“பிப்ருவரி 8–14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–13; ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:66–75: ‘என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“பிப்ருவரி 8–14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–13; ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:66–75,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
பிப்ருவரி 8–14
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–13; ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:66–75
“என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல்”
வேதங்களில் அவர்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களைப்பற்றி அவர்கள் ஜெபித்தபோது, ஜோசப் ஸ்மித்தும் ஆலிவரும் கூடுதலான அறிவைப் பெற்றார்கள் (ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:68. பார்க்கவும்). நீங்கள் எவ்வாறு அவர்களுடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றுவீர்கள்?
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
ஹார்மனி, பென்சில்வேனியா என்றழைக்கப்பட்ட ஒரு இடத்தைப்பற்றி, உலகம் சுற்றிலுமுள்ள அநேக மக்கள் ஒருவேளை ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், அவருடைய ராஜ்யத்தில் மிகக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுக்காக கர்த்தர் பெரும்பாலும் பிரபலமற்ற இடங்களைத் தேர்ந்தெடுக்கிறார். மே 15, 1829ல் ஹார்மனிக்கருகில் ஒரு வனப்பகுதியில், ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரிக்கும் யோவான் ஸ்நானன் ஒரு உயிர்த்தெழுந்தவனாக தோற்றமளித்தான். அவர்களுடைய தலைகள்மீது அவன் அவனுடைய கைகளை வைத்து, “என்னுடைய சகஊழியக்காரர்களே” என அவர்களை அழைத்து அவர்கள்மேல் ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளினான் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1).
இரட்சகருக்கு ஞானஸ்நானம் கொடுத்து, அவருடைய வருகைக்காக வழியை ஆயத்தப்படுத்திய யோவான் ஸ்நானனுடன் ஒரு சகஊழியனாக கருதப்படவேண்டும், அடக்கமாயிருந்திருக்க வேண்டும், ஒருவேளை தங்களுடைய இருபது வயதுகளிலிருந்த இந்த இரண்டு இளைஞர்களுக்கும் மிகஆர்வமாயிருந்திருக்க வேண்டும் (மத்தேயு 3:1–6, 13–17 பார்க்கவும்) அந்நேரத்தில், ஜோசப்பும், ஆலிவரும் ஹார்மனி இருந்ததைப்போல ஒப்பீட்டளவில் அறியப்படாதிருந்தார்கள். ஆனால் தேவனுடைய பணியில் சேவை என்பது எவ்வாறு என்பதைப்பற்றியது, யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றி அல்ல. ஆயினும், உங்களுடைய பங்களிப்பு சிறியதாக அல்லது காணப்படாததாக சிலநேரங்களில் தோன்றினாலும், கர்த்தருடைய மகத்தான பணியில் நீங்களும்கூட சகஊழியக்காரர்களே.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12
சீயோனை ஸ்தாபிப்பதற்கு நான் உதவ கர்த்தர் விரும்புகிறார்.
ஜோசப் ஸ்மித்துக்கு 20 வயதாயிருந்தபோது, ஜோசப் நைட் மூத்தவரும் அவருடைய மனைவி போலியும் அவரை சந்தித்தனர், கோல்ஸ்வில், நியூயார்க்கிலுள்ள அவர்களுடைய பண்ணையில் அவர் வேலை செய்ய ஆரம்பித்தார். அவரிடமிருந்த வேலையாட்களில் மிகச்சிறந்தவர் என அவரை ஜோசப் நைட் விவரித்தார். தங்கத்தகடுகளைப்பற்றிய ஜோசப் ஸ்மித்தின் சாட்சியை அவர் நம்பினார், ஹார்மனி, பென்சில்வேனியாவிலுள்ள அவருடைய வீட்டில் மார்மன் புஸ்தகத்தை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது அவரை சந்திக்க பாலியை அழைத்துப்போனார். அவள் உடனேயே நம்பினாள். அவர்களுடைய எஞ்சிய வாழ்க்கையில் ஜோசப்பும் பாலியும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திற்கு விசுவாசமுள்ளவர்களாக இருந்தார்கள். நைட் குடும்பத்தில் 60க்கும் மேலான அங்கத்தினர்கள் சபையில் சேர்ந்து, நியூயார்க், ஒஹையோ, மிசௌரி, நாவூ மற்றும் இறுதியாக சால்ட் லேக் சிட்டியில் சபையை ஸ்தாபிக்க உதவினார்கள்.
கர்த்தருடைய பணியில் அவரால் எவ்வாறு உதவ முடியுமென அறிந்துகொள்ள ஜோசப் நைட் விரும்பினார். கர்த்தருடைய பதில் “இந்த பணியைகொண்டுவந்து, ஸ்தாபிக்க வாஞ்சிக்கிற அனைவருக்கும்” (இப்போதைய கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12) உங்களையும் சேர்த்து (வசனம் 7) பொருந்துகிறது. “சீயோனுக்காக கொண்டுவந்து ஸ்தாபிக்க” என்றால் உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது? (வசனம் 6). வசனங்கள் 7–9லிலுள்ள கொள்கைகளும் பண்புகளும் இதைச் செய்ய உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
“The Knight and Whitmer Families,” Revelations in Context, 20–24ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13
யோவான் ஸ்நானனால் ஆரோனிய ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது.
ஆரோனிய ஆசாரியத்துவத்தைப்பற்றிய அநேக சத்தியங்களை வெறும் ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்தினான். இந்தப் பாகத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் பட்டியலிடுவதைக் கருத்தில்கொள்ளவும் (இந்த பாகத்தின் தலைப்பிலிருந்தும் சேர்த்து). நீங்கள் காண்கிற சில உரைகளைப் படிக்க இது உதவிகரமாக நீங்கள் காணக்கூடும். நீங்கள் தொடங்க இங்கே சில எடுத்துக்காட்டுகள்:
-
“The keys of the ministering of angels”: 2 நேபி 32:2–3; மரோனி 7:29–32; ஜெப்ரி ஆர்.ஹாலன்ட், “The Ministry of Angels,” Ensign or Liahona, Nov. 2008, 29–31; Guide to the Scriptures, “Angels,” scriptures.ChurchofJesusChrist.org
-
“The keys … of the gospel of repentance”: 3 நேபி 27:16–22; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:26–27; டேல் ஜி.ரென்லுன்ட், “The Priesthood and the Savior’s Atoning Power,” Ensign or Liahona, Nov. 2017, 64–67
-
“The sons of Levi”: எண்ணாகமம் 3:5–13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:31–34; Guide to the Scriptures, “Aaronic Priesthood,” “Levi,” scriptures.ChurchofJesusChrist.org
ஆரோனிய ஆசாரியத்துவத்தின் நியமங்கள் மூலமாக என்ன ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்?
தேவனின் வல்லமையை அணுகுதலை நியமங்கள் எனக்கு கொடுக்கிறது.
ஒத்தாசைச் சங்க பொது தலைமையில் முந்தய ஆலோசகராயிருந்த சகோதரி கரோல் எம். ஸ்டீபன்ஸ் போதித்தார்: “இரட்சகரின் பாவநிவர்த்தியால் சாத்தியமாக்கப்பட்ட நமக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களின் முழுமைக்கு அணுகுதலை ஆசாரியத்துவ நியமங்களும் உடன்படிக்கைகளும் கொடுக்கின்றன. வல்லமையுடன், தேவனுடைய வல்லமையுடன் அவைகள் தேவ குமாரர்களையும் குமாரத்திகளையும் பாதுகாக்கிறது மற்றும் நித்திய ஜீவனைப்பெற வாய்ப்புகளை நமக்குக் கொடுக்கிறது” (“Do We Know What We Have?” Ensign அல்லது Liahona, Nov. 2013, 12).
வசனம் 71ன் முடிவிலுள்ள குறிப்பையும் சேர்த்து,ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:66–75 நீங்கள் வாசிக்கும்போது, ஞானஸ்நானத்தைப்பற்றி விசாரிக்க எது ஜோசப்பையும் ஆலிவரையும் உணர்த்தியதென்பதைக் கருத்தில்கொண்டு, ஆசாரியத்துவ நியமங்களில் பங்கேற்ற பின்னர் அவர்களுக்கு வந்த ஆசீர்வாதங்களைக் கவனிக்கவும். நியமங்களைப் பெற்ற பின்னர் நீங்கள் எழுதி வைத்திருக்கக்கூடிய நாட்குறிப்பு உள்ளீடுகளை வாசித்தல் அல்லது அந்த நிகழ்ச்சிகளைப்பற்றிய உங்கள் நினைவுகளை பதிவுசெய்தலைக் கருத்தில்கொள்ளவும். ஆசாரியத்துவ நியமங்கள் மூலமாக என்ன ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20–22; பரிசுத்தவான்கள், 1:65–68ஐயும் பார்க்கவும்
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12:8..கர்த்தருடைய பணியை நாம் செய்துகொண்டிருக்கும்போது இந்த வசனத்தில் ஏன் குணாதிசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது அவசியமாயிருக்கிறது?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13..ஆரோனிய ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதத்தில் உங்கள் குடும்பத்தினரின் விசுவாசத்தை எது வளர்த்திருக்கக்கூடும்? “Restoration of the Aaronic Priesthood”ன் காணொலி (ChurchofJesusChrist.org) அல்லது இந்தக் குறிப்பில் இணைந்திருக்கிற குறிப்பு ஆரோனிய ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதத்தை உங்கள் குடும்பத்தினர் காட்சியாகப் பார்க்க உதவும். ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:68ல் அவர்கள் வாசித்ததின் அடிப்படையின்மேல் நிகழ்ச்சியின் ஒரு படத்தை வரைய அவர்கள் சந்தோஷப்படுவார்களா? அவர்களுடைய வாழ்க்கையில் ஆசாரியத்துவத்தின் வல்லமையைப்பற்றி அவர்களுடைய சாட்சிகளையும் அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
“Priesthood Restoration Site” at history.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:68.நமது கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்க ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரியின் எடுத்துக்காட்டுக்களை நாம் எவ்வாறு பின்பற்றமுடியும்? ஒருவேளை நீங்கள் ஒன்றுசேர்ந்து வாசிக்கும்போது, நிறுத்தி அவர்கள் வாசித்ததைப்பற்றி யாருக்காவது கேள்விகள் உண்டாவென கேட்பதை ஒரு வழக்கமான பழக்கமாக நீங்கள் செய்யலாம்.
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:71 குறிப்பு.ஆலிவர் கௌட்ரியின் வார்த்தையைப்பற்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு எது உணர்த்துகிறது? உங்கள் குடும்பத்தினர் சிலர் “மறக்க முடியாத நாட்கள்” எவை?
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:73–74.ஜோசப் மற்றும் ஆலிவர்மேல் பரிசுத்த ஆவியானவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்? வேதங்களைப் புரிந்துகொள்ளவும் கர்த்தரில் களிகூரவும் உங்கள் குடும்பத்தினருக்கு எப்போது பரிசுத்த ஆவியானவர் உதவினார்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Priesthood Is Restored,” Children’s Songbook, 89.