பழைய ஏற்பாடு 2022
ஜூன் 27–ஜூலை 3. 1 இராஜாக்கள் 17–19: “கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்”


“ஜூன் 27–ஜூலை 3. 1 இராஜாக்கள் 17–19: ‘கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஜூன் 27–ஜூலை 3. 1 இராஜாக்கள் 17–19“, என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

எரிகிற பலிபீடத்தினருகே எலியா நிற்றல்

எலியா பாகாலின் ஆசாரியர்களுக்கு எதிராக தகராறு செய்தல்–ஜெர்ரி ஹார்ஸ்டன்

ஜூன் 27–ஜூலை 3

1 இராஜாக்கள் 17–19

“கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்”

நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, நீங்கள் விசுவாசத்தைப் பயன்படுத்துகிறீர்கள், இது ஆவியின் “அமர்ந்த மெல்லிய சத்தத்தைக்” கேட்க உங்கள் இருதயத்தையும் மனதையும் தயார் செய்கிறது (1 இராஜாக்கள் 19:12).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இஸ்ரவேல் வீட்டார் சீர்குலைந்திருந்தனர். தாவீது மற்றும் சாலொமோனின் கீழ் அடைந்த ஒற்றுமையும் செழிப்பும் நீண்ட காலமாக இருந்தன, மேலும் கர்த்தருடனான தேசத்தின் உடன்படிக்கை உறவு பலருக்கு தொலைதூர நினைவாயிருந்தது. இஸ்ரவேல் ராஜ்யம் பிளவுபட்டுள்ளது, பத்து கோத்திரத்தினர் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தையும் இரண்டு கோத்திரத்தினர் யூதாவின் தெற்கு ராஜ்யத்தையும் உருவாக்கினர். இரு ராஜ்யங்களும் ஆவிக்குரிய பிரகாரமாய் நிலையற்றவையாக இருந்தன, கர்த்தருடனான உடன்படிக்கைகளை மீறிய ராஜாக்களால் நடத்தப்பட்டு மற்றவர்களும் இதேபோல் செய்யத் தூண்டப்பட்டனர் ( 1 இராஜாக்கள் 11–16 பார்க்கவும்). ஆனால் மதமாறுபாடு குறிப்பாக வடக்கு ராஜ்யத்தில் கடுமையாக இருந்தது, அங்கு ஆகாப் ராஜா இஸ்ரவேலை பொய்யான கடவுளான பாகாலை வணங்க ஊக்குவித்தான்.

இந்த பின்னணியில்தான் எலியா தீர்க்கதரிசி பிரசங்கிக்க அழைக்கப்பட்டான். கர்த்தரில் தனிப்பட்ட விசுவாசம் ஒரு பொல்லாத சூழலில் கூட நீதிமான்களிடையே வளர முடியும் என்பதை அவனுடைய ஊழியத்தின் விவரம் தெளிவுபடுத்துகிறது. சில சமயங்களில் கர்த்தர் அத்தகைய விசுவாசத்திற்கு பரலோகத்திலிருந்து விழும் நெருப்பு போன்ற சுவாரஸ்யமான, பொது அற்புதங்களுடன் பதிலளிப்பார். ஆனால் அவர் ஒரு விசுவாசமான விதவை மற்றும் அவளது மகனின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற அமைதியான, தனிப்பட்ட அற்புதங்களைச் செய்கிறார். அவருடைய அற்புதங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவை, அவை உங்களுக்கு மட்டுமே தெரிந்தவை, உதாரணமாக, கர்த்தர் தம்மையும் தம்முடைய சித்தத்தையும் “அமர்ந்த மெல்லிய சத்தம்” மூலம் வெளிப்படுத்தும்போது ( 1 இராஜாக்கள் 19:12 ).

எலியாவைப்பற்றி அதிகம் அறிய “Elijah” in the Bible Dictionary பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 இராஜாக்கள் 17:1–16

தியாகம் செய்வதற்கான அழைப்பு என் விசுவாசத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

தனக்கும் தன் பட்டினியால் வாடும் மகனுக்கும் உணவளிப்பதற்கு முன்பு எலியா தீர்க்கதரிசி சாரபாத்தில் உள்ள விதவையை தனக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கும்படி ஏன் கேட்டான் என்பதை முதலில் புரிந்து கொள்வது கடினம். ஆனால் எலியாவின் வேண்டுகோள் இந்த சிறிய குடும்பத்திற்கு ஒரு ஆசீர்வாதமாகவும் இருக்க முடியும். அவர்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் தேவைப்பட்டது, மேலும் தியாகம் வலுவான விசுவாசத்தின் ஆசீர்வாதம் உட்பட, பெரும்பாலும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.

இந்த கதையை நீங்கள் படிக்கும்போது, இந்த குறிப்பிடத்தக்க விதவையின் இடத்தில் உங்களை வையுங்கள். அவளுடைய சாட்சி குறித்து உங்களைக் கவர்வது என்ன? தியாகம் செய்வதற்கான வாய்ப்புகள் உட்பட, உங்கள் விசுவாசத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகளை கருத்தில் கொள்ளுங்கள். இந்த விதவையைப் போல நீங்கள் எப்படி அதிகமாக இருக்க முடியும்?

மத்தேயு 6:25–33; லூக்கா 4:24–26; Lynn G. Robbins, “Tithing—a Commandment Even for the Destitute,” Liahona, May 2005, 34–36ஐயும் பாரக்கவும்.

1 இராஜாக்கள் 18

“கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்”

“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்”( யாத்திராகமம் 20: 3 ) என்ற கர்த்தருடைய கட்டளையை மீறி பாகாலை வணங்குவதற்கு தங்களுக்கு நல்ல காரணங்கள் இருப்பதாக இஸ்ரவேலர் உணர்ந்திருக்கலாம். பாகால், புயல் மற்றும் மழையின் கடவுள் என்று அறியப்பட்டான், மூன்று வருட வறட்சிக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு புயல் தேவைப்பட்டது. மேலும் பாகால் வழிபாடு சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ராஜாவாலும் ராணியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் 1 இராஜாக்கள் 18 வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சூழ்நிலைகளை, இஸ்ரவேலர்கள் இருந்த சூழ்நிலையுடன் ஒப்பிடுவதைக் கருத்தில் கொள்ளலாம். மாற்று வழிகள் காரணமுள்ளதாயும் கண்டிப்பானதாயும் தோன்றியதால், கர்த்தரைப் பின்பற்றுவது குறித்து உங்களை நீங்கள் எப்போதாவது தீர்மானமற்றவராக கண்டிருக்கிறீர்களா? ( 1 இராஜாக்கள் 18:21 பார்க்கவும்). இந்த அதிகாரத்தில் காணப்படும் நிகழ்வுகளில், கர்த்தர் தன்னைப்பற்றியும் பாகாலைப்பற்றியும் மக்களுக்கு என்ன கற்பிக்க முயன்றார் என்று நினைக்கிறீர்கள்? இதேபோன்ற சத்தியங்களை எந்த அனுபவங்கள் உங்களுக்கு கற்பித்தன?

இந்த அதிகாரத்தில் எலியா சொன்னதும் செய்ததும் கர்த்தர்மீதுள்ள விசுவாசத்தை செயல்படுத்துவது சுவாரஸ்யமாக இருக்கலாம். எலியாவிடமிருந்து விசுவாசத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

யோசுவா 24:15; 2 நேபி 2:26–28; D. Todd Christofferson, “Choice and Commitment” (worldwide devotional for young adults, Jan. 12, 2020), ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

கற்பாறை மீது நிற்கும் எலியா

1 இராஜாக்கள் 19: 11–12 ன் அடையாள சித்தரிப்பு. தீர்க்கதரிசி, © Robert Booth Charles/Bridgeman Images

1 இராஜாக்கள் 19:1–18

கர்த்தர் பெரும்பாலும் அமைதியான, எளிமையான வழிகளில் பேசுகிறார்.

கர்மேல் மலையில் தனது ஆசாரியர்களுக்கு என்ன நடந்தது என்று யேசபேல் மகாராணி கேள்விப்பட்டபோது, அவள் மனமாற்றப்படவில்லை, அவள் கோபமடைந்தாள். உயிருக்கு பயந்து எலியா வனாந்தரத்திற்கு ஓடிவந்து ஒரு குகையில் தஞ்சம் புகுந்தான். அங்கு, தனிமை மற்றும் அதைரியத்தோடு போராடிய அவன், கர்மேல் மலையில் நடந்ததைவிட மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கர்த்தருடன் பெற்றான். 1 இராஜாக்கள் 19: 1–18 ல் எலியாவின் அனுபவம் உங்களுக்கு தேவையான நேரத்தில் கர்த்தர் உங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதைப்பற்றி உங்களுக்குக் கற்பிக்கிறது? அவருடைய குரலை நீங்கள் அனுபவித்த உங்கள் வாழ்க்கையின் நேரங்களைப்பற்றி சிந்தியுங்கள். அவருடைய வழிகாட்டுதலை அடிக்கடி பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கர்த்தர் நம்முடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதை விவரிக்க பின்வரும் வசனங்களில் பயன்படுத்தப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் சிந்தித்துப் பாருங்கள்: ஏலமன் 5:30; 3 நேபி 11:3–7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–23; 8:2–3; 9:8–9; 11:12–14; 36:2.

சங்கீதம் 46:10; 1 நேபி 17:45; Russell M. Nelson, “Hear Him,” Liahona, May 2020, 88–92ஐயும் பாரக்கவும்.

1 இராஜாக்கள் 19:19–21

கர்த்தருக்கு சேவை செய்வது உலக அக்கறைகளை விட முன்னுரிமை பெறுகிறது.

எலிசா 12 ஜோடி எருதுகளை வைத்திருந்தான் என்னும் உண்மை அவன் ஒரு செல்வந்தனாக இருந்ததைக் குறிக்கிறது. 1 இராஜாக்கள் 19:19–21 ல் பதிவுசெய்யப்பட்ட அவனது செயல்களில் எது உங்களைக் கவர்ந்தது? அவனது எடுத்துக்காட்டை நீங்கள் எப்படி பின்பற்ற முடியும்?

மத்தேயு 4:18–22ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

1 இராஜாக்கள் 17:1–16. “Elijah and the Widow of Zarephath” (ChurchofJesusChrist.org) காணொலி மற்றும் இக்குறிப்பில் உள்ள படம் 1 இராஜாக்கள் 17:1–16ல் உள்ள விவரத்தை உங்கள் குடும்பத்தினர் கற்பனை செய்ய உதவும். வசனங்களைப் படித்து, இந்த ஆதாரங்களைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் விதவையின் உணர்ச்சியூட்டும் குணங்களை பட்டியலிடலாம். நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்த கர்த்தர் என்ன செய்யச் சொல்கிறார்?

2:3

1 இராஜாக்கள் 18.“Elijah and the Priests of Baal” (Old Testament Storiesல்), 1 இராஜாக்கள்18 கதையை உங்கள் குடும்பம் கற்க உதவும். கர்த்தருக்கு முழுமையாக நாம் ஒப்புக்கொடுப்பதைத் தடுக்கும் விஷயங்கள் இருக்கின்றனவா? அவரைத் தெரிந்துகொள்வதற்கான நமது விருப்பத்தை நாம் எவ்வாறு காட்ட முடியும்? ( வசனம் 21 பார்க்கவும்).

1 இராஜாக்கள் 19:11–12.“அமர்ந்த மெல்லிய சத்தத்தைக்” கேட்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்திற்கு எது உதவும்? 1 இராஜாக்கள் 19:11–12 மென்மையான குரலில் நீங்கள் வாசிக்கலாம் அல்லது “The Holy Ghost” (Children’s Songbook, 105) போன்ற ஆவியானவரைப்பற்றிய பாடலை அமைதியாக பாடலாம். அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்காமல் சாத்தான் எவ்வாறு நம்மைத் தடுக்க முயற்சிக்கிறான் என்பதை விளக்குவதற்கு நீங்கள் கவனத்தை சிதறடிக்கும் சில சத்தங்களைச் சேர்க்கலாம். ஆவியின் தூண்டுதல்களுக்கு உணர்வுடனிருக்க குடும்ப அங்கத்தினர்கள் தாங்கள் செய்வதைப் பகிர்ந்து கொள்ளலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Holy Ghost,” Children’s Songbook, 105.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும். ஆவியானவர் உங்களிடம் பேசுவதை நீங்கள் உணரும்போது, அவர் உங்களுக்குச் சொல்வதில் என்ன உணர்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பதை எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும். இந்த எண்ணங்களை சொற்களாக ஆக்கும் சிந்தனை அவற்றை சிந்திக்கவும் பொக்கிஷப்படுத்தவும் உதவும்.

பெண்ணும் குழந்தையும்

சாரபாத்தின் விதவை–ரோஸ் டடாக் டால்