பழைய ஏற்பாடு 2022
ஜூலை 11–17. 2 இராஜாக்கள் 17–25: “அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கரத்தர்மேல் நம்பிக்கை வைத்தான்”


“ஜூலை 11–17. 2 இராஜாக்கள் 17–25: ‘அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கரத்தர்மேல் நம்பிக்கை வைத்தான்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஜூலை 11–17. 2 இராஜாக்கள் 17–25,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022

ஜனங்கள் அழிந்த பட்டணத்திலிருந்து போகுதல்

சிறைக்கைதிகள் தப்பியோடுதல் –ஜேம்ஸ் டிஸ்ஸோவும் பிறரும்

ஜூலை 11–17

2 இராஜாக்கள் 17–25

“அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்தான்”

நியாயப்பிரமாண புத்தகத்திலிருந்து ஒசெயா வார்த்தைகளைக் கேட்டபோது, அவன் விசுவாசத்துடன் பதிலளித்தான். 2 இராஜாக்கள் 17–25ல் நீங்கள் வாசித்ததற்கு விசுவாசத்துடன் எவ்வாறு பதிலளிக்க முடியும்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

எலிசா தீர்க்கதரிசியின் ஊழியம் இருந்தபோதிலும், இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தின் ஆவிக்குரிய தன்மை குறைந்து கொண்டே வந்தது. துன்மார்க்க ராஜாக்கள் விக்கிரகாராதனையை ஊக்குவித்தனர், போரும் மதமாறுபாடும் பெருகின. இறுதியாக அசீரியப் பேரரசு இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களைக் கைப்பற்றி சிதறடித்தது.

இதற்கிடையில், யூதாவின் தெற்கு ராஜ்யம் அதிக சிறப்பாக செயல்படவில்லை; விக்கிரகாராதனை அங்கு பரவலாக இருந்தது. ஆனால் இந்த ஆவிக்குரிய சிதைவின் மத்தியில், இரண்டு நீதியுள்ள ராஜாக்களை வேதவசன விவரங்கள் குறிப்பிடுகின்றன, அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் ஜனத்தை கர்த்தரிடத்தில் திருப்பினார்கள். ஒருவன் எசேக்கியா. அவனது ஆட்சியின் போது, அசீரியர்கள், வடக்கில் புதிதாக பெற்ற வெற்றியினால் தெற்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். ஆனால் எசேக்கியாவும் அவனுடைய ஜனமும் எருசலேமை அற்புதமாக விடுவித்த கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள். பின்னர், மதமாறுபாட்டின் மற்றொரு காலத்திற்குப் பிறகு, ஒசெயா ஆட்சி செய்யத் தொடங்கினான். நியாயப்பிரமாண புத்தகத்தின் மறு கண்டுபிடிப்பால் ஓரளவு ஈர்க்கப்பட்ட ஒசெயா, தனது மக்களில் பலரின் மத வாழ்க்கையை புதுப்பிக்கும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தான்.

யூதாவின் வரலாற்றின் இருண்ட ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டிய இந்த இரண்டு பிரகாசமான புள்ளிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவற்றுடன், உங்கள் வாழ்க்கையில் விசுவாசத்தின் வல்லமையையும் தேவனுடைய வார்த்தையையும் நீங்கள் சிந்திக்கலாம். இஸ்ரவேல் மற்றும் யூதாவைப் போலவே, நாம் அனைவரும் நல்ல மற்றும் கெட்ட தேர்ந்தெடுப்புகளை செய்கிறோம். நம் வாழ்வில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை நாம் உணரும்போது, எசேக்கியா மற்றும் ஒசெயாவின் எடுத்துக்காட்டுகள் “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நம்புவதற்கு” நம்மை உணர்த்தக்கூடும் ( 2 இராஜாக்கள் 18:22 ).

2 நாளாகமம் 29–35; the “Thoughts to Keep in Mind” section “Jesus Will Say to All Israel, ‘Come Home’” பார்க்கவும்.

Learn More image
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

2 இராஜாக்கள் 18–19

சவாலான காலங்களில் நான் கர்த்தரிடம் உண்மையாக இருக்க முடியும்.

நம் விசுவாசத்துக்கு சவால் விடும் நேரங்களை நம்மில் பெரும்பாலோர் அனுபவித்திருக்கிறோம். எசேக்கியாவிற்கும் அவனுடைய மக்களுக்கும், அசீரிய இராணுவம் யூதா மீது படையெடுத்து, பல நகரங்களை அழித்து, எருசலேமை நெருங்கிய காலங்களில் ஒன்று வந்தது. நீங்கள் 2 இராஜாக்கள் 18–19 வாசிக்கும்போது, இந்த நேரத்தில் நீங்கள் எருசலேமில் வாழ்ந்தீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உதாரணமாக, 2 இராஜாக்கள் 18: 28–37 மற்றும் 19: 10–13 ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி அசீரியர்களின் அவதூறுகளைக் கேட்டால் நீங்கள் எப்படி உணர்ந்திருக்கலாம்? எசேக்கியா பதிலளித்ததில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ( 2 இராஜாக்கள் 19: 1–7, 14–19 பார்க்கவும்). கர்த்தர் எசேக்கியாவை எவ்வாறு ஆதரித்தார்? ( 2 இராஜாக்கள் 19: 35–37 பார்க்கவும்). சவாலான காலங்களில் அவர் உங்களை எவ்வாறு ஆதரித்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

2 இராஜாக்கள் 18: 5–7ல் உள்ள எசேக்கியாவின் விளக்கத்தைப்பற்றியும் நீங்கள் சிந்திக்கலாம். சவால்கள் வரும்போது எசேக்கியா ஏன் உண்மையாக இருக்க முடிந்தது என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன கூறுகின்றன? அவனது எடுத்துக்காட்டை நீங்கள் எப்படி பின்பற்ற முடியும்?

3 நேபி 3–4; D. Todd Christofferson, “Firm and Steadfast in the Faith of Christ,” Liahona, Nov. 2018, 30–33 ஐயும் பார்க்கவும்.

2 இராஜாக்கள் 19:20–37

எல்லா காரியங்களும் கர்த்தருடைய கைகளில் உள்ளன.

அசீரியாவின் ராஜாவான சனகெரிப், தனது இராணுவம் எருசலேமை கைப்பற்றும் என்று நம்புவதற்கு நல்ல காரணம் இருந்தது. இஸ்ரவேல் உட்பட பல நாடுகளை அசீரியா தோற்கடித்தது, எருசலேம் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்?(2 இராஜாக்கள் 17; 18:33–34; 19:11–13 பார்க்கவும்). ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கொடுக்கப்பட்ட சனகெரிப்பிற்காக கர்த்தர் ஒரு செய்தியை வைத்திருந்தார், அது 2 இராஜாக்கள் 19: 20–34 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? கர்த்தர் மீதும் அவருடைய திட்டத்தின் மீதும் விசுவாசம் வைக்க உதவும் இந்த வசனங்களில் என்ன உண்மைகளை நீங்கள் காணலாம்?

ஏலமன் 12:4–23; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:16ஐயும் பார்க்கவும்.

2 இராஜாக்கள் 21–23

வேதவசனங்கள் என் இருதயத்தை கர்த்தரிடம் திருப்ப முடியும்.

ஆவிக்குரிய ரீதியில் உங்களுக்கு ஏதேனும் குறைவு இருப்பதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? கர்த்தருடனான உங்கள் உறவு மிகவும் வலுவாக இருக்கும் என்று நீங்கள் உணர்ந்திருக்கலாம். அவரிடம் திரும்புவதற்கு உங்களுக்கு எது உதவியது? மனாசே ராஜாவின் கீழ் யூதா ராஜ்யம் எவ்வாறு கர்த்தரிடமிருந்து விலகிவிட்டது ( 2 இராஜாக்கள் 21 பார்க்கவும்) மற்றும் ஒசெயா ராஜா தங்களைத் தாங்களே மறுபரிசீலனை செய்ய அவர்களுக்கு எவ்வாறு உதவினான் என்பதைப்பற்றி படிக்கும்போது இந்த கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள் ( 2 இராஜாக்கள் 22–23 பார்க்கவும்). ஒசெயாவிற்கும் அவனுடைய ஜனத்துக்கும் உணர்த்தியது எது? “கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும் … உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும்” ( 2 இராஜாக்கள் 23: 3) உங்கள் ஒப்புக்கொடுத்தலைப் புதுப்பிக்க இந்த விவரம் உங்களுக்கு உணர்த்தும்.

நீங்கள் இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, அத்தியாயம் 6 Teachings of Presidents of the Church: Spencer W. Kimball ([2006], 59–68), வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும், அதில் தலைவர் கிம்பல் ஒசெயா ராஜாவின் கதை “வேத கதைகள் அனைத்திலும் அருமையான கதைகளில் ஒன்று” (பக்கம் 62) என ஆலோசனையளித்தார். தலைவர் கிம்பல் ஏன் அப்படி உணர்ந்திருக்கலாம்? தலைவர் கிம்பலின் வார்த்தைகளில், குறிப்பாக ஒசெயா ராஜாவைப்பற்றிய அவரது கருத்துக்களில், உங்கள் வாழ்க்கையில் 2 இராஜாக்கள் 22–23 பயன்படுத்த உதவக்கூடிய எதைக் காண்கிறீர்கள்?

ஆல்மா 31:5; Takashi Wada, “Feasting upon the Words of Christ,” Liahona, May 2019, 38–40; “Josiah and the Book of the Law” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

குடும்பம் வேதங்களைப் படித்தல்

நம்முடைய இருதயங்களை கர்த்தரிடம் திருப்ப வேதங்கள் உதவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

2 இராஜாக்கள் 19:14–19.கடினமான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் இருக்கும்போது நமக்கு உதவக்கூடிய எசேக்கியாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? உதவி கேட்கும் நம்முடைய ஜெபங்களுக்கு கர்த்தர் எவ்வாறு பதிலளித்திருக்கிறார்? ஒருவேளை ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் வீட்டில் காண்பிக்க ஏதாவது செய்ய முடியும், அது கர்த்தரிடம் திரும்புவதை நினைவூட்டுகிறது.

2 இராஜாக்கள் 22:3–7. 2 இராஜாக்கள் 22: 3–7 ல் விவரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் கோயிலைத் திரும்பவும் கட்டியெழுப்பப் பயன்படும் பணம் கொடுக்கப்பட்டனர், ஏனெனில் “அவர்கள் உண்மையோடு நடந்துகொண்டார்கள்” ( வசனம் 7). இந்த வசனங்களைப் படித்த பிறகு, குடும்ப அங்கத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களுக்கு பெயரிடுமாறு நீங்கள் கேட்கலாம். இந்த வசனங்களிலுள்ள தொழிலாளர்களைப்போல நம்பத்தக்கவர்களாக நாம் எப்படி ஆக முடியும்?

2 இராஜாக்கள் 22:8–11, 19; 23:1–3.தேவனுடைய வார்த்தைக்கு ஒசெயாவும் அவனுடைய மக்களும் எவ்வாறு பதிலளித்தார்கள் என்தில் நம்மைக் கவர்ந்தது எது? வேதவசனங்களில் தேவனின் வார்த்தைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம்? உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுவதற்கான விருப்பத்தை அதிகரித்த வேத வசனங்கள் அல்லது கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

2 இராஜாக்கள் 23:25.இந்த வசனத்தில் ஒசெயாவின் விளக்கத்தில் முக்கியமானதாக நமக்கு என்ன இருக்கிறது? உங்கள் குடும்பத்தினர் முழு மனதுடன் கர்த்தரிடம் திரும்புவதற்கு இந்த வாரம் அவர்கள் செய்யக்கூடிய விஷயங்களை காகித இதயங்களில் வரையலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “As I Search the Holy Scriptures,” Hymns, no. 277.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உணர்த்துதலான வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும். நீங்கள் வாசிக்கும்போது, ஆவியானவர் சில சொற்களையோ சொற்றொடர்களையோ உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரக்கூடும். அவை உங்களை உணர்த்தவும் ஊக்கப்படுத்தவும் கூடும்; அவை உங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டதாகத் தோன்றலாம்.

மனிதன் வேதசுருளை ராஜாவிடம் கொண்டு வருதல்

ஒசெயா ராஜாவிடம் வேதத்தின் சுருளைக் கொண்டுவரும் ஒரு வேதபாரகன், பட விளக்கம்–ராபர்ட் பாரெட்