பழைய ஏற்பாடு 2022
மே 23–29. யோசுவா 1–8; 23-24: “பலங்கொண்டு திடமனதாயிருங்கள்”


“மே 23–29. யோசுவா 1–8; 23-24: “பலங்கொண்டு திடமனதாயிருங்கள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021}

“மே 23–29. யோசுவா 1–8; 23-24: “பலங்கொண்டு திடமனதாயிருங்கள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
மோசே யோசுவாவை நியமித்தல்

மோசே யோசுவாவை நியமித்தல் படவிளக்கம்–டாரல் தாமஸ்

மே 23–29

யோசுவா 1–8; 23–24

“பலங்கொண்டு திடமனதாயிருங்கள்”

நீங்கள் யோசுவா புத்தகத்தைப் படிக்கும்போது, இஸ்ரவேலரைப்பற்றி நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இதற்கு பல தலைமுறைகள் ஆனது, ஆனால் கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படவிருந்தது: இஸ்ரவேல் புத்திரர் வாக்குத்தத்தத்தின் தேசத்தை சுதந்தரிக்கும் விளிம்பில் இருந்தனர். ஆனால் அவர்கள் வழியில் யோர்தான் நதியும், எரிகோவின் சுவர்களும், கர்த்தரை நிராகரித்த ஒரு பொல்லாத ஆனால் வலிமைமிக்க ஜனங்களும் நின்றனர் ( 1 நேபி 17:35 பார்க்கவும்). அதற்கு மேல், அவர்களின் அன்பான தலைவன் மோசே இல்லாமல் போய்விட்டான். இந்த நிலைமை சில இஸ்ரவேலர்களை பலவீனமாகவும் பயமாகவும் உணரச் செய்திருக்கக்கூடும், ஆனால் கர்த்தர், “பலங்கொண்டு திடமனதாயிருங்கள்” என்றார். அவர்கள் ஏன் இப்படி உணர வேண்டும்? அவர்களுடைய சொந்த பலத்தினாலோ அல்லது மோசேயின் அல்லது யோசுவாவின் காரணத்தினாலோ அல்ல, ஆனால் “நீ போகுமிடமெலாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றதனாலேயே. ( யோசுவா 1:9). நம்முடைய சொந்த நதிகளைக் கடக்க, சுவர்களை வீழ்த்த வேண்டியிருக்கும்போது, நம் வாழ்க்கையில் அற்புதமான விஷயங்கள் நடக்கக்கூடும், ஏனென்றால் “கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” ( யோசுவா 3: 5).

யோசுவாவின் புதத்கத்தைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு, “Joshua, book of” in the Bible Dictionary பார்க்கவும்.

படம்
Learn More image
படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யோசுவா 1:1–9

நான் அவருக்கு உண்மையாக இருந்தால் தேவன் என்னுடன் இருப்பார்.

மோசேயை மாற்றுவதற்கு யோசுவா அழைக்கப்படவிருந்தது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். யோசுவா 1:1–9ல் அவனை ஊக்குவிக்க கர்த்தர் சொன்னதை கவனியுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான சவால்களைப்பற்றி சிந்தியுங்கள்; இந்த வசனங்களில் எது உங்களுக்கு தைரியம் தருகிறது?

யோசுவா என்னும் பெயர் ( எபிரேயுவில்எஹோசுவா அல்லது எசுவா) “யேகோவா இரட்சிக்கிறார்” எனும் அர்த்தமுடையதாகக் காண்பது ரசிக்கத்தக்கதாயிருக்கலாம். இயேசு என்ற பெயர் எசுவாவிலிருந்து வந்தது. ஆகவே, யோசுவாவைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரை வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதற்கான அவனது பணி எவ்வாறு இரட்சகரின் பணியை நினைவூட்டுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

Ann M. Dibb, “Be of a Good Courage,” Liahona, May 2010, 114–16ஐயும் பார்க்கவும்.

யோசுவா 2

இரட்சிப்புக்கு விசுவாசமும் செயல்களும் அவசியம்.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ராகாபை விசுவாசம் மற்றும் செயல்கள் இரண்டிற்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று பார்த்தார்கள் (எபிரெயர் 11:31; யாக்கோபு 2:25 பார்க்கவும்) நீங்கள் யோசுவா 2 வாசிக்கும்போது, ராகாபின் விசுவாசத்தின் பங்கைக் கவனியுங்கள், தன்னையும், அவளது குடும்பத்தினரையும், இஸ்ரவேலின் ஒற்றர்களையும் காப்பாற்றிய செயலையும் கருத்தில் கொள்ளுங்கள். கிறிஸ்துவிலும் உங்கள் செயல்களிலும் உள்ள உங்கள் நம்பிக்கை உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதைப்பற்றி இது என்ன கற்பிக்கிறது?

ராகாப் தாவீது ராஜா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்(மத்தேயு 1: 5பார்க்கவும்). இதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

படம்
ராகாப்

ராகாப் அவள் ஜன்னல் அருகில். வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருத்தல்–எலஸ்பெத் யங்.

யோசுவா 3–4

இயேசு கிறிஸ்துவில் எனக்கு விசுவாசம் இருந்தால் தேவனின் “அதிசயங்களை” நான் அனுபவிக்க முடியும்.

“பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறிய வேண்டும்” என்று கர்த்தர் விரும்புகிறார் (யோசுவா 4:23). யோசுவா 3–4 நீங்கள் வாசிக்கும்போது, கர்த்தருடைய கை வலிமையானது என்பதை நீங்கள் எப்படி அறிகிறீர்கள் என்பதை சிந்திக்கவும். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் “அதிசயங்களை” எவ்வாறு செய்திருக்கிறார்? (யோசுவா 3:5 அந்த அதிசயங்களை நீங்கள் எவ்வாறு அடிக்கடி அனுபவிக்க முடியும் அல்லது அடையாளம் காணலாம்? (எடுத்துக்காட்டாக, யோசுவா 3:17 பார்க்கவும்).

இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடப்பதற்கு முன்பு தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் “ஆசாரியர்களின் உள்ளங்கால்கள்… யோர்தானின் தண்ணீரிலே பட்ட மாத்திரத்திலே” நதி பிரிந்தது என்பதில் உங்களுக்கு என்ன முக்கியத்துவத்தை நீங்கள் காண்கிறீர்கள்?? (யோசுவா 3:13, 15).

யோர்தான் நதியில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுக்கு 2 இராஜாக்கள் 2:6–15; 5:1–14; மற்றும் மாற்கு 1:9–11 பார்க்கவும். இந்த வசனங்களை நீங்கள் சிந்திக்கும்போது, இந்த நிகழ்வுகளுக்கு இடையே என்ன தொடர்புகளைக் காண்கிறீர்கள்?

Gérald Caussé, “Is It Still Wonderful to You?” ஐயும் பார்க்கவும். Liahona, May 2015, 98–100; “Exercise Faith in Christ” (video), ChurchofJesusChrist.org.

யோசுவா 6–8

கீழ்ப்படிதல் என் வாழ்க்கையில் தேவ வல்லமையைக் கொண்டுவருகிறது.

இந்த அதிகாரங்கள் எரிகோ மற்றும் ஆய் தேசங்கள் மீதான போர்களைப்பற்றி பேசுகின்றன. நீங்கள் அவற்றை வாசிக்கும்போது, உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் எவ்வாறு சோதனையை எதிர்த்துப் போராடுகிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (எடுத்துக்காட்டாக, யோசுவா 7: 10–13 பார்க்கவும்). தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதையும் அவருடைய வல்லமையைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, எரிகோவை எடுத்துக்கொள்வதற்கான கர்த்தரின் அறிவுறுத்தல்களில் உங்களைக் கவர்ந்தது எது? ( யோசுவா 6: 1–5 பார்க்கவும்). ஒருவேளை யோசுவா 7ல் உள்ள விவரம், நீங்கள் அகற்ற வேண்டிய உங்கள் வாழ்க்கையில் “சாபத்தீட்டானது இருக்கிறதா” என்பதை தீர்மானிக்க உங்களை ஊக்குவிக்கும் (யோசுவா 7:13).

யோசுவா 23–24

“உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.”

வாக்குத்தத்தத்தின் தேசத்தை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களிடையே பிரித்தபின் ( யோசுவா 13–21 பார்க்கவும்), யோசுவா அவர்களுக்கு இறுதி போதனைகளை வழங்கினான். யோசுவா 23–24ல், இந்த போதனைகளை நீங்கள் வாசிக்கும்போது, எச்சரிக்கைகள், ஆலோசனை மற்றும் நீங்கள் கண்ட வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களின் ஒரு பட்டியலை நீங்கள் வைத்திருக்கக்கூடும். இஸ்ரவேலர் அனுபவித்த எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, யோசுவா தனது வாழ்க்கையின் முடிவில் இந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லத் தேர்ந்தெடுத்தது ஏன்? “கர்த்தரைப் பற்றிக்கொள்வதற்கு” உங்களுக்கு உணர்த்தும் எதைக் காண்கிறீர்கள்.? (யோசுவா 23:8).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யோசுவா 1:8.தனித்தனியாகவும் குடும்பமாகவும் நம் வேத ஆய்வை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைப்பற்றி இந்த வசனம் என்ன கூறுகிறது? வேதவசனங்கள் எவ்வாறு நம்முடைய “வழியை வளமாக்குகின்றன”, நமக்கு “நல்ல வெற்றியை” அளித்தன?

யோசுவா 4: 3, 6–9 .இஸ்ரவேலர் யோர்தான் நதியிலிருந்த கற்களால் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார் என்பதை வாசித்த பிறகு, கர்த்தர் உங்களுக்காகச் செய்த சில பெரிய காரியங்களைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் பேசலாம். நீங்கள் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் ஒரு கல்லைக் கொடுத்து, கர்த்தர் அவர்களுக்காகச் செய்ததை எழுதவோ அல்லது வரையவோ அவர்களை அழைக்கலாம்.

யோசுவா 6:2–5.எரிகோவைக் கைப்பற்றுவதற்காக இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த அறிவுறுத்தல்களை உங்கள் குடும்பத்தினர் நடிப்பது வேடிக்கையாக இருக்கலாம். இந்த கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்பலாம்?

யோசுவா 24:15.இந்த வசனத்தை வாசித்த பிறகு, குடும்ப அங்கத்தினர்கள் கஷ்டமாக இருந்தாலும் கர்த்தருக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு சூழ்நிலை ஏற்படும் வரை முடிவு செய்யக் காத்திருப்பதற்குப் பதிலாக, “இந்த நாள்” அவருக்கு சேவை செய்வதற்கான தேர்ந்தெடுப்பைச் செய்வது ஏன் முக்கியம்? “கர்த்தருக்கு சேவை செய்ய” நாம் பாடுபடும்போது, நம்முடைய “வீட்டின்” அங்கத்தினர்களை எவ்வாறு ஆதரிக்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Choose the Right,” Hymns, no. 239.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் சாட்சியத்தை அடிக்கடி சொல்லுங்கள். சத்தியத்தின் உங்கள் நேர்மையான சாட்சி உங்கள் குடும்பத்தில் வல்லமையான முறையில் செல்வாக்கு ஏற்படுத்தும். இது ஆற்றொழுக்காக அல்லது நீளமாக இருக்க தேவையில்லை. ஒரு சாட்சியம் நேரடியாக மற்றும் இதயப்பூர்வமாக இருக்கும்போது மிகவும் வல்லமையானது. (Teaching in the Savior’s Way, 11 பார்க்கவும்.)

படம்
எரிகோவின் சுவர்கள் விழுகின்றன

கர்த்தர் எரிகோவின் சுவர்களை வீழ்த்தினார். © Providence Collection/licensed from goodsalt.com

அச்சிடவும்