பழைய ஏற்பாடு 2022
மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: ஆசரிப்பு கூடாரம் மற்றும் பலி


“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: ஆசரிப்பு கூடாரம் மற்றும் பலி,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: ஆசரிப்பு கூடாரம் மற்றும் பலி,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

எண்ணங்கள் சின்னம்

மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்

ஆசரிப்பு கூடாரம் மற்றும் பலி

பழைய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது, சில சமயங்களில் கர்த்தருக்கு தெளிவான முக்கியமான விஷயங்களைப்பற்றிய நீண்ட பாகங்களைக் காணலாம், ஆனால் இன்று நமக்கு உடனடியாகப் பொருந்துவதாகத் தோன்றாது. யாத்திராகமம் 25–30; 35–40; லேவியராகமம் 1–9; 16–17 ஆகியன எடுத்துக்காட்டுகள். இந்த அதிகாரங்கள் வனாந்தரத்தில் இஸ்ரவேலின் ஆசரிப்பு கூடாரம் மற்றும் அங்கு செய்ய வேண்டிய மிருகஜீவ பலிகளை விரிவாக விவரிக்கின்றன.1 ஆசரிப்பு கூடாரம் ஒரு சிறிய ஆலயமாக இருந்தது, அவருடைய ஜனங்களிடையே கர்த்தர் வசிக்கும் இடமாகும்.

நமது தற்கால ஆலயங்கள் இஸ்ரவேலின் ஆசரிப்பு கூடாரத்துடன் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை நிச்சயமாக யாத்திராகமத்திலுள்ள அதன் விளக்கத்துடன் பொருந்தவில்லை. நமது ஆலயங்களில் விலங்குகளை நாம் கொல்ல மாட்டோம், இரட்சகரின் பிராயச்சித்தம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மிருகஜீவன்களின் பலியை முடித்தது. குறிப்பாக மார்மன் புஸ்தகத்தில் “கிறிஸ்துவில் தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்த” ஒரு வழியாக தேவஜனங்கள் செய்ததைப் பார்த்தால், இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட, பண்டைய இஸ்ரவேலின் வழிபாட்டு வடிவங்களைப்பற்றி வாசிப்பது இன்று பெரும் மதிப்புடையதாகும். (ஆல்மா 25:16; யாக்கோபு 4:5; யாரோம் 1:11ஐயும் பார்க்கவும்). ஆசரிப்பு கூடாரம் மற்றும் மிருகஜீவ பலியின் அடையாளத்தை நாம் புரிந்து கொள்ளும்போது, ஆவிக்குரிய உள்ளுணர்வுகளைப் பெறலாம், அது கிறிஸ்துவில் நம்முடைய நம்பிக்கையையும் பலப்படுத்தும்.

ஆசரிப்பு கூடாரத்தில் ஆசாரியர்களிடம் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவரும் ஜனங்கள்

இஸ்ரவேலர் ஒரு ஆட்டுக்குட்டியை ஆசரிப்பு கூடாரத்திற்கு கொண்டு வருதல், பட விளக்கம்–ராபர்ட் டி. பாரெட்

ஆசரிப்பு கூடாரம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது

இஸ்ரவேலரின் முகாமில் ஒரு ஆசரிப்பு கூடாரத்தைக் கட்டும்படி தேவன் மோசேக்குக் கட்டளையிட்டபோது, அதன் நோக்கத்தை அவர் கூறினார்: “நான் அவர்களிடையே வாசமாயிருக்கும்படிக்கு” (யாத்திராகமம் 25:8). ஆசரிப்பு கூடாரத்திற்குள், தேவனின் பிரசன்னம் உடன்படிக்கைப் பெட்டியால் குறிப்பிடப்பட்டது, ஒரு மரப் பெட்டி, தங்கத்தால் மூடப்பட்டிருந்தது, அவருடைய ஜனங்களுடனான தேவனின் உடன்படிக்கையின் எழுதப்பட்ட பதிவைக் கொண்டுள்ளது ( யாத்திராகமம் 25: 10–22 பார்க்கவும்). பெட்டி புனிதமான, உட்புற அறையில் வைக்கப்பட்டிருந்தது, மீதமுள்ள கூடாரத்திலிருந்து ஒரு திரையினால் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த திரை வீழ்ச்சி காரணமாக தேவ சமூகத்திலிருந்து நாம் பிரிந்ததை குறிக்கிறது.

மோசேயைத் தவிர, அந்த “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” (யாத்திராகமம் 26:34 ) நுழையக்கூடிய ஒருவன் பிரதான ஆசாரியன் மட்டுமே என நாம் அறிகிறோம். மற்ற ஆசாரியர்களைப் போலவே, அவர் முதலில் கழுவப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு (யாத்திராகமம் 40: 12–13 பார்க்கவும்) மற்றும் அவனது அலுவலின் அடையாளமாக பரிசுத்த வஸ்திரங்களை அணிந்திருக்க வேண்டியிருந்தது ( யாத்திராகமம் 28 பார்க்கவும்). வருடத்திற்கு ஒருமுறை, பாவநிவர்த்தி நாள் என்று அழைக்கப்படும் ஒரு நாளில், பிரதான ஆசாரியன் ஆசரிப்பு கூடாரத்திற்குள் தனியாக நுழைவதற்கு முன்பு, ஜனங்கள் சார்பாக பலிகளைச் செய்வான். திரைக்கு முன்பாக, அவன் தூபத்தை எரிப்பான் ( லேவியராகமம் 16:12 பார்க்கவும்). பரலோகத்திற்கு ஏறும் வாசனை புகை, தேவனிடம் செல்லும் ஜனங்களின் ஜெபங்களைக் குறிக்கிறது (சங்கீதம் 141: 2பார்க்கவும்). பிரதான ஆசாரியன், ஒரு மிருகஜீவ பலியிலிருந்து இரத்தத்தை சுமந்துகொண்டு, திரை வழியாகச் சென்று, உடன்படிக்கைப் பெட்டியென குறிக்கப்படுகிற, தேவனின் கிருபாசனத்தை அடைவான் ( லேவியராகமம் 16: 14-15 பார்க்கவும்).

இயேசு கிறிஸ்துவைப்பற்றியும், பரலோக பிதாவின் திட்டத்தில் அவர் வகித்த பங்கைப்பற்றியும் உங்களுக்குத் தெரிந்ததால், ஆசரிப்பு கூடாரம் நமக்கு இரட்சகரை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது என்பதை நீங்கள் காண முடிகிறதா? ஆசரிப்பு கூடாரமும் அதற்குள் இருக்கும் பெட்டியும் அவருடைய ஜனங்களிடையே தேவன் இருப்பதைக் குறிப்பது போல, இயேசு கிறிஸ்து தம் ஜனத்திடையே தேவனின் பிரசன்னமாக இருந்தார் (யோவான் 1:14 பார்க்கவும்). பிரதான ஆசாரியனைப் போலவே, இயேசு கிறிஸ்துவும் நமக்கும் பிதாவாகிய தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருக்கிறார். தம்முடைய சொந்த பலியின் இரத்தத்தினாலேயே நமக்காக பரிந்து பேசுவதற்காக அவர் திரை வழியாகச் சென்றார் (எபிரெயர் 8-10 பார்க்கவும்).

குறிப்பாக நீங்கள் உங்கள் சொந்த நியமங்களைப் பெற ஆலயம் சென்றிருந்தால், இஸ்ரவேலின் கூடாரத்தின் சில அம்சங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். ஆசரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் போலவே, ஆலயத்தின் சிலஸ்டியல அறையும் தேவன் இருப்பதைக் குறிக்கிறது. நுழைய, நாம் முதலில் கழுவப்பட்டு அபிஷேகம் செய்யப்பட வேண்டும். நாம் பரிசுத்தமான ஆடைகளை அணிகிறோம். நாம் ஒரு பீடத்தில் ஜெபிக்கிறோம், அதில் இருந்து ஜெபங்கள் தேவனிடம் செல்கின்றன. நாம் இறுதியாக தேவனின் பிரசன்னத்துக்கு ஒரு திரை வழியாக செல்கிறோம்.

தற்கால ஆலயங்களுக்கும் பண்டைய ஆசரிப்பு கூடாரத்துக்கும் இடையிலான மிக முக்கியமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், இயேசு கிறிஸ்துவில் நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்தி, அவருடைய பாவநிவாரண பலிக்காக நம்மை நன்றியுணர்வால் நிரப்புகிறது. தம்முடைய பிள்ளைகள் அனைவரும் தம் சமூகத்தில் பிரவேசிக்க தேவன் விரும்புகிறார்; “ஆசாரியர்கள் மற்றும் ஆசாரியைகளின் ராஜ்யம்” அவருக்கு தேவை (யாத்திராகமம் 19: 6). ஆனால் நம்முடைய பாவங்கள் அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவதைத் தடுக்கின்றன, ஏனென்றால் “எந்த ஒரு அசுத்தமுள்ள பொருளும் தேவனோடு தரித்திருக்க முடியாது” (1 நேபி 10:21 ). ஆகவே, பிதாவாகிய தேவன் நம்முடைய “வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராகிய” இயேசு கிறிஸ்துவை அனுப்பினார் (எபிரெயர் 9:11). அவர் நமக்காக திரையை விலக்குகிறார் தேவனின் ஜனங்கள் அனைவருக்கும் “நாம் இரக்கம் பெறும்படி தைரியமாக கிருபாசனத்தண்டை வர” வல்லமையளிக்கிறார் (எபிரெயர் 4:16 ).

இன்று, ஆலயங்களின் நோக்கம் நமக்கு மேன்மையடைதல் பெறுவதை விட அதிகம். நமது சொந்த நியமங்களைப் பெற்ற பிறகு, அவர்கள் சார்பாக பதிலி நியமங்களைப் பெற்று, நம் முன்னோர்களின் இடத்தில் நாம் நிற்க முடியும். ஒரு விதத்தில், நாம் பூர்வகால பிரதான ஆசாரியரைப் போலவும், மற்றவர்களுக்காக தேவனின் பிரசன்னத்திற்கான வழியைத் திறந்து, பெரிய பிரதான ஆசாரியராகவும் மாறலாம்.

பலி, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது

பாவநிவர்த்தி மற்றும் ஒப்புரவாகுதலின் கொள்கைகள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பே இருந்த மிருகஜீவ பலி பழங்கால நடைமுறையில் வல்லமையான முறையில் கற்பிக்கப்படுகின்றன. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் காரணமாக, ஆதாமும் ஏவாளும் பலி செலுத்தினார்கள், இரட்சகரின் பலியைப்பற்றிய அதன் அடையாள குறிப்பைப் புரிந்துகொண்டார்கள், இதை தங்கள் குழந்தைகளுக்கு கற்பித்தார்கள் (மோசே 5:4–12 பாரக்கவும்; ஆதியாகமம் 4:4ஐயும் பார்க்கவும்).

பண்டைய இஸ்ரவேலின் பாவநிவர்த்தி நாளில் மிருகஜீவ பலியின் அடையாளங்கள் குறிப்பாக கடுமையானதாகத் தோன்றியிருக்கலாம் (எபிரேயுவில் “யாம் கிப்பூர்”). இந்த வருடாந்திர சடங்கின் தேவை லேவியராகமம் 16:30ல் தெரிவிக்கப்பட்டது: “கர்த்தரின் சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்பொருட்டு, உங்களைச் சுத்திகரிக்க ஆசாரியன் உங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்வான்.” இதனால் தேவ பிரசன்னம் ஜனங்கள் மத்தியில் இருக்கக்கூடும். இந்த பாவநிவர்த்தி பல்வேறு சடங்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டது. இவற்றில் ஒன்றில், மக்களின் பாவங்களுக்கான காணிக்கையாக ஒரு ஆடு கொல்லப்பட்டது, பிரதான ஆசாரியன் ஆட்டின் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு எடுத்துச் சென்றான். பின்னர், பிரதான ஆசாரியன், அந்த பாவங்களை ஆட்டுக் கிடாவுக்கு மாற்றிய அடையாளமாக, ஒரு உயிருள்ள வெள்ளாட்டு கிடா மீது கைகளை வைத்து இஸ்ரவேல் புத்திரரின் பாவங்களை அறிக்கை பண்ணுவான். பின்னர் ஆடு இஸ்ரவேலின் முகாமிலிருந்து வெளியே துரத்தப்பட்டது.

இந்த சடங்கில், ஆடுகள் இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்தின, பாவமுள்ள மக்களின் இடத்தைப் பிடித்தன. தேவனின் முன்னிலையில் பாவத்தை அனுமதிக்கக்கூடாது. ஆனால் பாவிகளை அழிக்க அல்லது விரட்டுவதற்கு பதிலாக, தேவன் வேறு வழியை வழங்கினார், அதற்கு பதிலாக ஒரு ஆடு கொல்லப்படும் அல்லது வெளியேற்றப்படும். “அந்த வெள்ளாட்டுக்கிடா அவர்களின் அக்கிரமங்களையெல்லாம் தன் மீது சுமந்து கொள்ளும்” (லேவியராகமம் 16:22).

இந்த சடங்குகளின் குறியீடானது, இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பிராயச்சித்தத்தையும் மீண்டும் தம்முடைய சந்நிதியில் கொண்டுவர தேவன் வழங்கிய வழியை சுட்டிக்காட்டியது. இரட்சகர் “நமது பாடுகளை ஏற்றுக்கொண்டு நமது துக்கங்களைச் சுமந்தார்,” “நாமெல்லாருடைய அக்கிரமத்தையும்” (ஏசாயா 53:4, 6). அவர் நமது இடத்தில் நின்று, பாவத்தின் தண்டனையைச் செலுத்த அவருடைய உயிரைக் கொடுத்தார், பின்னர் அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம் மரணத்தை வென்றார் (மோசியா 15: 8–9 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் பலி “அங்கே பெரிதும் கடைசியுமான பலி நடக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது, ஆம் அது மனுஷனாலான பலியோ விலங்கிலாலான பலியோ அல்ல, ”ஆனால் மாறாக“ அனாதியான மற்றும் நித்திய பலி ”( ஆல்மா 34:10 ). பூர்வகால பலிகள் சுட்டிக்காட்டிய அனைத்தையும் அவர் நிறைவேற்றினார்.

இந்த காரணத்திற்காக, அவருடைய பலி முடிந்தபின், அவர் சொன்னார், “இனி இரத்தம் சிந்துதலை எனக்கு நீங்கள் படைக்க வேண்டாம்; ஆம், உங்கள் பலிகள் … ஒழிக்கப்படும். … ஆம், நீங்கள் எனக்கு உடைந்த இருதயத்தையும், நொருங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள்” (3 நேபி 9:19–20).

ஆகவே, பழைய ஏற்பாட்டில் பலிகள் மற்றும் ஆசரிப்பு கூடாரம் (அல்லது பின்னர், ஆலயத்தைப்பற்றிய) பாகங்களை நீங்கள் காணும்போது, அவற்றில் பலவற்றை நீங்கள் காணலாம், எல்லாவற்றிற்கும் முக்கிய நோக்கம் மேசியா இயேசு கிறிஸ்து மீதான உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதே என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இருதயமும் மனமும் அவரிடம் திரும்புவதாக. உங்களை மீண்டும் தேவனின் முன்னிலையில் கொண்டுவர அவர் என்ன செய்திருக்கிறார், அவரைப் பின்பற்ற நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சிந்தியுங்கள்.

குறிப்பு

  1. யாத்திராகமம் 33: 7–11 ஒரு “சபையின் கூடாரத்தை” குறிப்பிடுகிறது, அங்கு மோசே கர்த்தருடன் உரையாடினான், ஆனால் இது யாத்திராகமம் மற்றும் லேவியராகமத்தில் விவரிக்கப்பட்ட பலிகளுக்கான அமைப்பாக இருக்கவில்லை. யாத்திராகமம் 25–30ல், விவரிக்கப்பட்டுள்ள ஆசரிப்புக்கூடாரத்தில் நிறைவேற்றப்பட்ட பலிகள், தேவன் மோசேக்குக் கட்டளையிட்ட, இஸ்ரவேல் புத்திரர் கட்டியது (யாத்திராகமம் 35–40ல் உள்ளன). ஆரோனும் அவனது குமாரர்களும் மிருகஜீவ பலிகள் செலுத்திய இந்த கூடாரம் அடிக்கடி சபைகளின் கூடாரம் எனவும் குறிப்பிடப்பட்டது” (எடுத்துக்காட்டாக, யாத்திராகமம் 28:43; 38:30; லேவியராகமம் 1:3 பார்க்கவும்).