“ஜனுவரி 18–24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3–5: ‘எனது பணி நடந்தேறும்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“ஜனுவரி 18–24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
ஜனுவரி 18–24
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3–5
“எனது பணி நடந்தேறும்”
வேதங்களை நீங்கள் படிக்கும்போது நீங்கள் கற்றுக்கொள்வதையும் உணருவதையும் எழுதிவையுங்கள். அந்த எண்ணங்களை நினைவுகூரவும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இது உங்களுக்குதவும்,
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
அவருடைய முதல் சில ஆண்டுகளில், கர்த்தருடைய தீர்க்கதரிசியாக ஜோசப் ஸ்மித், அவர் செய்ய அழைக்கப்பட்ட அற்புதமான கிரியைப்பற்றி எல்லாவற்றையும் இன்னமும் அறிந்திருக்கவில்லை. ஆனால், தேவனுடைய பணிக்கு தகுதியாயிருக்க, அவருடைய ஆரம்பகால அனுபவங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்த ஒரு காரியம், அவருடைய கண்கள் உண்மையாகவே “தேவனுடைய மகிமைக்கென்ற ஒரே நோக்கத்துடனிருந்திருக்கவேண்டும்” கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:1, 5 உதாரணமாக, கர்த்தர் அவருக்குக் கொடுத்த ஆலோசனை அவருடைய சொந்த விருப்பங்களுக்கு எதிராயிருந்தால், அவர் கர்த்தருடைய ஆலோசனையைப் பின்பற்றவேண்டும். அவன் “அநேக வெளிப்படுத்தல்களைப் பெற்றிருந்தாலும், அநேக பெரும் செய்கைகளைச் செய்ய வல்லமை பெற்றிருந்தாலும்“, தேவனுடைய விருப்பத்தைவிட அவனுடைய கண்களில் அவனுடைய விருப்பம் மிக முக்கியமானதாக மாறினால், அவன் “விழவேண்டும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:4). ஆனால் தேவனுடைய பணியைச் செய்வதைப்போன்ற முக்கியமான வேறொன்றை ஜோசப் கற்றுக்கொண்டார்: “தேவன் இரக்கமுள்ளவர்,” மற்றும் ஜோசப் உண்மையாக மனந்திரும்பினால் அவர் “இன்னமும் தெரிந்துகொள்ளப்பட்டவரே” (வசனம் 10). தேவனின் பணி எல்லாவற்றிற்கும் மேலாக மீட்பின் பணி. அந்த பணி “தடைபடுவதில்லை” (வசனம் 1).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:1–15
மனிதனுக்குப் பயப்படுதலைவிட நான் தேவனை நம்பவேண்டும்.
ஜோசப் ஸ்மித்தின் ஆரம்பகால ஊழியத்தில், குறிப்பாக, ஒரு மதிப்புமிக்க ஆதரவை வழங்கும் நிலையில் இருந்த மரியாதைக்குரிய, வளமான மனிதரான மார்ட்டின் ஹாரிஸைப்போன்ற நண்பர்களான நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினமாயிருந்தது. இது அவருடைய சகாக்களின் மரியாதையை பாதிப்பதாயிருந்தாலும், பண சம்பந்தமான தியாகங்களைச் செய்யவேண்டியதிருந்தாலும் மார்ட்டின் மனமுவந்து ஜோசப்பை ஆதரித்தார்.
ஆகவே, மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய உண்மையை சந்தேகித்த மார்ட்டின் மனைவிக்கு மார்மன் புஸ்தக மொழிபெயர்ப்பின் முதல் பகுதியைக் காட்ட எடுத்துப்போக அவருடைய வேண்டுகோளுக்கு மரியாதை கொடுக்க ஏன் ஜோசப் விரும்பினார் என்பதைப் பார்ப்பது எளிது. இந்த வேண்டுகோளை தேவன் நிராகரித்திருந்தாலும், இதைப்பற்றி ஜோசப் கர்த்தரிடம் கேட்பதைத் தொடர்ந்தார். இறுதியாக, மூன்றாவது முறையாக ஜோசப் கேட்ட பிறகு கர்த்தர் ஆம் என்றார். துரதிருஷ்டமாக, கையெழுத்துப் பிரதி மார்ட்டின் வசமிருந்தபோது காணாமற்போனது, ஜோசப்பும் மார்ட்டினும் கர்த்தரால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர் (Saints, 1:51–53 பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:1–15 நீங்கள் வாசிக்கும்போது, பிறரின் கருத்துக்கள் எவ்வாறு உங்களை செல்வாக்கடையச் செய்க்கூடும் என சிந்திக்கவும். ஜோசப் ஸ்மித்தைக் கண்டிப்பதற்கும் மேலாக, இரக்கமான வார்த்தைகளை கர்த்தர் பேசினார் என்பதையும் நீங்கள் கவனிக்கக்கூடும். ஜோசப்பைத் திருத்திய மற்றும் ஊக்குவித்த இரண்டிலுமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? தேவனைவிட மற்ற மக்களுக்கு பயப்பட நீங்கள் சோதிக்கப்படும்போது உங்களுக்கு உதவக்கூடிய என்ன ஆலோசனையை நீங்கள் கண்டீர்கள்?
“The Contributions of Martin Harris,” Revelations in Context, 1–9, history.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.
என்னுடைய முழுஇருதயத்தோடும் அவருக்கு சேவை செய்ய கர்த்தர் என்னிடம் கேட்கிறார்.
பாகம் 4 பெரும்பாலும் முழுநேர ஊழியர்களுக்குப் பொருத்தமாயிருக்கிறது. இருப்பினும், ஒரு ஊழியத்திற்கு அழைக்கப்படாத ஆனால் இன்னும் தேவனுக்கு சேவை செய்ய விருப்பங்களிருக்கிற ஜோசப் ஸ்மித் மூத்தவருக்கு இந்த வெளிப்படுத்தல் முதலாவதாகக் கொடுக்கப்பட்ட, இது கவனிக்க சுவாரஸ்யமாயிருக்கிறது” (வசனம் 3).
கர்த்தருடைய வேலையைச் செய்ய விரும்புகிற ஒருவருக்கான வேலை விளக்கமாக இதைக் கற்பனை செய்வது, இந்தப் பாகத்தை வாசிக்க ஒரு வழி. தகுதிகள் எவை? இந்த திறன்கள் அல்லது குணாதிசயங்கள் ஏன் அவசியமாயிருக்கிறது? “பணிக்கு [உங்களையே] நீங்கள் சிறப்பாகத் தகுதியுள்ளவராக்க” முடிகிற ஒரு காரியத்தை ஒருவேளை நீங்கள் ஜெபத்தோடே தேர்ந்தெடுக்கலாம் (வசனம் 5).
மார்மன் புஸ்தகம் குறித்த எனது சொந்த சாட்சியை நான் பெற முடியும்.
மார்மன் புஸ்தகத்தின் உண்மைத்தன்மையைப்பற்றி நீதிமன்றத்தில் சாட்சியளிக்க நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன நிருபணத்தை நீங்கள் சமர்ப்பீர்கள்? தங்கத் தகடுகளை மொழிபெயர்ப்பதாக பாசாங்கு செய்து ஜோசப் ஸ்மித் மக்களை ஏமாற்றுவதாக மார்ட்டின் ஹாரிஸின் மனைவி லூசி, கோரிக்கை வைத்தபோது, அதைப்போன்ற கேள்வி அவர் மனதிலும் எழுந்தது (பரிசுத்தவான்கள், 1:56–58. பார்க்கவும்). ஆகவே, தங்கத்தகடுகள் உண்மையானதா என்பதற்கான கூடுதல் ஆதாரங்களை ஜோசப்பிடம் மார்ட்டின் கேட்டார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5மார்ட்டினின் வேண்டுகோளின் பதிலுக்கான வெளிப்படுத்தல்.
பின்வருவனபற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5லிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்:
-
அவர்களிடம் ஆதாரம் இல்லாவிட்டால் ஆவிக்குரிய சத்தியங்களை நம்பாதவர்களைப்பற்றி கர்த்தர் என்ன கருதுகிறார் (வசனங்கள் 5–8 பார்க்கவும்; யோவான் 20:24–29)ஐயும் பார்க்கவும்.
-
கர்த்தருடைய பணியில் சாட்சிகளின் பங்கு (வசனங்கள் 11–15 பார்க்கவும்; 2 கொரிந்தியர் 13:1ஐயும் பார்க்கவும்).
-
மார்மன் புஸ்தகத்தைப்பற்றி நீங்களே ஒரு சாட்சியை எவ்வாறு பெறுவது (வசனம் 16பார்க்கவும்; மரோனி 10:3–5ஐயும் பார்க்கவும்).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5:1–10
ஜோசப் ஸ்மித் மூலமாக இந்த தலைமுறை தேவனின் வார்த்தையைப் பெறுவார்கள்.
நம்முடைய ஊழியக்காலத்திலும், உங்களுடைய வாழ்க்கையிலும் ஜோசப் ஸ்மித்தின் முக்கியமான பாத்திரத்தைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5:1–10 உங்களுக்கு என்ன போதிக்கிறது? தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக தேவனுடைய வார்த்தையை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்களென்பதைப்பற்றி சிந்திக்கவும். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட அல்லது அவர் மூலமாக தெளிவுபடுத்தப்பட்ட சத்தியங்களுக்காக உங்களுடைய நன்றியுணர்வை ஒரு நாட்குறிப்பில் எழுதி வைக்க அல்லது ஒருவருடன் பகிர்ந்துகொள்வதைக் கருத்தில்கொள்ளவும்.
(2 நேபி 3:6–24 ஐயும் பார்க்கவும்.)
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:1–4.ஒரு “வளைந்த” கோட்டிலும் பின்னர் ஒரு “நேரான” கோட்டிலும் நடக்க ஒரு குடும்ப அங்கத்தினரைக் கேட்கவும். “[தேவனின்] பாதை நேரானதென” நம்முடைய குடும்பத்தினர் அறிந்துகொள்ளுவது என்பதற்கு அர்த்தம் என்ன?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:7–10.தேவனுக்கு கீழ்ப்படியாதிருக்க ஒருவர் நமக்கு அழுத்தம் கொடுக்கும்போது, விசுவாசத்தில் நிலைத்திருக்க இந்த வசனங்களிலுள்ள எந்த சத்தியங்கள் நமக்குதவ முடியும்? தேவனுக்குக் கீழ்ப்படியாதிருக்க அழுத்தமிருந்தபோதிலும் ஒருவர் விசுவாசத்தில் நிலைத்திருப்பதின் ஒரு சூழ்நிலையை ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் நடித்துக்காட்டமுடியும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4.தேவனுடைய களத்தில் வேலை செய்வதென்பதற்கு அர்த்தமென்ன என உங்கள் குடும்பத்தினர் கலந்துரையாடுகிறபோது தோட்டத்தில் சிலவேலைகளை அவர்கள் செய்யலாம் அல்லது (பாசாங்கு செய்யலாம்). தோட்ட வேலைக்கு என்ன கருவிகள் தேவைப்படுகிறது? அவருடைய வேலையைச் செய்வதற்கு தேவைப்படுகிறதாகக் கருதப்பட முடிகிற எதை வசனம் 4ல் தேவன் விவரிக்கிறார்? தேவனுடைய வேலையைச் செய்வதில் ஏன் ஒவ்வொரு கருவியும் முக்கியமானதென உங்கள் குடும்பத்தினர் கலந்துரையாடலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5:7.நாம் நம்புகிற ஆனால் பார்க்கமுடியாத சத்தியங்களின் சில எடுத்துக்காட்டுகள் எவை? மார்மன் புஸ்தகம் உண்மையானதென்பதற்கு நிருபணம் தேவைப்படுகிற ஒரு நண்பருக்கு நம்மால் எவ்வாறு பதிலளிக்கமுடியும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Will Be Valiant,” Children’s Songbook, 162.