கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
பெப்ருவரி 15–21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14–17: “சாட்சியாய் நில்லுங்கள்”


“பெப்ருவரி 15–21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14–17: ‘சாட்சியாய் நில்லுங்கள்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“பெப்ருவரி 15–21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14–17,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

ஜோசப் ஸ்மித்தும் மூன்று சாட்சிகளும் ஜெபத்தில் முழங்கால்படியிடுதல்

பெப்ருவரி 15–21

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14–17

“சாட்சியாய் நிற்றல்”

அவர்கள் என்ன செய்யவேண்டுமென தேவன் விரும்புகிறாரென்பதைப்பற்றி வெளிப்படுத்தலை நாட ஜோசப் ஸ்மித்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் சிலசமயங்களில் அவரைக் கேட்டனர். இந்த வெளிப்படுத்தல்களை நீங்கள் வாசிக்கும்போது உங்களுக்கான என்ன வழிகாட்டுதல் தேவனிடமுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

மொழிபெயர்ப்பு வேலை நன்றாக முன்னேறிச் சென்றுகொண்டிருந்தாலும், மே 1829ல் ஹார்மனியில் சூழ்நிலை, ஜோசப்புக்கும், எம்மாவுக்கும், ஆலிவருக்கும் மிக மோசமாக ஆகியது. எம்மாவின் குடும்பத்தினரின் ஆதரவு குறைந்துகொண்டிருக்கும் வேளையில் அயலாரின் விரோதப்போக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. ஹார்மனி இனியும் பாதுகாப்பான இடமல்ல என உணர்ந்த ஆலிவர், ஜோசப்பின் வேலையில் ஆர்வம் காட்டிய ஒரு நண்பரான டேவிட் விட்மரை அணுகினார். சுமார் 100 மைல்களுக்கு அப்பால் பயட்டி, நியூயார்க்கில் தனது பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடனும் டேவிட் வசித்துவந்தார். ஒரு ஆண்டுக்கு முன்னால் ஆலிவரை அவர் சந்தித்திருந்தார், அப்போதிலிருந்து, தீர்க்கதரிசியுடன் வேலை செய்துகொண்டிருந்த அவருடைய அனுபவங்களைப்பற்றி ஆலிவர் ஏராளமான கடிதங்களை அவருக்கு எழுதியிருந்தார். டேவிட்டோ அவருடைய குடும்பத்தினரோ எவரும் ஜோசப்பை எப்போதுமே சந்தித்ததில்லை. ஆனால், மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பை முடிக்க அவரும் ஜோசப்பும், விட்மர் வீட்டிற்கு வரமுடியுமா என ஆலிவர் கேட்டபோது, விட்மர் குடும்பத்தினர் உடனேயே தங்கள் கதவுகளைத் திறந்தனர். வெறுமனே தீர்க்கதரிசியை தங்க வைத்ததை விட, அதிகமானவற்றை கர்த்தர் விட்மர் குடும்பத்தினருக்கு வைத்திருந்தார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14–17ல் காணப்படுகிற சில குறிப்பிட்ட அறிவுரைகளை அவர்களுக்கு அவர் வைத்திருந்தார், மற்றும் காலப்போக்கில் சபையின் அடித்தள குடும்பங்களில் ஒன்றாக அவர்கள் மாறி தொடங்கிய மறுஸ்தாபிதத்திற்கு சாட்சிகளாயினர்.

விட்மர் குடும்பத்தைப்பற்றி அதிக தகவலுக்குபரிசுத்தவான்கள், 1:68–71 பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14.

தேவனின் “பெரிதும் அதிசயமுமான கிரியையில்” நான் பங்கேற்கமுடியும்.

டேவிட் விட்மர், ஜோசப் ஸ்மித்தை சந்தித்தபோது குடும்ப பண்ணையில் தம்முடைய வேலைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு வாலிபனாயிருந்தார். ஆனால் சிலவழிகளில் அது விவசாயத்தைப் போலிருந்தாலும், டேவிட்டுக்காக கர்த்தர் மனதில் வித்தியாசமான வேலையை வைத்திருந்தார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:1–4 நீங்கள் வாசிக்கும்போது, தாவீதுக்கு நன்கு பரிச்சயமான வேலையுடன் கர்த்தர் எவ்வாறு ஒப்பிடுகிறார் என்பதைக் கவனியுங்கள். இந்த ஒப்பிடுதலிலிருந்து கர்த்தருடைய வேலையைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

நீங்கள் எவ்வாறு “[உங்கள்] அரிவாளை நீட்ட முடியும்”? (வசனம் 4). “சீயோனைக் கொண்டுவந்து ஸ்தாபிக்க வகைதேடுகிறவர்களுக்கு” (வசனம் 6) இந்த பாகம் முழுவதிலும் கொடுக்கப்படுகிற வாக்களிப்புகளைக் கவனியுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:2

தேவனுடைய வார்த்தை “ஜீவனும் வல்லமையையுமுடையது.”

தம்முடைய வார்த்தையை கர்த்தர் “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திற்கு” ஒப்பிட்டார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:2). தேவனுடைய வார்த்தையைப்பற்றி இந்த ஒப்பிடுதல் உங்களுக்கு எதை ஆலோசனையளிக்கிறது? உதாரணமாக, எவ்வாறு அவருடைய வார்த்தை ஜீவனும், வல்லமையும், கூர்மையானதுமாயிருக்கிறது? தேவனுடைய வார்த்தையின் வல்லமையை நீங்கள் எவ்வாறு அனுபவித்திருக்கிறீர்கள்?

அவருடைய வார்த்தையை தேவன் விவரிக்கிற பிற வழிகளைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, பின்வரும் பாகங்களிலுள்ள ஒப்பிடுதல்களிலிருந்து தேவனுடைய வார்த்தையைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

சங்கீதம் 119:105. 

ஏசாயா 55:10–11  

மத்தேயு 4:4. 

1 நேபி 15:23–24 

ஆல்மா 32:28 

வேதங்களில் பட்டயம்

அவருடைய வார்த்தையை தேவன் ஒரு பட்டயத்திற்கு ஒப்பிட்டார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7.

நித்திய ஜீவன், “தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலான வரம்.”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 நீங்கள் வாசிக்கும்போது, ஏன் நித்திய ஜீவன், “தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலான வரமென” சிந்தியுங்கள். தலைவர் ரசல் எம். நெல்சனிடமிருந்து வருகிற இந்த உள்ளுணர்வு உதவக்கூடும்: “தேவனின் சந்தோஷத்தின் மகா திட்டத்தின் கீழ், குடும்பங்கள் ஆலயங்களில் முத்திரிக்கப்படலாம் மற்றும் என்றென்றைக்கும் அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் வாழ திரும்பிப்போக ஆயத்தப்பட்டவர்களாயிருக்கலாம். அதுதான் நித்திய ஜீவன்!” (“Thanks Be to God,” Ensign or Liahona, May 2012, 77).

நித்திய ஜீவனைப்பற்றி அதிகமாய்ப் புரிந்துகொள்ள உங்களுக்குதவும் வசனம் 7க்கு ஒத்த வசனங்களைச் சேர்த்துக்கொள்வதைக் கருத்தில் கொள்ளவும் (“Eternal Life” in the Topical Guide or Guide to the Scriptures, scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்). நித்திய ஜீவனுக்காக முயற்சி செய்ய உங்களை உணர்த்துகிற எதை நீங்கள் கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15–16

கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களைக் கொண்டுவருவது மிக மதிப்பு வாய்ந்தது.

அவர்கள் வாழ்க்கையில் “அதிக மதிப்புடையது எதுவாயிருக்குமென” ஜான் மற்றும் பீட்டர் விட்மர் இருவரும் அறிந்துகொள்ள விருப்பமாயிருந்தனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:4; 16:4). இதைப்பற்றி நீங்கள் எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15–16 நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவிடம் ஆத்துமாக்களைக் கொண்டு வருவது ஏன் மிக மதிப்பு வாய்ந்ததென சிந்தியுங்கள். கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களை நீங்கள் எவ்வாறு அழைக்க முடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–16 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17

அவருடைய வார்த்தையை நிலைநாட்ட கர்த்தர் சாட்சிகளைப் பயன்படுத்துகிறார்.

சாட்சி என்றால் என்ன? அவருடைய பணிக்கு கர்த்தர் ஏன் சாட்சிகளைப் பயன்படுத்துகிறார்? (2 கொரிந்தியர் 13:1 பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17ல் மூன்று சாட்சிகளுக்கு தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும்போது இந்தக் கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள். மார்மன் புஸ்தகத்தில் “மூன்று சாட்சிகளின் சாட்சியங்களை” மறுபரிசீலனை செய்ய இதுவும் உதவியாயிருக்கக்கூடும். தேவனுடைய “நீதியின் நோக்கங்களைக்” கொண்டுவர எவ்வாறு சாட்சிகள் உதவுகிறார்கள்? (வசனம் 4)

மேரி விட்மரும் தங்கத் தகடுகளைப்பற்றிய சாட்சி பெற்றிருந்தாள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஜோசப்பும், எம்மாவும், ஆலிவரும் அவளுடைய வீட்டில் வசித்துக்கொண்டிருந்தபோது அவளுடைய தியாகங்களின் ஒரு அங்கீகாரமாக மரோனி தூதன் அவைகளை அவளுக்குக் காண்பித்தான் (Saints, 1:70–71பார்க்கவும்). ஒரு சாட்சியைப் பெறுதலைப்பற்றி அவளுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

பரிசுத்தவான்கள், 1:73–75; Ulisses Soares, “The Coming Forth of the Book of Mormon,” Ensign அல்லது Liahona, மே 2020, 32–35 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:1–4.இந்த வசனங்களில் விவசாயத்திற்கு சம்பந்தப்பட்ட வாக்கியங்களைக் கண்டுபிடிக்க உங்கள் குடும்பத்தினரை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். அவருடைய வேலையை அறுவடைக்கு ஏன் கர்த்தர் ஒப்பிட்டிருக்கக்கூடும்? அவருடைய வேலையில் உதவுவதற்கு நாம் என்ன செய்யமுடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:2.“தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகளில்” இந்த வசனத்திற்கான செயல்பாடு தேவனுடைய வார்த்தையைப்பற்றி சில வேத பாகங்கள் பட்டியலிடுகின்றன. அவைகளைக் குடும்ப அங்கத்தினர்கள் வாசித்து, அவர்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்ளக்கூடும். தேவனுடைய வார்த்தைக்கு “செவிகொடுக்க” இந்த வேத பாகங்கள் எவ்வாறு நம்மை உணர்த்துகின்றன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:6; 16:6 பார்க்கவும்.உங்கள் குடும்பத்துக்கு மிக மதிப்பு வாய்ந்த காரியங்களைப்பற்றிய உரையாடலை இந்த வசனங்கள் உணர்த்தலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10 ஐயும் பார்க்கவும்).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17.மூன்று சாட்சிகள் கண்ட ஒவ்வொரு பொருட்களின் படங்களை வரைவதை உங்கள் குடும்பத்தினர் ரசிக்கக்கூடும் (வசனம் 1 பார்க்கவும்). பாகம் 17 நீங்கள் வாசிக்கும்போது மார்மன் புஸ்தகத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி கற்பிக்கும் சொற்றொடர்களைத் தேடுங்கள். மார்மன் புஸ்தகத்துக்கு நாம் எவ்வாறு சாட்சிகளாக முடியும்? “A Day for the Eternities” (ChurchofJesusChrist.org) என்ற காணொலியை உங்கள் குடும்பத்தினரும் காணலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

அறிவுறுத்தப்பட்ட பாடல்: “I’ll Go Where You Want Me to Go,” Hymns, no. 270.

மறுஸ்தாபித சின்னத்தின் குரல்கள்

மறுஸ்தாபிதத்தின் குரல்கள்

லூசி மாக் ஸ்மித்தும், மூன்று மற்றும் எட்டு சாட்சிகளும்

பெயட்டி, நியுயார்க்கிலுள்ள விட்மர் வீட்டிற்கருகிலிருந்த காடுகளில் மரோனி தூதன் தங்கத் தகடுகளை ஜோசப் ஸ்மித், ஆலிவர் கௌட்ரி, டேவிட் விட்மர் மற்றும் மார்டின் ஹாரிஸூக்குக் காண்பித்தான். அந்த நேரத்தில் ஜோசப்பின் பெற்றோர் விட்மர் குடும்பத்தினரை சந்தித்தனர். சாட்சிகளின் மேல் ஏற்பட்ட இந்த அற்புதமான அனுபவத்தின் பாதிப்பை ஜோசப்பின் தாய் லூசி மாக் ஸ்மித் விவரித்தார்.

லூசி மாக் ஸ்மித்

“இது மூன்று மணிக்கும் நான்கு மணிக்குமிடையில் நடந்தது. திருமதி. விட்மரும், திரு.ஸ்மித்தும், நானும் ஒரு படுக்கையறையில் அமர்ந்திருந்தோம். நான் படுக்கைக்கருகில் அமர்ந்திருந்தேன். ஜோசப் உள்ளே வந்தபோது, அவர் ஓடிவந்து என்னருகில் விழுந்தார். ‘அப்பா! அம்மா!’ என்றழைத்தார். ‘நான் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. என்னைத் தவிர மேலும் மூன்று பேருக்கு கர்த்தர் தட்டுகளைக் காட்டியுள்ளார், அவர்கள் ஒரு தூதனையும் கண்டிருக்கிறார்கள், நான் சொன்னவை பற்றிய உண்மைக்கு அவர்கள் சாட்சியமளிக்க வேண்டும் ஏனெனில் நான் ஜனங்களை ஏமாற்றப்போவதில்லை என்பதை அவர்களாகவே அறிந்துகொண்டார்கள். ஏறக்குறைய என்னால் சகித்துக்கொள்ள முடியாது போலிருந்த ஒரு பயங்கரமான சுமையிலிருந்து விடுபட்டதாக நான் உணர்ந்தேன். ஆனால் இப்போது அவர்கள் ஒரு பங்கைத் தாங்க வேண்டியதிருக்கும், மேலும், உலகத்தில் இனிமேலும் முற்றிலுமாக நான் தனியாயில்லை என்பது என் ஆத்துமாவை களிகூரச் செய்தது.’ பின்னர் மார்டின் ஹாரிஸ் உள்ளே வந்தார். அவர் அளவுக்கதிகமான சந்தோஷத்திலிருப்பவராகக் காணப்பட்டார். பின்னர், ஆலிவர் மற்றும் டேவிட்டைப் போன்ற மற்றவர்களைப் போலவே அவர் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சியமளித்தார். மார்மன் புஸ்தகத்தில் அடங்கியிருந்ததைப் போலவே அவர்களுடைய சாட்சியமுமிருந்தது.

“ஒட்டு மொத்தத்தில், குறிப்பாக மார்டின் ஹாரிஸூக்கு அவருடைய உணர்வுகளை வார்த்தைகளில் சிறிதும் கொடுக்க முடியாததாகத் தோன்றியது. அவர் சொன்னார், ‘நான் இப்போது பரலோகத்திலிருந்து ஒரு தூதனைக் கண்டேன், அவன் பதிவேட்டைப்பற்றி நான் கேட்ட எல்லாவற்றின் உண்மைக்கும் ஒரு நிச்சயமான சாட்சியம் அளித்துள்ளான், என் கண்கள் அவனைக் கண்டன. நான் தட்டுகளையும் கண்டேன், அவைகளை என் கைகளால் கையாண்டேன், முழு உலகத்திற்கும் அதை என்னால் சாட்சியமளிக்க முடியும். ஆனால், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத, நாவுகளால் விவரிக்க முடியாத, ஒரு சாட்சியை நானே பெற்றேன், மற்றும் மனுஷ குமாரர்களின் சார்பாக அவருடைய வேலை மற்றும் வடிவமைப்புகளின் மகத்துவத்திற்கு ஒரு சாட்சியாக என்னை, என்னையும்கூட ஆக்குவதற்கு அவர் மனமிறங்கி வந்தாரென என்னுடைய ஆத்துமாவின் நேர்மையுடன் தேவனை நான் துதிக்கிறேன். தேவனுடைய நன்மைக்கும் இரக்கத்திற்குமாக அவருக்கு பயபக்தியான துதிகளுக்காக ஆலிவரும் டேவிட்டும்கூட அவருடன் சேர்ந்துகொண்டனர். ஒரு மகிழ்ச்சியான, களிகூரும் சிறிய கூட்டமிருந்த [பல்மைரா, நியூயார்க்] வீட்டிற்கு அடுத்த நாள் நாங்கள் திரும்பினோம்.”1

மூன்று சாட்சிகள்

ஆலிவர் கௌட்ரி, டேவிட் விட்மர் மற்றும் மார்டின் ஹாரிஸ் உருவப்படங்கள்–லூயிஸ் எ. ராம்ஸே

எட்டு சாட்சிகளும் தங்களுடைய அனுபவத்திலிருந்து திரும்பியபோது லூசி மாக் ஸ்மித்தும் அங்கிருந்தாள்.

“இந்த சாட்சிகள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், மீண்டும் தூதன் ஜோசப்புக்கு தோற்றமளித்தான், அந்த நேரத்தில் ஜோசப் அவனுடைய கைகளில் தட்டுகளை வழங்கினார். அந்த மாலை வேளையில் நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினோம், அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளைப்பற்றி அனைத்து சாட்சிகளும் சாட்சியமளித்தனர், மேலும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும், 14 வயது நிரம்பிய டான் கார்லோஸூம்கூட பிற்கால ஊழியக்காலத்தின் சத்தியத்தை சாட்சியமளித்தனர், பின்னர் அது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.”2

எட்டு சாட்சிகளுக்கு தங்கத் தகடுகளை ஜோசப் காட்டுதல்

ஜோசப் ஸ்மித் மற்றும் எட்டு சாட்சிகளின் சிற்பங்கள்–காரி ஏர்னஸ்ட் ஸ்மித்

ஜோசப் ஸ்மித், ஆலிவர் கௌட்ரி மற்றும் டேவிட் விட்மருக்கு மரோனி தூதன் தங்கத் தகடுகளைக் காட்டுதல்

ஜோசப் ஸ்மித், ஆலிவர் கௌட்ரி மற்றும் டேவிட் விட்மருக்கு மரோனி தூதன் தங்கத் தகடுகளைக் காட்டுதல்–காரி பி. ஸ்மித்