“மே 9–15. எண்ணாகமம் 11–14; 20–24: ‘கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள், பயப்படவேண்டியதில்லை,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“மே 9–15. எண்ணாகமம் 11-14; 20–24,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
மே 9–15
எண்ணாகமம் 11–14; 20–24
“கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள், பயப்படவேண்டியதில்லை”
எண்ணாகமம் புத்தகத்தில் உள்ள பல மதிப்புமிக்க கொள்கைகளில் சிலவற்றை இந்த குறிப்பு எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் பார்க்க ஆவியானவர் உதவக்கூடிய மற்றவர்களுக்கும் வெளிப்படையாக இருங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
கால்நடையாக சென்றாலும், சினாய் வனாந்தரத்தில் இருந்து கானானில் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு பயணிக்க சாதாரணமாக 40 ஆண்டுகள் ஆகாது. ஆனால் இஸ்ரவேல் புத்திரருக்கு புவியியல் தூரத்தை கடப்பதற்கு அல்ல, ஆவிக்குரிய தூரத்தை கடப்பதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டது: அவர்கள் யார் என்பதற்கும் கர்த்தர் விரும்பிய அவர்கள் தம்முடைய உடன்படிக்கை ஜனங்களாக ஆக வேண்டும் என்பதற்கும் இடையிலான தூரம்.
வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு இஸ்ரவேல் புத்திரர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உட்பட, அந்த 40 ஆண்டுகளில் நடந்த சிலவற்றை எண்ணாகமம் புத்தகம் விவரிக்கிறது. கர்த்தருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதைப்பற்றி அவர்கள் கற்றுக்கொண்டார்கள் (எண்ணாகமம் 12) பார்க்கவும்). எதிர்காலம் நம்பிக்கையற்றதாகத் தோன்றினாலும், கர்த்தருடைய வல்லமையை நம்புவதைப்பற்றி அவர்கள் கற்றுக்கொண்டார்கள் (எண்ணாகமம் 13–14 பார்க்கவும்). விசுவாசமற்ற அல்லது நம்பிக்கையற்றவராக இருப்பது ஆவிக்குரிய தீங்கு விளைவிப்பதாக அவர்கள் கற்றுக்கொண்டார்கள், ஆனால் அவர்கள் மனந்திரும்பி குணமடைய இரட்சகரைப் பார்க்க முடியும் (எண்ணாகமம் 21:4–9 பார்க்கவும்).
நாம் அனைவரும் சில வழிகளில் இஸ்ரவேலர்களைப் போன்றவர்கள். ஆவிக்குரிய வனாந்தரத்தில் இருப்பது என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம், மேலும் அவர்கள் கற்றுக்கொண்ட அதே படிப்பினைகள், நம்முடைய சொந்த வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள் நுழையத் தயாராக நமக்கு உதவக்கூடும்: நம்முடைய பரலோக பிதாவுடன் நித்திய ஜீவன்.
எண்ணாகமம் புத்தகத்தைப்பற்றிய மேம்போக்கான பார்வைக்கு “எண்ணாகமம்” in the Bible Dictionary பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
வெளிப்படுத்துதல் அனைவருக்கும் கிடைக்கிறது, ஆனால் தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் அவருடைய சபையை வழிநடத்துகிறார்.
எண்ணாகமம் 11:11–17, 24–29ல், மோசே எதிர்கொண்ட பிரச்சினையையும் தேவன் முன்மொழிந்த தீர்வையும் கவனியுங்கள். “கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசிகள்” ஆக அவன் விரும்பியதாக மோசே சொன்னபோது என்ன சொன்னான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (வசனம் 29). இந்த வசனங்களை நீங்கள் சிந்திக்கும்போது, தலைவர் ரசல் எம். நெல்சன் அவர்களின் இந்த வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்: “தேவன் உங்களிடம் உண்மையாகவே பேச விரும்புகிறாரா? ஆம்! … மிக அதிகமானவற்றை நீங்கள் அறிந்துகொள்ள பரலோகத்திலுள்ள பிதா விரும்புகிறார்” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or Liahona, May 2018, 95).
இருப்பினும், எல்லோரும் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க முடியும் என்று சொல்வது, அவர்கள் அனைவரும் மோசே செய்ததைப் போல தேவ ஜனத்தை வழிநடத்த முடியும் என்று அர்த்தமல்ல. எண்ணாகமம் 12ல் பதிவு செய்யப்பட்ட சம்பவம் இதை தெளிவுபடுத்துகிறது. இந்த அதிகாரத்தை நீங்கள் படிக்கும்போது, நீங்கள் என்ன எச்சரிக்கைகளைக் காண்கிறீர்கள்? தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புவதைப்பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
1 நேபி 10:17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:1–7; Dallin H. Oaks, “Two Lines of Communication,” Liahona, Nov. 2010, 83–86ஐயும் பார்க்கவும்.
கர்த்தர் மீதுள்ள விசுவாசத்துடன், எதிர்காலத்திற்கான நம்பிக்கை எனக்கிருக்க முடியும்.
நீங்கள் எண்ணாகமம் 13–14 வாசிக்கும்போது, உங்களை இஸ்ரவேலரின் இடத்தில் வைக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் ஏன் “எகிப்துக்குத் திரும்பிப் போக” விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? (எண்ணாகமம் 14:3). வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைவதில் அவநம்பிக்கை கொண்டவர்களைப் போல நீங்கள் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா? காலேப்பிடமிருந்த மற்ற “ஆவியை” நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? (எண்ணாகமம் 14:24). காலேப் மற்றும் யோசுவாவின் விசுவாசத்தைப்பற்றி உங்களைக் கவர்ந்திழுக்கும் விஷயங்கள் என்ன, நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு அவர்களின் உதாரணங்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?
Teachings of Presidents of the Church: Gordon B. Hinckley (2016), 75–76ஐயும் பார்க்கவும்.
நான் விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவைப் பார்த்தால், அவர் என்னை ஆவிக்குரிய ரீதியில் குணப்படுத்த முடியும்.
எண்ணாகமம் 21: 4–9 ல் பதிவு செய்யப்பட்ட கதையை மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகள் அறிந்திருந்தனர், அதன் ஆவிக்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டனர். இக்கதையைப்பற்றிய உங்கள் புரிதலுடன் 1 நேபி 17:40–41; ஆல்மா 33:18–22; மற்றும் ஏலமன் 8:13–15 என்ன சேர்க்கின்றன? இந்த பத்திகளை நீங்கள் படிக்கும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் ஆவிக்குரிய குணப்படுதலைப்பற்றி சிந்தியுங்கள். இஸ்ரவேலர் குணப்பட “வெண்கல சர்ப்பத்தை [பார்க்க] வேண்டியிருந்தது” (எண்ணாகமம் 21:9). “தேவனுடைய குமாரனை விசுவாசத்தோடு பார்க்க” அதிக முழுமையாக என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? (ஏலமன் 8:15).
யோவான் 3:14–15; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36; Dale G. Renlund, “Abound with Blessings,” Liahona, May 2019, 70–73ஐயும் பார்க்கவும்.
மற்றவர்கள் என்னை அப்படிச் செய்யாமலிருக்க வற்புறுத்த முயற்சித்தாலும், தேவனின் சித்தத்தை என்னால் பின்பற்ற முடியும்.
இஸ்ரவேலர் நெருங்கி வருவதை மோவாபின் ராஜாவான பாலாக் அறிந்ததும், ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உச்சரிப்பதில் பெயர் பெற்ற பிலேயாமை அழைத்தான். இஸ்ரவேலர்களை சபிப்பதன் மூலம் பலவீனப்படுத்த வேண்டும் என்று பாலாக் விரும்பினான். பாலாக் எப்படி பிலேயாமை வற்புறுத்த முயன்றான் என்பதைக் கவனியுங்கள் (எண்ணாகமம் 22:5–7, 15–17 பார்க்கவும்), தேவனின் விருப்பத்திற்கு எதிராக நீங்கள் எதிர்கொள்ளும் சோதனையைப்பற்றி சிந்தியுங்கள். எண்ணாகமம் 22:18, 38; 23:8, 12, 26; 24:13ல் பாலாமின் பதில்களில் எது உங்களைக் கவர்கிறது?
சோகமாக, பிலேயாம் இறுதியில் அழுத்தம் கொடுத்து இஸ்ரவேலைக் காட்டிக் கொடுத்தான் என்று தெரிகிறது (எண்ணாகமம் 31:16; யூதா 1:11 பார்க்கவும்). மற்றவர்களின் அழுத்தம் இருந்தபோதிலும் நீங்கள் எவ்வாறு கர்த்தருக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
( எண்ணாகமம் 11:4–6.எண்ணாகமம் 11:4–6ல் தெரிவிக்கப்பட்டபடி நம்முடைய அணுகுமுறை இஸ்ரவேலரின் அணுகுமுறைக்கு எப்போதும் ஒத்ததா? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:15–21 லுள்ள ஆலோசனை எவ்வாறு உதவக் கூடும்?
-
எண்ணாகமம் 12:3.எண்ணாகமம் 12 அல்லது நீங்கள் படித்த மற்ற வேத வசனங்களில் மோசே “மிகவும் சாந்தகுணமுள்ளவன்” என்று எப்படி காட்டினான்? நீங்கள் மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் செய்தியில் சாந்தத்தைப்பற்றிய விளக்கத்தை மதிப்பாய்வு செய்யலாம். “Meek and Lowly of Heart” (Liahona, May 2018, 30–33) or in “Meek, Meekness” in Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org). நாம் எவ்வாறு சாந்தகுணமுள்ளவர்களாக மாற முடியும் என்பதைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் அவ்வாறு செய்யும்போது என்ன ஆசீர்வாதங்கள் வரலாம்?
-
எண்ணாகமம் 13–14.உங்கள் குடும்பத்தின் இரண்டு (அல்லது அதற்கு மேற்பட்ட) அங்கத்தினர்கள் உங்கள் வீட்டின் மற்றொரு பகுதியை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசம் போல “உளவு பார்க்க” பாசாங்கு செய்யலாம். எண்ணாகமம் 13:27–33 அல்லது எண்ணாகமம் 14:6–9 அடிப்படையில் பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு அறிக்கை கொடுக்க முடியும். இந்த வசனங்களிலுள்ள இரண்டு வெவ்வேறு அறிக்கைகளிலிருந்து விசுவாசத்தைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் எப்படி காலேப் மற்றும் யோசுவாவைப் போல அதிகமாக இருக்க முடியும்?
-
எண்ணாகமம் 21:4–9.எண்ணாகமம் 21:4–9, 1 நேபி 17:40–41; ஆல்மா 33:18–22; மற்றும் ஏலமன் 8:13–15 உடன் வாசித்த பிறகு, உங்கள் குடும்பத்தினர் காகிதம் அல்லது களிமண்ணிலிருந்து ஒரு பாம்பை உருவாக்கி அதன் மீது அல்லது காகிதத்தில் “தேவகுமாரனை விசுவாசத்தோடு பார்க்க” நீங்கள் செய்யக்கூடிய சில எளிய விஷயங்களை எழுதலாம் (ஏலமன் 8:15).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Jesus, the Very Thought of Thee,” Hymns, no. 141.