“மார்ச் 1–7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22: ‘கிறிஸ்துவின் சபையின் எழுச்சி,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“மார்ச் 1–7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
மார்ச் 1–7
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22
“கிறிஸ்துவின் சபையின் எழுச்சி”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22 நீங்கள் வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கு திறந்த மனதோடிருங்கள். அவைகளை மீண்டும் பரிசீலனை செய்ய அவைகளை பதிவுசெய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் மார்மன் புஸ்தக மொழிபெயர்ப்பு பணி இப்போது நிறைவடைந்தது. ஆனால் மறுஸ்தாபிதத்தின் வேலை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. கோட்பாட்டையும் ஆசாரியத்துவ அதிகாரத்தையும் மறுஸ்தாபிதம் செய்வதற்கும் அதிகமாக, அவருடைய சபையான ஒரு முறையான அமைப்பை மறுஸ்தாபிதம் செய்ய கர்த்தர் விரும்பினாரென்பது ஆரம்ப வெளிப்படுத்தல்களிலிருந்து தெளிவாயிருந்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:53; 18:5 பார்க்கவும்). ஆகவே, ஏப்ரல் 6, 1830ல், இயேசு கிறிஸ்துவின் சபை அமைக்கப்படுதலைக் காண, 40க்கும் அதிகமான விசுவாசிகள், பயெட்டி, நியூயார்க்கிலுள்ள விட்மர் குடும்பத்தின் மரவீட்டில் கூடினர்.
சபையின் ஒரு அமைப்பு ஏன் அவசிமென இன்னும் சில மக்கள் ஆச்சரியப்பட்டனர்? 1830ல் சபையின் அந்த முதல் கூட்டத்துடன் தொடர்புடைய வெளிப்படுத்தல்களில், குறைந்தது பகுதி பதில்கள் காணப்படக்கூடும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை பிற்காலத்தில், “ஒழுங்காக அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டிருக்கவில்லையானால்”, இங்கே, விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் சாத்தியமாயிருந்திருக்காது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:1).
பரிசுத்தவான்கள், 1:84–86; “Build Up My Church,” Revelations in Context, 29–32ஐயும் பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:1–36
உண்மையான கோட்பாட்டின் மீது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை ஸ்தாபிக்கப்பட்டது.
சபை அமைப்பு மற்றும் ஆளுகையின் வெளிப்படுத்தலாக பாகம் 20 அறிமுகப்படுத்தப்பட்டது” (பாகம் தலைப்பு). ஆனால், சபை கொள்கைகள், ஆசாரியத்துவ அலுவல்கள், நியமங்களை நடப்பித்தல்களின் நடைமுறைகளைக் குறிப்பிடுவதற்கு முன், அடிப்படை கோட்பாட்டைப் போதித்தலில் இந்த வெளிப்படுத்தல் ஆரம்பிக்கிறது. இந்த வெளிப்படுத்தலின் முதல் 36 வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, அது ஏன் அப்படியிருக்கக்கூடுமென உங்களையே நீங்கள் கேளுங்கள். நீங்கள் காண்கிற சுவிசேஷ சத்தியங்களின் ஒரு பட்டியலையும் நீங்கள் எழுதலாம். இங்கே சில எடுத்துக்காட்டுகள்:
-
மறுஸ்தாபிதத்தில் மார்மன் புஸ்தகமும் அதன் பங்கும் (வசனங்கள் 8–12)
-
தேவனின் இயல்பு (வசனங்கள் 17–19)
-
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி (வசனங்கள் 20–27)
சபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தபோது இந்த சத்தியங்கள் ஏன் வலியுறுத்தப்பட முக்கியமாயிருக்கும்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 75–79
பரிசுத்த நியமங்கள், மறுஸ்தாபிதத்தின் ஒரு அத்தியாவசிய பகுதி.
சபை ஸ்தாபிக்கப்பட்டபோது, ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தைச் சேர்த்து பரிசுத்த நியமங்களைப்பற்றி அவருடைய பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் போதித்தார். “ஞானஸ்நானத்தின் விதத்திற்கு சம்பந்தமான” அறிவுறுத்தல்களை வசனம் 37ல் நீங்கள் வாசிக்கும்போது உங்களுடைய சொந்த ஞானஸ்நானத்தைப்பற்றி சிந்திக்கவும். இந்த வசனத்தில் விவரிககப்பட்டிருக்கிற உணர்வுகள் ஏதாவது உங்களிடமிருந்ததா? இப்போது அவைகள் உங்களுக்கிருக்கிறதா? “முடிவுபரியந்தம் [இயேசு கிறிஸ்துவுக்கு] சேவை செய்ய உங்களுடைய தீர்மானத்தை” துடிப்பாக காத்துக்கொள்ள உங்களால் என்ன செய்யமுடியுமென்பதை சிந்திக்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:75–79ல் திருவிருந்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, முதன்முறையாக கேட்டுக்கொண்டிருக்கிற ஒருவரின் கண்ணோட்டத்திலிருந்து இந்தப் பரிசுத்த ஜெபங்களை வாசிக்க முயற்சி செய்யவும். திருவிருந்தைப்பற்றியும் உங்களைப்பற்றியும் என்ன உள்ளுணர்வுகளை நீங்கள் பெறுகிறீர்கள்? இந்த வாரத்தில் திருவிருந்தை எடுக்க நீங்கள் ஆயத்தப்படும் வழியை இந்த உள்ளுணர்வுகள் எவ்வாறு பாதிக்கக்கூடும்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:38–60
சபை அங்கத்தினர்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆசாரியத்துவ சேவை ஆசீர்வதிக்கிறது.
ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவரின் கடமைகளைச் சொல்ல ஒருவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஆசாரியத்துவ அலுவல்களின் வெவ்வேறு கடமைகளை பட்டியலிடுகிற கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:38–60 வாசிக்கவும். ஆசாரியத்துவ கடமைகளைப்பற்றியும், அவருடைய பணியை எவ்வாறு இரட்சகர் செய்கிறாரென்பதைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கிற விதத்தை இந்த வசனங்களிலுள்ள ஏதாவது மாற்றுகிறதா? இந்த வசனங்களில் விளக்கப்பட்டிருக்கிற பணியால் எவ்வாறு நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்?
சபையின் பணியில் ஆசாரியத்துவ அதிகாரத்தை பெண்கள் எவ்வாறு பயிற்சி செய்கிறார்களென்பதைப்பற்றி அறிந்துகொள்ள, டாலின் ஹெச்.ஓக்ஸ், “The Keys and Authority of the Priesthood,” Ensign or Liahona, May 2014, 49–52 பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21
ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசியால் இயேசு கிறிஸ்து சபை வழிநடத்தப்படுகிறது.
கர்த்தருடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–9லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவருடைய தீர்க்கதரிசி மூலமாக கர்த்தருடைய வார்த்தைகளைப் பெறுகிறவர்களுக்கு வசனம் 6ல் விவரிக்கப்பட்டிருக்கிற வாக்களிப்புகளைக் கருத்தில்கொள்ளவும். இந்த வாக்களிப்புகள் உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது
“[தேவனுடைய] சொந்த வாயிலிருந்து வருவதாக” ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தையை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள்? (வசனம் 5). வசனம் 6ல் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு நடத்தமுடிவதற்கு இன்றைய தீர்க்கதரிசி என்ன ஆலோசனையைக் கொடுத்திருக்கிறார்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20.சபை ஏன் நமக்குத் தேவை என ஒருவர் நம்மைக் கேட்டால் நான் என்ன சொல்லுவோம்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20ல் என்ன பதில்களை நாம் காண்கிறோம்? டி. டாட் கிறிஸ்டாபர்சன், “Why the Church,” Ensign அல்லது Liahona, Nov. 2015, 108–11 ஐயும் பார்க்கவும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:69..“கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தத்தில் [நடவுங்கள்]” என்பதற்கு அர்த்தம் என்ன? பரிசுத்தத்தில் நடக்க அவர்களுக்கு உதவக்கூடிய சில காரியங்களை அல்லது அப்படிச் செய்வதிலிருந்து, அவர்களை சீர்குலைக்கிற காரியங்களை காகிதத் துண்டுகளில் வரைவது அல்லது எழுதுவது குடும்ப அங்கத்தினர்களுக்கு வேடிக்கையாக இருக்கக்கூடும், பின்னர் காகிதங்களைப் பயன்படுத்தி ஒரு பாதையை உருவாக்க அவர்களால் முடியும் மற்றும் கிறிஸ்துவிடம் அவர்களைக் கொண்டுவரும் ஓவியங்களின்மேல் மட்டும் அடிஎடுத்து வைத்து நடக்க முயலவும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 71–74.உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் இன்னமும் ஞானஸ்நானம் பெறாதிருந்தால் எவ்வாறு ஞாஸ்நானத்திற்கு ஆயத்தப்படுவதென்பதைப்பற்றியும் (வசனம் 37 பார்க்கவும்), எவ்வாறு ஞானஸ்நானங்கள் நடப்பிக்கப்படுகின்றன என்பதைப்பற்றியும் ஒரு கலந்துரையாடலுக்கு இந்த வசனங்கள் நடத்தமுடியும் (வசனங்கள் 71–74 பார்க்கவும்). அவர்களுடைய ஞானஸ்நான நாளிலிருந்து படங்களை அல்லது நினைவுகளை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:75–79.திருவிருந்துடன் அர்த்தமுள்ள, பயபக்தியான அனுபவங்களுக்காக ஆயத்தப்பட இந்த வசனங்களை உங்கள் குடும்பத்தினர் எவ்வாறு பயன்படுத்தமுடியும்? திருவிருந்தின்போது உங்களால் சிந்திக்க முடிகிற காரியங்களை இந்த வசனங்கள் ஆலோசனையளிக்கக்கூடும் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் காணமுடியும் அல்லது அந்தக் காரியங்களை படங்களாக வரையமுடியும். பொருந்துகிறார்போல, திருவிருந்தின்போது எதைப்பற்றி சிந்திக்கவேண்டுமென்பதற்கு ஒரு நினைவூட்டுதலாக உங்களுடைய அடுத்த திருவிருந்து கூட்டத்திற்கு அந்த படங்களை நீங்கள் கொண்டுவரலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–7.வசனங்கள் 4–5ல், கர்த்தருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதைப்பற்றி நமக்குப் போதிக்கிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேட குடும்ப அங்கத்தினர்களை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். பொறுமையில், விசுவாசத்தில் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப் பெறுதல் என்பதற்கு அர்த்தம் என்ன? வசனம் 6ல் வாக்களிக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களை எப்போது நாம் பெற்றோம்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Church of Jesus Christ,” Children’s Songbook, 77.