“மார்ச் 8–14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26: ‘சபையைப் பெலப்படுத்துதல்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“மார்ச் 8–14. கோட்பாடும் உடன்படிக்கைகளும், 23–26” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
மார்ச் 8–14
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26
“சபையைப் பெலப்படுத்துதல்”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் நீங்கள் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் பெறுகிற எண்ணங்களை குறித்து வைக்கவும். உங்கள் சொந்த சீஷத்துவத்தையும், சபையையும் பெலப்படுத்த இந்த வெளிப்படுத்தல்களிலுள்ள ஆலோசனையை எவ்வாறு உங்களால் பிரயோகப்படுத்தமுடியும்?
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், சுவிசேஷத்தைப் பரப்பவும், அனைத்து துன்புறுத்துதலும் தொடர்ந்திருக்கும்போது, ஏற்கனவே சபையோடு இணைந்தவர்களை பெலப்படுத்துதலுமான ஒரு புதிய சவாலை பரிசுத்தவான்கள் எதிர்கொண்டனர். எதிர்ப்பை, எம்மா ஸமித் நேரில் கண்டார். ஜூன் 1830ல், எம்மாவும் நைட் குடும்பத்தின் அங்கத்தினர்களும் ஞானஸ்நானம் பெற விரும்பினார்கள். ஆனால், ஒரு பரிசுத்த அனுபவமாயிருந்திருக்க வேண்டியதை சபையின் எதிரிகள் சீர்குலைக்க முயன்றனர். முதலாவதாக, ஞானஸ்நானங்களுக்கு போதுமான தண்ணீரைக் கொடுக்க கட்டப்பட்ட அணையை அவர்கள் உடைத்தார்கள். அணை சரிப்படுத்தப்பட்ட பின்னரும் பயமுறுத்துவதற்காக கத்தவும் ஞானஸ்நானம் பெறுபவர்களைக் கேலி செய்யவும் கூடினர். பின்னர், புதிய அங்கத்தினர்களை ஜோசப் திடப்படுத்தவிருந்தபோது, மார்மன் புஸ்தகத்தைப்பற்றி பிரசங்கிப்பதால் சமுகத்தை வருத்தப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். புதியதாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட கர்த்தருடைய சபைக்கு இது சமரசமற்ற ஆரம்பாகத் தோன்றியது. ஆனால், இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் எழுச்சிக்கு மத்தியில் “யாவருக்கும் அவருடைய குரல்” என பிரதிபலிக்கிற அருமையான ஆலோசனை வார்த்தைகளையும் ஊக்குவிப்புகளையும் கர்த்தர் வழங்கினார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:16).
பரிசுத்தவான்கள், 1:89–90, 94–97ஐயும் பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26
கர்த்தருடைய சபையைப் பெலப்படுத்த என்னால் உதவமுடியும்.
இன்று, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை ஸ்தாபிக்கப்பட்டு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் “சபையைப் பெலப்படுத்தும்” தேவை தொடருகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23:3–5). இந்தப் பணி ஜோசப் ஸ்மித்துக்கும், ஆலிவர் கௌட்ரிக்கும், அல்லது நமது தற்கால சபைத் தலைவர்களுக்கும் மட்டுமல்ல, இது நம்மனைவருக்குமே. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26ன் உங்கள் படிப்பு முழுவதிலும், சபையைப் பெலப்படுத்துவதில் அவர்களுக்குதவ ஆரம்பகால சபை அங்கத்தினர்களுக்கு கர்த்தர் கொடுத்த ஆலோசனையை சிந்திக்கவும். இந்த முயற்சியில் பங்கேற்க நீங்கள் என்ன செய்யவேண்டுமென கர்த்தர் விரும்புகிறாரென நீங்கள் உணருகிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24
[என்னுடைய] “உபத்திரவங்களிலிருந்து இரட்சகர் என்னை தூக்கி விடமுடியும்”.
கடுமையான துன்புறுத்தலின் நேரத்தில் சபையை நடத்துதல் ஜோசப் ஸ்மித்துக்கு ஒரு பெரும் சுமையாக இருந்திருக்கக்கூடும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24ல் அவருக்குக் கர்த்தரின் ஊக்குவித்தலின் வார்த்தைகளைத் தேடவும்.
உங்களுடைய உபத்திரவங்களிலிருந்து உங்களை இரட்சகர் எவ்வாறு தூக்கி விடுவார் என்பதைப்பற்றி பின்வரும் வசனங்கள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:1–3
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:8
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8
உங்களுடைய உபத்திரவங்களிலிருந்து இயேசு கிறிஸ்து உங்களை எவ்வாறு தூக்கிவிட்டார்? கடினமான நேரங்களில் அவருடைய உதவியைத் தொடர்ந்து நாட உங்களால் என்ன செய்யமுடியும்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25
எம்மா ஸ்மித் “ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட பெண்.”
ஜோசப் ஸ்மித்தை எம்மா ஹேல் திருமணம் செய்தபோது அவள் தியாகங்களைச் செய்யவேண்டியதிருக்குமென அவள் அறிந்திருக்கலாம். அவளுடைய தகப்பனுக்கு விரோதமாக அவள் போய்க்கொண்டிருந்தாள், மற்றும் நிச்சயமற்ற வாழ்க்கைக்கு ஒப்பீட்டளவில் வசதியான வாழ்க்கையை விற்றுக்கொண்டிருந்தாள். மறுஸ்தாபித பணியில் கர்த்தர் அவளிடமிருந்து என்ன எதிர்பார்த்திருப்பாரென அவள் ஆச்சரியமடைந்திருக்கக்கூடும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25ல் கர்த்தர் கொடுத்திருக்கிற பதில்களைத் தேடவும். வசனம் 16ல் கர்த்தருடைய வார்த்தைகளை கவனிக்கவும், “[உங்களுக்காக] அவருடைய குரல்]” என நீங்கள் உணரும்படியாக இந்த பாகத்தில் நீங்கள் எதையாவது கண்டுபிடித்தீர்களா?
“An Elect Lady” (video, ChurchofJesusChrist.org); “Thou Art an Elect Lady,” Revelations in Context, 33–39; Joy D. Jones, “An Especially Noble Calling,” Ensign or Liahona, May 2020, 15–18ம் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 26:2
பொது ஒப்புதல் என்றால் என்ன?
சபையில் அங்கத்தினர்கள் அழைப்புகளை பெறும்போது அல்லது ஆசாரியத்துவ நியமங்களைப் பெறும்போது, அவர்களை முறையாக ஆதரிக்க, ஆதரவைக் காட்டுவதில் நமது கைகளை உயர்த்துவதற்கு நமக்கு வாய்ப்பிருக்கிறது. பொது ஆதரவையும் ஒப்புதலையும் காட்டுவதின் கொள்கை பொது ஒப்புதல் என அழைக்கப்படுகிறது. தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி போதித்ததைப்போல, ஆதரித்தலின் நடைமுறை கைகளை உயர்த்துதல் சடங்காச்சாரத்தைவிட அதிகமானதாகும். தெரிந்தெடுக்கப்பட்டவர்களை தாங்குதல், ஆதரவளித்தல், உதவுதல் ஒரு ஒப்புக்கொடுத்தலாகும்” (“This Work Is Concerned with People,” Ensign, May 1995, 51).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23:6..“[நமது] குடும்பத்திலும், நண்பர்களுக்கு மத்தியிலும், அனைத்து இடங்களிலும்” நாம் ஜெபிக்க வேண்டுமென கர்த்தர் ஏன் விரும்புகிறார்? “Love Is Spoken Here” (Children’s Songbook, 190–91) அல்லது ஜெபத்தைப்பற்றிய மற்றொரு பாடல் ஜெபத்தைப்பற்றிய என்ன வல்லமையை நமக்கு போதிக்கிறது?
2 நேபி 32:8–9; 3 நேபி 18:18–23 பார்க்கவும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:8.“உபத்திரவங்களில் பொறுமையாயிருத்தல்” என்றால் என்ன என்பதைப்பற்றி உங்கள் குடும்பத்தினரிடம் பேசுவது உதவிகரமாயிருக்குமா? இளம் பிள்ளைகள் உங்களுக்கிருந்தால், “Continue in Patience” (Ensign or Liahona, May 2010, 56; see also the video on ChurchofJesusChrist.org)ல் தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் விளக்கியுள்ள பரிசோதனையை மீண்டும் உருவாக்குதல் வேடிக்கையாயிருக்கும். பொறுமையைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:8 நமக்கு என்ன போதிக்கிறது? நம்முடைய உபத்திரவங்களில் பொறுமையாயிருக்க கர்த்தர் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:11–12.குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான துதிப்பாடல் அல்லது பாடலை ஒருவேளை நீங்கள் பாடி, ஏன் இது அவன் அல்லது அவளின் “இருதயத்தின் பாடல்” என்பதைப்பற்றிப் பேசலாம். இந்தப் பாடல்கள் எவ்வாறு “[தேவனுக்கடுத்த] ஜெபத்தைப்” போலிருக்கும்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 26:2..வேத வழிகாட்டியில் “பொது ஒப்புதலைத்” தேடுதல் உதவியாயிருக்கக்கூடும் (scriptures.ChurchofJesusChrist.org). நம்முடைய தலைவர்களுக்கான நமது ஆதரவை நாம் எவ்வாறு காட்டுகிறோம்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரத் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Lift Up Your Voice and Sing,” Children’s Songbook, 252 (see “Ideas to Improve Your Family Scripture Study”).
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
எம்மா ஹேல் ஸ்மித்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25ல் பதிக்கப்பட்டுள்ள எம்மா ஸ்மித்துக்கு கர்த்தருடைய வார்த்தைகள் அவளைப்பற்றியும், அவருடைய பணிக்காக அவளால் கொடுக்கமுடிகிற பங்களிப்புகளையும்பற்றி, அவர் எவ்வாறு உணர்ந்தாரென வெளிப்படுத்துகிறது. ஆனால் எம்மா எப்படிப்பட்டவர்? அவளுடைய ஆளுமை, அவளுடைய உறவுகள், அவளுடைய பலங்களைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? இந்த “தெரிந்தெடுக்கப்பட்ட பெண்ணைப்பற்றி” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:3) தெரியவருவதற்கு ஒரு வழி, அவளைத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்கிற மக்களின் வார்த்தைகளை வாசிப்பதாகும்.
ஜோசப் ஸ்மித் இளையவர்., அவளுடைய கணவர்
“என்னுடைய மனைவியான, என் இளமையின் மனைவியான, என் இதயம் தேர்ந்தெடுத்த என் அன்புக்குரிய எம்மாவை அந்த இரவில் கைகளால் பிடித்தபோது, சொல்ல முடியாத சந்தோஷத்துடனும், மகிழ்ச்சியின் பரிமாற்றங்களுடனும் என் நெஞ்சு விரிந்தது. நாங்கள் கடந்துசெல்லும்படியாக அழைக்கப்பட்ட காட்சிகளை ஒரு கணநேரம் நான் சிந்தித்தபோது என் மனதில் அநேக மறுஅதிர்வுகள் ஏற்பட்டன. சோர்வுகள், உழைப்புகள், துக்கங்கள், துன்பங்கள் மற்றும் மகிழ்ச்சிகளும், ஆறுதல்களும் நேரத்திற்கு நேரம் எங்கள் பாதைகளை நீட்டி எங்கள் வாழ்வுக்கு முடிசூட்டின. ஓ! கணநேரத்தில், சிந்தனையின் ஒரு இணை கலவை என் மனதை நிரப்பியது, ஏழாவது பிரச்சினையில் கூட, பயப்படாத, உறுதியான, மற்றும் அசைக்க முடியாத, மாறாத, பாசமுள்ள எம்மா, மீண்டும் அவள் இங்கே இருக்கிறாள். ”1
அவளுடைய மாமியாரான லூசி மாக் ஸ்மித்
“அவள் அப்போது இளமையாக இருந்தாள், இயற்கையாகவே லட்சியமுள்ளவளாக இருந்ததால், அவளுடைய முழு இருதயமும் கர்த்தருடைய பணியில் இருந்தது, சபையையும் சத்தியத்தின் காரணத்தையும் தவிர வேறு எந்த ஆர்வத்தையும் அவள் உணரவில்லை செய்யவேண்டிய எதைக் கண்டாலும் அவள் கைகள், தன்னுடைய பெலத்தால் அதை அவள் செய்தாள், ‘வேறு யாரையும்விட வேறு அதிகமாக எனக்குக் கிடைக்குமா?’ என்ற சுயநலமான கேள்வியை எப்போதும் அவள் கேட்டதில்லை. பிரசங்கிக்க மூப்பர்கள் அனுப்பப்பட்டால், அவளுடைய தனிப்பட்டவைகள் எதுவாயிருந்தாலும் அவர்களுடைய பயணத்திற்காக ஆடையணிவதற்கு உதவிசெய்ய அவளுடைய சேவையை முன்வந்து செய்ய அவள் முதன்மையாயிருந்தாள்.”2
சோர்வு மற்றும் கஷ்டங்களின் ஒவ்வொரு வகையையும் மாதமாதமாக சகித்துக்கொள்கிற, அவள் எப்போதும் செய்த பிரிக்கமுடியாத துணிச்சல், வைராக்கியம் மற்றும் பொறுமையுடன் ஆண்டாண்டாக செய்த ஒரு பெண்ணை நான் என் வாழ்க்கையில் என்றைக்கும் பார்த்ததில்லை, ஏனெனில், அவள் சகிக்க வேண்டியதை நான் அறிவேன்; வேறு எந்தப் பெண்ணையும் சுமந்திருக்கும் ஒரு சிக்கலான கடலில் அவள் விழுங்கப்படும் வரை நிச்சயமற்ற கடலில் அவள் தூக்கி எறியப்பட்டாள்; துன்புறுத்தலின் புயலை அவள் மார்பில் சுமந்தாள், ஆண்கள் மற்றும் பிசாசுகளின் ஆத்திரத்தைத் திருப்பி அடித்தாள்.”3
ஜோசப் ஸ்மித் மூத்தவர்., அவளுடைய மாமனார்
சபையின் கோத்திரத்தலைவனாக சேவைசெய்துகொண்டிருந்த ஜோசப் ஸ்மித் மூத்தவரால் எம்மா ஸ்மித்தின் கோத்திரத்தலைவன் ஆசீர்வாதம் அறிவிக்கப்பட்டது:
என் மருமகள் எம்மா, உன்னுடைய விசுவாசத்திற்கும் உண்மைக்கும், கர்த்தரால் நீ ஆசீர்வதிக்கப்படுகிறாய்: உன்னுடைய கணவரால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய், அவர்மேல் வருகிற மகிமையில் நீ களிகூரு: உன்னுடைய தோழனின் அழிவை நாடுகிற மனிதர்களின் துன்மார்க்கத்தினிமித்தம் உன்னுடைய ஆத்துமா அல்லல்படும், அவருடைய விடுதலைக்காக ஜெபத்தில் உன் முழுஆத்துமாவும் இழுக்கப்படும்: கர்த்தராகிய உன்னுடைய தேவன் உன்னுடைய வேண்டுதலைக் கேட்கிறபடியால் களிகூரு.
“உன்னுடைய தகப்பன் வீட்டாரின் இருதயங்களின் கடினத்திற்காக நீ துக்கப்பட்டாய், அவர்களுடைய இரட்சிப்புக்காக நீ ஏங்கினாய். உன்னுடைய அழுகைகளுக்காக கர்த்தர் மரியாதை செலுத்துவார், அவருடைய நியாயத்தீர்ப்புகளால் அவர்களில் சிலரின் முட்டாள்தனத்தைக் காணவும், அவர்களின் பாவங்களுக்காக அவர்களை மனந்திரும்பவும் செய்வார், ஆனால் உபத்திரவத்தால் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். நீ அநேக நாட்களைப் பார்ப்பாய், ஆம், நீ திருப்தியடையும்வரை கர்த்தர் உன்னை விட்டுவைப்பார், ஏனெனில் நீ உன் மீட்பரைக் காண்பாய். கர்த்தருடைய மகத்தான பணியில் உன்னுடைய இருதயம் களிகூரும், உன்னிடமிருந்து உன்னுடைய களிகூருதலை ஒருவனாலும் எடுத்துப்போட முடியாது.
நேபியர்களின் பதிவேடுகளை அவனுடைய பொறுப்பில் தூதன் கொடுத்தபோது, என்னுடைய மகனோடு நீ துணைநிற்க உன்னை அனுமதித்ததில் உன்னுடைய தேவனின் பெரிய அருள்புரிதலை நீ எப்போதும் நினைவுகூருவாய். உன்னுடைய மூன்று பிள்ளைகளை உன்னிடமிருந்து கர்த்தர் எடுத்துக்கொண்டதால் நீ அதிக துக்கத்தைக் கண்டாய்: என்னுடைய மகனின் பெயர் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒரு குடும்பத்தை வளர்க்க உன்னுடைய தூய்மையான விருப்பங்களை அவர் அறிந்திருந்ததால் இதில் நீ குற்றம் சாட்டப்படுவதில்லை. இப்பொழுது, இதோ, நான் உனக்குச் சொல்வது என்னவெனில், இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், நீ நம்பினால், இந்தக் காரியத்தில் இன்னமும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் மற்றும் உன்னுடைய ஆத்துமாவின் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும், உன்னுடைய நண்பர்களின் களிகூருதலுக்கும் பிற பிள்ளைகளை நீ கொண்டுவருவாய்.
“புரிந்துகொள்ளுதலுடன் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், உன்னுடைய இனத்திற்கு அறிவுறுத்த நீ வல்லமை கொண்டிருப்பாய். உன் குடும்பத்தினருக்கு நீதியை போதி, வாழ்க்கையின் பாதையை உன் பிள்ளைகளுக்குப் போதி, உன்னுடைய பரிசுத்த தூதர்கள் உன்னைக் கண்காணிப்பார்கள், தேவனின் ராஜ்யத்தில் நீ இரட்சிக்கப்படுவாய், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.”4