கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
மார்ச் 29–ஏப்ரல் 4. ஈஸ்டர்: “நானே ஜீவிக்கிறவராயிருக்கிறேன், நானே கொலை செய்யப்பட்டவர்”


“மார்ச் 29–ஏப்ரல் 4. ஈஸ்டர்: ‘நானே ஜீவிக்கிறவராயிருக்கிறேன், நானே கொலை செய்யப்பட்டவர்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“மார்ச் 29–ஏப்ரல் 4. ஈஸ்டர்”,என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

கிறிஸ்டஸ் உருவச்சிலை

மார்ச் 29–ஏப்ரல் 4

ஈஸ்டர்

“நானே ஜீவிக்கிறவராயிருக்கிறேன், நானே கொலை செய்யப்பட்டவர்”

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இரட்சகரின் உயிர்த்தெழுதலை நினைவுகூருவதற்கு நீங்கள் ஆயத்தப்படும் போது, இயேசு கிறிஸ்து மட்டுமே தேவனின் ஒரே குமாரனும் உலக மீட்பரும் என்ற உங்கள் நம்பிக்கையை தற்கால வெளிப்பாடு எவ்வாறு ஆழப்படுத்தியுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஏப்ரல் 3, 1836, ஈஸ்டர் ஞாயிறாயிருந்தது. புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட கர்த்லாந்து ஆலயத்தில் கூடியிருந்த பரிசுத்தவான்களுக்கு திருவிருந்தை நிர்வகிக்க உதவிய பின்னர், ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரி ஆகியோர் ஆலயத்தில் ஒரு திரைக்குப் பின்னால் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அமைதியான ஜெபத்தில் வணங்கினர். பின்னர், எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்த பரிசுத்த நாளில், உயிர்த்தெழுந்த இரட்சகரே அவருடைய ஆலயத்தில் தோன்றி, “நானே ஜீவிக்கிறவராயிருக்கிறேன், நானே கொலை செய்யப்பட்டவர்” என அறிவித்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:4).

இயேசு கிறிஸ்து “ஜீவிக்கிறவர்” என்று சொல்வதன் அர்த்தம் என்ன? மூன்றாம் நாளில் அவர் கல்லறையிலிருந்து எழுந்து அவருடைய கலிலேய சீஷர்களுக்குத் தோன்றினார் என்று அர்த்தமல்ல. அவர் இன்று ஜீவிக்கிறார் என்று அர்த்தம். அவர் இன்று தீர்க்கதரிசிகள் மூலம் பேசுகிறார். இன்று அவருடைய சபையை அவர் நடத்துகிறார். காயமடைந்த ஆத்துமாக்களையும் உடைந்த இருதயங்களையும் அவர் இன்று குணப்படுத்துகிறார். ஆகவே, ஜோசப் ஸ்மித்தின் சக்திவாய்ந்த சாட்சியத்தின் வார்த்தைகளை நாம் எதிரொலிக்க முடியும்: “அவரைப்பற்றி கொடுக்கப்பட்ட அநேக சாட்சிகளுக்குப் பின்னர், எல்லாவற்றிற்கும் கடைசியாக, அவரைப்பற்றி நாங்கள் கொடுக்கிற சாட்சி இதுவே: அவர் ஜீவிக்கிறார்!“(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:22). இந்த வெளிப்பாடுகளில் அவருடைய குரலை நாம் கேட்கலாம். நம் வாழ்வில் அவருடைய கரத்தை நாம் காண முடியும். நாம் ஒவ்வொருவரும் உணர முடியும் “இந்த வாக்கியம் அளிக்கும் மகிழ்ச்சி: ‘என் மீட்பர் வாழ்கிறார் என்பது எனக்குத் தெரியும்!’” (Hymns, no. 136).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:5; 38:7; 62:1; 76:11–14, 20–24; 110:1–10

இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் பலமுறை உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பார்த்தார், இந்த அனுபவங்களில் இரண்டு, கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகங்கள் 76:11–14, 20–24; 110:1–10, வாசிக்கும்போது, ஜோசப் ஸ்மித்தின் சாட்சியத்தைப்பற்றி உங்களுக்கு உணர்த்துவது யாது? அவருடைய சாட்சியம் உங்களுக்கு ஏன் மதிப்புமிக்கது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் முழுவதும், இரட்சகர் தனது சொந்த ஊழியம் மற்றும் தெய்வீகத்துக்கு சாட்சி கொடுத்தார். கோட்பாடும் உடன்படிக்கைளும் 29:5; 38:7; 62:1அவரது வார்த்தைகளிலிருந்து ஜீவிக்கும் கிறிஸ்துவைப்பற்றி நாம் என்ன கற்கிறோம்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் படிக்கும்போது நீங்கள் கண்டறிந்த அறிவிப்புகளைப் பதிவுசெய்வதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:17ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:26–27; 42:45–46; 63:49; 88:14–17, 27–31; 93:33–34

இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், நான் உயிர்த்தெழுப்பப்படுவேன்.

அன்புக்குரியவர்களின் மரணத்திற்கு துக்கிப்பது எப்படிப்பட்ட உணர்வாக இருக்கும் என்று ஜோசப் ஸ்மித் அறிந்திருந்தார். அவரது சகோதரர்களில் இருவரான ஆல்வின் மற்றும் டான் கார்லோஸ் இளைஞர்களாக மரித்தனர். ஒவ்வொன்றும் இரண்டு வயதுக்கு குறைவான ஆறு குழந்தைகளை ஜோசப் மற்றும் எம்மா அடக்கம் செய்தனர். ஆனால் அவர் பெற்ற வெளிப்பாடுகளிலிருந்து, ஜோசப் மரணம் மற்றும் தேவனின் நித்திய திட்டத்தைப்பற்றிய நித்திய கண்ணோட்டத்தைப் பெற்றார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:26–27; 42:45–46; 63:49; 88:14–17, 27–31; 93:33–34ல் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை கருத்தில் கொள்ளவும். இந்த வெளிப்பாடுகள் நீங்கள் மரணத்தைப் பார்க்கும் விதத்தை எவ்வாறு பாதிக்கின்றன? நீங்கள் வாழும் விதத்தை அவைகள் எப்படி பாதிக்கமுடியும்?

1 கொரிந்தியர் 15; M. Russell Ballard, “The Vision of the Redemption of the Dead,” Ensign or Liahona, Nov. 2018, 71–74; Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 174–76ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13; 19:16–19; 45:3–5; 76:69–70

இயேசு கிறிஸ்து ஒரு “பரிபூரண பாவநிவர்த்தி” செய்தார்.

ஈஸ்டர் நேரத்தில் இரட்சகரின் மீது கவனம் செலுத்துவதற்கான ஒரு வழி, அவருடைய பாவநிவாரண பலியைப்பற்றி கற்பிக்கும் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் வெளிப்பாடுகளைப் படிப்பது ஒரு விதமாகும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13; 19:16–19; 45:3–5; 76:69–70ல் இவற்றில் சில காணப்படுகின்றன. இந்த வசனங்களில் நீங்கள் காணும் இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றிய உண்மைகளின் பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். “Atone, Atonement” (Guide to the Scriptures, scriptures.ChurchofJesusChrist.orgலிலுள்ள உங்கள் படிப்பை ஆழப்படுத்த, பட்டியலிடப்பட்ட வசன குறிப்புகளைத் தேடுவதன் மூலம் உங்கள் பட்டியலில் சேர்க்கலாம்).

உங்கள் ஆய்வுக்கு வழிகாட்டக்கூடிய சில கேள்விகள் இங்கே:

  • இயேசு கிறிஸ்து ஏன் பாடனுபவிக்க தேர்ந்தெடுத்தார்?

  • அவருடைய பலியின் ஆசீர்வாதங்களைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?

  • அவருடைய பிராயச்சித்தம் என் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று நான் எப்படி சொல்ல முடியும்?

இயேசு ஜெபித்தல்

ஜெபத்தின் கர்த்தர்–யாங்சுங் கிம்

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

பொது மாநாடு.பொது மாநாடு இந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வருவதால், மாநாட்டு செய்திகள் (இசை உட்பட) உங்கள் குடும்பத்தின் இயேசு கிறிஸ்துவின் சாட்சியத்தை எவ்வாறு ஆழமாக்கும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். உதாரணமாக, சிறு பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய செய்தியையோ பாடலையோ கேட்கும்போது இரட்சகரின் படத்தை வரையலாம் அல்லது அவரைப்பற்றிய ஒரு படத்தை வைத்திருக்கலாம். மற்ற குடும்ப அங்கத்தினர்கள் இரட்சகரைப்பற்றி அவர்கள் கேட்கும் சத்தியங்களின் பட்டியலை உருவாக்க முடியும். பின்னர், குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் வரைபடங்கள் அல்லது பட்டியல்களையும் இயேசு கிறிஸ்துவின் சொந்த சாட்சியங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:14–17; 138:17, 50.மரித்து உயிர்த்தெழுப்பப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை விளக்குவதற்கு உங்கள் குடும்பம் ஒரு ஒப்புமை அல்லது பொருள் பாடத்தை நினைத்து மகிழலாம், இது சரீரமும் ஆவியும் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒரு கை மற்றும் கையுறை போன்ற ஒன்றிணைவதை விளக்குகிறது. இந்த வசனங்கள் இரட்சகர் நமக்காக என்ன செய்தார் என்பதற்கான பாராட்டுகளை எவ்வாறு ஆழப்படுத்துகிறது?

ஜீவிக்கிற கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சியங்கள்தற்கால தீர்க்கதரிசிகளின் இரட்சகர் குறித்த சாட்சியங்களைப்பற்றிய விவாதத்தை ஊக்குவிக்க, “The Living Christ: The Testimony of the Apostles” (Ensign or Liahona, May 2017, உட்புற அட்டை) ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் ஒரு பகுதியைப் படிக்க நீங்கள் நியமிக்கலாம். பின்பு இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் கற்றதை பகிரலாம். “Apostle Testimony Montage” (ChurchofJesusChrist.org) காணொலியையும் நீங்கள் காட்டலாம். நமக்கு உணர்த்தும் எந்த உண்மைகளை நாம் காண்கிறோம்?

“I Know That My Redeemer Lives.”உயிர்த்தெழுந்த மீட்பர் இன்று நம்மை ஆசீர்வதிக்கும் பல வழிகளைக் கருத்தில் கொள்ள உங்கள் குடும்பத்திற்கு உதவ, “I Know That My Redeemer Lives” (Hymns, no.136) நீங்கள் ஒன்றாகப் பாடலாம், இந்த பாடலில் கற்பிக்கப்பட்ட உண்மைகளை பின்வரும் வசனங்களில் கற்பிக்கப்பட்டவைகளுடன் இணைக்கவும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:34; 45:3–5; 84:77; 98:18; 138:23. உங்கள் மீட்பர் ஜீவிக்கிறார் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள் என்பதை வெளிப்படுத்தும் பாடலுக்காக கூடுதல் வசனங்களை எழுதுவதையும் உங்கள் குடும்பத்தினர் ரசிக்கலாம்.

ஒரு ஈஸ்டர் காணொலி மற்றும் பிற ஆதாரங்களுக்காக, Easter.ComeUntoChrist.org பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Jesus Has Risen,” Children’s Songbook, 70.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

அன்றாட விஷயங்களில் பாடங்களைக் கண்டறியவும். உங்கள் குடும்ப அங்கத்தினர்களின் அன்றாட அனுபவங்கள் ஒரு சுவிசேஷ சத்தியத்தைப்பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (Teaching in the Savior’s Way, 4) பார்க்கவும். உதாரணமாக, தேவன் தனது பிள்ளைகளுக்கு எவ்வாறு ஆசீர்வாதம் அளிக்கிறார் என்பதைப்பற்றி பேச ஒரு மழைக்காற்று ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.

ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரிக்கு இயேசு தோன்றுதல்

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரிக்கு இயேசு கிறிஸ்து தோன்றுதல்–வால்ட்டர் ரானே