“மே 16–22. உபாகமம் 6–8; 15; 18; 29–30; 34: ‘கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“மே 16–22. உபாகமம் 6–8; 15; 18; 29–30; 34, “ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
மே 16–22
உபாகமம் 6–8;15;18;29–30;34
“கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு”
கர்த்தருடைய வார்த்தைகளை தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான் (உபாகமம் 6:7 பார்க்கவும்). இந்த வாரம் நீங்கள் உபாகமம் படிக்கும்போது, நீங்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளைக் கண்டறியவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
எரியும் புதரிலிருந்து தேவன் அவனிடம் பேசியபோது மோசேயின் பூலோக ஊழியம் ஒரு மலையில் தொடங்கியது (யாத்திராகமம் 3:1–10 பார்க்கவும்). 40 ஆண்டுகளுக்கு மேலாக, தேவன் மோசேக்கு நெபோ மலையின் உச்சியிலிருந்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைப்பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தபோது இது ஒரு மலையிலே முடிந்தது.(உபாகமம் 34:1–4 பார்க்கவும்). வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழைய இஸ்ரவேல் புத்திரரை ஆயத்தப்படுத்துவதற்காக மோசே தனது வாழ்க்கையை கழித்திருந்தான், உபாகமம் புத்தகம் அவனுடைய இறுதி அறிவுறுத்தல்கள், நினைவூட்டல்கள், அறிவுரைகள் மற்றும் இஸ்ரவேலர்களிடம் வேண்டுகோள்களைப் பதிவு செய்கிறது. மக்களுக்குத் தேவையான ஆயத்தமான மோசேயின் ஊழியத்தின் உண்மையான பொருள், வனாந்தரத்தில் உயிர்வாழ்வது, தேசங்களை வெல்வது அல்லது ஒரு சமூகத்தை உருவாக்குவதைப்பற்றியது அல்ல என்பதை அவனுடைய வார்த்தைகளை வாசிப்பது தெளிவுபடுத்துகிறது. இது தேவனை நேசிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும், அவருக்கு விசுவாசமாகவும் இருக்க கற்றுக்கொள்வதாகும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய ஜீவனுக்குள் நுழைய நாம் அனைவருக்கும் தேவைப்படும் ஆயத்தம் இதுதான். ஆகவே, மோசே ஒருபோதும் “பாலும் தேனும் பாயும் தேசத்தில்” கால் வைக்காதபோது,(யாத்திராகமம் 3:8), அவனுடைய விசுவாசத்தினாலும் விசுவாசமாயிருந்ததாலும், தம்மைப் பின்பற்றுபவர்கள் யாவருக்காகவும் தேவன் ஆயத்தம் செய்த வாக்குத்தத்தத்தின் தேசத்தில் அவன் நுழைந்தான்.
உபாகமத்தின் ஒரு மேம்போக்கான பார்வைக்கு “உபாகமம்” in the Bible Dictionaryல் பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
உபாகமம் 6:4–7; 8:2–5, 11–17; 29:18–20; 30:6–10, 15–20
நான் அவரை முழு மனதுடன் நேசிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
மோசே தனது இறுதி போதனைகளில், இஸ்ரவேல் புத்திரருக்கு நினைவூட்டினான், “இந்த நாற்பது ஆண்டுகளில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடன் இருந்தார்;” வனாந்தரத்தில் இருந்தபோதும் “உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை” (உபாகமம் 2:7). இப்போது இஸ்ரவேலர் “[அவர்கள்] கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், [அவர்கள்] நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளும்,” உள்ள வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள் நுழைந்தார்கள்,(உபாகமம் 6:10–11), அவர்கள் தங்கள் இருதயங்களை கடினப்படுத்தி, கர்த்தரை மறந்துவிடுவார்கள் என்று மோசே அஞ்சினான்.
மோசேயின் ஆலோசனையை நீங்கள் வாசிக்கும்போது உங்கள் சொந்த இருதயத்தின் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் பின்வரும் வசனங்களில் கவனம் செலுத்த விரும்பலாம் மற்றும் உங்கள் எண்ணங்களை எழுதலாம்:
உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாமல் இருக்கவும், முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசிக்கவும் நீங்கள் என்ன செய்ய முடியும்? யாத்திராகமம் 6:5–6 மற்றும் மத்தேயு 22:35–40க்குமிடையே என்ன தொடர்பை காண்கிறீர்கள்? (லேவியராகமம் 19:18ஐயும் பார்க்கவும்).
Dieter F. Uchtdorf, “A Yearning for Home,” Liahona, Nov. 2017, 21–24ஐயும் பார்க்கவும்.
“கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.”
வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழையும் இஸ்ரவேலரின் தலைமுறையினரில் பெரும்பாலோர் எகிப்தில் ஏற்பட்ட வாதைகளைக் கண்டதில்லை அல்லது செங்கடலைக் கடந்ததில்லை. தேவனின் ஜனங்களாக இருக்க வேண்டுமென்றால், அவர்களும் எதிர்கால சந்ததியினரும் தேவனின் அற்புதங்களையும் தேவனின் நியாயப்பிரமாணங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை மோசே அறிந்திருந்தான்.
உபாகமம் 6:4–12, 20–25ல், மோசே கொடுத்த எந்த ஆலோசனை தேவன் உங்களுக்காகச் செய்த பெரிய காரியங்களை நினைவில் வைக்க உங்களுக்கு உதவக்கூடும்? கர்த்தருடைய வார்த்தை தினமும் “உங்கள் இருதயத்தில்” இருக்கும்படி நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?
எதிர்கால தலைமுறையினருக்கு உங்கள் விசுவாசத்தை எவ்வாறு கடத்துவீர்கள்?
உபாகமம் 11:18–21; Gerrit W. Gong, “Always Remember Him,” Liahona, May 2016, 108–11; Bible Dictionary, “Frontlets or phylacteriesஐயும் பார்க்கவும்”
தேவைப்படுபவர்களுக்கு உதவுவது தாராளமான கைகள் மற்றும் விருப்பமுள்ள இருதயங்களை உள்ளடக்கியது.
இன்று பின்பற்றப்படாத சில குறிப்பிட்ட நடைமுறைகள் உட்பட ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவுவதைப்பற்றிய ஆலோசனையை உபாகமம் 15:1–15 வழங்குகிறது. ஆனால் இந்த வசனங்கள் ஏழைகளுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்பதையும், அவர்களுக்கு உதவுவதைப்பற்றிய நமது அணுகுமுறைகள் எவ்வாறு கர்த்தருக்கு முக்கியம் என்பதையும் கற்பிக்கின்றன என்பதைக் கவனியுங்கள். மற்றவர்களுக்கு சேவை செய்வதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Russell M. Nelson, “The Second Great Commandment,” Liahona, Nov. 2019, 96–100ஐயும் பார்க்கவும்.
மோசேயைப் போல எழுப்பப்படும் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து.
உபாகமம் 18:15–19ல் (அப்போஸ். 3:20–23; 1 நேபி 22:20–21; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:40; 3 நேபி 20:23 பார்க்கவும்) தீர்க்கதரிசனம் குறித்து பேதுரு, நேபி, மரோனி, இரட்சகர் தாமே கூறியிருக்கிறார்கள். இந்த வசனங்களிலிருந்து இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? மீட்பர் எப்படி மோசேயை “போல இருக்கிறார்”? (உபாகமம் 18:15).
மோசேக்கு என்ன நேர்ந்தது?
உபாகமம் 34:5–8 மோசே மரித்தான் என சொன்னாலும், பிற்காலப் புரிதல், அவன் மறுரூபமாக்கப்பட்டான், அல்லது உயிர்த்தெழுப்பப்படும்வரை அவன் வேதனையோ மரணத்தையோ அனுபவிக்காதபடிக்கு மாற்றப்பட்டான் என தெளிவுபடுத்துகிறது. (ஆல்மா 45:18–19; Bible Dictionary, “Moses”; Guide to the Scriptures, “Translated Beings,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்). மறுரூப மலையில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொடுப்பதற்கு மோசேக்கு ஒரு உடல் இருக்க வேண்டும் என்பதால் மறுரூபமாக்கப்பட வேண்டியது அவசியம் (மத்தேயு 17:1–13 பார்க்கவும்).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
உபாகமம் 6:10–15.இந்த வசனங்கள் உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்ட வழிகளைப்பற்றி சிந்திக்க உங்கள் குடும்ப அங்கத்தினர்களைத் தூண்டக்கூடும். “கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” என்ற ஆலோசனையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? (உபாகமம் 6:12). உங்கள் ஆசீர்வாதங்களைப்பற்றிய உங்கள் உணர்வுகளை ஒரு குறிப்பிதழில் அல்லது FamilySearchல் பதிவு செய்ய நீங்கள் விரும்பலாம்.
-
உபாகமம் 6:13, 16; 8:3.இந்த வசனங்கள் இரட்சகரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் உதவின; எப்படி என்பதைப் பார்க்க, மத்தேயு 4:1–10 ஒன்றாக வாசியுங்கள் . தேவைப்படும் காலங்களில் எந்த வேத வசனங்கள் நமக்கு உதவியுள்ளன?
-
உபாகமம் 7:6–9.உங்களுக்கு பிடித்த உணவைத் தயாரிப்பது போன்ற உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் விசேஷித்த விதமாக உணர ஏதாவது செய்யுங்கள். பின்னர் நீங்கள் உபாகமம் 7:6–9 வாசித்து, கர்த்தருக்கு “விசேஷித்த ஜனமாக” இருப்பது என்றால் என்பதைப்பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என கலந்துரையாடவும் (வசனம் 6).
-
உபாகமம் 29:12–13. உபாகமம் 29:12–13 பற்றி பேசுவது, உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் பரலோக பிதாவுடன் அவர்கள் செய்யும் அல்லது செய்த உடன்படிக்கைகளைப்பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தேவனின் ஜனம் என்பதற்கு அர்த்தம் என்ன? “[தேவனுடைய] சமூகத்தில் … நிற்க [நமக்கு]” நமது உடன்படிக்கைகள் எவ்வாறு உதவுகின்றன? ( வசனம் 13).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Want to Live the Gospel,” Children’s Songbook, 148.