“டிசம்பர் 13–19. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்: ‘சிருஷ்டிகரின் திட்டத்துக்கு குடும்பம்தான் மையமானது’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“டிசம்பர் 13–19. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
டிசம்பர் 13–19
குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்
“சிருஷ்டிகரின் திட்டத்துக்கு குடும்பம்தான் மையமானது”
தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் சொன்னார்: “குடும்ப பிரகடனத்தைப்பற்றிய நமது மனநிலையும், பயன்பாடும், இந்த தலைமுறைக்கு ஒரு [பரீட்சை] என நான் நம்புகிறேன். அந்த பரீட்சையில் பிற்காலப் பரிசுத்தவான்கள் அனைவரும் உறுதியாக நிற்க வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.” (“The Plan and the Proclamation,” Ensign or Liahona, Nov. 2017,31). இந்த வாரம் குடும்ப பிரகடனத்தைப் படிக்கும்போது இந்த வார்த்தைகளை சிந்தியுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
நாம் பிறப்பதற்கு முன்பே, நாம் ஒரு குடும்பத்தின், நமது பரலோக பெற்றோரின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தோம். அவர்களின் பிரசன்னத்தை விட்டு வெளியேற நேரம் வந்தபோது, பூமியில், குடும்பங்களும் தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை அறிந்தது ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். பூமியிலுள்ள மாதிரி, பரலோகத்தில் சரியான மாதிரியை பிரதிபலிப்பதாகும்.
பூமியின் குடும்பங்கள் சிறந்தவையாகவோ அல்லது செயல்படக்கூடியவையாகவோ இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்ததுபோல, “பெற்றோரின் அன்பு என்று பரலோகத்தில் நாம் உணர்ந்ததற்கு நெருக்கமாக வருகிற பூமியில் உள்ள ஒரே அன்புடன் உலகத்திற்குள் வரவேற்கப்பட சிறந்த வாய்ப்பை குடும்பங்கள் தேவனின் பிள்ளைகளுக்கு வழங்குகின்றன.” (“Gathering the Family of God,” Ensign or Liahona, May 2017,20). குடும்பங்கள் பூரணமற்றவை, சத்துருவின் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன என்பதை அறிந்த தேவன், நம்மை மீட்டு நமது குடும்பங்களை குணமாக்க தனது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் ஒரு பிரகடனத்துடன் பிற்கால தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பினார். நாம் தீர்க்கதரிசிகளைப் பின்பற்றி இரட்சகரின் மீது விசுவாசம் வைத்தால், பூமியில் உள்ள குடும்பங்கள் தெய்வீக இலட்சியத்தில் குறைந்தாலும், பூமியிலும் பரலோகத்திலும், குடும்பங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
“குடும்பம் இரட்சகரின் திட்டத்துக்கு மையமானது.”
“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம் தெளிவாகவே குடும்பங்களைப்பற்றியது. ஆனால் அது, தேவனின் இரட்சிப்பின் திட்டத்திற்கும் சமமானதாகும். நம்முடைய அநித்தியத்திற்கு முந்தைய, அநித்தியத்திற்கு மற்றும் அநித்தியத்திற்குப் பிந்தய வாழ்க்கையைப்பற்றி என்ன கற்பிக்கிறது என்பதைத் தேடுவது பிரகடனத்தைப் படிப்பதற்கான ஒரு வழி. பிரகடனத்தை இந்த வழியில் படிக்கும்போது நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? தேவனின் திட்டத்திற்கு திருமணமும் குடும்பமும் ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
டாலின் ஹெச். ஓக்ஸின், “The Plan and the Proclamation,” Ensign or Liahona, Nov. 2017, 28–31 ஐயும் பார்க்கவும்.
“குடும்பம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மேல் அமைக்கப்படும்போது, குடும்ப வாழ்வின் சந்தோஷத்தை அநேகமாக அடையக் கூடும்.”
குடும்ப பிரகடனத்தின் ஆறு மற்றும் ஏழாம் பத்திகளை “குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு” ஒரு மாதிரியாக நினைத்துப் பாருங்கள். இந்த பத்திகளைப் படிக்கும்போது, “வெற்றிகரமான திருமணங்கள் மற்றும் குடும்பங்களின்” கொள்கைகளை அடையாளம் காணவும். பின்பு நீங்கள் பலப்படுத்த விரும்பும் குடும்ப உறவைப்பற்றி சிந்தியுங்கள். நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? உங்கள் முயற்சிகளில் மீட்பரை எவ்வாறு ஈடுபடுத்துவீர்கள்?
எனது குடும்பத்தினரை நான் நடத்தும் விதத்தில் நான் “தேவனுக்கு முன்பாக பொறுப்பேற்க வைக்கப்படுவேன்”.
பரலோக பிதா அவருடைய ஆலோசனையைப் பின்பற்றுபவர்களுக்கு அளிக்கும் அற்புதமான ஆசீர்வாதங்களை குடும்ப பிரகடனம் , உள்ளடக்கியுள்ளது. பின்பற்றாதவர்களுக்கு வலுவான எச்சரிக்கைகளும் இதில் அடங்கியுள்ளது. நீங்கள் காணும் ஆசீர்வாதங்கள் மற்றும் எச்சரிக்கைகளின் பட்டியலை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும்.
பிரகடனத்திலுள்ள தேவனின் ஆலோசனையின் பேரில் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள்? நீங்கள் இன்று தேவனுக்கு முன்பாக நின்றிருந்தால், உங்கள் குடும்ப உறவுகள் குறித்து அவருடன் என்ன கலந்துரையாடலாம் என நம்புகிறீர்கள்? நீங்கள் எதை மேம்படுத்த வேண்டும்?
ஆல்மா 5:15–22; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:22–25; 93:39–44 ஐயும் பார்க்கவும்.
எனது குடும்பச்சூழல் இலட்சியத்தை விட குறைவாக இருந்தால் நான் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற முடியுமா?
மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் போதித்தார்: “திருமணம் மற்றும் குடும்பத்துடன் தொடர்புடைய அடிப்படை உண்மைகளை அறிவிப்பது என்பது, இலட்சியமானது தற்போது யதார்த்தமாக இல்லாதவர்களின் தியாகங்களையும் வெற்றிகளையும் கவனிக்காமலிருக்கவோ மங்கவைக்கவோ இல்லை. … அனைவருக்கும் வரங்கள் உள்ளன; அனைவருக்கும் தாலந்துகள் உள்ளன; ஒவ்வொரு தலைமுறையிலும் தெய்வீக திட்டத்தின் விரிவாக்கத்திற்கு அனைவரும் பங்களிக்க முடியும். நல்லவையான அனைத்தும், அத்தியாவசியமான அனைத்தும், சில சமயங்களில் இப்போதைக்கு அவசியமான அனைத்தும், சிறந்த சூழ்நிலைகளை விட குறைவாகவே அடைய முடிகின்றன. … இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி எதிர்பார்த்திருந்தது என்றும், இறுதியில், அவரிடம் திரும்புவோருக்கு அனைத்து இழப்பையும் மற்றும் இழக்கச் செய்தலையும் ஈடுசெய்யும் என்றும் நம்பிக்கையுடன் சாட்சியமளிக்கிறோம். பிதா தனது பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் எல்லாவற்றையும் விட குறைவாக பெற யாரும் தீர்மானிக்கப்படவில்லை” (“Why Marriage, Why Family,” Ensign or Liahona, May 2015,52).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
“பாலினம் என்பது தனிப்பட்ட அநித்தியத்துக்கு முந்தய, அநித்திய மற்றும் நித்திய அடையாளம் மற்றும் நோக்கத்தின் ஒரு அத்தியாவசிய பண்பு ஆகும்.”பாலினம் மற்றும் ஒரே பாலின ஈர்ப்பு தொடர்பான கோட்பாட்டைப்பற்றி கலந்துரையாடுதல் உங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருந்தால், பின்வரும் ஆதாரங்கள் உதவக்கூடும்: டாலின் ஹெச். ஓக்ஸ், “Truth and the Plan,” Ensign or Liahona, Nov. 2018, 25–28; Gospel Topics, “Same-Sex Attraction,” topics.ChurchofJesusChrist.org.
-
“தெய்வீக மகிழ்ச்சியின் திட்டம்.”பரலோக பிதாவின் திட்டத்தில் குடும்பங்களின் முக்கியத்துவத்தைக் காண உங்கள் குடும்பத்திற்கு உதவ, நீங்கள் அநித்தியத்துக்கு முந்தய வாழ்க்கை, அநித்திய வாழ்க்கை, மற்றும் மரணத்திற்குப் பிந்தய வாழ்க்கை ஆகியவற்றை காகிதத்தின் மூன்று பிரிவுகளில் எழுதலாம். பிரகடனத்தை ஒன்றாகத் தேடுங்கள், தேவனின் திட்டத்தின் இந்த ஒவ்வொரு பகுதியையும்பற்றி நீங்கள் கற்றுக்கொண்டவற்றை காகிதத்தில் எழுதுங்கள். குடும்பங்கள் தேவனுக்கு ஏன் மிக முக்கியம்?
-
“குடும்பங்கள் நித்தியமாக ஒன்றாக இருக்க [முடியும்].”“Plan of Salvation—We’re Still a Family” (ChurchofJesusChrist.org) காணொளியை நீங்கள் பார்க்கலாம். காணொளியில் உள்ள இளைஞன் புரிந்துகொண்ட, மற்றும் விசுவாசம் பெற அவனுக்கு உதவிய சத்தியங்களுக்காக குடும்ப பிரகடனத்தில் தேடுங்கள்.
-
“குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி.”“[உங்கள்] குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை” எவ்வாறு அடைவது என்பதைப்பற்றி கலந்துரையாட, நீங்கள் குடும்பங்களைப்பற்றிய “Home Can Be a Heaven on Earth” (Hymns, no.298) போன்ற ஒரு பாடலை ஒன்றாகப் பாடலாம். நமது குடும்பத்திற்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் பாடல் மற்றும் குடும்ப பிரகடனம் ஆகியவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நமது குடும்பம் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது” என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? இந்த வாரத்தில் நீங்கள் முயற்சி செய்ய விரும்பும் ஒரு போதனையைத் தேர்ந்தெடுப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
-
“சமூகத்தின் அடிப்படை அங்கமாக குடும்பத்தை பலப்படுத்துங்கள்.”உலகில் உள்ள குடும்பங்களை பலவீனப்படுத்த சாத்தான் எவ்வாறு முயற்சிக்கிறான்? குடும்பங்களை வலுப்படுத்த நம் பங்கை எவ்வாறு செய்ய முடியும்? ஆலோசனைகளுக்கு தலைவர் போனி எல். ஆஸ்கர்சனின் செய்தி, “Defenders of the Family Proclamation” (Ensign or Liahona, May 2015, 14–17) பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Home Can Be a Heaven on Earth,” Hymns, no. 298.