பழைய ஏற்பாடு 2022
ஏப்ரல் 4–10. யாத்திராகமம் 14–17: “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்”


“ஏப்ரல் 4–10. யாத்திராகமம் 14–17: “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஏப்ரல் 4–10. யாத்திராகமம் 14–17,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
செங்கடல்

செங்கடல்

ஏப்ரல் 4–10

யாத்திராகமம் 14–17

“நீங்கள் நின்றுகொண்டு, கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்”

“இதை நினைவுகூரும்பொருட்டு, அவனுடைய அனுபவங்களை ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி” வாசி என மோசேக்கு தேவன் கட்டளையிட்டார்(யாத்திராகமம் 17:14). அதுபோலவே, உங்களின் ஆவிக்குரிய அனுபவங்களைப் பதிவுசெய்வது நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களும் கர்த்தரின் தயவை நினைவுகொள்ள உதவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இஸ்ரவேலர் இடையில் மாட்டிக்கொண்டனர். ஒருபக்கம் செங்கடல் மற்றொரு பக்கம் நெருங்கிக்கொண்டிருந்த பார்வோனின் படை. எகிப்திலிருந்து அவர்கள் தப்பி வந்தது பயனற்றதாகத் தோன்றியது. ஆனால் அதை எல்லாத் தலைமுறையினரும் நினைவில்கொள்ள இஸ்ரவேலருக்கு ஒரு செய்தியை தேவன் வைத்திருந்தார்: “பயப்படாதிருங்கள்… கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்” (யாத்திராகமம் 14:13–14).

அதுமுதல், கர்த்தரின் மக்களுக்குப் போதிய விசுவாசமும் தைரியமும் தேவைப்படும் காலங்களில், இஸ்ரவேலின் அற்புதமான விடுதலையை நினைவில் கொள்வர். நேபி தனது சகோதரர்களை ஊக்கப்படுத்த விரும்பியபோது, அவன் “நாம் மோசேயைப்போல் பெலமுள்ளவர்களாயிருப்போம். ஏனெனில் அவன் உண்மையாகவே சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களிடத்தில் பேசினான், அவைகள் அங்கேயும் இங்கேயுமாகப் பிரிந்தன, நம்முடைய பிதாக்கள் சிறையிருப்பிலிருந்து வெளியே, அதன் வழியாய் வெட்டாந்தரையில் வந்தார்கள், பார்வோனுடைய சேனைகள் பின்தொடர்ந்து வந்து, சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களிலே அமிழ்ந்து போனார்கள்” என்று கூறினான். (1 நேபி 4:2). லிம்கி இராஜா தனது சிறைபிடிக்கப்பட்ட மக்கள் “[தங்கள்] தலைகளை உயர்த்தி களிகூர” விரும்பியபோது, இதே கதையை அவர்களுக்குக் கூறினான். (மோசியா 7:19). ஆல்மா, தேவனுடைய வல்லமையை தன் மகனுக்குச் சாட்சியமளிக்க விரும்பியபோது அவனும் இக்கதையைக் குறிப்பிட்டான் (ஆல்மா 36:28). நமக்கு விடுதலை தேவைப்படும்போது, சிறிதளவு அதிக விசுவாசம் தேவைப்படும்போது, “நீங்கள் நின்றுகொண்டு, கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பார்க்கவேண்டியபோது, “இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்” என்பதை நாம் நினைவுகூறலாம். (யாத்திராகமம் 14:13, 30).

படம்
தனிப்பட்ட படிப்புச் சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 14

என்னை விடுவிக்கும் வல்லமை கர்த்தருக்கு உண்டு.

நீங்கள் யாத்திராகமம் 14:1–10ஐ வாசிக்கும்போது, பார்வோனின் படை நெருங்கி வருவதைக் காணும்போது இஸ்ரவேலர்கள் எவ்வாறு உணர்ந்திருக்கக்கூடும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான சவாலில் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு அற்புதம் தேவை என ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். உங்கள் வாழ்க்கையில் தேவனின் விடுதலையை நாடுவதற்கு உதவக்கூடியதாக யாத்திராகமம் 14:13–31லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? உபத்திரவத்திலிருந்து விடுதலையை வழங்குகிற தேவனுடைய வழிகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? உங்கள் வாழ்வில் அவரின் விடுவிக்கும் வல்லமையை எவ்வாறு பார்த்திருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3; எல். டாம் பெர்ரி “The Power of Deliverance,” Liahona, May 2012, 94–97; வேதாகம வரைபடங்கள், எண். 2 “எகிப்திலிருந்து இஸ்ரவேலின் யாத்திரையும் கானானுக்குள் நுழைதலும் ஐயும் பார்க்கவும்.”

யாத்திராகமம் 15:22–27

கர்த்தர் கசப்பானவைகளை இனிமையாக்கக்கூடியவர்.

நீங்கள் யாத்திராகமம் 15:22–27 ல் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தை நோக்கி இஸ்ரவேலின் பயணம் குறித்து நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் மாராவின் நீர் போல “கசப்பானதாக” தோன்றிய விஷயங்களைப்பற்றிச் சிந்தியுங்கள். இந்த வசனங்களை நீங்கள் சிந்திக்கும்போது பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உள்ள கசப்பான விஷயங்களைக் கர்த்தர் எவ்வாறு இனிமையாக்க முடியும்? இந்த அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன மதிப்பைக் கொண்டுள்ளன? கர்த்தருடைய குரலுக்கு நாம் செவிசாய்க்கும்போது அவர் நம்மை எவ்வாறு ஆசீர்வதிப்பார் என்பதைப்பற்றி 26 மற்றும் 27 வசனங்கள் என்ன ஆலோசனையளிக்கின்றன?

யாத்திராகமம் 15:23–27; 16:1–15; 17:1–7

இக்கட்டான காலங்களிலும் நான் கர்த்தரை நம்பமுடியும்.

கர்த்தர் பல நன்மைகளைச் செய்த பிறகும், தங்களின் சூழ்நிலைகள் கடினமான போது இஸ்ரவேலர் முணுமுணுத்து அல்லது குறைகூறியதால், அவர்களை விமர்சிக்கத் தூண்டுகிறது. ஆனால் நீங்கள் யாத்திராகமம் 15:23–27; 16:1–15; 17:1–7,வசனங்களை வாசிக்கும் போது, நீங்களும் இதையே செய்துள்ளீர்களா என்பதைக் கருத்தில்கொள்ளுங்கள். முணுமுணுப்பதைக் குறைத்து தேவனிடத்தில் அதிக முற்றிலுமான நம்பிக்கைக்கொள்ள உங்களுக்கு உதவக்கூடியதாக இஸ்ரவேலரின் அனுபவங்களிலிருந்து, நீங்கள் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்? உதாரணமாக, கடினமான சூழல்களில் இஸ்ரவேலர் செய்தவற்றுக்கும் மோசே செய்தவற்றுக்கும் என்ன வித்தியாசங்களை நீங்கள் கவனிக்கிறீர்கள்? தேவனைக் குறித்து இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன?

1 நேபி 2:11–12; “Sin of Murmuring” (காணொலி)”, ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

படம்
மன்னாவைச் சேகரிக்கும் பெண்

தேவன் அருளிய மன்னா இஸ்ரவேலரின் உடலுக்கான உணவளித்தது; நமக்கும் அன்றாடம் ஆவிக்குரிய ஊட்டம் தேவை. பர்ஸ்கோ–லியோபோல்ட் ப்ரக்னெர்

யாத்திராகமம் 16

ஆவிக்குரிய ஊட்டத்தை நான் அன்றாடம் நாட வேண்டும்.

யாத்திராகமம் 16 அதிகாரத்தில் காணப்படுகிற மன்னா அற்புதத்திலிருந்து நாம் கற்கக்கூடிய ஆவிக்குரிய படிப்பினைகள் பல உண்டு. மன்னாவை எவ்வாறு சேகரிப்பது, பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பது என்பதைப்பற்றி இஸ்ரவேலருக்கு வழங்கப்பட்ட விரிவான வழிமுறைகளைக் கவனியுங்கள் (யாத்திராகமம் 16:16, 19, 22–26 பார்க்கவும்). அன்றாடம் ஆவிக்குரிய ஊட்டத்தைத் தேடுவதில் உங்களுக்குப் பொருந்துபவையாக இந்த வழிமுறைகளில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

யோவான் 6:31–35, 48–58 மற்றும் “Daily Bread: Pattern,” “Daily Bread: Experience,” and “Daily Bread: Change” (ChurchofJesusChrist.org காணொலிகள் ஐயும் பார்க்கவும்).

யாத்திராகமம் 17:1–7

இயேசு கிறிஸ்துவே எனது ஆவிக்குரிய பாறை மற்றும் ஜீவ தண்ணீர்.

நீங்கள் யாத்திராகமம் 17: 1 வசனத்தை வாசிக்கும்போது, இரட்சகரைப்பற்றி சிந்தியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்கு எப்படி ஒரு பாறை போன்றவர்? (சங்கீதம் 62:6–7; ஏலமன் 5:12 பார்க்கவும்). அவர் எப்படி நீரை போன்றவர்? (யோவான் 4:10–14; 1 கொரிந்தியர் 10:1–4; 1 நேபி 11:25 பார்க்கவும்).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 14:13–22.மோசே செங்கடலைப் பிரித்தது போல், ஒரு கிண்ணத்தில் அல்லது குளியல் தொட்டியில் இருக்கும் நீரை “பிரிக்க” உங்கள் குடும்ப அங்கத்தினர் முயற்சி செய்யலாம். தேவனின் வல்லமை இல்லாமல் செங்கடலைப் பிரிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். நம் வாழ்க்கையிலும் நம் முன்னோர்களின் வாழ்க்கையிலும் கர்த்தரின் வல்லமையை நாம் எவ்வாறு கண்டோம்?

யாத்திராகமம் 15:1–21.யாத்திராகமம் 15:1–21ல் காணப்படுகிற மோசேயின் பாடல் எனப்படும் துதிப் பாடலை அற்புதமாகச் செங்கடலை கடந்த பிறகு, இஸ்ரவேலர் பாடினர். இஸ்ரவேலருக்காகக் கர்த்தர் செய்தவற்றை சாட்சியமளிக்கும் சொற்றொடர்களுக்காக இந்த வசனங்களையும் பிற அர்த்தமுள்ள சொற்றொடர்களையும் ஒரு குடும்பமாக தேடுங்கள். பின்னர், தேவன் உங்களுக்குச் செய்தவற்றை குடும்பத்தினருக்கு நினைவூட்டும் ஒரு பாடலை நீங்கள் பாடலாம்.

யாத்திராகமம் 16:1–5; 17:1–7.யாத்திராகமம் 16:1–5 மற்றும் 17:1–7 வாசித்தல், இரட்சகரை ஜீவ அப்பமாக, ஜீவ தண்ணீராக, நம் பாறையாக இருப்பதைப்பற்றிக் கலந்துரையாட வழிவகுக்கும். இயேசு கிறிஸ்து நமக்காக செய்தவற்றை இந்த கதைகள் எவ்வாறு நினைவூட்டுகின்றன? யோவான் 6:4–14; 6:29–35,:48–51; ஏலமன் 5:12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 வாசிக்கலாம்.

யாத்திராகமம் 17:8–16.ஆரோனும் ஹூரினும் மோசேயின் கைகளைப் பிடித்துக்கொண்டதை நடித்துக் காட்டி, நம்மை வழிநடத்த தேவன் அழைத்தவர்களை நாம் எவ்வாறு ஆதரிப்பதென்பதை இது எவ்வாறு உருவகப்படுத்துகிறது என்பதை கலந்துரையாடலாம். ஆரோன் மற்றும் ஹூருக்கின் எடுத்துக்காட்டுடன் மோசேக்கு எதிராக இஸ்ரவேலர் முணுமுணுத்ததை வேறுபடுத்தி பார்க்கலாம் (அதிகாரங்கள் 15–17). நம் தலைவர்களுக்கு உதவவும் ஆதரிப்பதற்குமான சில வழிகள் யாவை? அவ்வாறு நாம் செய்வதால், நமக்கும் நம் தலைவர்களுக்கும் வருகிற ஆசீர்வாதங்கள் எவை?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Redeemer of Israel,” Hymns, no. 6.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் சொந்த ஆவிக்குரிய உள்ளுணர்வுகளை நாடுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்பப் படிப்பில், இந்தக் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள குறிக்கப்பட்டுள்ள வசனங்களுக்கு உங்களை வரையறுக்காதீர்கள். இங்கு வலியுறுத்தப்படாத இந்த அதிகாரங்களில் கர்த்தர் உங்களுக்காகச் செய்திகள் வைத்திருக்கலாம். ஜெபத்தோடு உணர்த்துதலைத் தேடுங்கள்.

படம்
மோசே செங்கடலை பிரிக்கிறான்

மோசே செங்கடலை பிரிக்கும் சித்திரிப்பு–ராபர்ட் டி.பாரெட்

அச்சிடவும்