“நவம்பர் 1–7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 125–128: ‘உயிரோடிருப்போருக்கும் மரித்தோருக்கும் மகிழ்ச்சியின் குரல்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“நவம்பர் 1–7 கோட்பாடும் உடன்படிக்கைகளும் 125–128,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
நவம்பர் 1–7
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 125–128
“உயிரோடிருப்போருக்கும் மரித்தோருக்கும் மகிழ்ச்சியின் குரல்”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 125–28 வாசிக்கும்போது, அவற்றைப்பற்றி சிந்திக்கவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்படிக்கு உங்கள் உணர்வுகளைப் பதிவுசெய்வதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
ஆகஸ்ட் 1840ல், துக்கமடைந்த ஜேன் நெய்மன் தனது நண்பர் சீமோர் பிரன்சனின் இறுதிச் சடங்கில் தீர்க்கதரிசி ஜோசப் பேசுவதைக் கேட்டார். ஜேனின் சொந்த பதின்ம வயது மகன் சைரஸும் சமீபத்தில் காலமானான். சைரஸ் ஒருபோதும் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதும், அவனது நித்திய ஆத்துமாவுக்கு என்ன ஆகும் என்று ஜேன் கவலைப்பட்டதும் அவளுடைய வருத்தத்தை அதிகரித்தது. அவள் எப்படி உணர்ந்தாள் என்று ஜோசப் அறிந்தார்; ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு இறந்த தனது அன்பு சகோதரர் ஆல்வினைப்பற்றியும் அவர் ஆச்சரியப்பட்டார். ஆகவே, சுவிசேஷ நியமங்களைப் பெறாமல் இறந்தவர்களைப்பற்றி கர்த்தர் அவரிடம் வெளிப்படுத்திய விஷயங்கள் மற்றும் அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்ய முடியும் என்று ஜேன் மற்றும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மற்ற அனைவருடனும் பகிர்ந்து கொள்ள தீர்க்கதரிசி முடிவு செய்தார்.
மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் கோட்பாடு பரிசுத்தவான்களைச் சிலிர்க்க வைத்தது; அவர்களின் எண்ணங்கள் உடனடியாக இறந்த பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் திரும்பின. இப்போது அவர்களுக்குமாக நம்பிக்கை இருந்தது! ஜோசப் அவர்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார், மேலும் மரித்தவர்களின் இரட்சிப்பைப்பற்றி கர்த்தர் அவருக்குக் கற்பித்ததை வெளிப்படுத்த அவர் மகிழ்ச்சியான, உற்சாகமான மொழியைப் பயன்படுத்தினார்: “மலைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவதாக, பள்ளத்தாக்குகளெல்லாம் சத்தமாக கதறுவதாக; கடல்களும் வறண்ட நிலங்களும் அனைத்தும் உங்கள் நித்திய ராஜாவின் அதிசயங்களைச் சொல்வதாக!” கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:23.
Saints, 1:415–27; “Letters on Baptism for the Dead,” Revelations in Context, 272–76 பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 126
நான் என் குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
இங்கிலாந்தில் பல பயணங்களில் இருந்து வீடு திரும்பிய பின்னர், பிரிகாம் யங்கிற்கு, அவர் இல்லாத நிலையில் அவதிப்பட்ட “[அவருடைய] குடும்பத்தை விசேஷமாக கவனித்துக் கொள்ளுமாறு கர்த்தரிடமிருந்து மற்றொரு முக்கியமான அழைப்பு வந்தது”( வசனம் 3). பாகம் 126லுள்ள இதுவும் பிற ஆலோசனையும் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை நீங்கள் சிந்திக்கையில், முன்னாள் இளம் பெண்கள் பொதுத் தலைவர் சகோதரி பானி எல். ஆஸ்கர்சனின் இந்த வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
“சில மிகப்பெரிய தேவைகள் இப்போது உங்களுக்கு முன்னால் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சொந்த வீடுகளிலும், உங்கள் சொந்த குடும்பங்களிலும் உங்கள் சேவையைத் தொடங்குங்கள். இவை நித்தியமாக இருக்கக்கூடிய உறவுகள். உங்கள் குடும்ப நிலைமை பரிபூரணமானதாக இல்லாவிட்டாலும், விசேஷித்ததாக இருந்தாலும், சேவை செய்வதற்கும், உயர்த்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் நீங்கள் வழிகளைக் காணலாம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள், அவர்களைப் போலவே அவர்களை நேசிக்கவும், எதிர்காலத்தில் நீங்கள் பெற விரும்பும் குடும்பத்திற்கு தயாராகுங்கள்” (“The Needs before Us,” Ensign or Liahona, Nov. 2017,27).
“Take Special Care of Your Family,” Revelations in Context, 242–49ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 127:2–4
கர்த்தர் என் சந்தோஷங்களையும் துக்கங்களையும் அறிவார்.
தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் கைது அச்சுறுத்தல் ஆகஸ்ட் 1842ல் மீண்டும் ஜோசப் ஸ்மித்தை தலைமறைவாக கட்டாயப்படுத்தியது. இந்த நேரத்தில் அவர் பரிசுத்தவான்களுக்கு எழுதிய வார்த்தைகள் (இப்போது கோட்பாடும் உடன்படிக்கைகளும் 127) நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்தவை. கர்த்தரைப்பற்றி வசனங்கள் 2–4 உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? தனிப்பட்ட சோதனைகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதைப்பற்றி?
உங்கள் வாழ்க்கையின் “ஆழமான நீரில்” கர்த்தர் உங்களை எவ்வாறு நிலைநிறுத்துகிறார் என்பதைப் பதிவுசெய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 127:5–8; 128:1–8
“நீங்கள் பூமியில் பதிவுசெய்தவை அனைத்தும் பரலோகத்தில் பதிவு செய்யப்படும்.”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 127:5–8; 128:1–8 நீங்கள் வாசிக்கும்போது, மரித்தவர்களின் ஞானஸ்நானத்தை பதிவு செய்வதைப்பற்றி கர்த்தர் ஜோசப் ஸ்மித்துக்கு இதுபோன்ற குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்கியதற்கான காரணங்களைத் தேடுங்கள். கர்த்தரைப்பற்றியும், அவருடைய பணியைப்பற்றியும் இது உங்களுக்கு என்ன போதிக்கிறது?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:5–25
என் இரட்சிப்புக்கு என் முன்னோர்களின் இரட்சிப்பு அத்தியாவசியம்.
இந்த வாழ்க்கையில் ஞானஸ்நானம் பெறாத நம் முன்னோர்களுக்கு அவர்களின் இரட்சிப்புக்கு ஏன் நமது உதவி தேவை என்று ஜோசப் ஸ்மித் மூலம் தேவன் வெளிப்படுத்தியவற்றிலிருந்து தெளிவாகிறது. ஆனால் நம் முன்னோர்களின் இரட்சிப்பு “நமது இரட்சிப்புக்கு” அவசியமானது மற்றும் இன்றியமையாதது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128: 15–18 பார்க்கவும்; சாய்வு எழுத்து சேர்க்கப்பட்டது).
வசனம் 5 மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குவதற்கான நியமம் “உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பே ஆயத்தம் பண்ணப்பட்டது” என்று போதிக்கிறது. தேவனைப்பற்றியும், அவருடைய பணியைப்பற்றியும் இந்த சத்தியம் உங்களுக்கு என்ன போதிக்கிறது? தலைவர் ஹென்றி பி. ஐரிங்கின் செய்தி “தேவனின் குடும்பத்தைக் கூட்டிச் சேர்த்தலைப்பற்றிய” உங்கள் புரிதலுக்கு என்ன சேர்க்கிறது? (Ensign அல்லது Liahona, Nov. 2017, 19-22).
ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் மரித்தவர்களுக்கு ஞானஸ்நானத்தைப்பற்றி கற்பிக்கும் போது ஜோசப் ஸ்மித் “கட்டும் வல்லமை,” “பிணைக்கும் இணைப்பு” மற்றும் “சரியான பிணைப்பு” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தினார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128: 5–25 வாசிக்கும்போது இந்த மற்றும் ஒத்த சொற்றொடர்களைத் தேடுங்கள். மரித்தவர்களுக்கான ஆசாரியத்துவ நியமங்களின் காரணமாக இயேசு கிறிஸ்துவின் மூலம் கட்டக்கூடிய சில விஷயங்கள் யாவை? மரித்தவர்களுக்கான இரட்சிப்பின் கோட்பாட்டை விவரிக்க “தைரியமான” ஒரு நல்ல சொல் ஏன்?( வசனங்கள் 9–11 பார்க்கவும்).
வசனங்கள் 19–25லுள்ள ஜோசப் ஸ்மித்தின் வார்த்தைகளில் எது உங்களைக் கவர்கிறது? உங்கள் மூதாதையர்களுக்கான ஆலய சேவையைப்பற்றி நீங்கள் உணரும் விதத்தை இந்த வசனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன? இயேசு கிறிஸ்துவைப்பற்றி? நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? (ஆலோசனைகளுக்கு FamilySearch.org/discovery பார்க்கவும்).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 126.பிரிகாம் யங்கிற்கு இந்த ஆலோசனையை வாசிப்பது உங்கள் குடும்பத்தை ஒருவருக்கொருவர் “சிறப்பு கவனிப்பு” ( வசனம் 3 ) எடுத்துக்கொள்வதில் அதிக நேரம் செலவிடலாம் என்பதைப்பற்றி பேச உணர்த்தக்கூடும்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:15–18.குடும்ப வரலாற்றுப் பணிகளின் சில இரட்சிக்கும் மற்றும் பூரணமாக்கும் ஆசீர்வாதங்கள் யாவை? இந்த காணொளி “The Promised Blessings of Family History” (ChurchofJesusChrist.org) அல்லது “Family History—I Am Doing It” (Children’s Songbook,94) போன்ற குடும்ப வரலாறுபற்றிய பாடலில் நீங்கள் சில ஆலோசனைகளைக் காணலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:18.ஒவ்வொரு இணைப்பிலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூதாதையர்களின் பெயர்களுடன் குடும்ப வரலாறு மற்றும் ஆலயப் பணிகள் எவ்வாறு நம் முன்னோர்களுடன் நம்மை இணைக்கும் ஒரு “பிணைக்கும் இணைப்பு” உருவாக்குகிறது என்பதைக் காண்பிக்கும் ஒரு காகிதச் சங்கிலியை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளுங்கள். கூடுதல் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடித்து, உங்கள் சங்கிலி எவ்வளவு நீளம் வளர்கிறது என்பதைப் பார்க்க FamilySearch.org நீங்கள் சில ஆராய்ச்சி செய்யலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:19–23.இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் மரித்தோரின் இரட்சிப்பைப்பற்றிய ஜோசப் ஸ்மித்தின் உற்சாகத்தைக் காட்டும் வார்த்தைகளுக்காக குடும்ப உறுப்பினர்கள் இந்த வசனங்களைத் தேடலாம். குடும்ப உறுப்பினர்கள் இந்த பணி குறித்து உற்சாகமடைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது இதுபோன்ற அனுபவங்களை நீங்கள் FamilySearch.org/discoveryல் ஒன்றாக தேடலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Family History—I Am Doing It,” Children’s Songbook,94.
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம், “ஒரு புதிய மற்றும் மகிமையான தலைப்பு”
பெபி மற்றும் வில்போர்ட் உட்ரப்
மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம்பற்றி ஜோசப் ஸ்மித் போதிக்கத் தொடங்கியபோது பெபி உட்ரப் நாவூவுக்கு அருகில் வசித்து வந்தார். இங்கிலாந்தில் ஒரு ஊழியத்தில் சேவையாற்றி வந்த தனது கணவர் வில்போர்டுக்கு அவர் இதைப்பற்றி எழுதினார்:
“சகோதரர் ஜோசப்… இந்த சபையில் உள்ளவர்களின் மரித்த உறவினர்கள், இந்த சுவிசேஷத்தைக் கேட்கும் சிலாக்கியம் இல்லாத, அவர்களின் பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் அத்தைகள் எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கலாம் என வெளிப்படுத்தல் மூலம் அறிந்திருக்கிறார். … அவர்கள் தங்கள் நண்பர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றவுடன் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் உயிர்த்தெழுதலில் உரிமை கோரலாம் மற்றும் அவர்களை சிலஸ்டியல் ராஜ்யத்திற்குள் கொண்டு வரலாம், இந்த கோட்பாடு சபையால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது, மேலும் அவர்கள் திரண்டு செல்கின்றனர், சிலர் ஒரே நாளில் 16 முறை ஞானஸ்நானம் பெறப் போகிறார்கள்.”1
வில்போர்ட் உட்ரப் பின்னர் இந்த கொள்கையைப்பற்றி கூறினார்: “நான் அதைக் கேள்விப்பட்ட தருணத்தில் என் ஆத்துமா மகிழ்ச்சியுடன் குதித்தது. … நான் சென்று, என் மரித்த உறவினர்கள் அனைவருக்காகவும் ஞானஸ்நானம் பெற்றேன். … மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்தை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல் வந்தபோது அல்லேலுயா என்று நான் சொல்ல வேண்டுமென உணர்ந்தேன். பரலோக ஆசீர்வாதங்களில் சந்தோஷப்படுவதற்கு நமக்கு உரிமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.“2
விலட் கிம்பல்
சகோதரி உட்ரப்பைப் போலவே, விலட் கிம்பலும் மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம்பற்றி கேள்விப்பட்டார், அவருடைய கணவர் ஹீபரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வெளியே சென்றிருந்தார். அவர் அவருக்கு எழுதினார்:
“தலைவர் ஸ்மித் ஒரு புதிய மற்றும் மகிமையான விஷயத்தைத் திறந்துள்ளார் … இது சபையில் மிகவும் எழுச்சி உண்டாக்கியுள்ளது. அதாவது, மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவது. ஒன்று கொரிந்தியர் 15வது அதிகாரம் 29வது வசனத்தில் இதுபற்றி பவுல் பேசுகிறான். ஜோசப் அதைப்பற்றி இன்னும் முழு விளக்கத்தை வெளிப்படுத்துதல் மூலம் பெற்றுள்ளார். … இந்த சுவிசேஷம் வெளிவருவதற்கு முன்பே மரித்த எல்லா உறவினர்களுக்கும் ஞானஸ்நானம் பெறுவது இந்த சபையோரின் சிலாக்கியம்; அவர்களின் கொள்ளு தாத்தா மற்றும் அம்மா வரைக்கும் கூட. … அவ்வாறு செய்வதன் மூலம், நாம் அவர்களுக்கு பதிலிகளாக செயல்படுகிறோம்; முதல் உயிர்த்தெழுதலில் வருவதற்கான சிலாக்கியத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படும் என்று அவர் கூறுகிறார்… ஆனால் ஆவிகள் ஞானஸ்நானம் கொடுக்கப்படுவது போன்ற எதுவும் இல்லை. … இந்த உத்தரவு இங்கு பிரசங்கிக்கப்பட்டதிலிருந்து, நீர் தொடர்ந்து கலக்கப்படுகிறது. மாநாட்டின் போது சில நேரங்களில் ஞானஸ்நானம் பெறும் நேரத்தில் ஆற்றில் எட்டு முதல் பத்து மூப்பர்கள் இருந்தனர். … நான் என் அம்மாவுக்காக ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன். நீங்கள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க நான் கணக்கிட்டேன், ஆனால் கடந்த முறை ஜோசப் இந்த விஷயத்தைப் பற்றி பேசியபோது, ஒவ்வொருவரும் இதைச் செய்து, மேலும் தங்களது நண்பர்களை முடிந்தவரை விரைவாக அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அறிவுறுத்தினார். எனவே, இந்த வாரம் நான் செல்வேன் என்று நினைக்கிறேன், ஏனெனில் அண்டை வீட்டார் பலர் செல்கிறார்கள். சிலர் ஏற்கனவே பல முறை ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். … இதனால் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது ஒரு மகிமையான கோட்பாடு அல்லவா?”3
பெபி சேஸ்
நாவூ ஆலயத்தில் ஞானஸ்நான தொட்டி கட்டி முடிக்கப்பட்டதும், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் ஆற்றுக்குப் பதிலாக அங்கு கொடுக்கப்பட்டது. நாவூவில் வசிக்கும் பெபி சேஸ், ஆலயத்தைப்பற்றி தனது தாய்க்கு எழுதினார், ஞானஸ்நான தொட்டியை “நமது மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சீயோன் மலையில் இரட்சகராகக்கூடிய இடம்” என்று விவரித்தார். இந்த தொட்டியில், “என் அன்பான தந்தை மற்றும் மரித்த என் நண்பர்கள் அனைவருக்காகவும் நான் ஞானஸ்நானம் பெற்றேன். … உங்கள் தந்தையின் மற்றும் தாயின் பெயர்கள் என்ன என்பதை இப்போது நான் அறிய விரும்புகிறேன், அதனால் நான் அவர்களை விடுவிக்க முடியும், ஏனென்றால் நான் மரித்தவர்களை விடுவிக்க விரும்புகிறேன். … கர்த்தர் மீண்டும் பேசினார், பண்டைய முறையை மறுஸ்தாபிதம் செய்தார்.“4
சாலி ரண்டால்
மரித்தவர்களுக்கு ஞானஸ்நானம்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், சாலி ரண்டால் தனது மகன் ஜார்ஜ் காலமானதை நினைவு கூர்ந்தார்:
“இது என்ன ஒரு கஷ்டமான நேரம், அதைப் பெறுவதற்கு நான் சமரசம் செய்ய முடியாது என்று இன்னும் தெரிகிறது, ஆனால்… அவனுடைய தந்தை அவனுக்காக ஞானஸ்நானம் பெற்றார், இது ஒரு மகிமையான விஷயம் என்னவென்றால், சுவிசேஷத்தின் பூரணத்தை நாம் இப்போது பிரசங்கித்துள்ளதைப் போல நம்புகிறோம், பெறுகிறோம், மேலும் நம் மரித்த நண்பர்கள் அனைவருக்கும் ஞானஸ்நானம் பெறலாம், அவர்களை நம்மால் முடிந்தவரை இரட்சிக்கலாம் அவர்களைப்பற்றிய எந்த அறிவையும் நாம் பெறும் வரை.
“தாத்தா, பாட்டி என எந்த வகையிலும் மரித்த நமது எல்லா இணைப்புகளின் பெயர்களையும் நீங்கள் எனக்கு எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது நண்பர்களைக் காப்பாற்ற என்னால் முடிந்ததைச் செய்ய நான் விரும்புகிறேன், உங்களில் சிலர் வந்து எனக்கு உதவி செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டும், அது தனியாகச் செய்வதற்கு ஒரு மிகப்பெரிய வேலை. … இது ஒரு விசித்திரமான கோட்பாடு என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன், ஆனால் அது உண்மை என்று நீங்கள் காண்பீர்கள்.”5