“ஜனுவரி 11–17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:27–65: ‘பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“ஜனுவரி 11–17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:27–65,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
ஜனுவரி 11–17
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:27–65
“பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும்”
இதற்கு முன்பு அநேக முறைகள் நீங்கள் வாசித்திருந்த வேதங்களாயிருந்தாலும், வேதங்களை நீங்கள் வாசிக்கிற ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குதவமுடியும் ஆகவே புதிய உள்ளுணர்வுகளுக்கும் உணர்த்துதலுக்கும் திறந்த மனதோடிருங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
பிதாவாகிய தேவனும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த தோப்பில் ஜோசப் ஸ்மித்துக்குத் தரிசனமளித்து மூன்றாண்டுகளாகிவிட்டன, ஆனால் அப்போதிலிருந்து எந்த கூடுதலான வெளிப்படுத்தல்களையும் ஜோசப் பெறவில்லை. கர்த்தருக்கு முன்பு தான் நின்றுகொண்டிருந்ததைப்பற்றி அவர் ஆச்சரியப்பட ஆரம்பித்தார். நம் அனைவரையும்போல அவர் தவறுகளைச் செய்திருந்தார், அவைகளினிமித்தம் கண்டனம் செய்யப்பட்டதாக அவர் உணர்ந்தார். இருந்தும், அவர் செய்யவேண்டிய வேலை தேவனிடமிருந்தது. ஜோசப் செய்யுமாறு அழைக்கப்பட்ட வேலை, தேவன் நம்மிடம் கேட்கிற வேலையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மார்மன் புஸ்தகத்தை ஜோசப் வெளிக்கொண்டுவருவார், அதனுடன் நாம் என்ன செய்ய கேட்கப்படுகிறோம்? பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்ப ஆசாரியத்துவ திறவுகோல்களை ஜோசப் பெறுவார், நமது இருதயங்களை நம் முன்னோர்களிடத்திற்கு எவ்வாறு நாம் திருப்புகிறோம்? சீக்கிரமே நிறைவேற்றப்படுகிற தீர்க்கதரிசனங்கள் ஜோசப்புக் கூறப்பட்டன, அவைகள் நிறைவேற உதவுவதில் நமது பங்கு என்ன? தேவனுடைய பணியில் நாம் பங்கேற்கும்போது, தீர்க்கதரிசி செய்ததைப்போல, எதிர்ப்பையும், துன்புறுத்தலையும்கூட எதிர்கொள்ள நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், ஜோசப்புக்கு அவர் செய்ததைப்போல, அவருடைய கரங்களில் கர்த்தர் நம்மைக் கருவிகளாக்குவார் என்றும் நமக்கு விசுவாசமிருக்கலாம்.
பரிசுத்தவான்கள், 1:20–48ஐயும் பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
நான் செய்யவேண்டிய வேலையை எனக்காக கர்த்தர் வைத்திருக்கிறார்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:27–33 நீங்கள் வாசிக்கும்போது, ஜோசப் ஸ்மித்துக்கு அவர் செய்ததைப்போல நீங்கள் செய்யவேண்டிய ஒரு வேலையை கர்த்தர் வைத்திருக்கிறார் என கருத்தில் கொள்ளவும். தலைவர் ரசல் எம். நெல்சனிடமிருந்து வரும் இந்த அழைப்பைப்பற்றி சிந்திக்கவும்: “உங்களைப்பற்றியும் இங்கே பூமியில் உங்கள் ஊழியத்தைப்பற்றியும் அவர் எவ்வாறு உணருகிறாரென இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய பரலோக பிதாவைக் கேளுங்கள். உண்மையான நோக்கத்துடன் நீங்கள் கேட்டால், வாழ்க்கை மாற்றத்தின் சத்தியத்தை பரிசுத்த ஆவியானவர் மெல்லிய குரலில் சொல்வார். … உங்கள் பரலோக பிதா உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதற்கான ஒரு பார்வையை அவருக்காக செய்யவேண்டியதை உங்கள்மேல் நம்பிக்கொண்டிருப்பதை, நீங்கள் புரிந்துகொள்ளும்போது, வாழ்க்கை ஒருபோதும் ஒரேமாதிரியாயிருப்பதில்லை!” (“Becoming True Millennials” [worldwide devotional for young adults, Jan. 10, 2016], broadcasts.ChurchofJesusChrist.org).
வசனங்கள் 28–29ல் ஜோசப் உணர்ந்ததுபோல சிலநேரங்களில் நீங்கள் உணரக்கூடும். நீங்கள் செய்யவேண்டுமென தேவன் அழைத்த வேலையுடன் உங்கள் செயல்கள் சீரானதாய் இல்லாமலிருக்கும்போது என்ன செய்யவேண்டுமென்பதைப்பற்றி ஜோசப்பின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளமுடியும்?
மார்மன் புஸ்தகத்தில் “நித்திய சுவிசேஷத்தின் முழுமை” அடங்கியிருக்கிறது.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:34-65 நீங்கள் வாசிக்கும்போது, மார்மன் புஸ்தகத்தைப்பற்றி நீங்கள் ஒருபோதும் கேள்விப்படாதிருந்தால், இந்த வசனங்களில் என்ன விவரங்கள் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கக்கூடுமென்பதைக் கருத்தில்கொள்ளவும். ஒரு விசுவாசியாக, மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய உங்கள் சாட்சிக்கு இந்த விவரம் ஏன் முக்கியமாயிருக்கிறது?
ஏசாயா 29:4, 11–18லிலுள்ள தீர்க்கதரிசனங்களை மார்மன் புஸ்தகம் எவ்வாறு நிறைவேற்றுகிறதென்பதைக் கருத்தில்கொள்ளவும்.
சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் பழங்காலத்து தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியது.
ஏசாயா 11; அப்போ. 3:22–23; மற்றும் யோவேல் 2:28–32 போன்ற பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் ஏராளமான தீர்க்கதரிசனங்களை ஜோசப்புக்கு மரோனி மேற்கோள் காட்டினான். ஜோசப் அறிந்துகொள்ளும்படிக்கு இந்த தீர்க்கதரிசனங்கள் ஏன் முக்கியமானதாயிருந்திருக்கக் கூடும்? நீங்கள் அறிந்துகொள்ள ஏன் அவைகள் முக்கியமானதாயிருக்கிறது?
எதை எலியா மறுஸ்தாபிதம் செய்தான்?
தலைவர் ஹென்றி பி. ஐரிங் சொன்னார், “எலியாவை அனுப்புவதாக ஏன் கர்த்தர் வாக்களித்தாரென அறிந்துகொள்வது முக்கியமானதாயிருக்கிறது. தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட மகா வல்லமையுடன் எலியா ஒரு பெரிய தீர்க்கதரிசியாயிருந்தான். தம்முடைய பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கிற மகா வல்லமையை அவன் தரித்திருந்தான்: பூமியில் கட்டப்படவும் பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கவுமான வல்லமையான முத்திரிக்கும் வல்லமையை அவன் தரித்திருந்தான்” (“Hearts Bound Together,” Ensign or Liahona, May 2005, 78).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:13–16; டேவிட் எ. பெட்னார், “Let This House Be Built unto My Name,” Ensign or Liahona, May 2020, 84–87ஐயும் பார்க்கவும்.
என்னுடைய முன்னோர்களிடத்திற்கு என் இருதயத்தைத் திருப்பும்படியாக எலியா வந்தான்.
இந்த பாகத்தில் “நடுதல்”, “இருதயங்கள்” மற்றும் “திருப்புதல்” போன்ற வார்த்தைகள், எலியாவின் ஊழியம் மற்றும் அவன் மறுஸ்தாபிதம் செய்த ஆசாரியத்துவ திறவுகோல்களின் ஆசீர்வாதங்களைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கின்றன? உங்களுடைய முன்னோர்களை நோக்கி உங்கள் இருதயங்கள் திரும்புவதைக்குறித்து நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? அத்தகைய உணர்வுகளை மிக அடிக்கடி நீங்கள் அனுபவிக்க முடிகிற வழிகளைப்பற்றி சிந்திக்கவும். ஒருவேளை, உங்களுடைய முன்னோர்கள் ஒருவரைப்பற்றி ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு உறவினரை நீங்கள் கேட்கலாம், இன்னும் சிறப்பாக நீங்கள் அதை பதிவு செய்யலாம். சுவிசேஷ நியமங்களை ஒருபோதும் பெற்றிராத மரித்த ஒரு முன்னோரை நீங்கள் அடையாளங்கண்டு, பின்னர் அந்த பணியை ஆலயத்தில் நடத்தலாம்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:28-29.அவருடைய தவறுகளைப்பற்றி ஜோசப் ஸ்மித் எவ்வாறு உணருகிறார்? அந்த உணர்வுகளுக்கு பதிலாக அவர் என்ன செய்தார்? நாம் தவறுகள் செய்யும்போது என்ன செய்யவேண்டுமென்பதைப்பற்றி அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
-
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:33-54.ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:33–42லிருந்து மரோனியின் செய்தியின் பகுதியை அல்லது முழுவதையும் நான்கு முறைகள் உரக்க வாசிக்க குடும்ப அங்கத்தினர்களில் ஒருவரை நீங்கள் கேட்கலாம். (இந்த செய்தியை நான்கு முறைகள் மரோனி திரும்பச் சொன்னதால்) ஒவ்வொரு வாசிப்புக்குமிடையில், வேதங்களைப் பார்க்காமல் அவனுடைய செய்தியிலிருந்து அவர்கள் எதை நினைவு வைத்திருக்கிறார்களென்பதைப் பகிர்ந்துகொள்ள குடும்ப அங்கத்தினர்கள் பிறரைக் கேட்கவும். முக்கிய செய்திகளை பல முறைகள் ஏன் கர்த்தர் திரும்பச் சொல்லியிருக்கக்கூடும்? திருப்பிச் சொல்வதன்மூலம் கர்த்தர் நமக்குப் போதிக்கிற சில பிற வழிகள் யாவை?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2:2.“பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்களிப்புகளைப்” புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்குதவ ஒன்றாக ஆபிரகாம் 2:9–11 வாசிக்கலாம் அல்லது “Special Witnesses of Christ—President Russell M. Nelson” (ChurchofJesusChrist.org) காணொலியை நீங்கள் பார்க்கலாம். ஆபிரகாமுடன் செய்த அவருடைய உடன்படிக்கையின் பகுதியாக தேவன் செய்த வாக்களிப்புகளை அடையாளங்காணவும். நமது இருதயங்களில் இந்த வாக்களிப்புகளை நாம் எவ்வாறு “நடுவோம்”?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2:2–3.தங்களுடைய பிதாக்களிடத்தில் (அல்லது முன்னோர்கள்) தங்களுடைய இருதயங்களைத் திருப்ப குடும்ப அங்கத்தினர்களுக்குதவ, ஒரு முன்னோரைப்பற்றி அறிந்துகொள்ளவும், எஞ்சிய குடும்பத்தினருடன் அவர்கள் கற்றுக்கொண்டவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் அவர்களை நீங்கள் அழைக்கலாம். நமது குடும்ப அங்கத்தினர்களைப்பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களுக்கு ஆலய நியமங்களை நாம் நடப்பிக்கவும் கர்த்தர் ஏன் விரும்புகிறார்? குடும்ப வரலாறு மற்றும் ஆலயப்பணியில் நாம் பங்கேற்கும்போது நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்? (Dale G. Renlund, “Family History and Temple Work: Sealing and Healing,” Ensign or Liahona, May 2018, 46–49 பார்க்கவும்).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Family History—I Am Doing It,” Children’s Songbook, 94.