“ஏப்ரல் 11–17. ஈஸ்டர்: “அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“ஏப்ரல் 11–17. ஈஸ்டர்”,என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
ஏப்ரல் 11–17
ஈஸ்டர்
“அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்”
இந்த வாரம் இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, அவர் செய்த தியாகத்தைப்பற்றிய உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் உங்கள் குறிப்பிதழில் அல்லது இந்த வெளிப்புறத்தில் வழங்கப்பட்ட இடத்தில் பதிவு செய்யுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை “மனித வரலாறு முழுமைக்கும் மையமானது” (“The Living Christ: The Testimony of the Apostles,” ChurchofJesusChrist.org). இதன் அர்த்தம் என்ன? ஓரளவுக்கு, இரட்சகரின் வாழ்க்கை இதுவரை வாழ்ந்த அல்லது எப்போதும் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனின் நித்திய இலக்கில் செல்வாக்கு ஏற்படுத்துகிறது என்பதே இதன் நிச்சயமான பொருள். அந்த முதல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அவருடைய உயிர்த்தெழுதலில் உச்சக்கட்டத்தை அடைந்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் பணியும் வரலாறு முழுவதும் தேவஜனங்கள் அனைவரையும் இணைக்கிறது என்றும் நீங்கள் கூறலாம்: கிறிஸ்துவுக்கு முன்பு பிறந்தவர்கள் அவரை விசுவாசத்துடன் எதிர்பார்த்தார்கள் (யாக்கோபு 4:4 பார்க்கவும்), பின்னர் பிறந்தவர்கள் அவரை விசுவாசத்தோடு திரும்பிப் பார்க்கிறார்கள். பழைய ஏற்பாட்டு விவரங்களையும் தீர்க்கதரிசனங்களையும் நாம் வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்து என்ற பெயரை நாம் ஒருபோதும் காணவில்லை, ஆனால் பண்டைய விசுவாசிகளின் விசுவாசம் மற்றும் அவர்களின் மேசியா மற்றும் மீட்பருக்காக ஏங்குவதற்கான சான்றுகளைக் காண்கிறோம். எனவே அவரை நினைவில் கொள்ள அழைக்கப்பட்ட நாம் அவரை எதிர்பார்த்திருந்தவர்களுடன் ஒரு தொடர்பை உணர முடியும். உண்மையாகவே இயேசு கிறிஸ்து நாம் அனைவரின் அக்கிரமங்களையும்” சுமந்திருப்பதால்(ஏசாயா 53:6; சாய்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது), “கிறிஸ்துவுக்குள் நாமனைவரும்உயிர்ப்பிக்கப்பட்டுள்ளோம்” (1 கொரிந்தியர் 15:22; சாய்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
இரட்சகரின் பாவநிவாரண பலிக்கு பழைய ஏற்பாடு சாட்சியமளிக்கிறது.
பழைய ஏற்பாட்டில் உள்ள பல பாகங்கள் இரட்சகரின் ஊழியத்தையும் பாவநிவாரண பலியையும் சுட்டிக்காட்டுகின்றன. கீழேயுள்ள அட்டவணை இந்த பாகங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறது. இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, இரட்சகரைப்பற்றி என்ன எண்ணங்கள் உங்களுக்கு வருகிறது?
பழைய ஏற்பாடு |
புதிய ஏற்பாடு |
---|---|
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
மீட்பரைப்பற்றிய தீர்க்கதரிசனங்களும் போதனைகளும் மார்மன் புஸ்தகத்தில் இன்னும் ஏராளமாகவும் தெளிவாகவும் உள்ளன. இவை போன்ற பாகங்களால் உங்கள் விசுவாசம் எவ்வாறு பெலப்படுத்தப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளவும்: 1 நேபி 11:31–33; 2 நேபி 25:13; மோசியா 3:2–11.
மீட்பரின் பாவநிவர்த்தியின் மூலம் நான் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் காண முடியும்.
காலம் முழுவதும், இயேசு கிறிஸ்து, தனது பாவநிவாரண பலியின் மூலம், தன்னிடம் வரும் அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார் (மோசே 5:9–12 பார்க்கவும்). அவர் அளிக்கும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சிக்கு சான்றளிக்கும் பின்வரும் வசனங்களைப் படிப்பதைக் கவனத்தில் கொள்ளவும், நீங்கள் அப்படிச் செய்யும்போது, அவர் கொண்டு வரும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் நீங்கள் எவ்வாறு பெற முடியும் என்பதைப்பற்றி சிந்தியுங்கள்: சஙகீதம் 16:8–11; 30:2–5; ஏசாயா 12; 25:8–9; 40:28–31; யோவான் 14:27; 16:33; ஆல்மா 26:11–22.
Dallin H. Oaks, “Strengthened by the Atonement of Jesus Christ,” Liahona, Nov. 2015, 61–64; Sharon Eubank, “Christ: The Light That Shines in Darkness,” Liahona, May 2019, 73–76; “I Stand All Amazed,” Hymns, no. 193 ஐயும் பார்க்கவும்.
அவரது பாவநிவர்த்தியின் மூலம், பாவத்தையும், மரணத்தையும், சோதனைகளையும் மற்றும் பெலவீனங்களையும் மேற்கொள்ள எனக்குதவ இயேசு கிறிஸ்துவுக்கு வல்லமையிருக்கிறது.
பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்கவும், நம்முடைய சோதனைகளையும் பலவீனங்களையும் மேற்கொள்ளவும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையைப்பற்றி தீர்க்கதரிசிகள் சாட்சியம் அளித்துள்ளனர். இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் வித்தியாசத்தை எப்படி செய்திருக்கிறார்? உங்களுக்கு அவர் ஏன் முக்கியமானவராயிருக்கிறார்? இந்த வசனங்களை வாசிக்கும்போது இந்த கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள், மீட்பரைப்பற்றிய உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்யுங்கள்:
Walter F. González, “The Savior’s Touch,” Liahona, Nov. 2019, 90–92 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
யாத்திராகமம் 12:1–28.நீங்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த மாத தொடக்கத்தில் பஸ்காவைப்பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை உங்கள் குடும்பத்தினர் மதிப்பாய்வு செய்யலாம். இரட்சகரின் பலி பஸ்கா பண்டிகையின் சமயத்திலேயே நிகழ்ந்தது என்பது ஏன் குறிப்பிடத்தக்கது?
இரட்சகரின் வாழ்க்கையின் கடைசி வாரத்தில் என்ன நடந்தது என்பதற்கான சுருக்கத்திற்கு, “Holy Week” at ComeuntoChrist.org/2016/easter/easter-week பார்க்கவும். இரட்சகரின் இறுதி வார நிகழ்வுகளைப்பற்றிய வசனங்களுக்கு, “The Last Week: Atonement and Resurrection” in Harmony of the Gospels (in the Bible appendix) பார்க்கவும்.
-
ஏசாயா 53. ஏசாயா 53ல் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்களை வாசித்தல் குடும்ப அங்கத்தினர்களுக்கு இரட்சகரின் பாவநிவாரண பலியைப் புரிந்துகொள்ள உதவும். உங்கள் குடும்பம் எந்த வசனங்களை அல்லது சொற்றொடர்களை குறிப்பாக வல்லமை வாய்ந்ததாகக் காண்கிறது? இரட்சகரின் பாவநிவர்த்தியைக் குறித்த உங்கள் தனிப்பட்ட சாட்சியங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் குடும்ப சாட்சிக் கூட்டத்தை நடத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
-
“கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகள்.”The Gospel Library app and ChurchofJesusChrist.org have a collection of videos called “Special Witnesses of Christ,” என அழைக்கப்படுகிற காணொலிகளைக் கொண்டிருக்கிறது. இதில் பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தனது சாட்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவேளை உங்கள் குடும்பத்தினர் இந்த காணொலிகளில் சிலவற்றைப் பார்த்து, இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவரது தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதைப்பற்றி பேசலாம். ஒரு குடும்பமாக, கிறிஸ்துவைப்பற்றிய உங்கள் சாட்சியை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய வழிகளைப்பற்றி பேசுங்கள். உதாரணமாக, இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை சபையில் உங்களுடன் ஆராதிக்க யாரையாவது அழைக்கலாம்.
-
கீர்த்தனைகள் மற்றும் பாடல்கள்.இரட்சகரை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஆவியானவரை நம் வீடுகளுக்குள் அழைப்பதற்கும் இசை ஒரு சக்திவாய்ந்த வழியாகும். குடும்ப அங்கத்தினர்கள் ஈஸ்டரைப்பற்றி அல்லது இயேசு கிறிஸ்துவைப்பற்றிய இவைபோன்ற கீர்த்தனைகளையோ பாடல்களையோ பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் பாடலாம்“Christ the Lord Is Risen Today” (Hymns, no. 200) or “Did Jesus Really Live Again?” (Children’s Songbook, 64). பிற பாடல்கள் அல்லது பிள்ளைகளின் பாடல்களைக் கண்டுபிடிக்க, Hymns and Children’s Songbook. தலைப்பு குறியீட்டில் பாருங்கள்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Did Jesus Really Live Again?” Children’s Songbook, 64.