பழைய ஏற்பாடு 2022
ஏப்ரல் 18–24. யாத்திராகமம் 18–20: “கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்”


“ஏப்ரல் 18–24. யாத்திராகமம் 18–20: ‘கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஏப்ரல் 18–24. யாத்திராகமம் 18–20,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

மலை

பாரம்பரியமாக எகிப்தில் ஒரு மலை சீனாய் மலையாக நம்பப்படுகிறது.

ஏப்ரல் 18–24

யாத்திராகமம் 18–20

“கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்”

சகோதரி மிச்செல் கிரெய்க் போதித்தார், “[இயேசு கிறிஸ்துவின்] உண்மையுள்ள சீஷராக, அவருடைய கட்டளைகளுக்கு இணங்க, உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட உணர்த்துதலையும் வெளிப்பாட்டையும் நீங்கள் பெறலாம்” (“Spiritual Capacity,” Liahona, Nov. 2019, 21). நீங்கள் வாசிக்கும்போது நீங்கள் பெறும் உணர்வுகளைப் பதிவுசெய்து செயல்படுங்கள் யாத்திராகமம் 18–20.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

எகிப்திலிருந்து சினாய் மலையின் அடிவாரத்திற்கு இஸ்ரவேலரின் பயணம் அற்புதங்களால் நிறைந்தது, கர்த்தருடைய இணையற்ற வல்லமை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் மறுக்க முடியாத வெளிப்பாடுகள். ஆயினும், எகிப்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் உடல் பசி மற்றும் தாகத்தை பூர்த்தி செய்வதற்கும் அப்பாற்பட்டு கர்த்தர் அவர்களுக்கான ஆசீர்வாதங்களை வைத்திருந்தார். அவர்கள் தம்முடைய உடன்படிக்கை ஜனமாக, அவருடைய “விசித்திர பொக்கிஷமாக”, “பரிசுத்த ஜாதியாக” மாற வேண்டும் என்று அவர் விரும்பினார்.(யாத்திராகமம் 19:5–6). இன்று, இந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதம் ஒரு தேசத்துக்கோ ஜனத்துக்கோ அப்பால் நீண்டுள்ளது. தன் பிள்ளைகள் யாவரும் அவரது உடன்படிக்கை ஜனமாக மாற தேவன் விரும்புகிறார், “[அவரது] வாக்கை உள்ளபடியே கேட்டு, [அவரது] உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால்” (யாத்திராகமம் 19:5), [அவரிடத்தில்] அன்புகூர்ந்து, [அவரது] கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும்” தன் இரக்கதைக் காட்டுகிறார் (யாத்திராகமம் 20:6).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 18:13–26

கர்த்தருடைய பணியைச் செய்வதில் “சுமையைச் சுமக்க” நான் உதவ முடியும்.

மோசே தனது மாமனாகிய எத்திரோவிடம் பெற்ற ஆலோசனையைப் படிக்கும்போது, நீங்கள் “உண்மையுள்ள மனிதர்களைப்” போல எப்படி இருக்க முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். வசனம் 21ல் விவரிக்கப்பட்டுள்ளபடி (சில நேரங்களில் “நம்பகமான” ஆண்கள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) உங்கள் சபைத் தலைவர்களின் “சுமையை சுமக்க” நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? (வசனம் 22). உதாரணமாக, உங்கள் ஊழிய முயற்சிகளுக்கு இந்த ஆலோசனை எவ்வாறு பொருந்தும்?

நீங்கள் சில சமயங்களில் மோசேயைப் போல இருக்கிறீர்களா, அதிகமாகச் செய்ய முயற்சிக்கிறீர்களா என்பதையும் நீங்கள் கருத்தில் கொளளலாம். எத்திரோவின் ஆலோசனை உங்களுக்கு எப்படி பொருந்தும்?

மோசியா 4:27; Henry B. Eyring, “The Caregiver,” Liahona, Nov. 2012, 121–24 ஐயும் பார்க்கவும்.

ஆண் ஒரு பெண்ணுடன் கைகுலுக்குதல்

கர்த்தருடைய பணியில் நாம் பங்கெடுக்க ஒரு வழி மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதாகும்.

யாத்திராகமம் 19:3–6

கர்த்தருடைய உடன்படிக்கை ஜனம் அவருக்கு ஒரு பொக்கிஷம்.

கர்த்தருடைய “பரிசுத்த பொக்கிஷம்” என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கவனியுங்கள் (யாத்திராகமம் 19:5). தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த சொற்றொடரைப்பற்றி ஒரு விளக்கம் கொடுத்தார்: “பழைய ஏற்பாட்டில் விசித்திரம் எனும் எபிரேய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட செகுல்லா, என்பது ‘மதிப்புள்ள சொத்து,’ அல்லது ‘பொக்கிஷம்’ ஆகும் … கர்த்தரின் ஊழியர்களாக நாம் அடையாளப்படுத்தப்படுவது, அவரது பரிசுத்த ஜனம் என்பது மிக உயர்ந்த பாராட்டாகும்” (“Children of the Covenant,” Ensign, May 1995, 34). உங்கள் உடன்படிக்கைகளை காத்துக்கொள்வது உங்களை ஒரு “விசித்திரமான பொக்கிஷம்” ஆக்குகிறது என்பதை அறிவது நீங்கள் வாழும் முறையில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்துகிறது?

Gerrit W. Gong, “Covenant Belonging,” Liahona, Nov. 2019, 80–83 ஐயும் பார்க்கவும்.

யாத்திராகமம் 19:10–11, 17

பரிசுத்த அனுபவங்களுக்கு ஆயத்தம் தேவைப்படுகிறது.

இஸ்ரவேல் புத்திரர் “தேவனைச் சந்திப்பதற்கு” முன்பே ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் (யாத்திராகமம் 19:10–11, 17) அவருடன் ஒரு உடன்படிக்கையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும், கர்த்தர் மோசேயிடம் சொன்னார் (யாத்திராகமம் 19:5 பார்க்கவும்). ஆலயம் செல்வது அல்லது திருவிருந்தில் பங்கேற்பது போன்ற உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த அனுபவங்களுக்கு நீங்கள் ஆயத்தம் செய்ய என்ன செய்கிறீர்கள்? இந்த அனுபவங்களுக்கு முழுமையாக ஆயத்தப்பட நீங்கள் என்ன செய்ய முடியும்? ஆயத்தம் தேவைப்படும் பிற ஆவிக்குரிய நடவடிக்கைகளைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள், உங்கள் ஆயத்தம் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

யாத்திராகமம் 20

தேவன் இரக்கமுள்ளவர்.

நீங்கள் யாத்திராகமம் 20 வாசிக்கும்போது, பத்து கட்டளைகளில் எதற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்கள் என்று கருதுகிறீர்கள், மேலும் நீங்கள் உண்மையுடன் எதற்குக் கீழ்ப்படியலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் முயற்சிக்க ஒரு கட்டளையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தொடர்புடைய வசனங்களைப் படிப்பதன் மூலம் அதை விரிவாகப் படிக்கலாம் (the Guide to the Scriptures at scriptures.ChurchofJesusChrist.org) or conference messages (see the topics section of conference.ChurchofJesusChrist.org பார்க்கவும்). கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களை உங்கள் படிப்பில் சேர்த்துக் கொள்ளுவதைக் கருத்தில் கொள்ளவும். இந்த ஆசீர்வாதங்கள் தேவனின் இரக்கத்தையும் உங்கள் மீதுள்ள அன்பையும் எவ்வாறு காட்டுகின்றன?

Carole M. Stephens, “If Ye Love Me, Keep My Commandments,” Liahona, Nov. 2015, 118–20 ஐயும் பார்க்கவும்.

யாத்திராகமம் 20:1–7

என் வாழ்க்கையில் கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம்.

யாத்திராகமம் 20:1–7 வாசிப்பது, உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமைகளைப்பற்றி சிந்திக்க உங்களைத் தூண்டலாம், அவற்றை ஒரு பட்டியலில் கூட நீங்கள் எழுதலாம். நீங்கள் தேவனுக்கு மேலாக வைக்க ஆசைப்படக்கூடிய (யாத்திராகமம் 20:3–4) சாத்தியமான சில “தெய்வங்கள்” அல்லது “செதுக்கப்பட்ட உருவம்[கள்] யாவை“ உங்கள் வாழ்க்கையில் மற்ற முக்கியமான விஷயங்களைவிட கர்த்தரை முதலில் வைப்பது எப்படி உங்களுக்கு உதவ முடியும்? பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்து மீது உங்கள் கவனத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?

Dallin H. Oaks, “No Other Gods,” Liahona, Nov. 2013, 72–75 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 18:8–12.தேவன் விடுவிப்பதைப்பற்றிய மோசேயின் சாட்சியம் எத்திரோவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? நமது குடும்பத்திற்காக கர்த்தர் என்ன பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்? நமது அனுபவங்களை யாருடன் பகிர்ந்து கொள்ளலாம்? வருங்கால சந்ததியினருக்கு அந்த அனுபவங்களை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்?

யாத்திராகமம் 18:13–26.ஆயர், இளைஞர் தலைவர்கள் அல்லது ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் போன்ற உங்கள் உள்ளூர் சபைத் தலைவர்களின் சேவையைப்பற்றி சிந்திக்க இந்த வசனங்கள் உங்கள் குடும்பத்தினரை உணர்த்தக்கூடும். ஒரு நபர் தனியாகச் சுமப்பதற்கு “மிக பாரமானது” ( யாத்திராகமம் 18:18 ) என்று தோன்றக்கூடிய, என்ன பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன? அவர்களின் சுமைகளை இறக்க உதவ நாம் என்ன செய்ய முடியும்?

யாத்திராகமம் 20:3–17.ஒரு குடும்பமாக பத்து கட்டளைகளைப்பற்றி கலந்துரையாட ஒரு அர்த்தமுள்ள வழியைப்பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக, நீங்கள் கட்டளைகளை யாத்திராகமம் 20: 3–17 பத்து துண்டு சீட்டுக்களில் எழுதலாம். குடும்ப அங்கத்தினர்கள் பின்னர் அவற்றை இரண்டு பிரிவுகளாக வரிசைப்படுத்தலாம்: (1)தேவனை கனம்பண்ணுதல் மற்றும்(2) மற்றவர்களை நேசித்தல் (மத்தேயு 22:36–40 ஐயும் பார்க்கவும்). இந்த வாரம் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டளை அல்லது இரண்டைத் தேர்ந்தெடுத்து அதை விரிவாக கலந்துரையாடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, இந்த கட்டளைக்குக் கீழ்ப்படிவது நம் குடும்பத்தை எவ்வாறு பலப்படுத்துகிறது? இரட்சகர் அதற்கு எவ்வாறு கீழ்ப்படிந்தார்?

யாத்திராகமம் 20:12.யாத்திராகமம் 20:12, நன்கு புரிந்துகொள்ள “கனம்” என்ற வார்த்தையின் விளக்கத்தை உங்கள் குடும்பத்தினர் தேடுவது உதவிகரமாக இருக்கும். நமது பெற்றோருக்கு கனமளிக்கும் வகையில் நாம் செய்யக்கூடிய விஷயங்களின் பட்டியலை குடும்ப அங்கத்தினர்கள் உருவாக்கலாம். “Quickly I’ll Obey” (Children’s Songbook, 197) போன்ற பெற்றோரைக் கனம் பண்ணுவதைப்பற்றிய பாடலை நீங்கள் பாடலாம், பின்னர் பாடலுக்கு புதிய வார்த்தைகளை எழுத உங்கள் பட்டியலிலுள்ள புதிய ஆலோசனைகளை நீங்கள் எழுதலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Keep the Commandments,” Children’s Songbook, 146–47.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்களுக்கு பொருந்துகிற நேரத்தை கண்டறியவும். தடங்கலில்லாமல் எப்போது அவைகளை உங்களால் படிக்க முடியுமென்பதை வழக்கமாக வேதங்களிலிருந்து கற்றுக்கொள்ள எளிதாயிருக்கும். உங்களுக்கு பொருந்துகிற நேரத்தை கண்டறியவும், ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில் தொடர்ந்து படிக்க உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யவும்.

கற்பலகைகளை மோசே வைத்திருத்தல்

பத்துக் கட்டளைகளை மோசே வைத்திருத்தல் விளக்கப்படம்–சாம் லாலர்