கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
அக்டோபர் 25–31. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124: “என்னுடைய நாமத்தில் ஒரு வீடு”


“அக்டோபர் 25–31. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124: ‘என்னுடைய நாமத்தில் ஒரு வீடு,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“அக்டோபர் 25–31. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

நாவூ

அழகிய நாவூ–லாரி வின்போர்க்

அக்டோபர் 25–31

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124

“என் நாமத்தில் ஒரு வீடு”

நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124 வாசிக்கும்போது, நாவூவில் உள்ள பரிசுத்தவான்கள் பெறுவதற்கு கர்த்தர் அழைத்த ஆசீர்வாதங்களையும், அவர் உங்களுக்கு அளிக்கிற ஆசீர்வாதங்களையும் சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

கடந்த ஆறு ஆண்டுகளில் பரிசுத்தவான்களுக்கு இருந்த கஷ்டங்களைப் போலவே, 1839 வசந்த காலத்தில் காரியங்கள் ஏற்படத் தொடங்கின: அகதிகளான பரிசுத்தவான்கள், இல்லினாயின் குயின்சி குடிமக்கள் மத்தியில் இரக்கத்தைக் கண்டனர். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மற்றும் பிற சபைத் தலைவர்களை மிசௌரி சிறையிலிருந்து தப்பிக்க காவலர்கள் அனுமதித்திருந்தனர். பரிசுத்தவான்கள் மீண்டும் கூடிச் சேரும்படியாக இல்லினாயில் சபை நிலத்தை வாங்கியிருந்தது. ஆம், அது சதுப்பு நிலம், கொசு வியாபித்த நிலம், ஆனால் பரிசுத்தவான்கள் ஏற்கனவே எதிர்கொண்ட சவால்களுடன் ஒப்பிடும்போது, இது சமாளிக்கக்கூடியதாக தோன்றியது. எனவே அவர்கள் சதுப்பு நில நீரை வடியசெய்து, ஒரு புதிய நகரத்திற்கான ஒரு சாசனத்தை உருவாக்கினர், அதற்கு அவர்கள் நாவூ என்று பெயரிட்டனர். இது எபிரேய மொழியில் “அழகானது” என்று பொருள்படும், குறைந்தபட்சம் முதலில், இது ஒரு துல்லியமான விவரிப்பை விட விசுவாசத்தின் மிகுந்த வெளிப்பாடாக இருந்தது. இதற்கிடையில், கர்த்தர் தனது தீர்க்கதரிசிக்கு அவசர உணர்வை உணர்த்துகிறார். மீட்டெடுப்பதற்கு அவருக்கு அதிகமான சத்தியங்களும் நியமங்களும் இருந்தன, மேலும் பரிசுத்தவான்கள் அவற்றைப் பெறக்கூடிய ஒரு பரிசுத்த ஆலயம் அவருக்கு தேவைப்பட்டது. பல வழிகளில், விசுவாசமும் அவசரமும் உடைய அதே உணர்வுகள் இன்றைய கர்த்தரின் பணியில் முக்கியமானவை.

நாவூ ஒரு அழகான ஆலயத்துடன், ஒரு அழகான நகரமாக மாறினாலும், இரண்டும் இறுதியில் கைவிடப்பட்டன. ஆனால் கர்த்தருடைய உண்மையிலேயே அழகான பணி, எப்போதுமே “கனம், அழியாமை மற்றும் நித்திய ஜீவனால் உங்களுக்கு கிரீடம் சூட்டுவதாகவே இருந்திருக்கிறது” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:55 ), அந்த பணி ஒருபோதும் முடிவதில்லை.

Saints, 1:399–427; “Organizing the Church in Nauvoo,” Revelations in Context, 264–71 பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:12–21

கர்த்தர் நம்புகிற ஒரு சீஷனாக நான் இருக்க முடியும்.

பல முக்கிய தலைவர்கள் 1830களின் பிற்பகுதியில் சபையை விட்டு வெளியேறிய போதிலும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தனர். இந்த உண்மையுள்ள பரிசுத்தவான்கள் மிசௌரியின் சோதனைகளைச் சகித்தவர்களையும் அண்மையில் சபையில் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியவர்கள். கோட்பாடு உடன்படிக்கைகளும் 124: 12–21ல் கர்த்தர் அவர்களில் சிலரைப்பற்றி உயர்வாக பேசினார். அவரது வார்த்தைகளில் சீஷத்துவத்தைப்பற்றிய என்ன உள்ளுணர்வுகளை நீங்கள் காண்கிறீர்கள்? இந்த விசுவாசமிக்க பரிசுத்தவான்களைப் போலிருக்க அவர்களைப்பற்றிய ஏதாவது உங்களுக்கு உணர்த்துகிறதா? கர்த்தர் உங்களுக்காக தனது அன்பை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:22–24, 60–61

நான் மற்றவர்களை வரவேற்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

மிசௌரியில் பரிசுத்தவான்கள் இப்போது அனுபவித்ததைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களை தனிமைப்படுத்தவும், நாவூக்கு வருவோரை அதைரியப்படுத்தவும் தூண்டப்பட்டிருக்கலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124: 22–24, 60–61 நீங்கள் வாசிக்கும்போது அதை நினைவில் வைத்திருங்கள். “தங்குவதற்கான வீடு” கட்ட கர்த்தரின் அறிவுரைகளைப்பற்றி உங்களை கவர்வது எது? ( வசனம் 23). அவருடைய சபையின் ஊழியத்தைப்பற்றி அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன? இந்த அறிவுரைகள் உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் எவ்வாறு பொருந்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:25–45,55

பரிசுத்த நியமங்களை நாம் பெறும்படிக்கு ஆலயங்களைக் கட்டும்படி கர்த்தர் நமக்குக் கட்டளையிடுகிறார்.

நாவூவில் குடியேறிய பின்னர், ஓஹாயோவிலும் மிசௌரியிலும் போலவே, ஒரு ஆலயம் கட்டுவதைப்பற்றி கர்த்தர் அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார் என்பது பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு ஆச்சரியமல்ல. கோட்பாடும் உடன்படிக்கைகள் 124: 25–45,55 ல் நீங்கள் எதைக் காண்கிறீர்கள், அது “என் பரிசுத்த நாமத்தில் [ஆலயங்களை] கட்டும்படி என் ஜனம் எப்பொழுதும் கட்டளையிடப்படுகிறார்கள்” என்று கர்த்தர் ஏன் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது? ( வசனம் 39 ).

நாவூ ஆலயம் கட்டப்பட்டதிலிருந்து, 200 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது அறிவிக்கப்பட்டுள்ளன. தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “நமது மற்றும் நமது குடும்பங்களின் இரட்சிப்புக்கும் மேன்மையடைதலுக்கும் நாம் ஆலயத்தில் இருக்கும் நேரம் முக்கியமானது என நமக்குத் தெரியும். … சத்துருவின் தாக்குதல்கள் அதிவேகமாகவும், தீவிரத்திலும், பலவகையிலும் அதிகரித்து வருகின்றன. ஆலயத்தில் தவறாமல் இருக்க வேண்டிய அவசியம், ஒருபோதும் இதுபோல அதிகமாக இருந்ததில்லை” (“Becoming Exemplary Latter-day Saints,” Ensign or Liahona, Nov. 2018,114). “சத்துருவின் தாக்குதல்களுக்கு” தாக்குப்பிடிக்க ஆலயம் உங்களுக்கு எவ்வாறு உதவியது? தலைவர் நெல்சனின் ஆலோசனையைப் பின்பற்ற நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?

Church History Topics, “Nauvoo Temple,” ChurchofJesusChrist.org/study/church-history ஐயும் பார்க்கவும்.

நாவூ ஆலயத்தைக் கட்டும் ஆண்களுடன் ஜோசப் ஸ்மித்

நாவூ ஆலயத்தில் ஜோசப் ஸ்மித்–காரி ஈ. ஸ்மித்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:84–118

என் வாழ்க்கைக்கு குறிப்பிட்ட ஆலோசனையை எனக்கு வழங்க கர்த்தர் விரும்புகிறார்.

வசனங்கள் 84–118 குறிப்பிட்ட நபர்களுக்கான ஆலோசனையால் நிரப்பப்பட்டுள்ளன, அவற்றில் சில உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமானதாகத் தெரியாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய ஒன்றை நீங்கள் காணலாம். இந்த வசனங்களில் கர்த்தர் உங்களுக்காக என்ன செய்தியை வைத்திருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, அதைக் கண்டுபிடிக்க ஆவியின் வழிகாட்டுதலை நாடுங்கள். பின்பு அதன்படி நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உதாரணமாக, ஆவியானவரைப் பெறுவதற்கு மிகவும் தாழ்மையுடன் இருப்பது உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்? (வசனம் 97 பார்க்கவும்).

கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மற்ற ஆலோசனைகளையும்பற்றி நீங்கள் சிந்திக்கலாம். அதன்படி நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள்?

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:2–11.“உலகத்தின் ராஜாக்களுக்கு” ( வசனங்கள் 2–3 ) “என் சுவிசேஷத்தைப் பிரகடனப்படுத்த” கர்த்தர் உங்கள் குடும்பத்தினரிடம் சொன்னால், உங்கள் பிரகடனம் என்ன சொல்லும்? ஒன்று சேர்ந்து ஒன்றை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, குடும்ப உறுப்பினர்களை அவர்கள் சேர்க்க விரும்பும் சுவிசேஷ சத்தியங்களை பரிந்துரைக்க அழைக்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:15.உத்தமமாயிருப்பது என்றால் என்ன? உத்தமத்தை கர்த்தர் ஏன் மதிக்கிறார்? உங்கள் குடும்பம் உத்தமத்தின் எந்த உதாரணங்களைக் கண்டிருக்கிறது? (For the Strength of Youth,19ஐயும் பார்க்கவும்.)

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:28–29, 40–41,55.ஆலயங்களைக் கட்டும்படி கர்த்தர் ஏன் கட்டளையிடுகிறார் என்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? உங்கள் குடும்பத்தினர் ஒரு ஆலயத்தின் படத்தை வரைய அல்லது கட்டைகள் அல்லது பிற பொருட்களிலிருந்து ஒன்றை உருவாக்க விரும்பலாம். நீங்கள் செய்யும்போது, இன்று நம்மிடம் ஆலயங்கள் இருப்பதால் நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள், அவற்றில் நாம் ஏன் தொடர்ந்து வழிபட வேண்டும் என்று கலந்துரையாடலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:91–92.கோத்திரப்பிதா ஆசீர்வாதங்களைப்பற்றிய ஒரு கலந்துரையாடலிலிருந்து உங்கள் குடும்பம் நன்மை பெறுமா? தங்கள் கோத்திரப்பிதா ஆசீர்வாதத்தைப் பெற்ற குடும்ப உறுப்பினர்கள், அந்த ஒன்றைப் பெறுவது என்பது என்ன, அது அவர்களை எவ்வாறு ஆசீர்வதித்தது என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் “Patriarchal Blessings” (Gospel Topics, topics.ChurchofJesusChrist.org)யும் பரிசீலிக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Love to See the Temple,” Children’s Songbook, 95.

மறுஸ்தாபித சின்னத்தின் குரல்கள்

மறுஸ்தாபிதத்தின் குரல்கள்

ஒத்தாசைச் சங்கம்

ஜோசப், எம்மா ஸ்மித் மற்றும் பிற பெண்கள்

பால் மான் வரைந்த ஒத்தாசைச் சங்கத்தின் ஓவியம்

1842 ஆம் ஆண்டில், இல்லினாயின் நாவூவில் ஒத்தாசைச் சங்கம் அமைக்கப்ப்பட்ட பின்னர், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித், “பெண்கள் இவ்வாறு ஒழுங்கமைக்கப்படும் வரை சபை ஒருபோதும் ஒழுங்காக அமைக்கப்படவில்லை” என்று கூறினார்.” 1 இதேபோல், கர்த்தரின் சபை மற்றும் அவரது ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்தலைப்பற்றிய ஆய்வு ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107 பார்க்கவும்) இது ஒத்தாசைச் சங்கத்தைப்பற்றிய ஆய்வை உள்ளடக்கும் வரை முழுமையடையாது, இது இயேசு கிறிஸ்துவின் பெண் சீஷர்களின் “ஒரு பண்டைய மாதிரியின் மறுஸ்தாபிதம்” ஆகும். 2

எலிசா ஆர். ஸ்நோ அந்த மறுஸ்தாபிதத்தில் முக்கிய பங்காற்றினார். ஒத்தாசைச் சங்கம் முதன்முதலில் ஒழுங்கமைக்கப்பட்டபோது அவர் உடனிருந்தார், சங்கத்தின் செயலாளராக அதன் கூட்டங்களின் போது குறிப்புகளை எடுத்தார். ஒத்தாசைச் சங்கம் “ஆசாரியத்துவத்தின் மாதிரிக்கு ஏற்ப” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் நேரில் கண்டார்.3 தேவனின் உடன்படிக்கையின் குமாரத்திகளுக்கு கொடுக்கப்பட்ட தெய்வீக பணியைப் புரிந்துகொள்ள அவரது சகோதரிகளுக்கு உதவ, ஒத்தாசைச் சங்கத்தின் பொதுத் தலைவராக பணியாற்றும் போது எழுதப்பட்ட அவரது வார்த்தைகள் கீழே உள்ளன.

ஒத்தாசைச் சங்கம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதுபற்றி மேலும் அறிய, Daughters in My Kingdom: The History and Work of Relief Society (2017), 1–25; The First Fifty Years of Relief Society (2016), 3–175 பாரக்கவும்.

எலிசா ஆர். ஸ்நோ

எலிசா ஆர். ஸ்நோ–லீவிஸ் ராம்சே

“[ஒத்தாசை சங்கம்] பெயர் நவீன காலப்படியானதாக இருக்கலாம் என்றாலும், இந்த நிறுவனம் பண்டைய அமைப்பாகும். [ஜோசப் ஸ்மித்தால்] அதே அமைப்பு சபையில் பூர்வ காலத்திலே இருந்ததாகவும், புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட சில நிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள், ‘தெரிந்துகொள்ளப்பட்ட ஸ்திரீ’ என்ற தலைப்பைப் பயன்படுத்துகின்றன [ 2 யோவான் 1: 1; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25: 3 பார்க்கவும்].

“இது ஆசாரியத்துவம் இல்லாமல் இருக்க முடியாத ஒரு அமைப்பு, அந்த ஆதாரத்திலிருந்து அதன் அனைத்து அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெறுகிறது. ஆசாரியத்துவம் பூமியிலிருந்து எடுக்கப்பட்டபோது, இந்த நிறுவனமும் பூமியில் இயேசு கிறிஸ்துவின் சபையின் உண்மையான ஒழுங்கின் மற்ற எல்லா இணைப்புகளும் மறைந்துவிட்டன.…

“நாவூவின் பெண்கள் ஒத்தாசைச் சங்கத்தின்” அமைப்பில் இருந்ததாலும், அந்தச் சங்கத்தில் கணிசமான அனுபவமும் இருந்ததாலும், சீயோனின் குமாரத்திகளுக்கு இந்த மிக முக்கியமான பொறுப்பில் அடியெடுத்து வைக்கும்போது சில குறிப்புகளை நான் சொல்லமுடியும், இது புதிய மற்றும் பல பொறுப்புகளுடன் நிரம்பியுள்ளது. இஸ்ரவேலில் உள்ள குமாரத்திகள் மற்றும் தாய்மார்கள் எவரேனும் தங்கள் தற்போதைய நிலைகளில் குறைந்த அளவு வரைமுறை கொண்டவர்களாக உணர்கிறார்களானால், அவர்கள் இப்போது தாராளமாக அளிக்கும் நன்மைகளைச் செய்வதற்கான ஒவ்வொரு சக்திக்கும் திறனுக்கும் போதுமான வாய்ப்பைக் காண்பார்கள்.

செங்கல் கடை

செங்கல் கடையின் மாடி அறையில் ஒத்தாசைச் சங்கம் அமைக்கப்பட்டது.

“பெண்கள் ஒத்தாசைச் சங்கத்தின் நோக்கம் என்ன? என்ற கேள்வி யாருடைய மனதில் எழுகிறதா? ஏழைகளுக்கு நிவாரணம் கொடுப்பது மட்டுமல்லாமல், ஆத்துமாக்களை இரட்சிப்பதிலும், நன்மை செய்வதற்காக நம்மிடம் உள்ள ஒவ்வொரு திறனையும் கோருவதற்கு, நன்மை செய்யவுமே, என நான் பதிலளிப்பேன். ஒன்றிணைந்த முயற்சி மிகவும் பயனுள்ள தனிப்பட்ட ஆற்றல்களால் செய்யக்கூடியதை விட கணக்கிட முடியாத அளவுக்கு சாதிக்கும்.…

“ஏழைகளுக்கு உதவி செய்வதில், பெண்கள் ஒத்தாசைச் சங்கத்திற்கு உடல் ரீதியான விருப்பங்களை நிவர்த்தி செய்வதை விட செய்ய வேண்டிய பிற கடமைகள் உள்ளன. மன வறுமை மற்றும் இருதய நோய், கவனத்தை கோருகிறது; மற்றும் பல முறை ஒரு வகையான வெளிப்பாடு, சில ஆலோசனையளிக்கும் வார்த்தைகள், அல்லது ஒரு இதமான மற்றும் அன்பான கை குலுக்குதல் கூட நல்லதைச் செய்யும் மற்றும் தங்கம் நிறைந்த பையை விட நன்மை செய்யும், நன்கு பாராட்டப்படும்.…

“பரிசுத்தவான்கள் வெளிநாட்டிலிருந்து கூடிவருகையில், எல்லோருக்கும் அந்நியர்களாக, மற்றும் ஏமாற்றுவதற்காக காத்திருப்பவர்களால் தவறாக வழிநடத்தப்படும்போது, [ஒத்தாசை] சங்கம் [அவர்களை] உடனடியாக கவனிக்க வேண்டும், மேலும் அவர்களை சமூகத்தில் சுத்திகரிக்கவும் உயர்த்தவும், எல்லாவற்றிற்கும் மேலாக சுவிசேஷத்தின் நம்பிக்கையில் அவர்களை பலப்படுத்துவதற்கு, அறிமுகப்படுத்த வேண்டும், அவ்வாறு செய்யும்போது, பலரைக் காப்பாற்றுவதில் கருவியாக இருக்கலாம்.

“சங்கத்தின் எல்லைக்குள் வரும் கடமைகள், சலுகைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்க வேண்டிய பல புத்தகங்கள் தேவைப்படும். … (உங்கள் ஆயரின் வழிகாட்டுதலின் கீழ்) சாதாரணமாக, வேண்டுமென்றே, ஆற்றலுடன், ஒற்றுமையாக, ஜெபத்துடன் செல்லுங்கள், உங்கள் முயற்சிகளுக்கு தேவன் வெற்றிகரமாக முடிசூட்டுவார். ”4

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith(2007),451.

  2. Daughters in My Kingdom: The History and Work of Relief Society (2017),7.

  3. Joseph Smith, in SarahM. Kimball, “Auto-biography,” Woman’s Exponent, Sept.1, 1883,51.

  4. “Female Relief Society,” Deseret News, Apr.22, 1868,81.

நாவூ ஆலயம்

நாவூ ஆலயம்–ஜார்ஜ் டி. டுரன்ட்