கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
அக்டோபர் 4–10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114: “உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் நான் உங்களுக்காக கட்டளையிடுவேன்”


“அக்டோபர் 4–10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114: ‘உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் நான் உங்களுக்காக கட்டளையிடுவேன்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“அக்டோபர் 4–10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

ஜோசப் ஸ்மித் பிரசங்கித்தல்

அக்டோபர் 4–10

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–114

“உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் நான் உங்களுக்காக கட்டளையிடுவேன்.”

நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111–14 வாசிக்கும்போது ஆவியின் வழிகாட்டுதலை ஜெபத்துடன் கேட்டு, உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும். பின்பு அந்த எண்ணங்களின்படி நீங்கள் செயல்படக் கூடிய வழிகளைக் கருத்தில் கொள்ளவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

உங்களுடைய விசுவாசத்தில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணரவைத்த ஆவிக்குரிய அனுபவம் உங்களுக்கு எப்போதாவது கிடைத்திருக்கிறதா, ஆனால் வாழ்க்கையின் துன்பங்கள் உங்கள் விசுவாசத்தை பரீட்சித்தன, நீங்கள் முன்பு உணர்ந்த அமைதியை மீட்டெடுக்க நீங்கள் போராடிக்கொண்டிருப்பதாக காண்கிறீர்களா? கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்களுக்கும் இதுபோன்ற ஒன்று நடந்தது. கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையுடன் இணைக்கப்பட்ட ஆவிக்குரிய வெளிப்பாடுகளுக்குப் பின், ஒரு வருடத்திற்குள், சிக்கல்கள் எழுந்தன. ஒரு நிதி நெருக்கடி, பன்னிருவர் குழுமத்தின் அபிப்பிராய பேதங்கள் மற்றும் பிற சோதனைகள், சிலர் தங்கள் நம்பிக்கையில் தடுமாற வழிவகுத்தன.

சோதனைகளை நம்மால் தவிர்க்க முடியாது, எனவே நம்முடைய நம்பிக்கையையும் சாட்சியத்தையும் அச்சுறுத்துவதைத் தடுப்பது எப்படி? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112ல் காணப்படுகிற, கர்த்லாந்தில் துன்பம் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, கொடுக்கப்பட்ட கர்த்தரின் ஆலோசனையில் பதிலின் ஒரு பகுதியைக் காணலாம். கர்த்தர் சொன்னார், “எனக்கு முன்பாக உங்கள் இருதயங்களை சுத்தப்படுத்துங்கள்” (வசனம் 28), “கலகம் செய்யாதீர்கள்” (வசனம் 15), “பணிக்காக அரைக்கச்சையை கட்டிக் கொள்ளுங்கள்” (வசனம் 7), மேலும் “தாழ்மையாயிருங்கள்” (வசனம்10). இந்த ஆலோசனையை நாம் பின்பற்றும்போது, கர்த்தர் துன்பத்தில் குணப்படுத்துதலுக்கும் சமாதானத்திற்கும் “கரம்பிடித்து வழிநடத்துவார்” (10,13 வசனங்களைப் பார்க்கவும்).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111

கர்த்தர் “அனைத்தையும் [என்] நன்மைக்காகக் கட்டளையிட முடியும்.”

1836வாக்கில், கர்த்தருடைய பணியைச் செய்வதில் பெரும் கடன்களை சபைக் குவித்தது. ஜோசப் ஸ்மித் மற்றும் பிறர் இந்த கடன்களைப்பற்றி கவலைப்படுவதாலும், அவற்றைச் செலுத்துவதற்கான வழிகளைக் கருத்தில் கொண்டதாலும், ஒருவேளை அங்குள்ள ஒரு வீட்டில் கொஞ்சம் பணம் கைவிடப்பட்டிருந்ததாக வதந்தி பரவியதால், அவர்கள் மாசசூசெட்ஸின் சாலேமுக்குச் சென்றனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111 பாகத் தலைப்பு பார்க்கவும்). அவர்கள் சாலேமிற்கு வந்த பிறகு, “இந்த நகரத்தில் உங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பொக்கிஷங்கள் உள்ளன” ( வசனம் 10 ), அவர் “சீயோனின் நன்மைக்காக சரியான நேரத்தில் கூட்டிச் சேர்க்கவிருக்கிற” ஜனங்களை உள்ளடக்கிய பொக்கிஷங்கள்.”( வசனம் 2 ; யாத்திராகமம் 19: 5 ஐயும் பார்க்கவும்). சாலேமில் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் வந்த ஊழிய முயற்சிகளிலிருந்து வந்தவர்கள் கர்த்தரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஒரு பகுதியாக இருந்தனர்.

நீங்கள் பாகம் 111 வாசிக்கும்போது, நீங்கள் கவலைப்படும் விஷயங்களைப்பற்றி சிந்தியுங்கள். ஜோசப்புக்கு கர்த்தருடைய வார்த்தைகள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். எதிர்பாராத “பொக்கிஷங்களை” கண்டுபிடிக்க கர்த்தர் உங்களுக்கு எவ்வாறு உதவியுள்ளார்? ( வசனம் 10). “உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கு” அவர் செய்ததைப்பற்றி சிந்தியுங்கள் ( வசனம் 11). “நீங்கள் அவற்றைப் பெற முடிந்தவரை விரைவாக” என்ற சொற்றொடர் பரலோக பிதாவைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

மத்தேயு 6:19–21,33; “More Treasures Than One,” Revelations in Context, 229–34 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:3–15

தாழ்மையுடன் தம்முடைய சித்தத்தைத் தேடுபவர்களை கர்த்தர் வழிநடத்துவார்.

1837 கோடையில் பன்னிருவர் குழுமத்தின் ஒற்றுமை பலவீனமடைந்தது. பொறுப்புகள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தன, சில உறுப்பினர்கள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தனர். தாமஸ் பி. மார்ஷ், பன்னிருவர் குழுமத்தின் தலைவர் கவலையடைந்தார், அவர் மிசௌரியிலிருந்து ஒஹாயோவுக்கு வந்து, தீர்க்கதரிசியின் ஆலோசனையைப் பெற்றார். சகோதரர் மார்ஷ் அதை பாகம் 112ல் வெளிப்படுத்தல் மூலம் பெற்றார். கர்த்தருடைய ஆலோசனை அவருக்கும் அவரது குழுமத்திற்கும் எவ்வாறு உதவியிருக்கக்கூடும்? நீங்கள் பிணக்குகளையும் கடினமான உணர்வுகளையும் மேற்கொள்ள முற்படும்போது உங்களுக்கு என்ன படிப்பினைகள் இதில் உள்ளன?

குறிப்பாக, நீங்கள் வசனத்தைப்பற்றி 10 சிந்திக்கலாம். கர்த்தர் உங்களை “கரம்பிடித்து” வழிநடத்துவது என்பதன் அர்த்தம் என்ன? இந்த வகையான வழிகாட்டுதலுக்கு மனத்தாழ்மை ஏன் தேவைப்படுகிறது?

Ulisses Soares, “Be Meek and Lowly of Heart,” Ensign or Liahona, Nov. 2013, 9–11; “The Faith and Fall of Thomas Marsh,” Revelations in Context, 54–60 ஐயும் பார்க்கவும்.

இருவர் ஜெபித்தல்

நாம் தாழ்மையுடன் இருந்தால், கர்த்தர் நமக்கு வழிகாட்டுவார், நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113

ஜோசப் ஸ்மித் “கிறிஸ்துவின் கரங்களில் ஒரு வேலைக்காரனாக இருந்தார்”.

ஈசாவின் சந்ததியினரில் ஒருவரை “கிளை” என்றும் “வேர்” என்றும் ஏசாயா, குறிப்பிட்டான்( ஏசாயா 11: 1,10). பாகம் 113ல், கிறிஸ்துவின் ஊழியரான இந்த சந்ததியான் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஜனத்தைக் கூட்டிச் சேர்ப்பதில் கருவியாக இருப்பான் என்று கர்த்தர் விளக்குகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113: 4,6 பார்க்கவும்) தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தைப்பற்றி நன்றாக விவரிக்கும் ஒரு தீர்க்கதரிசனம். பாகம் 113ல் உள்ள இதுவும் பிற சத்தியங்களும் கர்த்லாந்தில் அவர்கள் அனுபவித்த குழப்பத்தின்போது பரிசுத்தவான்களுக்கு எவ்வாறு ஊக்கமளித்திருக்கலாம்? இன்று கர்த்தரின் பணியில் பங்கேற்க உங்களைத் தூண்டும் இந்த வெளிப்பாட்டில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

Guide to the Scriptures, “Jesse,” scriptures.ChurchofJesusChrist.org; 2Nephi 21:10–12; Joseph Smith—History 1:40 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111:2, 9–11.நித்திய “பொக்கிஷங்களாக” உங்கள் குடும்பத்தினர் பொக்கிஷப்படுத்துகிறதைப்பற்றி ஒரு கலந்துரையாடலுக்கு இந்த வசனங்கள் ஊக்குவிக்கலாம். கர்த்தர் பொக்கிஷப்படுத்தும் அல்லது மதிக்கிற விஷயங்களை வீட்டைச் சுற்றி மறைத்து ஒரு புதையல் வேட்டையை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொரு உருப்படியையும் கண்டுபிடிக்கும்போது, நீங்கள் அதை மதிக்கிறீர்கள் என்பதைக் காட்ட நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி கலந்துரையாடவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:10.மூப்பர் உலிஸஸ் சோயர்ஸ் தாழ்மையானவர்களை இவ்வாறு விவரித்தார்: “தாழ்மையானவர்கள் கற்பிக்கப்படக்கூடியவர்கள், அவர்கள் தேவனை எவ்வளவு சார்ந்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவருடைய சித்தத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறார்கள். தாழ்மையானவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள், மற்றவர்களை ஒரே மாதிரியாக பாதிக்கும் திறன் கொண்டவர்கள்”(“Be Meek and Lowly of Heart,” Ensign or Liahona, Nov. 2013,10). தாழ்மையுடன் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்திற்கு உதவும் வழிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். “Be Thou Humble” (Hymns, no.130), போன்ற தாழ்மையைப்பற்றிய பாடலை நீங்கள் பாடும்போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பிறரை “கரம்பிடித்து” வீட்டைச் சுற்றி அழைத்துச் செல்வார். அல்லது கர்த்தர் உங்கள் குடும்ப உறுப்பினர்களை “கரம்பிடித்து” வழிநடத்தி, “[அவர்களின்] ஜெபங்களுக்கு பதில்” அளித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:11–4,26.ஒருவரின் பெயரை அறிந்து கொள்வதற்கும் அவர்களை அறிவதற்கும் என்ன வித்தியாசம்? கர்த்தரை அறிவதன் அர்த்தத்தைப்பற்றி வசனங்கள் 11–14 லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:15.தீர்க்கதரிசிக்கு எதிராக “கலகம்” செய்வதன் அர்த்தம் என்ன? தீர்க்கதரிசியை ஆதரிக்க உதவும் இந்த வசனத்தில் நாம் என்ன காணலாம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113:7–8.“சீயோனை மீண்டும் கொண்டுவருவதற்கும்” இஸ்ரவேலை மீட்பதற்கும் உதவும் வசனம் 8லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Be Thou Humble,” Hymns, no.130.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் சாட்சியின்படி வாழவும். “‘நீங்கள் யாராயிருக்கிறீர்களோ அதன்படி கற்பிக்கிறீர்கள்,’ என மூப்பர் நீல் ஏ. மாக்ஸ்வெல் போதித்தார். ‘ஒரு குறிப்பிட்ட பாடத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சத்தியத்தைவிட உங்கள் பண்புகள் அதிகமாக நினைவுகூரப்படும்” (in Teaching in the Savior’s Way, 13).

தாமஸ் பி. மாரஷ் மற்றும் ஜோசப் ஸ்மித்

தாமஸ் பி. மார்ஷ் ஜோசப் ஸ்மித் மூலம் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலை பதிவு செய்கிறார். தாழ்மையாயிருங்கள்–ஜூலி ரோஜர்ஸ்.