கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
பெப்ருவரி 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18–19: “ஆத்துமாக்களின் மதிப்பு பெரிதாயிருக்கிறது”


“பெப்ருவரி 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18–19: ‘ஆத்துமாக்களின் மதிப்பு பெரிதாயிருக்கிறது,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும்2021 (2020)

“பெப்ருவரி 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18–19,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
மார்ட்டின் ஹாரிஸின் பண்ணை

மார்ட்டின் ஹாரிஸ் பண்ணை–அல் ரவுன்ட்ஸ்

பெப்ருவரி 22–28

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18–19

“ஆத்துமாக்களின் மதிப்பு பெரிதாயிருக்கிறது”

ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குப் பதிலளிப்பதில் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டன, ஆனால் அவை போதித்த கொள்கைகள் காலவரம்பற்றவை. நீங்கள் வாசிக்கும்போது, இந்த கொள்கைகளைத் தேடி அவைகள் உங்களுக்கு எவ்வாறு பொருந்துகிறதென கருத்தில்கொள்ளவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

பல்மைரா, நியூயார்க்கில், மார்ட்டினுக்கும் லூசி ஹாரிஸூக்கும் ஒரு நேர்த்தியான பண்ணை இருந்தது. இதை சொந்தமாக்க அவர்களுக்கு பல ஆண்டுகளாகின, ஒரு குடும்பத்தை வளர்த்துக்கொண்டுவர சாத்தியமாக்கிற்று, சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையைக் கொடுத்தது. ஆனால் 1829ல், அச்சிடுபவருக்கு பணம் செலுத்த, மார்ட்டின் தனது பண்ணையை அடமானம் வைத்தால் மட்டுமே,மார்மன் புஸ்தகம் வெளியிடப்பட முடியுமென்பது தெளிவானது. மார்மன் புஸ்தகத்தைப்பற்றி மார்டினுக்கு ஒரு சாட்சியிருந்தது, ஆனால் லூசிக்கு இருக்கவில்லை. மார்ட்டின் அடமானம் வைக்க முன்வந்து, மார்மன் புஸ்தகம் நன்கு விற்பனையாகாவிட்டால், அவர் தன் பண்ணையை இழக்க நேரிட்டு, அது அவருடைய திருமண வாழ்க்கையை சீர்குலைக்கும். ஒன்று அல்லது மற்றொரு நேரத்தில் மார்ட்டின் எதிர்கொண்டிருக்கிறதைப் போன்ற அதே கேள்விகளை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எனக்கு எவ்வளவு மதிப்புடையதாயிருக்கிறது? தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்டுவதற்குதவ எதை தியாகம் செய்ய நான் விருப்பமுடையவனாயிருக்கிறேன்? தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க, “சகலத்திற்கும் மேலான” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18) இயேசு கிறிஸ்துவைவிட எவரும் எப்போதும் ஒரு உயர்ந்த கிரயத்தைச் செலுத்தவில்லை என்பதை நினைவுகூர இது நமக்கு உதவியாயிருக்கக்கூடும்.

அவருடைய பண்ணையை அடமானம் வைக்க மார்ட்டின் தீர்மானித்தார். மார்மன் புஸ்தகத்தின் முதல் 5000 பிரதிகளை அச்சடிப்பதற்காக அவருடைய தியாகம் பணம் செலுத்தியது. இப்போது, 190 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் பின்னர் அச்சடிக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆத்துமாக்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன.

மார்மன் புஸ்தகத்தின் வெளியீட்டைப்பற்றி கூடுதல் தகவலுக்கு, பரிசுத்தவான்கள், 1:76–84 பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–16

நாம் மனந்திரும்பும்போது கர்த்தர் களிகூருகிறார்.

மனந்திரும்பு மற்றும் மனந்திரும்புதல் வார்த்தைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18 மற்றும் 19முழுவதிலும் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறதென கவனிக்கவும் மற்றும் அவைகள் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தைகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்களென சிந்திக்கவும். குறிப்பாக கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–16 கருத்தில்கொள்ளவும்; மனந்திரும்புதலைப்பற்றியும், உங்கள் சொந்த மனந்திரும்புதல் மற்றும் மனந்திரும்ப மற்றவர்களை அழைக்கும் கடமையைப்பற்றியும் நீங்கள் எவ்வாறு உணருகிறீர்களென்பதை இந்த வசனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன?

ஆல்மா 36:18–21; டேல் ஜி. ரென்லன்ட், “Repentance: A Joyful Choice,” Ensign or Liahona, Nov. 2016, 121–24 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36

கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் கர்த்தருடைய குரலை நான் கேட்கமுடியும்.

கர்த்தருடைய குரல் எப்படியிருக்குமென யாராவது ஒருவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36 நீங்கள் வாசிக்கும்போது இந்தக் கேள்வியைப்பற்றி சிந்தியுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளுமை வாசிப்பதிலிருந்து கர்த்தருடைய குரலைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? அவருடைய குரலை மிகத் தெளிவாகக் கேட்க நீங்கள் என்ன செய்யமுடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:15–20

நான் மனந்திரும்பி அவரிடத்தில் நான் வரமுடியும்படிக்கு இயேசு கிறிஸ்து பாடுபட்டார்.

அதைக் கவனித்தவர்களின் கண்ணோட்டத்திலிருந்து கெத்செமனேயில் இரட்சகரின் பாடுகளை புதிய ஏற்பாடு விவரிக்கிறது. அவருடைய பாடுகளைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:15–20ல் இயேசு கிறிஸ்து அவருடைய சொந்த வார்த்தைகளில் கூறினார். இந்த பரிசுத்த, தனிப்பட்ட விவரத்தை நீங்கள் வாசிக்கும்போது இரட்சகரின் பாடுகளை விளக்குகிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும். ஒவ்வொரு வார்த்தை அல்லது சொற்றொடர்கள் உங்களுக்கு என்ன போதிக்கிறதென்பதைக் கருத்தில்கொள்ளவும். பாடுபட ஏன் இரட்சகர் வாஞ்சையுள்ளவராயிருந்தார்? இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் உங்களுக்காக அவருடைய தியாகத்தைப்பற்றியும் உங்களுடைய உணர்வுகளைப் பதிவுசெய்வதைக் கருத்தில்கொள்ளவும்.

(யோவான் 15:13; மோசியா 3:7; ஆல்மா 7:11–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13 பார்க்கவும்.

படம்
ஒரு சிறு பிள்ளையை இயேசு ஏந்தியிருத்தல்

ஒரு ஆத்துமாவின் மதிப்பு–லிஸ் லெமன் ஸ்விண்டில்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:26–27, 34–41

பூமியின் பொக்கிஷங்களைவிட தேவனின் ஆசீர்வாதங்கள் மிகப்பெரியது.

பல்மைராவில் மார்மன் புஸ்தகம் மிகநன்றாக விற்பனையாகவில்லை, அதன் விளைவாக, கடனைச் செலுத்த தன்னுடைய பண்ணையின் ஒரு பெரும் பகுதியை மார்டின் ஹாரிஸ் விற்கவேண்டியதாயிற்று (“The Contributions of Martin Harris,” Revelations in Context, 7–8 பார்க்கவும்). இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, அந்த தியாகத்தையும், அதன் மூலமாக நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும்பற்றி சிந்திக்கவும். தியாகம் செய்ய கர்த்தர் உங்களிடம் எதைக் கேட்டிருக்கிறார் என்பதைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கக்கூடும். “களிகூருதலுடனும்” “சந்தோஷத்துடனும்” இந்த தியாகங்களைச் செய்ய உங்களுக்கு உணர்த்துகிற இந்த வசனங்களிலிருந்து நீங்கள் எதைக் கண்டுபிடிக்கிறீர்கள்? (வசனங்கள் 15–20 பார்க்கவும்).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:23

இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்வதிலும் அவரைப் பின்பற்றுவதிலுமிருந்து சமாதானம் வருகிறது.

“என்னிடத்தில் கற்றுக்கொள்” என்ற இரட்சகரின் அழைப்பைக் கருத்தில்கொள்ளவும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19ல் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்களுடைய சிந்தனைகளை பதிவுசெய்து, இரட்சகரைப்பற்றிய இந்த சத்தியங்கள் சமாதானத்தைக் காண உங்களுக்கு எவ்வாறு உதவுகிறதென சிந்திக்கவும். “[அவருடைய] ஆவியின் சாந்தத்தில் நட” என்பது உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:1–5.ஒருவேளை, “அநேக சந்தர்ப்பங்கள்” சிலவற்றை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம் (வசனம் 2), அதில், ஆலிவர் கௌட்ரிக்கு அவர் செய்ததைப்போல வேதங்கள் உண்மையானவை என அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார். வேதங்களில் உங்கள் குடும்பம் எவ்வாறு “எழுதப்பட்ட காரியங்களைச் சார்ந்திருக்க முடியும்”? (வசனம் 3) உங்கள் குடும்பத்தின் அஸ்திபாரத்தை சுவிசேஷத்தின் “கன்மலையின்” மேல் எவ்வாறு நீங்கள் கட்டமுடியும்(வசனம் 4)

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13; 19:16–19.ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13 வாசித்து, ஆத்துமா, ஆத்துமாக்கள் மற்றும் சகல மனுஷரும் எனும் வார்த்தைகளின் இடங்களில் அவன் அல்லது அவளது பெயரை மாற்றி வைக்கலாம். பிதாவுக்கும் குமாரனுக்கும் நமது மதிப்பை நாம் புரிந்துகொள்ள இந்த வசனங்கள் எவ்வாறு உதவுகின்றன என பின்னர் நீங்கள் கலந்துரையாடலாம். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:16–19 பார்க்கவும்).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:21–25.உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களின் பெயர்களுக்கு விசேஷித்த அர்த்தமிருக்கிறதா? ஏன் பெயர்கள் முக்கியமானது என்பதைப்பற்றியும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்வதென்றால் என்ன அர்த்தமென்பதைப்பற்றியும் நீங்கள் பேசக்கூடும் (மோசியா 5:7 பார்க்கவும்). குடும்ப அங்கத்தினர்கள் ஞானஸ்நானம் பெறும்போது கிறிஸ்துவின் நாமத்தைத் தங்கள்மீது எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் ஆயத்தப்பட உதவ இது ஒரு நல்ல சந்தர்ப்பமாயிருக்கலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:15–20.இந்த வசனங்களுடன் உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அனுபவம் பெற அவர்களுக்குதவ, ஒருவேளை இயேசு கிறிஸ்துவின் படம் ஒன்றைக் காட்டும்போது அவைகளை நீங்கள் வாசிக்கலாம் (இந்த குறிப்புடன் ஒன்று இணைந்து வருகிறது). இரட்சகரைப்பற்றிய அவர்களுடைய உணர்வுகளை பின்னர் குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம். இரட்சகரைப்பற்றிய ஒரு பிடித்தமான பாடலும் பரிசுத்த ஆவியை அழைக்கமுடியும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Stand All Amazed,” Hymns, no. 193.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

கேள்விகள் கேட்கவும். வெளிப்படுத்தலுக்கு நடத்துகிற அந்த கேள்விகளுக்கு கோட்பாடும் உடன்படிக்கைகளும் நிருபணம். வேதங்களை நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு ஏற்படுகிற கேள்விகளை பதிவுசெய்யவும். பின்னர் பதில்களைத் தேட சிந்திக்கவும்.

படம்
கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்து ஜெபித்தல்

கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்து ஜெபித்துக்கொண்டிருத்தல்–ஹெர்மான் கிளெமன்ட்ஸ்

அச்சிடவும்