பழைய ஏற்பாடு 2022
ஏப்ரல் 25–மே 1. யாத்திராகமம் 24; 31–34: “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்”


“ஏப்ரல் 25–மே 1. யாத்திராகமம் 24; 31–34: ‘என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஏப்ரல் 25–மே 1. யாத்திராகமம் 24; 31–34,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

மோசேக்கும் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கும் யேகோவா பிரசன்னமாதல்

மோசேக்கும் இஸரவேலின் 70 மூப்பர்களுக்கும் யேகோவா பிரசன்னமாதல் பட விளக்கம்–ஜெர்ரி ஹார்ஸ்டன்

ஏப்ரல் 25–மே 1

யாத்திராகமம் 24; 31–34

“என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்”

வேதங்களில் உள்ள ஒவ்வொரு அர்த்தமுள்ள கொள்கையையும் இந்த குறிப்புகளில் முன்னிலைப்படுத்த முடியாது. உங்களுக்கு தேவையான சத்தியங்களில் கவனம் செலுத்த ஆவிக்கு செவிகொடுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய நியாயப்பிரமாணத்தை அவர் வெளிப்படுத்தியபின் தேவனுக்கு அவர்கள் உண்மையாக இருப்பார்கள் என்று நம்புவதற்கு காரணம் இருந்தது. கடந்த காலத்தில் அவர்கள் முணுமுணுத்து, அலைந்து திரிந்திருந்தாலும், மோசே சினாய் மலையின் அடிவாரத்தில் நியாயப்பிரமாணத்தைப் படித்தபோது, அவர்கள் இந்த உடன்படிக்கையை செய்தார்கள்: “கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து கீழ்ப்படிந்து நடப்போம்” (யாத்திராகமம் 24:7). தேவன் மோசேயை மலைக்கு அழைத்தார், “அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண” ஒரு கூடாரத்தைக் கட்டும்படி சொன்னார்.(யாத்திராகமம் 25:8; அதிகாரங்கள் 25–30 பார்க்கவும்).

இஸ்ரவேலர் தங்கள் மத்தியில் தேவனின் பிரசன்னத்தை எவ்வாறுபெற முடியும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு மோசே மலையின் உச்சியில் இருந்தபோது, இஸ்ரவேலர் மலையின் அடிப்பகுதியில், பதிலாக வழிபட ஒரு தங்க சிலையைச் செய்தார்கள். அவர்கள் “வேறு தெய்வங்கள் இல்லை” என்று உறுதியளித்திருந்தார்கள், ஆனால் அவர்கள் தேவனின் கட்டளைகளிலிருந்து “விரைவாக விலகிவிட்டார்கள்” (யாத்திராகமம் 20:3; 32:8; யாத்திராகமம் 24:3)ஐயும் பார்க்கவும். இது ஒரு ஆச்சரியமான திருப்பமாக இருந்தது, ஆனால் விசுவாசமும் ஒப்புக்கொடுத்தலும் சில சமயங்களில் பொறுமையின்மை, பயம் அல்லது சந்தேகத்தால் மேற்கொள்ளப்பட முடியும் என்பதை அனுபவத்திலிருந்து நாம் அறிவோம். நம் வாழ்வில் கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் தேடுகையில், கர்த்தர் பண்டைய இஸ்ரவேலைக் கைவிடவில்லை, அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்பதை அறிந்து கொள்வது ஊக்கமளிக்கிறது - ஏனென்றால் அவர் “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும் மகாதயவும், சத்தியமும் உள்ள தேவன்.” (யாத்திராகமம் 34:6).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 24:1–11

தேவனின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய என் விருப்பத்தை எனது உடன்படிக்கைகள் காட்டுகின்றன.

தேவனின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிய இஸ்ரவேலர்கள் உடன்படிக்கையைப்பற்றி யாத்திராகமம் 24: 3–8 ல் நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் எண்ணங்கள் நீங்கள் தேவனோடு செய்த உடன்படிக்கைகளுக்கு திரும்பக்கூடும். இஸ்ரவேலின் உடன்படிக்கையில் இன்று தேவன் வேண்டுவதிலிருந்து வேறுபட்ட சடங்குகள் அடங்கும், குறிப்பாக இந்த சடங்குகளால் அடையாளப்படுத்தப்பட்ட நித்திய சத்தியங்களை நீங்கள் கருத்தில் கொண்டால், சில ஒற்றுமைகளை நீங்கள் கவனிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, வசனங்கள் 4, 5, மற்றும் 8 ஒரு பலிபீடம், மிருகஜீவன்களின் பலி மற்றும் இரத்தத்தைக் குறிப்பிடுகின்றன. இந்த விஷயங்கள் எதைக் குறிக்கக்கூடும், அவை உங்கள் உடன்படிக்கைகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன? “கர்த்தர் சொன்னதையெல்லாம்” செய்ய உங்கள் உடன்படிக்கைகள் எவ்வாறு உங்களுக்கு உதவ முடியும்? (வசனம் 7).

மோசே 5:4–9; Becky Craven, “Careful versus Casual,” Liahona, May 2019, 9–11ஐயும் பார்க்கவும்.

யாத்திராகமம் 32–34

பாவம், தேவனிடமிருந்து விலகிச் செல்வதாகும், ஆனால் அவர் ஒரு வழியை வழங்குகிறார்.

இஸ்ரவேலர்கள் தங்கள் உடன்படிக்கைகளை மீறுவதன் மூலம் (யாத்திராகமம் 32:7) இவ்வளவு விரைவாக “தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்” என்று சிந்திப்பதன் மூலம், இதே போன்ற தவறுகளை நாம் தவிர்க்கலாம். நீங்கள் யாத்திராகமம் 32: 1–8 வாசிக்கும்போது, உங்களை இஸ்ரவேலரின் இடத்தில் வைக்க முயற்சி செய்யுங்கள், நீங்கள் வனாந்தரத்தில் இருக்கிறீர்கள், மோசே 40 நாட்களாக சென்றுவிட்டான், எப்போது திரும்பி வருவான் அல்லது திரும்பி வருவானா என உங்களுக்குத் தெரியாது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் குறித்து கானானியர்களுடன் மோதல் உங்கள் எதிர்காலத்தில் உள்ளது. இஸ்ரவேலர் ஒரு தங்க சிலையை விரும்பிது ஏன் என நினைக்கிறீர்கள்? இஸ்ரவேலரின் பாவம் ஏன் இவ்வளவு தீவிரமானதாய் இருந்தது? இந்த வசனங்கள் மீட்பரைத்தவிர யாரையாவது அல்லது வேறு எதையாவது நம்புவதற்கு நீங்கள் ஆசைப்பட தூண்டக்கூடிய வழிகளைச் சிந்திக்கத் தூண்டக்கூடும். உங்கள் வாழ்க்கையில் கடவுளை முழுமையாக முதலிடம் பெறச் செய்ய நீங்கள் ஏதும் செய்ய உணர்த்தப்படுகிறீர்களா? யாத்திராகமம் 33: 11–17 மோசே கர்த்தரிடம் மன்றாடியதைப்பற்றி உங்களுக்கு எதை உணர்த்துகிறது?

இஸ்ரவேலரின் பாவம் தீவிரமானது என்றாலும், இந்த கதை தேவனின் இரக்கம் மற்றும் மன்னிப்பைப்பற்றிய செய்தியையும் அடக்கியுள்ளது. யாத்திராகமம் 34: 1–10 இரட்சகரைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? இஸ்ரவேலர்களுக்காக மோசேயின் நடவடிக்கைகள், இயேசு கிறிஸ்து எல்லா மக்களுக்கும் செய்ததை உங்களுக்கு எவ்வாறு நினைவூட்டுகின்றன? ( யாத்திராகமம் 32: 30–32 ; மோசியா 14: 4–8 ; 15: 9 ; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:3–5).

Joseph Smith Translation, யாத்திராகமம் 34:1–2 (in the Bible appendix)

மோசே செய்த இரண்டு கற்பலகைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

மோசே மலையிலிருந்து இறங்கியபோது, கற்பலகைகளில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்தான். இஸ்ரவேலர் தங்கள் உடன்படிக்கையை மீறியதைக் கண்ட பின், மோசே பலகைகளை உடைத்தான் ( யாத்திராகமம் 31:18 ; 32:19 பார்க்கவும்). பின்னர், தேவன் மோசேக்கு மற்றொரு கற்பலகையை உருவாக்கி அவற்றை மீண்டும் மலைக்கு கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார் (யாத்திராகமம் 34:1–4 பார்க்கவும்). ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு 34:1–2 (in the Bible appendix) முதல் கற்பலகைகள் தேவனின் “பரிசுத்த முறைமையை” அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் நியமங்கள் இருந்தன என்பதை தெளிவுபடுத்துகிறது. இரண்டாவது தொகுப்பில் “ஒரு மாம்சப்பிரகார கட்டளை நியாயப்பிரமாணம்” அடங்கும். இது “மிதமான ஆசாரியத்துவத்தால்” நிர்வகிக்கப்படும் ஒரு மிதமான நியாயப்பிரமாணமாகும் ( கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 84: 17-27 பார்க்கவும்), இது இஸ்ரவேலர்களை உயர் நியாயப்பிரமாணம் மற்றும் உயர் ஆசாரியத்துவத்திற்கு தயார்படுத்துவதற்காக ஆகும், இதனால் அவர்கள் முழுமையாக தேவ சமூகத்தில் பிரவேசிக்க முடியும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யாத்திராகமம் 31:12–13, 16–17.இந்த வசனங்களை வாசித்த பிறகு, உங்கள் குடும்பத்தினர் ஓய்வுநாளில் நமது நடத்தையைப்பற்றிய தலைவர் ரசல் எம். நெல்சனின் கேள்வியைப்பற்றி கலந்துரையாடலாம்: “கர்த்தரிடம் உங்கள் அன்பைக் காட்ட நீங்கள் என்ன அடையாளத்தைக் கொடுப்பீர்கள்?” (“The Sabbath Is a Delight,” Liahona, May 2015, 130). ஓய்வுநாளில் நீங்கள் கர்த்தருக்கு எப்படி அன்பைக் காண்பிப்பீர்கள் என்பதை நினைவூட்டுவதற்காக உங்கள் குடும்பத்தினர் உங்கள் வீட்டைச் சுற்றி சில அடையாளங்களை செய்யலாம். (“Sabbath Day—At Home” [ChurchofJesusChrist.org] காணொலித் தொகுப்பையும் பார்க்கவும்.)

சபைக் கட்டிடத்தின் முன் நடந்து செல்லும் ஜனங்கள்

ஓய்வுநாளை ஆசரிப்பதன் மூலம், கர்த்தருக்கு நம்முடைய அன்பைக் காட்டுகிறோம்.

யாத்திராகமம் 32:1–8.இஸ்ரவேலர் தேவனிடமிருந்து எப்படி விலகிவிட்டார்கள் என்பதைப்பற்றி விவாதிக்க உங்கள் குடும்பம் கலந்துரையாட உதவ, தரையில் ஒரு பாதையை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும் (அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் ஒன்றைக் கண்டுபிடிக்கவும்). பாதையில் நடக்கும்போது, குடும்ப அங்கத்தினர்கள் “[கர்த்தர்] கட்டளையிட்ட வழியிலிருந்து விலகி” நாம் எதிர்கொள்ளும் சோதனையைப்பற்றி பேசலாம். நாம் எவ்வாறு பாதையில் இருக்க முடியும்? நாம் வழிதவறியிருந்தால், அதற்கு நாம் எவ்வாறு திரும்புவது? இரட்சகர் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?

யாத்திராகமம் 32:26.இஸ்ரவேலர் ஒரு விக்கிரகத்தை வணங்குவதைக் கண்டதும், மோசே, “கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?” என்று கேட்டான். நாம் கர்த்தருடைய பக்கத்தில் இருக்கிறோம் என்பதை எப்படி காட்டுகிறோம்?

யாத்திராகமம் 33:14–15.“என் சமூகம் உனக்கு முன்னே போகும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று தேவன் மோசேக்கு வாக்குறுதியளித்ததை அவர்கள் உணர்ந்தபோது, குடும்ப அங்கத்தினர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதுபோன்ற நாம் தேவனை சார்ந்திருப்பதைப்பற்றிய பாடலை நீங்கள் பாடலாம், “Abide with Me!” (பாடல்கள் எண் 166.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Who’s on the Lord’s Side?பாடல்கள் எண் 260.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

ஆவியை அழையுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் கற்பிக்கும்போது பரிசுத்த இசை, கலைப்படைப்புகள் மற்றும் அன்பின் வெளிப்பாடுகள் உங்கள் வீட்டிலுள்ள ஆவிக்குரிய சூழ்நிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கவனியுங்கள் (Teaching in the Savior’s Way, 15 பார்க்கவும்).

மோசே கற்பலகைகளை உடைத்தல்

கன்றுக்குட்டியை ஆராதித்தல்–டபிள்யூ. சி. சிம்மாண்ட்ஸ்