டுபிடிக்க அல்லது அடையாளப்படுத்த குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். இயேசு கிறிஸ்து யாரென்றும் அவர் எப்படியிருக்கிறார் என்பதைப்பற்றியும், “நான்” என்ற சொற்றொடரிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அவர் என்ன செய்கிறார் என்பதைப்பற்றி “நான் செய்வேன்” என்ற சொற்றொடர்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இயேசு கிறிஸ்துவில் அவர்களுடைய விசுவாசத்தை எவ்வாறு இந்த சத்தியங்கள் பெலப்படுத்துகிறதென்பதை பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களை ஊக்குவிக்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12–14.அவர்களோடு எப்போது பரிசுத்த ஆவியானவர் தொடர்புகொள்கிறாரென்பதை அடையாளங்காண இந்த வசனங்களை வாசித்தல் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவியாயிருக்கும். தரையில் ஒரு ஒளிரும் விளக்கால் ஒளி பரப்பி, ஒளியாயிருக்கிற இடத்தில் நகரும்படி குடும்ப அங்கத்தினர் ஒருவரை நீங்கள் அழைக்கலாம். இது எப்படி பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப்போலிருக்கும்? எந்த தனிப்பட்ட அனுபவங்களை உங்களால் பகிர்ந்துகொள்ளமுடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:15–30.சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஹைரம் ஸ்மித் ஆயத்தமாயிருக்கும்படியாக அப்படிச் செய்யும்படி கர்த்தர் அவருக்குச் சொன்ன காரியங்களை பட்டியலிட கருத்தில்கொள்ளவும். ஒரு குடும்பமாக நாம் என்ன வேலையைச் செய்யவேண்டும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Search, Ponder, and Pray,” Children’s Songbook, 109; “ உங்கள் வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள் பார்க்கவும்.”

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் வாழ்க்கையில் வேதங்களைப் பிரயோகிக்கவும். ஒரு வேத பத்தியைப் வாசித்த பின்னர், அவர்களுடைய வாழ்க்கையில் செய்தி பொருந்துகிற வழிகளைப் பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்களைக் கேட்கவும். உதாரணமாக, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12–13ல் விவரிக்கப்பட்டுள்ள வழிகளில் எவ்வாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களை செல்வாக்கடையச் செய்தாரென அவர்கள் பகிர்ந்துகொள்ளமுடியும்.

படம்
ஜோசப்பும் ஹைரம் ஸ்மித்தும்

ஜோசப்பும் ஹைரம் ஸ்மித்தும்–கென் கார்பெட்

அச்சிடவும்