“மார்ச் 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29: ‘இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பார்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“மார்ச் 22–28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
மார்ச் 22–28
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29
இயேசு கிறிஸ்து தம்முடைய ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பார்
நமது இரட்சிப்பிற்காக அத்தியாவசியமான கோட்பாடு, அல்லது சுவிசேஷ சத்தியங்களைக் கற்றுக்கொள்வது, வேதங்களைப் படிப்பதின் நோக்கங்களில் ஒன்று. இந்த வாரத்தில் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29 நீங்கள் படிக்கும்போது, உங்களுக்கு அர்த்தமுள்ள கோட்பாட்டின் உள்ளுணர்வுகளைத் தேடவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
1830ல் இயேசு கிறிஸ்துவின் சபை அமைக்கப்பட்டிருந்தாலும், அநேக சுவிசேஷ சத்தியங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஏராளமான ஆரம்பகால சபை அங்கத்தினர்களுக்கு கேள்விகளிருந்தன. இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்தலையும் சீயோனைக் கட்டுதலையும்பற்றி மார்மன் புஸ்தகத்தில் தீர்க்கதரிசனங்களை அவர்கள் வாசித்திருந்தார்கள் (3 நேபி 21). அது எவ்வாறு நடக்கும்? ஹைரம் பேஜ் பெற்றதாக கோரிய வெளிப்படுத்தல்கள் அந்த பொருளைப்பற்றி பேசியது, இது அங்கத்தினர்களின் ஆர்வத்தை அதிகரித்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28 பார்க்கவும்). மற்ற ஜனங்கள் ஆதாம், ஏவாளின் வீழ்ச்சி மற்றும் ஆவிக்குரிய மரணத்தைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். 1830ல் இந்த கேள்விகளை கர்த்தர் வரவேற்றார்: “எனது கட்டளையின்படி ஜெபத்தில் ஒருமித்து விசுவாசத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும், நீங்கள் பெறுவீர்கள்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:6). இன்று நமது கேள்விகளை அவர் வரவேற்கிறார்; ஜெபத்தில் அவரிடம் நாம் கேட்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார். உண்மையில் கோட்பாட்டு ரீதியாக கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29ல் வெளிப்படுத்தல் காட்டுகிறதைப்போல, நாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு அப்பால் சத்தியத்தையும் அறிவையும் அளிப்பதன் மூலம் அவர் சில சமயங்களில் பதிலளிக்கிறார்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29
நமது மேன்மையடைதலுக்காக பரலோக பிதா பரிபூரணமான திட்டத்தை ஆயத்தப்படுத்தினார்.
அவருடைய பிள்ளைகளுக்காக தேவனுடைய திட்டத்தைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29 அநேக சத்தியங்களைப் போதிக்கிறது. நீங்கள் வாசிக்கும்போது திட்டத்தின் பின்வரும் பாகங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் நீங்கள் கற்றுக்கொள்கிற சத்தியங்களைத் தேடவும்:
-
அநித்தியத்திற்கு முந்தய வாழ்க்கை (வசனங்கள் 36–37 பார்க்கவும்)
-
சிருஷ்டிப்பு (வசனங்கள் 31–33 பார்க்கவும்)
-
ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி (வசனங்கள் 40–41 பார்க்கவும்)
-
அநித்திய ஜீவியம் (வசனங்கள் 39, 42–45)
-
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி (வசனங்கள் 1, 42–43, 46–50 பார்க்கவும்)
-
உயிர்த்தெழுதல் (வசனங்கள் 13, 26 பார்க்கவும்)
-
இறுதி நியாயத்தீர்ப்பு (வசனங்கள் 12–13, 27–30 பார்க்கவும்)
என்ன புதிய உள்ளுணர்வுகளை நீங்கள் பெற்றீர்கள்? இந்த சத்தியங்களைப்பற்றி நீங்கள் அறியாதிருந்தால் உங்கள் வாழ்க்கை என்ன விதத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும்?
“The Plan of Salvation” (Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. [2018], ChurchofJesusChrist.org/manual/missionary)ல் பரலோக பிதாவின் திட்டத்தைப்பற்றி கூடுதலாக நீங்கள் படிக்கமுடியும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:1–8
அவருடைய இரண்டாம் வருகைக்கு முன் அவருடைய ஜனங்களை இயேசு கிறிஸ்து கூட்டிச் சேர்ப்பார்.
“கோழி தன் குஞ்சுகளைத் தன்னுடைய சிறகுகளுக்குள் கூட்டிச் சேர்ப்பது போல” தம்முடைய ஜனங்களை கூட்டிச் சேர்த்துக்கொண்டிருப்பதாக இயேசு கிறிஸ்து பேசுகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:2). உங்களைக் கூட்டிச்சேர்க்க இரட்சகரின் விருப்பத்தைப்பற்றி இந்த உருவம் உங்களுக்கு என்ன போதிக்கிறது? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:1–8 நீங்கள் வாசிக்கும்போது, ஏன் நாம் கூடிச்சேருகிறோம், யார் கூட்டிச்சேர்ப்பார் மற்றும் “தெரிந்துகொள்ளப்பட்டவர்களை” கூட்டிச்சேர்க்க எவ்வாறு நம்மால் உதவமுடியும் வசனம் 7 என்பதைப்பற்றிய உங்களுடைய உள்ளுணர்வுகளுக்காகத் தேடவும்.
நமது நாளில், சீயோனுக்கு கூடிச்சேருதல் என்றால் உலகமுழுவதிலும் சீயோனின் பிணையங்களில் ஒன்று சேருதல் என அர்த்தம். இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு முன் வருகிற உபத்திரவங்களுக்காக “சகல காரியங்களிலும் ஆயத்தமாயிருக்க” பரிசுத்தவான்களாக கூடிச்சேருதல் நமக்கு எவ்வாறு உதவுகிறது? (வசனம் 8}; வசனங்கள் 14–28)ஐயும் பார்க்கவும்).
விசுவாசப் பிரமாணங்கள் 1:10; ரசல் எம். நெல்சன் மற்றும் வென்டி டபுள்யு. நெல்சன், “Hope of Israel” (worldwide devotional for youth, ஜூன் 3, 2018, ChurchofJesusChrist.org)ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:31–35
“எனக்கு சகல காரியங்களும் ஆவிக்குரியவை.”
என்ன அர்த்தத்தில் சகல கட்டளைகளும் ஆவிக்குரியவை? எல்லா கட்டளைகளும் ஆவிக்குரியவை என்பதை அறிந்துகொள்ளுதல், கட்டளைகளின் நோக்கத்தைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கிறது ஒரு சில கட்டளைகளை நீங்கள் பட்டியலிட்டு, ஒவ்வொன்றுக்கும் சம்பந்தப்பட்டுள்ள ஆவிக்குரிய கொள்கைகளைக் கருத்தில் கொள்ளலாம்.
அவைகள் உலகப்பிரகாரமாக அல்லது சாதாரணமாக தோன்றினாலும் உங்களுடைய அன்றாட முயற்சிகளில் ஆவிக்குரிய அர்த்தத்திற்காக அல்லது நோக்கத்திற்காக நீங்கள் தேடினால் எது மாறக்கூடும்?
ரோமர் 8:6; 1 நேபி 15:30–32 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:36–50
வீழ்ச்சியிலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை மீட்கிறார்.
“[நமது] பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்த” (வசனம் 1) நமது மீட்பராக அவரையே கர்த்தர் அறிமுகப்படுத்தியதுடன் இந்த வெளிப்படுத்தல் ஆரம்பமாகிறது. நமக்கு ஒரு மீட்பர் தேவையென்ற சில காரணங்களை வெளிப்படுத்தல் விவரித்துக்கொண்டு போகிறது. இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மீட்பு நமக்கு ஏன் தேவையென விவரிக்க வசனங்கள் 36–50ஐ எவ்வாறு நீங்கள் பயன்படுத்தலாமென்பதைக் கருத்தில் கொள்ளவும். அநேக விசுவாச மரபுகளில் வீழ்ச்சி ஒரு சோகமானதாகப் பார்க்கப்படுகிறது; வீழ்ச்சியின் விளைவுகளை ஒரு நேர்மறையாகப் போதிக்கிற இந்த வசனங்களில் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? (1 கொரிந்தியர் 15:22; 2 நேபி 2:6–8, 15–29; மோசியா 3:1–19; மோசே 5:9–12 ஐயும் பார்க்கவும்.)
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29.இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி உங்கள் குடும்பத்தினருக்கு போதிக்க கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29ன் இந்த குறிப்பின் முடிவில் உருவங்களை நீங்கள் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஆலோசனையளிக்கப்பட்ட வசனங்களை வாசிப்பதாலும் கலந்துரையாடுவதாலும் திட்டத்தின் வெவ்வேறு பகுதிகளைப்பற்றி குடும்ப அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ளலாம். சுவிசேஷத் தலைப்புகளில் கூடுதலான சத்தியங்களை அவர்கள் கண்டுபிடிக்கலாம் (topics.ChurchofJesusChrist.org) or the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org). நீங்கள் கற்றுக்கொண்டவற்றை எழுதவும். இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி அறிந்துகொள்ள நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? அதைப்பற்றி அறிந்துகொள்ளுதல் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு ஏற்படுத்துகிறது?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:2, 7–8.இரட்சகரால் கூட்டிச்சேர்க்கப்பட்டிருப்பதென்றால் என்ன அர்த்தம்? தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச்சேர்க்க அவருக்கு நாம் எவ்வாறு உதவமுடியும்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:3–5.“[நமது] இருதயங்களை உயர்த்தி மகிழுவதற்கு” நமக்குதவுகிற இந்த வசனங்களில் இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (வசனம் 5). இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி அறிந்துகொள்ளுதல் எவ்வாறு உங்கள் குடும்பத்துக்கு சந்தோஷத்தைக் கொண்டுவந்ததென கலந்துரையாட “We Can Find Happiness” (ChurchofJesusChrist.org) காணொலி உங்களுக்கு உதவமுடியும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:34–35.கட்டளைகள் சிலவற்றிற்கு பின்னாலுள்ள ஆவிக்குரிய காரணங்களைப்பற்றி அல்லது நீங்கள் பின்பற்ற முயற்சிக்கும் தீர்க்கதரிசன ஆலோசனையைப்பற்றி பேசுவதற்கு, இந்த வசனங்களை வாசித்தல், உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கலாம். உதாரணமாக, ஒரு குடும்பமாக நாம் வேதங்களை வாசிக்க கர்த்தர் ஏன் விரும்புகிறார்? கட்டளைகளைக் கைக்கொள்ளுவதிலிருந்து என்ன ஆவிக்குரிய பயன்களை நாம் பார்க்கிறோம்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Israel, Israel, God Is Calling,” Hymns, no. 7.