“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்
பழைய ஏற்பாட்டில் கவிதை வாசித்தல்
யோபுவின் புத்தகத்திற்கு முன் வரும் பழைய ஏற்பாட்டு புத்தகங்களில், பெரும்பாலும் கதைகள் வரலாற்று நிகழ்வுகளை ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் விவரிக்கும் விவரங்கள் காணப்படுகின்றன. நோவா ஒரு பேழையைக் கட்டினான், மோசே இஸ்ரவேலை விடுவித்தான், அன்னாள் ஒரு மகனைப் பெற ஜெபித்தாள், மற்றும் பல. பழைய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் கவிதை மொழிக்கு ஆழ்ந்த உணர்வுகளை அல்லது மிகப்பெரும் தீர்க்கதரிசனங்களை மறக்கமுடியாத வகையில் வெளிப்படுத்தியதால், யோபிலிருந்து தொடங்கி, வேறுபட்ட எழுத்து நடையை நாம் காண்கிறோம்.
பழைய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்கள் முழுவதும் தெளிக்கப்பட்ட கவிதைகளின் சில எடுத்துக்காட்டுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். மேலும் யோபு புத்தகத்திலிருந்து, அதில் நிறையவற்றைக் காண்போம். ஏசாயா, எரேமியா, ஆமோஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களின் பகுதிகள் போலவே, யோபு, சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் புத்தகங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் கவிதையாகவே இருக்கின்றன. கவிதை வாசிப்பது ஒரு கதையை வாசிப்பதில் இருந்து வேறுபட்டது என்பதால், அதைப் புரிந்துகொள்வதற்கு பெரும்பாலும் வேறுவித அணுகுமுறை தேவைப்படுகிறது. பழைய ஏற்பாட்டு கவிதைகளைப் படிப்பதை இன்னும் அர்த்தமுள்ளதாக்கக்கூடிய சில சிந்தனைகள் இதோ.
எபிரேய கவிதைகளைப்பற்றி அறிந்து கொள்வது
முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் உள்ள எபிரேய கவிதைகள் வேறு சில வகையான கவிதைகளைப் போல சந்த அடிப்படையிலானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள இது உங்களுக்கு உதவக்கூடும். பண்டைய எபிரேய கவிதைகளின் பொதுவான அம்சங்கள் தாளம், சொல்நயம் மற்றும் ஒலிகளை மீண்டும் கூறுவது என்றாலும், அவை பொதுவாக மொழிபெயர்ப்பில் இழக்கப்படுகின்றன. இருப்பினும், நீங்கள் கவனிக்கும் ஒரு அம்சம், எண்ணங்கள் அல்லது கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறுவது, சில சமயங்களில் “இணைவாதம்” என்று அழைக்கப்படுகிறது. ஏசாயாவின் இந்த வசனம் ஒரு எளிய உதாரணத்தைக் கொண்டுள்ளது:
-
சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்;
-
எருசலேமே உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக் கொள் (ஏசாயா 52:1).
29 வது சங்கீதத்தில் பல இணையான வரிகள் உள்ளன, இங்கே ஒரு எடுத்துக்காட்டு:
-
கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது,
-
கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது (சங்கீதம் 29:4).
இரண்டாவது வரி முதலாவதற்கு இணையாக இருப்பதை அறிவது உண்மையில் பத்தியைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிற ஒரு சந்தர்ப்பம் இங்கிருக்கிறது:
-
நான் உங்கள் பட்டணங்களிலெல்லாம் உங்கள் பற்களுக்கு ஓய்வையும்,
-
உங்கள் ஸ்தலங்களிலெல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன் (ஆமோஸ் 4:6).
இந்த எடுத்துக்காட்டுகளில், ஒரு யோசனை சிறிய வேறுபாடுகளுடன் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. இந்த நுட்பம் வேறுபாடுகளை முழுமையாக விவரிக்க அல்லது விருத்திசெய்ய பயன்படுத்தும்போது மீண்டும் மீண்டும் யோசனையை வலியுறுத்த முடியும்.
மற்ற சந்தர்ப்பங்களில், இரண்டு இணையான சொற்றொடர்களும் இந்த உதாரணத்தைப் போலவே மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க ஒத்த மொழியைப் பயன்படுத்துகின்றன:
-
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்,
-
கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும் (நீதிமொழிகள் 15:1).
இந்த இணையானது தற்செயலாக நடக்கவில்லை. எழுத்தாளர்கள் வேண்டுமென்றே செய்தார்கள். ஆவிக்குரிய உணர்வுகளை அல்லது சத்தியங்களை அவர்களுக்கு வல்லமையாகவும் அழகாகவும் தோன்றும் வகையில் தெரியப்படுத்த இது அனுமதித்தது. எனவே பழைய ஏற்பாட்டு எழுத்தில் இணைவாதத்தை நீங்கள் கவனிக்கும்போது, எழுத்தாளரின் செய்தியைப் புரிந்துகொள்ள இது எவ்வாறு உதவுகிறது என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஏசாயா “வலிமையை” “அழகான ஆடைகளுடனும்”, “சீயோனை” “எருசலேமுடனும்” தொடர்புபடுத்தி என்ன சொல்ல முயற்சித்திருக்கலாம்? (ஏசாயா 52:1). “கடுமையான வார்த்தைகள்” அதன் எதிர் என்று நமக்குத் தெரிந்தால் “மென்மையான பதில்” என்ற சொற்றொடரைப்பற்றி நாம் என்ன ஊகிக்க முடியும்? (நீதிமொழிகள் 15:1).
புதிய நண்பனாக எபிரேய கவிதை
கவிதை வாசிப்பை ஒரு புதிய நபரைச் சந்திப்பதற்கு ஒப்பிடுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, நாம் பேசும் அதே மொழியைப் பேசாத, தொலைதூர நாடு மற்றும் வெளிநாட்டு கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவருடன் சந்திப்பதற்கு, பழைய ஏற்பாட்டு கவிதைகளைப் படிப்பதை ஒப்பிடலாம், இந்த நபர் முதலில் நமக்குப் புரியாத விஷயங்களைச் சொல்வார், ஆனால் அவர் அல்லது அவள் நம்மிடம் சொல்ல மதிப்புமிக்க எதுவும் இல்லை என்று அர்த்தமல்ல. கொஞ்சம் பொறுமை மற்றும் கொஞ்சம் மனதுருக்கத்துடன், நமது புதிய அறிமுகம் இறுதியில் ஒரு அன்பான நண்பராக முடியும். அவருடைய பார்வையில் இருந்து விஷயங்களைக் காண முயற்சித்து, நாம் சிறிது நேரம் ஒன்றாகச் செலவழிக்க வேண்டும். நம் இருதயத்தில் நாம் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொள்கிறோம் என்பதைக் கூட நாம் காணலாம்.
ஆகவே, ஏசாயாவில் ஒரு பாகத்தை நீங்கள் முதன்முதலில் வாசிக்கும்போது, ஒரு புதிய அறிமுகமானவரை உங்கள் முதல் அறிமுகமாகக் கருதுங்கள். உங்களையே கேளுங்கள், “என் பொதுவான எண்ணம் என்ன?” ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு புரியவில்லை என்றாலும், அப்பாகம் உங்களை எவ்வாறு உணரச்செய்கிறது? முடிந்தால் பல முறை மீண்டும் படிக்கவும். பாகங்களை சத்தமாக வாசிப்பதன் மூலம் சிலர் கூடுதல் அர்த்தம் காண்கிறார்கள். ஏசாயா தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட சொற்களைக் கவனியுங்கள், குறிப்பாக உங்கள் மனதில் ஒரு படத்தை வரைந்த சொற்கள். அந்த படங்கள் உங்களுக்கு எப்படி உணரச்செய்யும்? ஏசாயா எப்படி உணர்ந்தான் என்பதைப்பற்றி கற்பனை என்ன கூறுகிறது? இந்த பழைய ஏற்பாட்டு கவிஞர்களின் சொற்களை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ, அவ்வளவு ஆழமான ஆவிக்குரிய செய்தியை வெளிப்படுத்த அவர்கள் வேண்டுமென்றே தங்கள் சொற்களையும் நுட்பங்களையும் தேர்ந்தெடுத்ததை நீங்கள் காண்பீர்கள்.
கவிதைகள் அற்புதமான நண்பர்களாக இருக்கலாம், ஏனென்றால் அவை நம் உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. பழைய ஏற்பாட்டு கவிதைகள் குறிப்பாக அருமையானவை, ஏனென்றால் அவை நம்முடைய மிக முக்கியமான உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள உதவுகின்றன, அவை தேவனுடனான நமது உறவோடு தொடர்புடையவை.
பழைய ஏற்பாட்டில் உள்ள கவிதைகளைப் படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவிடம் நம்மை நடத்திச் செல்லும்போது, வேதப் படிப்பு மிகவும் மதிப்புமிக்கது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்மீது உங்கள் நம்பிக்கையை வளர்க்கும் சின்னங்கள், படங்கள் மற்றும் சத்தியங்களைத் தேடுங்கள். நீங்கள் படிக்கும்போது பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைக் கேளுங்கள்.