கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
மார்ச் 15–21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28: “சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்”


“மார்ச் 15–21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28: ‘சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“மார்ச் 15–21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
ஜோசப் ஸ்மித்

மார்ச் 15–21.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28

“சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்”

வேதங்களை நீங்கள் படிக்கும்போதும் எண்ணங்களைப் பதிவுசெய்யும்போதும், ”உங்கள் இருதயத்தில் தேவ வார்த்தைக்கு நீங்கள் இடங்கொடுப்பீர்கள் மற்றும் அவர் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பார்” என மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் சொன்னார் (“When Thou Art Converted,” Ensign அல்லது Liahona, மே 2004, 11).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

மறுஸ்தாபிதம் தொடர்ந்து திறக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தல் இன்னும் ஒப்பீட்டளவில் ஒரு புதிய கருத்தாய் இருந்தது. சபைக்கான வெளிப்படுத்தலை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் பெறமுடியுமென ஆரம்பகால சபை அங்கத்தினர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் மற்றவர்களால் பெறமுடிந்ததா? சபைக்கான வெளிப்படுத்தலை தான் பெற்றதாக, தங்கத்தகடுகளைப்பற்றிய எட்டு சாட்சிகளில் ஒருவரான ஹைரம் பேஜ் நம்பியபோது, இதைப்போன்ற கேள்விகள் முக்கியமாயின. இந்த வெளிப்படுத்தல்கள் தேவனிடமிருந்து வந்தன என அநேக விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் நம்பினர். தம் சபையில் “சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:13)முழு சபைக்கும் “கட்டளைகளையும், வெளிப்படுத்தல்களையும் பெற ஒருவன் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறான்“ என்ற பொருள்கொண்ட, (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2), ல் போதித்து கர்த்தர் பதிலளித்தார். அப்படியிருந்தும், கர்த்தருடைய பணியில் தங்களுடைய பங்காக தனிப்பட்ட வெளிப்படுத்தலை மற்றவர்களால் பெறமுடியும். உண்மையில், “நீ என்ன செய்யவேண்டுமென்பது … உனக்குத் தெரிவிக்கப்படும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:15) என்ற ஆலிவர் கௌட்ரிக்கு கர்த்தருடைய வார்த்தைகள் நம் அனைவருக்கும் ஒரு நினைவுபடுத்தலாயிருக்கிறது.

சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்,” Revelations in Context, 50–53 ஐயும் பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–4

தேவனுடைய மகிமைக்கென்ற ஒரே நோக்கத்துடன் நான் திருவிருந்தில் பங்கேற்கவேண்டும்.

ஜூன் 1830ல் சாலி நைட்டும் எம்மா ஸ்மித்தும் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆனால் அவர்களுடைய திடப்படுத்தல் ஒரு கும்பலால் சீர்குலைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சாலியும் அவரது கணவர் நியூவெல்லும் எம்மாவையும் ஜோசப்பையும் சந்திக்க வந்து, திடப்படுத்தல்கள் இப்போது நடப்பிக்கப்பட வேண்டுமெனவும், குழுவினர் ஒன்றுசேர்ந்து திருவிருந்தில் பங்கேற்கவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. திருவிருந்திற்காக திராட்சை ரசம் வாங்க செல்லும் வழியில் ஒரு தூதனால் ஜோசப் தடுத்து நிறுத்தப்பட்டார். திருவிருந்தைப்பற்றி தூதன் என்ன போதித்தான்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–4 பார்க்கவும்).

திருவிருந்தை நீங்கள் எவ்வாறு அணுகவேண்டுமென இரட்சகர் விரும்புகிறார் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? நீங்கள் கற்றுக் கொண்டிருப்பவைகளினிமித்தம் என்ன செய்ய உணர்த்தப்பட்டதாக உணருகிறீர்கள்?

படம்
திருவிருந்து அப்பமும் கோப்பையும்

இரட்சகரின் தியாகத்தை திருவிருந்து நமக்கு நினைவூட்டுகிறது.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18.

தீமைக்கு எதிராக நிற்க, தேவனின் சர்வாயுத வர்க்கம் எனக்கு உதவும்.

தலைவர் எம். ரசல் பல்லார்ட் சொன்னார்: “ஆவிக்குரியவிதமாக நாம் ஆயுதந்தரிக்க நாம் செய்யவேண்டிய ஒரு பெரிய, மகத்தான காரியம் இல்லை. அனைத்து தீமையிலிருந்தும் பாதுகாக்கிற, தடுக்கிற ஆவிக்குரிய அரண் என்ற ஒரு துணியில் ஒன்றாக தைக்கப்பட்டிருக்கிற ஏராளமான சிறிய செயல்களில் உண்மையான ஆவிக்குரிய வல்லமை உள்ளது” (“Be Strong in the Lord,” Ensign, July 2004, 8).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18, நீங்கள் வாசிக்கும்போது, கீழே கொடுக்கப்பட்டிருக்கிற ஒன்றைப்போன்ற ஒரு விளக்கப்படத்தை உருவாக்கலாம். தேவனின் சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு துண்டின்மேல் போட நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

நீதியின் மார்புக்கவசம்

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

இருதயம்

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

நமது ஆசைகளும் பாசங்களும்

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

இரட்சிப்பின் தலைக்கவசம்

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

தலை அல்லது மனம்

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

எபேசியர் 6:11–18; 2 நேபி 1:23 ஐயும் பார்க்கவும்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28.

அவருடைய சபைக்கு ஜீவிக்கிற தீர்க்கதரிசி தேவனின் குரலாயிருக்கிறார்.

முழு சபைக்கும் கட்டளைகளையும் வெளிப்படுத்தலையும் யாராவது ஒருவர் பெறமுடிந்தால் அது எப்படி இருக்குமென கற்பனை செய்து பாருங்கள். ஹைரம் பேஜ் அத்தகைய வெளிப்படுத்தலை பெற்றதாக சொன்னபோது சபை அங்கத்தினர்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28, அவருடைய சபையில் வெளிப்படுத்தலுக்காக ஒரு ஒழுங்கை கர்த்தர் வெளிப்படுத்தினார். சபையின் தலைவரின் குறிப்பிடத்தக்க பாத்திரத்தைப்பற்றி இந்த பாகத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? வசனம் 3ல் ஆலிவர் கௌட்ரிக்கு கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? தேவன் உங்களை எவ்வாறு வழிநடத்த முடியுமென்பதைப்பற்றி இந்த பாகத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

டாலின் ஹெச்.ஓக்ஸ் “Two Lines of Communication,” Ensign or Liahona, Nov. 2010, 83–86 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:8–9.

லாமானியர்களுக்கு ஆலிவர் கௌட்ரியின் ஊழியம் ஏன் முக்கிமானதாயிருந்தது?

‘லாமானியர்கள் தங்கள் பிதாக்களின் ஞானத்திற்குள் வரும்படிக்கு, கர்த்தரின் வாக்குத்தத்தங்களை அறிந்துகொள்ளுவதே” மார்மன் புஸ்தகத்தின் ஒரே நோக்கம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:20). அநேக மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தர் செய்த வாக்குத்தத்தங்களுடன் இது ஒத்திருந்தது (உதாரணமாக, 1 நேபி 13:34–41; ஏனோஸ் 1:11–18; ஏலமன் 15:12–13 பார்க்கவும்). அமெரிக்க செவ்விந்தியர்கள் மார்மன் புஸ்தக ஜனங்களின் சந்ததியராயிருந்தனர் என ஆரம்பகால சபை அங்கத்தினர்கள் கருதினர். அமெரிக்க செவ்விந்தியர்கள் மார்மன் புஸ்தக ஜனங்களின் சந்ததியர் என்பது இன்றைய சபையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாயிருக்கிறது [மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை ].)

பக்கத்திலிருந்த அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினருக்கு ஆலிவரின் ஊழியத்தைப்பற்றி அதிகம் வாசிக்க “A Mission to the Lamanites” (Revelations in Context, 45–49). பார்க்கவும். கர்த்தரைப்பற்றியும், அவருடைய பணியைப்பற்றியும் இந்த ஊழியம் உங்களுக்கு என்ன போதிக்கிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–2.திருவிருந்தில் நாம் பங்கேற்கும்போது, நமக்காக இரட்சகரின் தியாகத்தை நாம் எவ்வாறு சிறப்பாக நினைவுகூற முடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:5–14.இந்த வசனங்களில் தீர்க்கதரிசிகளைப்பற்றி நாம் என்ன அறிந்துகொள்கிறோம்? அவர்களைப்பற்றிய தகவலுக்கு வேத வழிகாட்டியில் நீங்கள் தேடமுடியும் (scriptures.ChurchofJesusChrist.org). அவர்கள் தரித்திருக்கிற திறவுகோல்கள் மூலமாக என்ன ஆசீர்வாதங்கள் நமக்காக திறக்கப்பட்டிருக்கின்றன? இந்த சில திறவுகோல்களைப்பற்றி அதிக தகவலுக்கு மத்தேயு 16:16–19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11–16 பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18.தொப்பிகள், உள்ளாடைகள், மேல்ஆடைகள் அல்லது காலணிகள் போன்ற கூடுதலான ஆடைகளுடன் ஒரு பாசாங்கு போரை நடித்துக்காட்டுவதை ஒருவேளை உங்கள் குடும்பத்தினர் ரசிக்கலாம். போரில் எவ்வாறு கவசம் நம்மை பாதுகாக்க உதவுகிறது? உங்கள் குடும்பம் எதிர்கொள்கிற சில தீமையான செல்வாக்குகளைப்பற்றியும் ஆவிக்குரிய கவசத்தை அணிந்துகொள்ள நீங்கள் செய்யமுடிகிற காரியங்களைப்பற்றியும் கலந்துரையாடவும். “Put on the Whole Armor of God” (ChurchofJesusChrist.org) காணொலியைக் காட்டுதலைக் கருத்தில் கொள்ளவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2–7.ஒரு தீர்க்கதரிசியின் அழைப்பைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நம்முடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசியின் கடந்த கால செய்திகளிலிருந்து குடும்ப அங்கத்தினர்கள் பரிசீலனை செய்யலாம் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற அவருடைய ஆலோசனை எவ்வாறு நமக்குதவுகிறதென பகிர்ந்துகொள்ளுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:11ஒருவருக்கு திருத்தத்தை வழங்க நாம் விரும்பும்போது “அவருக்கும் உங்களுக்குமிடையில் மட்டும்” அதைக் கையாள்வது ஏன் முக்கியமானது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Come, Listen to a Prophet’s Voice,” Hymns, no. 21.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பிற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைப் படிக்கவும். வேதங்களில் நீங்கள் காணும் கொள்கைகளைப்பற்றி பிற்கால தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் போதித்திருப்பனபற்றி வாசிக்கவும். conference.ChurchofJesusChrist.org or on the Gospel Library appல் பொது மாநாடு தலைப்பு அட்டவணையை பரிசீலனை செய்வதைக் கருத்தில்கொள்ளவும்.

அச்சிடவும்