“ஜூன் 13–19. 1 சாமுவேல் 8–10; 13; 15–18: ‘யுத்தம் கர்த்தருடையது,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022(2021)
“ஜூன் 13–19. 1 சாமுவேல் 8–10; 13; 15–18,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
ஜூன் 13–19
1 சாமுவேல் 8–10; 13; 15–18
“யுத்தம் கர்த்தருடையது”
இந்த அதிகாரங்களிலுள்ள மிக முக்கியமான கொள்கைகள் சிலவற்றை அடையாளம்காண இந்தக் குறிப்பிலுள்ள ஆலோசனைகள் உங்களுக்குதவலாம். நீங்கள் படிக்கும்போது பிற கொள்கைகளைக் காணலாம்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
இஸ்ரவேலின் கோத்திரங்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்தில் குடியேறியதிலிருந்து, பெலிஸ்தியர்கள் அவர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்தனர். கடந்த காலங்களில் அநேகந்தரம், கர்த்தர் இஸ்ரவேலரை தங்கள் எதிரிகளிடமிருந்து விடுவித்தார். ஆனால் இப்போது இஸ்ரவேலின் மூப்பர்கள், “எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்… எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும்” எனக் கேட்டனர்.( 1 சாமுவேல் 8: 19–20 ). கர்த்தர் விட்டுக் கொடுத்தார், சவுல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டான். பயங்கரமான இராட்சத கோலியாத் இஸ்ரவேலின் படைகளுக்கு சவால் விட்டபோது, சவுல் தனது மற்ற படைகளைப் போலவே “மிகவும் பயப்பட்டான்” ( 1 சாமுவேல் 17:11 ). அந்த நாளில், இஸ்ரவேலைக் காப்பாற்றியது சவுல் ராஜா அல்ல, ஆனால் தாவீது என்ற ஒரு தாழ்மையான ஆடுமேய்க்கும் சிறுவன், அவன் கவசம் அணியவில்லை, ஆனால் கர்த்தரிடத்தில் அசாத்தியமான விசுவாசத்தை அணிந்திருந்தான். இந்த யுத்தம் இஸ்ரவேலுக்கும், ஆவிக்குரிய யுத்தங்களைச் செய்யும் எவருக்கும், “கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியாலும் ரட்சிக்கிறவர் அல்ல” என்பதையும், “யுத்தம் கர்த்தருடையது” என்பதையும் நிரூபித்தது ( 1 சாமுவேல் 17:47 ) .
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்து என் இராஜா.
1 சாமுவேல் 8 நீங்கள் வாசிக்கும்போது, தன்னைத் தவிர வேறு ஒரு ராஜாவுக்கான இஸ்ரவேலரின் விருப்பத்தைப்பற்றி கர்த்தர் எப்படி உணர்ந்தார் என்பதைக் கவனியுங்கள். “[உங்களை]ஆளுவதற்கு” கர்த்தரைத் தேர்ந்தெடுப்பதன் அர்த்தம் என்ன? (1 சாமுவேல் 8:7). கர்த்தரைப் பின்பற்றுவதற்குப் பதிலாக உலகின் அநீதியான போக்குகளைப் பின்பற்ற நீங்கள் தூண்டப்படும் வழிகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இயேசு கிறிஸ்து உங்கள் நித்திய ராஜாவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு காட்ட முடியும்?
நியாயாதிபதிகள் 8:22–23; மோசியா 29:1–36; Neil L. Andersen, “Overcoming the World,” Liahona, May 2017, 58–62ஐயும் பார்க்கவும்.
1 சாமுவேல் 9:15–17; 10:1–12; 16:1–13
தேவன் தம்முடைய ராஜ்யத்தில் சேவை செய்ய தீர்க்கதரிசனத்தால் மக்களை அழைக்கிறார்.
தேவன் தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் சவுலையும் தாவீதையும் ராஜாக்களாக தேர்ந்தெடுத்தார் (1 சாமுவேல் 9:15–17; 10:1–12; 16:1–13 பார்க்கவும்). இன்று தனது சபையில் பணியாற்ற ஆண்களையும் பெண்களையும் அவர் அழைக்கிறார். “தேவனால் தீர்க்கதரிசனத்தால் அழைக்கப்படுவது,” என்பதன் அர்த்தத்தைப்பற்றி இந்த விவரங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?(விசுவாசப் பிரமாணங்கள் 1:5). கர்த்தருடைய அதிகாரமளிக்கப்பட்ட ஊழியர்களால் அழைக்கப்பட்டு பணிக்கப்படுவதால் என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன?
“கீழ்ப்படிவது பலியை விட சிறந்தது.”
சவுல் உடல் ரீதியாக உயரமானவனாக இருந்தபோதிலும், அவன் ராஜாவானபோது “அவனுடைய பார்வைக்கு சிறியவராக இருந்தான்” ( 1 சாமுவேல் 15:17). இருப்பினும், அவன் வெற்றியால் ஆசீர்வதிக்கப்பட்டதால், அவன் தன்னை அதிகம் நம்பவும், கர்த்தரைக் குறைவாகவும் நம்பத் தொடங்கினான். 1 சாமுவேல் 13: 5–14 ; 15ல் இதைப்பற்றி நீங்கள் என்ன ஆதாரம் காண்கிறீர்கள்? அப்போது நீங்கள் சவுலுடன் இருந்திருந்தால், அவனுடைய “கலகத்தையும்” “பிடிவாதத்தையும்” சமாளிக்க அவனுக்கு உதவியிருக்கக்கூடிய எதை அவனிடம் நீங்கள் சொல்லியிருப்பீர்கள்? (1 சாமுவேல் 15:23).
2 நேபி 9:28–29; ஏலமன் 12:4–5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:39–40; Thomas S. Monson, “Ponder the Path of Thy Feet,” Liahona, Nov. 2014, 86–88ஐயும் பார்க்கவும்.
“கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார்.”
“வெளிப்புற தோற்றத்தைக் கொண்டு” ஜனங்கள் பிறரைத் தீர்ப்பளிக்கும் சில வழிகள் யாவை? கர்த்தர் செய்வது போல “இருதயத்தைப்” பார்ப்பது என்றால் என்ன? (1 சாமுவேல் 16:7). மற்றவர்களையும் உங்களையும் பார்க்கும் விதத்தில் இந்த கொள்கையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கவனியுங்கள். அவ்வாறு செய்வது மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகள் அல்லது உறவுகளை எவ்வாறு பாதிக்கலாம்?
கர்த்தரின் உதவியுடன், எந்தவொரு சவாலையும் என்னால் சமாளிக்க முடியும்.
நீங்கள் 1 சாமுவேல் 17 வாசிக்கும்போது, இந்த அதிகாரத்தில் உள்ள பல்வேறு நபர்களின் வார்த்தைகளை சிந்தித்துப் பாருங்கள் (கீழே உள்ள பட்டியலைப் பார்க்கவும்). அவர்களுடைய வார்த்தைகள் அவர்களைப்பற்றி என்ன தெரிவிக்கின்றன? தாவீதின் வார்த்தைகள் கர்த்தரிடத்தில் அவனுடைய தைரியத்தையும் நம்பிக்கையையும் எவ்வாறு காட்டுகின்றன?
-
கோலியாத்: வசனங்கள் 8–10, 43–44
-
எலியாப்: வசனம் 28
-
சவுல்: வசனம் 33
நீங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட யுத்தங்ளைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவ முடியும் என்ற உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் எதை 1 சாமுவேல் 17 ல் நீங்கள் காணலாம்?
Gordon B. Hinckley, “Overpowering the Goliaths in Our Lives,” Ensign, May 1983, 46, 51–52ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
1 சாமுவேல் 9:15–21; 16:7.மூப்பர் டியட்டர் எப். உக்டர்பின் பின்வரும் சொற்களுடன் இந்த வசனங்களைப் படித்தல், கர்த்தர் சவுலையும் தாவீதையும் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதைப்பற்றிய ஒரு கலந்துரையாடலை ஊக்குவிக்கக்கூடும்: “நம்முடைய அநித்தியக் கண்களால் மட்டுமே நம்மைப் பார்த்தால், நாம் நம்மைப் போதுமானவர்களாகக் காணமாட்டோம். ஆனால் நம்முடைய பரலோக பிதா நாம் உண்மையிலேயே யார், நாம் யார் ஆக முடியும் என்று பார்க்கிறார்” (“ இது அற்புதமாக செயல்படுகிறது! ” Liahona, Nov. 2015, 23). குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவரின் இருதயத்தில் என்ன நல்ல குணங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப்பற்றி பேச முறை எடுக்கலாம் (1 சாமுவேல் 16: 7பார்க்கவும்).
-
1 சாமுவேல் 10:6–12.ஒரு வேலையை நிறைவேற்ற தேவன் ஆவிக்குரிய வல்லமையுடன் ஒருவரை ஆசீர்வதிப்பதை அல்லது அவர் சவுலை ஆசீர்வதித்ததைப் போல அழைப்பதை நாம் கண்டிருக்கிறோம்? அவருடைய சேவையில் “தேவன் [நமக்கு] வேறே இருதயத்தைக் கொடுத்தால்” அல்லது “தேவனுடைய ஆவி [நம்மீது] இறங்கினால்” நாம் என்ன அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்? ( வசனங்கள் 9–10 ).
-
1 சாமுவேல் 17:20–54.தாவீதும் கோலியாத்தும் கதையை ஒன்று சேர்ந்து வாசிப்பதை நீங்கள் ரசிக்கலாம் (“David and Goliath” in Old Testament Stories could help) or watching the video “The Lord Will Deliver Me” (ChurchofJesusChrist.org). இது நாம் “கோலியாத்துகள்” போல உணரக்கூடிய, நாம் எதிர்கொள்ளும் சவால்களைப்பற்றிய விவாதத்திற்கு வழிவகுக்கும். இந்த சவால்களில் சிலவற்றை நீங்கள் ஒரு இலக்கு அல்லது கோலியாத்தின் வரைபடத்தில் எழுதலாம் மற்றும் பொருட்களை (காகித பந்துகள் போன்றவை) எறிய முறை எடுக்கலாம்.
கோலியாத் வைத்திருந்த கவசம் மற்றும் ஆயுதங்களைப்பற்றியும் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கலாம் (வசனங்கள் 4–7 பார்க்கவும்). தாவீது என்ன வைத்திருந்தான்? (வசனங்கள் 38–40, 45–47 பார்க்கவும்). நமது கோலியாத்துகளைத் தோற்கடிக்க கர்த்தர் நமக்கு என்ன வழங்கியுள்ளார்?
-
1 சாமுவேல் 18:1–4.தாவீது மற்றும் யோனத்தான் ஒருவரோடொருவர் எப்படி நல்ல நண்பர்களாக இருந்தார்கள்? நல்ல நண்பர்கள் நம்மை எவ்வாறு ஆசீர்வதித்தார்கள்? நமது குடும்ப அங்கத்தினர்கள் உட்பட நல்ல நண்பர்களாக இருக்க நாம் என்ன செய்ய முடியும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Will Be Valiant,” Children’s Songbook, 162.